Showing posts with label Northern. Show all posts

 #கொழும்பு சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக இராணுவ புலனாய்வு பிரிவே யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டதாக தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



 


கொழும்பு சட்டத்தரணி சுவஸ்திகாவை யாழ் பல்கலையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும்!

சுவஸ்திகா அருளிங்கத்தின் தனிப்பட்ட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரை பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக்கூடாது என பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயலாகும்

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை. புலிகளை பாசிசவாதிகள் எனக்கூறிய சுவஸ்திகாவை யாழ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஆசிரியரும், மாணவரும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

 


இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி உட்பட அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான சட்டத்தரணிகள் இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி கௌரவ நீதிபதி டி.சரவணராஜா அவர்களுக்கு நீதிகோரிப் போராட்டம்

 


உண்மையில் என்ன நடந்தது என்ற நிதர்சனம் புரியாமல் வெவ்வேறு நபர்கள் இப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்க முயற்சிப்பதையும், கருத்து தெரிவிப்பதையும் அவதானிப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது.


கற்றறிந்த நீதிவான் அவர்கள், கெளரவ சட்டமா அதிபர் தன்னை அவரது திணைக்களத்துக்கு வரவழைத்து தனது உத்தரவை மாற்றச் சொன்னார் என்ற கற்றறிந்த நீதிவானின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும்.


மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 7 எழுத்தாணை விண்ணப்பங்களில் மூன்றில் கற்றறிந்த நீதிவான், தனது அதிகாரப்பூர்வ /தனிப்பட்ட கோதாவில் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த வழக்குகள் 11.10.2023 அன்று ஆதரிப்பதற்காக அழைக்கப்பட இருகின்றன.


இந் நிலையில்14.09.2023 ஆந் திகதி, கெளரவ சட்டமா அதிபரின் உதவியைக் கோரியும், அவருக்காக ஆஜராகுவதற்கு அரச சட்டவாதி ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறும் அவர் நீதிச் சேவை ஆணைக் குழுவை எழுத்து மூலம் கோரியிருந்தார். 


நீதிச் சேவை ஆணைக் குழுவானது தனது 15.09.2023 எனத் திகதியிட்ட கடிதத்தின் மூலம் கற்றறிந்த நீதிவான் சார்பில் மேன் முறையீட்டு நீதி மன்றில் ஆஜராகுமாறு கெளரவ சட்டமா அதிபர் அவர்களை கோரி இருந்தது.


இந்தப் பின்னணியில், அதிகாரிகளின் தேவையான ஒப்புதலுடன் 21.09.2023 அன்று கற்றறிந்த நீதிவானுடன் ஆலோசனை நடாத்த கெளரவ சட்டமா அதிபர் முடிவு செய்தார்.


எனவே முதலில் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயம், தனது உத்தரவை மாற்றுமாறு கற்றறிந்த நீதிவானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக கெளரவ சட்டமா அதிபரினால் கற்றறிந்த நீதிவான் சட்டமா அதிபர்  திணைக்களத்திற்கு "அழைக்கப்பட்டிருக்கவில்லை"  மாறாக கற்றறிந்த நீதிவான் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு சேவை நாடுனராகவே, சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.



எனவே இது உண்மையில், சட்டத்தரணி-சேவை நாடுனருக்கிடையேயான உறவின் அடிப்படையில் அமையப்பெற்ற ஒரு சந்திப்பாகும்.


திணைக்களத்துடனான கூட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுவிட்டு, அவருக்கே நன்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக,

அவர் இந்த அபத்தமான/ பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.




இந்த சந்திப்பின் உண்மையான நோக்கத்திற்கு அவர் ஒரு திருப்பத்தை கொடுப்பது மிகவும் நெறிமுறையற்றதும் தொழில்முறையற்றதுமாகும்.


மேற்கூறியவை இந்த முழுச் சம்பவத்தின் சரியான உண்மைப் பின்னணியாகும்.






 


கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் 9ஆவது நாள் அகழ்வின்போது 3 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன.  


➡️அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.


➡️இதுவரை மொத்தமாக 17 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 


➡️ஒக். 3ஆம் வாரம் அகழ்வு மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - via JMO K. Vaseda

 


பாறுக் ஷிஹான்


வவுனியா பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும்  புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் கடந்த வியாழக்கிழமை(13)  வவுனியா பூந்தோட்ட வவுனியா பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் சங்கத்தின் தற்காலிக தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில்  செயலாளராக கல்முனையைச் சேர்ந்த யு.எல். றியாழ்  ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.அத்துடன்  பின்வருவோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக திரு கே. பூங்கண்ணன்,உப தலைவரராக திருமதி பீ. அனுஷா,செயலாளராக யூ.எல் றியாழ், உப செயலாளர் திருமதி என்.ராஜகுமாரி,பொருளாளராக
சி.சுதர்சன் ,தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 தி. ஜே.எப்.ஜஸ்றீன்,எம்.சுதர்சன்,எஸ். சைரஜன்,திருமதி கு. டனுஷா இவர்களுடன் உள்ளக கணக்காய்வாளராக செல்வி. த. தாட்சாயினி ,விளையாட்டு இணைப்பாளராக திரு சி. ரகுவரனும் தெரிவு செய்யப்பட்டனர்


