Showing posts with label Technology. Show all posts





 உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். 

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என்ற பெரும் நிறுவனங்களுடன் இப்போது ட்விட்டரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார் தொழில்துறை ஜாம்பவான், உலகப் பணக்காரர் எலான் மஸ்க்.

கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார் எலான் மஸ்க். அதன்பின்னர் இல்லை ட்விட்டரை வாங்கவில்லை என்று அறிவித்தார். அப்புறம் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை, இல்லை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினா. இந்நிலையில் தான் நேற்று (வியாழக்கிழமை) அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அவர் அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ‘நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்’ என்று பதிவிட்டிருந்தார். Let that sink in! என்ற அவருடைய ட்வீட் பணக்காரத்தனத்தின் உச்சம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வியாழன் பின்னிரவில் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது. அவர் மட்டுமல்ல ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். இதனை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் எலான் மஸ்க் தரப்போ, ட்விட்டர் தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்களை உறுதி செய்யவில்லை.

முன்னதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஏன் ட்விட்டரை வாங்குகிறேன் என்பதற்கான விளக்கம் அளித்திருந்தார். அதில், “ட்விட்டரை வாங்குவது முக்கியமானது. ஏனெனில் ஒரு பொதுவான டிஜிட்டல் தளம். எல்லோருடைய கருத்துகளையும், நம்பிக்கைகளையும் பகிர்ந்து, ஆரோக்கியமான முறையில் விவாதிக்க ஒரு தளம் தேவை” என்று பதிவிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் ட்விட்டர் தலைமையகத்தில் காஃபி பார் ஒன்றில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

ஏற்கெனவே ட்விட்டர் மஸ்க் கைவசம் வந்த பின்னர் அவர் இப்போது இருக்கும் ஊழியர்களில் 75% பேரை பணிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் ஊழியர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பெயர் குறிப்பிடாமல் பேட்டியளித்த ஊழியர்களில் சிலர், “எலான் மஸ்க்கின் தலைமையில் வேலை பார்க்க விருப்பமில்லாததால் நாங்கள் பணியிலிருந்து விலகிவிட்டோம்” என்றனர். இன்னும் சிலர், “இப்போதைக்கு எந்த கடினமான முடிவையும் எடுப்பதாக இல்லை. சந்தேகத்தின் பலனை அளித்து இன்னும் சில காலம் இங்கேயே பணியைத் தொடர்வோம்” என்று கூறினர். இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், “மஸ்க் ட்விட்டரை நடத்தினால் அதில் நம்பகத்தன்மையற்ற தகவல்களும், பல்வேறு அவதூறுகளும், தொல்லைகளும் அதிகரிக்கும்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.

 


புதுடெல்லி: 

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளைப் பரப்பியதற்காக பத்து யூ டியூப் சேனல்களில் இருந்து சில 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் ஒருமுறை முடக்கியுள்ளது. 

முடக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே பார்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 புலனாய்வு அமைப்புகளின் தகவலின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முடக்கப்பட்ட வீடியோக்களில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

 


ஆர்டெமிஸ் என்ற நாசாவின் ராக்கெட் நிலவுக்கு புறப்பட ஆயத்தமான நிலையில், அதில் உள்ள மூன்றாவது எஞ்ஜினில் ஏற்பட்ட பழுதுக்கான காரணத்தை பொறியாளர்களால் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து இன்றைக்கு ராக்கெட் ஏவும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக திட்ட இயக்குநர் அறிவித்திருக்கிறார்.

முன்னதாக, பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 13.33 மணிக்கு இந்த ராக்கெட் ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. ஆனால், உத்தேசிக்கப்பட்ட நேரத்தை விட அந்த ராக்கெட் ஏவும் நேரம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

ராக்கெட்டின் உள்டாங்கியில் திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் டாங்கிகள் இணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டது. அதை சீர்படுத்தும் பணியில் பொறியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்டெமிஸ் 1 ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது எஞ்சினில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் நாசா அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நாசாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆக அறியப்படும் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்), ஆளில்லா ஓரியன் விண்கலனை சந்திரனை சுற்றி அனுப்ப உள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், 2025ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தமது லட்சியக் கனவை 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா சாத்தியமாக்கும்.

அதுவும் சந்திரனில் முதல் வீராங்கனையை தரையிறக்க முடியும் என்று நாசா உறுதியாக நம்புகிறது. இந்த விண்வெளி நிகழ்வை தமது இணையதளத்திலும் சமூக ஊடக பக்கங்களிலும் காண நாசா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் ஷான் ஆடு (உருவகப்படுத்தப்பட்ட பொம்மை ஆடு) மற்றும் சில ஸ்னூப்பி பொம்மைகளை விண்வெளிக்கு நாசா அனுப்புகிறது.

