Showing posts with label SriLanka. Show all posts

 


இலங்கையில் 60 வீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கையாள முடியாத அளவு புத்தகப் பையை சுமந்து செல்கின்றமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்

 


இரத்தினபுரியில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட NPP நாடு முழுவதும் அதன் பெண்கள் உச்சி மாநாட்டைத் தொடர்கிறது

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரந்தின் பற்றரி மற்றும் பெட்டியின் பம் சங்கிலி உள்ளிட்டவைகள் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன் (01) இரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் பற்றியை திருடிய திருடர்கள் அங்கு கழற்றி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியின் பம்மினையும் சங்கிலிiயையும் திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் முறைப்பாட்டினை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

 


பிள்ளைகளை தேடி அலையும் எம்தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தன் அவர்களின் தாயார் இன்று இருக்கிறார்.

இனியாவது, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களினது விடுதலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

 


எனது கணுக்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. முழுமையாக குணமடைய இன்னும் சில காலம் ஆகும் - இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி


 பிஜிஎம் கிங் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் விமானம் ஏறினார். இங்கே சில சிறப்பம்சங்கள் உள்ளன.

 


உணவு விநியோகம் தாமதம்!

சுடப்பட்டார் சாரதி. ஓர்டர் தாமதமாக எடுத்து வந்ததாக கூறி வாடிக்கையாளர் தன்னை சுட்டதாக குவைத்தில் பணிபுரியும் கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன (44) என்ற இரு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

 


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் ஆங்கிலப் பாட ஆசிரியரும், இலங்கை பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளருமான ஜப்பார் Abdul Jabbar ஆசிரியர் அவர்கள் வஃபாத்தானார்கள்.

 


கொழும்பில் காணியின் பெறுமதிகள் மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

@CBSL. 2H 2023 இல் விலைகள் மெதுவாக 2.1% அதிகரித்தது, முந்தைய ஆண்டு 9.8% அதிகரித்தது. இருப்பினும், சில பெரிய டெவலப்பர்கள் பல ஆண்டுகளாக ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை விற்கவில்லை என்று கூறுகிறார்கள்



அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள், உருப்பெற்றுள்ளன.






அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமாக கௌரவ A,C.றிஸ்வான் அவர்கள் கடந்த 2024.01.01 கடமையேற்றதன் பின்பு அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன.

நீதிமன்றின் நீண்ட காலமாக ஓட்டடை ஒடிசல் விழுந்து காணப்பட்டிருந்த  வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புணரமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான,புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு,  போன்றவையும்,  இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று நீதின்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த  பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.


இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட  வாகனத் தரிப்பிடம் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியுமான றிஸ்வான் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்பலகையினை திறந்து திரை நீக்கம் செய்து வைத்தார். 

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க மூத்த துணைத் தலைவர், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. றசீத் அவர்கள், அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தும் போது, பல தசாப்தகாலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்டிருந்த, அக்கரைப்பற்று நீதிமன்று,கடந்த 2024.01.01 கௌரவ  நீதிபதியாக  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் கடமையேற்றதன் பின்பு, பல்வேறுபட்ட மாற்றங்களகை் கண்டு வருகின்றது என்பதாகத் தெரிவித்தார்.அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சிமன்றங்களக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான கௌரவ  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் உரைநிகழ்த்தும் போது, குறுகிய காலத்தில் இப் பணிகளைச் செய்து முடிக்க அரும்பணியாற்றிய, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், களப்பணியில் ஈடுபட்ட சமூதாயஞ்சார் பணியாளர்களுக்கும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான திறப்பு விழாவினைச் செய்து கொடுத்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

 இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். 









 பத்தரமுல்ல விக்கிரமசிங்க புர சந்தியில் லொறியொன்று மோதியதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.


கொல்லப்பட்ட லக்மினி போகமுவ (24) கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரும் விக்கிரமசிங்க புரவைச் சேர்ந்தவருமாவார்.