சரத் வீரசேகர அண்மையில், நாடாளுமன்றில், வட கிழக்கு நீதிபதிகளுக்கு எதிராக தெரிவித்த அவதூறாக தெரிவித்த கருத்துக்களை எதிர்ப்பு தெரிவித்து நாளை-யாழ்ப்பாணம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் கடமையில் இருந்து தவிர்த்துக் கொள்வதெனத் தீர்மானித்துள்ளனர்.

 


நூருல் ஹுதா உமர்


வடமாகாண முஸ்லிம் பாடசாலைகளின் விவகாரங்களை கையாள முஸ்லிம் கல்வி பணிப்பாளர் ஒருவர் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் அவசியம் நியமனம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சரை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் குடியமர்த்தப்பட்ட பின்னர் முஸ்லிம் பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் அங்கு முஸ்லிம் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர் பற்றாக்குறை
மற்றும் வளப்பற்றாக்குறை என்பன நிலவுகிறது.  இஸ்லாம் கற்பிக்க ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வில்லை. அண்மையில் வடமாகாணத்தில் இருந்து 10 இஸ்லாம் பாட கல்விக் கல்லூரி டிப்ளோமாதாரிகள் ஆசிரியர்களாக வெளியேறிய போதும் ஒருவர் கூட வடமாகாணத்திற்கு நியமனம் செய்யப்படாத வகையில் அப்பாடத்திற்கு வெற்றிடமில்லையென வடக்கு மாகாண கல்வியதிகாரிகளால் மத்திய கல்வி அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளை சீர் செய்ய வடமாகாண கல்வித் திணைக்களத்திலும், வடமாகாண கல்வி அமைச்சிலும் ஒவ்வொரு முஸ்லிம் கல்வி அதிகாரி நியமனம் செய்யப்பட வேண்டும். இது குறித்து வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எதிர்வரும்  16 ஆம் திகதி ( ஜுலை) முதல் யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை தினசரி சேவையாக மாற்றப்படுகிறது .#jaffna #Chennai #Flight #Dailyservice

 


தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்துர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது. 


சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு நீதிபதி இன்று தளத்திற்கு விஜயம் செய்தனர்

 


 ஜனாதிபதி சட்டத்தரணி #திரு_மு_சிற்றம்பலம் அவர்கள் காலமானார்.

சட்டவல்லாளர், சமூகக் காவலர்
முருகேசு சிற்றம்பலம் அவர்கள் மறைவு ! 


ஜனாதிபதி சட்டத்தரணியும்  மூத்த தமிழ்த் தலைவர் மு‌.சிவசிதம்பரம் அவர்களின் சகோதரருமான மு. சிற்றம்பலம் அவர்கள் காலமானார் என்று  கிடைத்த  துயரச் செய்தி சட்டத்துறை சார்ந்தோருக்கும் வவுனியா மக்களுக்கும் பெரியதோர் இழப்பாகும்.

அவர் பிறந்த கரவெட்டிக் கிராமத்துக்கும் அது ஒரு துயரமான பிரிவாகிவிட்டது.

தமையனார் சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் நிகழ ஆயத்தங்கள் நடைபெறும் வேளையில் தம்பியார் எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சனநாயக அரசியற் சூழலிலும் ஆயுதப் போராட்ட காலத்திலும் வவுனியா மண்ணில் அவர் ஆற்றிய  சட்ட , சமூகப் பணிகள் அளப்பரியவை.

1960 களில்  சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்த இவர், கடந்த 50 ஆண்டு காலமாக சட்டத் தொழிலைச்  சிறப்புறச் செய்தவர்.

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக நற்பணியாற்றியவர்.

அகில இலங்கைத் தமிழ்க்  காங்கிரஸின்  ஆரம்பகால உறுப்பினரான அவர் 
எல்லைக் காவலர் என்று அழைக்கப்பெற்ற முன்னாள்  வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் அமரர். த.சிவசிதம்பரத்தின் தூணாக இயங்கியவர்.

1976 ட்ரயல் அற் பார் வழக்கில் தமிழ்த்தலைவர்களுக்காக ஆஜரான 52 சட்டத்தரணிகளில்  ஒருவர். 

அதுபோல பல வழக்குகளில் இளையோர்களுக்காக ஆஜரானவர்.

1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்று, அவை அறிமுகமானபோது கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று வவுனியா மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவராகத் தெரிவானவர். 