    சிவப்புக் கோடு

    ஆர்டெமிஸ் பயணம் எவ்வாறு இருக்கும்?

    நாசா விண்வெளி திட்டம்

    பட மூலாதாரம்,REUTERSCOPYRIGHT

    ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்படும் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆக விளங்கும். காரணம், இது புறப்படும்போது ஏற்படக்கூடிய ஒலி மற்றும் அழுத்தம், ஏறக்குறைய 60 கான்கார்ட் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்களுக்கு சமமான உந்துதலை உருவாக்கும்.இந்த ராக்கெட் பூமியை விட்டு வெளியேறுவது ஒரு ஆரம்பம்தான்.

    8 நிமிடங்கள் மற்றும் 20 விநாடிகள் பறந்த பிறகு, இதன் பக்கவாட்டுப் பூஸ்டர்கள் மற்றும் முக்கிய கட்டத்தில் உள்ள ஓரியான் விண்கலனை அது உயரே உள்ள நீள்வட்ட பாதைக்கு அனுப்பும். பிறகு இயல்பாகவே அது மீண்டும் பூமியில் வந்து விழும்.

    காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

    YouTube பதிவின் முடிவு, 1

    எனவே, சந்திரனின் திசையில் கலனை உயர்த்துவதற்கு முன், மேல் பகுதி அல்லது முக்கிய கட்ட பகுதி, சுற்றுப்பாதையை வட்டமிட வேண்டும்.

    ஏவப்பட்ட இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஓரியன் விண்கலன் மற்றும் அதன் பின்புற சேவை தொகுதி, மேல்-நிலையில் இருந்து பிரிக்கப்படும். பின்னர் அவை பாதையில் வட்டப்பாதையில் நிலையாக வேண்டும். அப்போது மணிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் (19,000 மைல்) வேகத்தில் அது விண்வெளியில் செல்ல வேண்டும்.

    சிவப்புக் கோடு

    திட்டம் சாத்தியமாகாவிட்டால் என்ன ஆகும்?

    நாசா ஆர்ட்டெமிஸ்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்டெமிஸ் I முதலில் உள்ளூர் நேரப்படி 08:33 மணிக்கு (13:33 BST) ஏவ திட்டமிடப்பட்டிருந்தாலும், தேவைப்பட்டால் உள்ளூர் நேரப்படி 10:33 (15:33 BST) வரை பின்னுக்குத் தள்ளப்படலாம். வானிலை அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்.

    இந்த நேரத்துக்குள் டேக்-ஆஃப் சாத்தியமில்லை என்றால், வேறு இரண்டு பின் தேதிகளில் ராக்கெட்டை ஏவும் திட்டத்தை செப்டம்பர் 2 அல்லது செப்டம்பர் 5இல் செயல்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் பெரும்பகுதி நாசாவின் ஃப்ளைட் டெர்மினேஷன் சிஸ்டம் (எஃப்டிஎஸ்) மூலம் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 18ஆம் தேதி எஸ்எல்எஸ்-இல் விண்கலன் நிறுவப்பட்ட நாளில் இருந்து இதில் உள்ள பேட்டரி 20 நாட்களுக்கு இயங்க சான்றளிக்கப்பட்டிருக்கிறது.

    அதற்குள் டேக்-ஆஃப் சாத்தியமாகாவிட்டால், எஃப்டிஎஸ் முறை அகற்றப்பட்டு மாற்றப்பட வேண்டும்.

    எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட மூன்று தேதிகளில் ஏதேனும் ஒன்றில் டேக்-ஆஃப் நிச்சயமாக நடைபெறும் என்று நாசா அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

     


    ஃபேஸ்புக் நிறுவனம் ஹண்டர் பிடன் லேப்டாப் கதைகளை ஏழு நாட்களுக்கு ரத்து செய்ததாக ஜோ ரோகன் மீது மார்க் ஜுக்கர்பெர்க் கூறியிருந்தார்.

    பதிலடி கொடுக்கும் வகையில், 'சாத்தியமான அச்சுறுத்தல்கள்' குறித்து சமூக ஊடக நிறுவனங்களுக்கு 'வழக்கமாக அறிவிக்கிறது' என்று FBI கூறுகிறது.



    2020 இலையுதிர்காலத்தில் ரஷ்ய தவறான தகவல் குறித்து முகநூல் எச்சரித்ததாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் கூற்றுகளுக்கு FBI பதிலளித்துள்ளது.
    