நேற்றுக் காலை கடமைக்குச் செல்வதற்காக பல்கலைக்கழகத்துக்குச் சென்றுகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானார். காயமடைந்தவர் உடனடியாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணைகளுக்காக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 


நாட்டில் உள்ள பெண்ணியம் பேசும் அமைப்புக்கள் உடனடியாக இந்த அதிபர் நியமன விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! 

 


வனிந்து ஹசரங்க 100, T20I விக்கெட்டுகளை எட்டினார்.

வரலாற்றில் வேகமாக 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர், ரஷித் கானுக்கு அடுத்தபடியாக!

வாழ்த்துகள் வனிந்து ஹசரங்க


(எஸ்.அஷ்ரப்கான்)

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில்  "சுத்தமான சூழலை நோக்கி" எனும் தொனிப் பொருளில்  மாபெரும் சிரமதான பணி கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில்  இன்று (17) சனிக்கிழமை காலை 06 மணிக்கு இடம்பெற்றது.

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீனின் தலைமையில் 
இடம்பெற்ற இச்சிரமதான பணியில் அமைப்பின்  முகாமையாளர் டாக்டர்    எஸ்.நளிமுதீன் ஆகியோருடன் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இச்சிரமதானத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

கல்முனை மாநகர சபை சுகாதர பிரிவினர், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உட்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் தஃவா குழு உறுப்பினர்களின் பங்குபட்டுதலுடன் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிரமதான பணியினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைப் பிரதேசத்தில் உள்ள பொது இடங்களை சுத்தமுள்ள சுகாதாரமிக்க சுத்தமான காற்றை சுவாசிக்கக் கூடிய இடமாக மாற்றுவதற்கான முயற்சியில்  ஏ.ஆர் மன்சூர் பவுண்டேஷன் ஈடுபட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்



மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர். அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மாணவரின் ஜனாஸா இன்று காலை மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாய்ந்தமருதை சேர்ந்த ரிஸ்வான் முஹம்மட் இல்ஹம் (வயது 15) எனும் மாணவனின் ஜனாஸா இன்று மதியம் மீட்கப்பட்டது. 


சம்பவம் தொடர்பில் தெரியவரும் விடயம் யாதெனில், சாய்ந்தமருதின் பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது அன்று மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக உயிர் தப்பிய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 


கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் தேடி அலைந்து இந்த ஜனாஸாக்களை மீட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கௌரவ எம்.ரீ.சபீர் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.


மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்களான எம்.ஏ. பசீல், ஆர். விமலேந்திரன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நூருல் ஹுதா உமர் 

இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் என்பவை தொடர்பாக காலாண்டுக்கு ஒரு முறை இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரதேச மட்ட சமுதாய சீர்திருத்தக் குழு, சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இன்று இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவை தொடர்பில் சமூக மட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அம்பாறை நீதிமன்ற நீதிபதி அவர்கள் விசேட உத்தரவையடுத்து மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் என்.எம். இக்ராம் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வி.யசோதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடைவிலகல், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விசேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் மற்றும் சமுதாய சீர்திருத்தக் குழு, கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் (VCDC) 2024 ஆம் ஆண்டு வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. 

மேலும், பால்நிலை வன்முறை மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச மட்டத்தில் தங்கள் அமைப்பு சார்ந்த வேலைத்திட்டங்கள், குடும்ப வன்முறை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவற்றை குறைப்பதற்கும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மேற்படி கூட்டத்திற்கு குவாசி நீதவான் சட்டத்தரணி எஸ்.எல். பாறூக், பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான், சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எம்.என்.எப். றஸ்கா ஆஸ்மி, பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர், (GN) எச்.பி. யசரட்ன பண்டார, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எல். நௌபீர் சமுர்த்தி வங்கி முகாமையாளர் டி. கே. ரஹ்மதுல்லாஹ் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ. சபீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
மேலும் சிறுவர் , சமய நிறுவனங்களின் தலைவர்கள், ஜம்இய்யதுல் உலமா சபை, பொதுச் சுகாதார பரிசோதகர், இஸ்லாமிக் ரிலீப், மனித எழுச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்க பிரதிநிதிகள், கிராம மட்டத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.ஆர். றியாஸ், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாட், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்காவில் உள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் (SCA) பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரீன் அக்தர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.