வவுனியா பிரசைகள் குழுத்தலைவராக இடர்க்காலத்தில் நற்கருமமாற்றியவர். 

எண்பது ,தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் வழியில் கைதாகி தடுப்புக்காவலில் இளைஞர்களும் பயணிகளும் தடுத்து  வைக்கப்படும் சம்பவங்களின்போது அவர்களுக்காகத் - தமது சட்ட உதவியை வழங்கியவர்.

சில வருடங்களுக்கு முன்னர், வவுனியாவில் இவரது ஐம்பது வருட நீதிச்சேவையைப் பாராட்டி, வவுனியாப் பொதுமக்களால்  விழா எடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

மறைந்த ஊடகர் அமரர் மாணிக்கவாசகம் தலைமையில் அந்த விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் பி.பி.சி முதல் அனைத்துலக ஊடகங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் அடிக்கடி குரல் தரும் ஒருவராகவும் செய்திகளில் மேற்கோள் காட்டப்படும் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

தமது சட்டத் தொழிலைச் சமூக நலன்பேணும் தொழிலாகப் பேணியதால்,  பொது மக்களின் அனைத்து மட்டங்களிலும் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.

பல பதவிகளை  வகித்தபோதிலும் ஊருக்கு வந்தால்  சைக்கிளில் திரியும் எளிமை அவரின் ஆளுமை மாதிரியின் சிறப்பாகும் !   

முருகேசு சிற்றம்பலம் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக!

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும்-பணிபுரிந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

 





ஜனாதிபதி சட்டத்தரணி #செல்வி_சாந்தா #அபிமன்னசிங்கம் காலமானார்.

யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இறக்கும் போது இவருக்கு வயது 76. இவர் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவராகத் தொழிற்பட்டு சட்டத்தரணிகளின் நலனுக்காக உழைத்தவர். 

சட்ட நுணுக்கங்களை நீதிமன்றங்களில் புரியவைத்து சமர்ப்பணம் செய்தல்  மற்றும் தமது வாதத்திறமை, சட்டத்துறை சம்மந்தமான பரந்துபட்ட அறிவு ஆளுமைகளால், ஜனாதிபதி சட்டத்தரணி என்ற அந்தஸ்தை அடைந்தார்.வட இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி சட்டத்தரணியான இவர், சட்ட மகுடத்தில் ஒரு மாணிக்கம்.

தமது கட்சிக்காரர்களுக்கு இறுதிவரைப் போராடுதல், தமது சொந்த நிதியில் இருந்து நீதிமன்ற உட்கட்டமைப்பை விருத்தி செய்ய
உதவுதல், நீதிமன்றங்களின் தரத்தை மேம்படுத்த உதவுதல் போன்ற பணிகளில் தமது வாழ்நாளை  முழுமையாக அர்ப்பணித்தார்.வட இலங்கையின் மல்லாகம் நீதிமன்றக் கட்டமைப்பு, மிகப் பிரமாண்டமாகக் காட்சியளிக்கின்றதென்றால், இதற்குப்பின்னால், திரை மறைவில் செயற்பட்டவர் இவராவார்.

இவரது இழப்பால் தவிக்கும்  இவரது குடும்ப உறவுகள், கட்சிக்கார்கள், சட்டத்தரணிகள் ஆகியோருக்கு www.ceylon24.com
தமது ஆழ்ந்த அனுதாபங்களைக் காணிக்கையாக்குகின்றது. 

தற்சமயம் இவரது உடலம், உடுவிலிலுள்ள தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் இன்று காலை 11 மணிக்கு இடம்பெறும்.

-இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்

 



“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்" என்ற திருக்குறளில், தினையளவு செய்யும் சிறு உதவியும் பனை அளவாக கொள்ளப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். பனையின் பெயர்களைக் கொண்ட திருப்பனந்தாள், திருப்பனங்காடு,


திருமணல்பாடி, திருக்குறுங்குடி, பனையூர் போன்ற பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் பனை மரம் தலவிருட்சமாக உள்ளது.


தமிழர்களின் அடையாளமாக திகழும் பனை மரங்கள், தமிழர்கள் அதிகம் வாழ்ந்த இலங்கை, மொரீசியஸ், கம்போடியா, மலேசியா, இந்தோனேஷியா போன்ற பல்வேறு நாடுகளில் இன்றும் கம்பீரமாக உள்ளன.


 


திவ்யா📸

வவுனியா மாவட்டத்திலுள்ள  அவுசலப்பிட்டிய பிரதேசத்தில் நொச்சிக்குளம் என்னும் கிராமத்தில்   இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் தெலுங்கு இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


 நகர் பகுதியிலிருந்து சுமார் 10Km தொலைவில் காட்டுப்பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

 




யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  கலாநிதி கா. இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.


 யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.