    எச்சரிக்கைக்குப் பிறகு, நியூயார்க் போஸ்ட் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இப்போது பிரபலமற்ற Hunter Biden மடிக்கணினி கதையை வெளியிட்டது.
    எஃப்.பி.ஐ ஹண்டர் பிடன் கதையை குறிப்பாக குறிப்பிடவில்லை, ஆனால் அது ஏஜென்சி விவாதித்தவற்றின் வடிவத்திற்கு பொருந்தும் என்று ஜூக்கர்பெர்க் கூறினார்.
    எஃப்பிஐ அந்த கூற்றுகளுக்கு பதிலளித்தது, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களுடன் நிறுவனம் தொடர்ந்து தொடர்பு கொள்கிறது.
    பெறப்பட்ட தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனங்களைக் கேட்கவோ அல்லது வழிநடத்தவோ முடியாது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.


    ஹண்டரின் மடிக்கணினியில் சமரசம் செய்யும் மற்றும் எக்ஸ் தரமதிப்பீடு செய்யப்பட்ட உள்ளடக்கம் - நிர்வாணம், ஆபாச மற்றும் போதைப்பொருள் தொடர்பான படங்கள் மற்றும் ஜனாதிபதியின் வயது வந்த மகனின் வீடியோக்கள் உட்பட. பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

    ராபர்ட் ஹண்டர் பிடன் (பிறப்பு பிப்ரவரி 4, 1970) ஒரு அமெரிக்க வழக்கறிஞர் ஆவார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் அவரது முதல் மனைவி நெய்லியா ஹண்டர் பிடனின் இரண்டாவது மகன் ஆவார். பிடென் ஒரு ஹெட்ஜ் நிதி, துணிகர மூலதனம் மற்றும் தனியார்-பங்கு நிதி முதலீட்டாளர் ஆவார், அவர் முன்பு பரப்புரையாளர், வங்கியாளர், பொது நிர்வாக அதிகாரி மற்றும் பதிவு செய்யப்பட்ட லாபிஸ்ட்-நிறுவன வழக்கறிஞராக பணியாற்றினார்.


     காலத்துக்கு ஏற்ற துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்த காரைதீவு இளைஞன் தரணி.



    சமகால எரிபொருள் பிரச்சனையை சமாளிக்கும் முகமாக மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக  மோட்டார் பூட்டிய துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்திருக்கின்றார் ஒரு இளைஞன்.

    அவர் தான் காரைதீவைச் சேர்ந்த  பரமலிங்கம் தரணிதரன் என்கின்ற இளைஞன் . இவர் மின்சார இலத்திரனியல் உபகரணங்களை பழுது பார்த்தல் தொழிலையும் செய்து வருகின்றார். சம்மாந்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவராவார்.

    இந்த புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இன்று பிசியாகி விட்டார்..

    துவிச்சக்கர வண்டியிலே மோட்டார் ஒன்றை பொருத்தி அதற்கான ஏனைய தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

    மோட்டார் சைக்கிள் ஒன்றின்  பாவனையை ஒத்த இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இருக்கின்றார்.

     அவரிடம் நேரடியாக தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறு பதிலளித்தார்.

    "இதற்குரிய மோட்டார் இணையதளத்திலிருந்து பெற்றுக் கொண்டோம். ஒரு மோட்டோருக்கு 16 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

     இதைவிட இரண்டு பேட்டரிகள் 20,000 ரூபாய்.  அவ்வளவுதான் இதை தயாரிப்பதற்கு தேவையானவை .

    இந்த மோட்டார் பூட்டிய துவிச்சக்கரவண்டி நாள் ஒன்றுக்கு  60 கிலோ மீட்டர் தொடக்கம்  70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க கூடியது. 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

     சிலவேளை மோட்டார் பழுதாகினால் காலால் மிதித்தும் வந்து சேரக்கூடிய  கட்டமைப்பு இருக்கின்றது. 
    ஒட்டி பொருத்தும் வேலைகளை கண்ணன் அண்ணா செய்து உதவினார்.

    மேலும் நாடார் கடையில் இருந்து பழைய சிறிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி அதனை வடிவமைத்து வருகிறேன்.

    இதனை கண்டுபிடித்த நாளிலிருந்து ஏகப்படியான தொலைபேசி அழைப்புகள் கிடைக்க பெற்று வருகின்றது. தேவையான அளவுக்கு செய்து கொடுக்கலாம் அதற்கான ஆலோசனை வழங்கலாம் "என்று தெரிவித்தார்.

    வி.ரி.சகாதேவராஜா


     நூருல் ஹுதா உமர்


    அம்பாரை மாவட்ட செயலகத்தினால் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் அமுலுக்கு வரும் வரை சாய்ந்தமருது பிரதேசத்தில் எரிபொருளை (பெற்றோல், டீசல் ) அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், தொடர்ச்சியாக ஒரு நபர் பெறுவதைத் தடுத்தல், கருப்புச் சந்தையினை குறைத்தல் ஆகியனவற்றை நோக்காக கொண்டு   "Fuel Master Management" என்ற App, நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் நேற்று12.07.2022 அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலி மூலம் சாய்ந்தமருது IOC இல் பெற்றோல் விநியோகிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டது. எனினும் இறுதிக்கட்டத்தில் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் பிரவேசித்ததால் மக்களுக்கு பெற்றோல் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

    எனவே அனைவரும் எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது அதனடிப்படையில் 12/07/2022 ல் பெற்றோல் விநியோகிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும்10 நாள் இடைவெளியின் பின்னரே பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு கிழமைக்கு 2 அல்லது 3 வவுசர்கள் எரிபொருள் பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் 12/07/2022 ல் பெற்றோல் பெறாதவர்கள் மாத்திரம் சமுகம் தந்து வேறுதினத்தில் பெற்றோலை பெறமுடியும். எரிபொருள் பெற வரும் பொதுமக்கள் இந்த APP System க்கு முழுமையாக ஒத்துழைப்பு தரும் பட்சத்தில்  உத்தியோகத்தர்கள் தன்னார்வ  சேவையாக இதனை செய்ய தயாராக உள்ளார்கள். 

    தன்னுடைய ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த Appஐ  உருவாக்குவதற்கு உதவி புரிந்த Inncome Developers நிறுவனத்திற்கு  நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வாகனங்களை பதிவு செய்வதற்கு உதவி செய்த அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்

     


    ட்விட்டரில் தவறான தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கர்நாடக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

    இதுபோன்ற "பல" உத்தரவுகளை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், ஆதாரங்களுடன் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அரசாங்க உத்தரவை அமல்படுத்தத் தவறினால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அந்த விவகாரத்தில் தற்போதுதான் ட்விட்டர் நிறுவனம் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இந்தியாவில் 2.4 கோடிக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களை ட்விட்டர் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சில மணி நேரத்தில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அனைத்து வெளிநாட்டு இணையதள நிறுவனங்களும் இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 1

    Twitter பதிவின் முடிவு, 1

    தவறான தகவல்களை பரப்பும் நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மற்றும் பதிவுகளை அகற்றுமாறு ட்விட்டர் நிறுவனத்தை அரசுத்தரப்பு தொடர்ந்து வலியுறுத்திய போதும், அதனை பொருட்படுத்தாமல் இருந்ததால், கடந்த மாதம் ட்விட்டருக்கு அனுப்பிய கடிதத்தில், அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே "கடைசி வாய்ப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

      இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகளை ட்விட்டர் நிறுவனத்துக்கு அரசு விடுத்திருந்தது. அதாவது "நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும்" வகையில் இருக்கும் இணைய உள்ளடக்கங்களை முடக்குவதற்கு இந்த சட்டம் அரசாங்கத்தை அனுமதிக்கிறது.

      எனவே, இந்த சட்டத்தின்படி விடுக்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறினால் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதால், "அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மை" காரணமாக ட்விட்டர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளதாக இதுகுறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

      உதாரணமாக, பல சந்தர்ப்பங்களில் முழு கணக்குகளும் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

      இது ட்விட்டர் நிறுவனத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலின் சமீபத்திய நடவடிக்கையாகும்.

      சில கணக்குகளை முடக்க கோரும் இந்திய அரசு: எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற ட்விட்டர் நிறுவனம்

      பட மூலாதாரம்,GETTY IMAGES

      பொது ஒழுங்கை காரணம் கூறி, கடந்த ஓராண்டாக பல முறை அரசு தரப்பு, நூற்றுக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மற்றும் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டு வருகிறது. கடந்த ஆண்டு விவசாயிகள் நடத்திய மிகப் போராட்டங்கள் தொடர்பான கணக்குகள் மற்றும் ட்வீட்கள், கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் ட்வீட்கள் ஆகியவை இதில் அடக்கம்.

      அரசாங்கத்தின் நோட்டீசுக்கு இணங்கும் விதமாக, புலனாய்வு செய்தி இதழின் கணக்கு மற்றும் பல மாதங்களாக நடந்த விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்த ஆர்வலர்கள் மற்றும் குழுக்களின் கணக்குகள் உட்பட சுமார் 250 கணக்குகளை ட்விட்டர் தற்காலிகமாக முடக்கியது.

      ஆனால், தற்காலிகமான தடையை நீட்டிப்பதற்கு "போதுமான நியாயம் இல்லை" என்று குறிப்பிட்டு ட்விட்டர் அக்கணக்குகளை ஆறு மணி நேரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது.

      கடந்த ஆண்டு பிப்ரவரியில், "இந்தியாவில் வணிகம் செய்ய வரவேற்கிறோம்," அதே சமயத்தில் "ட்விட்டர் நிறுவனம் தனது விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல்" நாட்டின் சட்டத்தை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

      கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலுள்ள தனது நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு காவல்துறையினர் வந்த சம்பவத்தை அடுத்து, நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்த கவலைகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

      பாரதிய கட்சியின் பதிவொன்றை "உண்மைக்கு புறம்பாக மாற்றப்பட்ட உள்ளடக்கம்" என்று ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டதை அடுத்து டெல்லி காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்று நோட்டீஸ் வழங்கினர்.

      ட்விட்டர் மனுவில் கூறியிருப்பது என்ன?

      ட்வீட்களை அகற்றுமாறு இந்தியாவின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

      பட மூலாதாரம்,GETTY IMAGES

      கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உள்ளடக்கங்களை முடக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவுகளில் சிலவற்றை மறு ஆய்வு செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த அந்த மனுவின் விவரங்கள் பிபிசிக்கு கிடைக்க பெற்றது. அதில் உள்ளடக்கங்களை முடக்க கோரும் அரசின் உத்தரவுகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் பயனர்களுக்கு கொடுத்துள்ள உரிமைக்கு எதிராக உள்ளது என கூறியுள்ளது.

      மேலும், ஒரு பதிவின் குறிப்பிட்ட பகுதியோ அல்லது முழு பதிவோ உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டிருந்தால் அந்த குறிப்பிட்ட பதிவுகள் மட்டுமே நீக்கப்படும் என்றும் அந்த கணக்கு நீக்கப்படாது என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே டெல்லி உயர்நீதிமன்றத்தில் பலமுறை கூறியுள்ளது என்று ட்விட்டரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ட்விட்டர் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 200 பிரிவு 69Aவின் (எந்தவொரு கணினி ஆதாரத்தின் மூலமாகவும் ஒரு தகவலின் பொது அணுகலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதற்கான அதிகாரங்கள்) கீழ் வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

       


      அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக மருத்துவமனை சென்ற தகவல், இருப்பிட பயண விபரங்களில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

      மாகாண எல்லை தாண்டி சென்று கருக்கலைப்புக்காக செல்லும் பெண்களின் மின்னஞ்சல்கள், இருப்பிட தகவல் விபரம், இணைய தேடல் உள்ளிட்டவை பயன்படுத்தி தங்களது நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படலாம் என கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

      தேடுபொறியில் யாரேனும் எடை குறைப்பு மருத்துவமனை, போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்றிருந்தது தெரிந்தால், அந்த தகவலும் நீக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

       


      புதிதாக தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்ச்சு ஒன்றை ஸ்தாபிக்கும் அதிவிசேட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டது.

      புதிய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு.

      தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
      இலங்கை முதலீட்டுச் சபை
      இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம்,
      ஆட்பதிவு திணைக்களம்,
      குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,
      துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு,
      தரநிலை நிறுவனம்,
      தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம்
      கொழும்பு தாமரை கோபுரம்,



       ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை போட்டதற்கு பிறகு அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு வேலை நடந்து வருவதாக ட்விட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

      ட்விட்டர் நிறுவனத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினரான பிறகு, டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டர் கணக்கில் நடத்தினார்.

      ட்விட்டர் பயனர்கள் பல காலமாக ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை எதிர்பார்த்திருக்கக்கூடிய சூழலில், அதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளதால் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் வரக்கூடிய மாதங்களில் இந்த எடிட்‌ செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக ட்விட்டர் கூறியுள்ளது.

      இது தொடர்பாக ட்விட்டரின் தகவல் தொடர்பு குழு ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில், "இப்போது எல்லோரும் கேட்பதால்… ஆம், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை நடைமுறைப்படுத்த நாங்கள் கடந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறோம்!"

      "இந்த யோசனை, கருத்து கணிப்பு நடந்ததற்கு பின்பு தோன்றியது அல்ல"

      "வரக்கூடிய மாதங்களில் ட்விட்டர் ப்ளூ(@TwitterBlue) ஆய்வகத்தில், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை சோதனை செய்ய உள்ளோம். இதன் மூலம் எதை செய்யலாம், எதை செய்ய முடியாது, எது சாத்தியமானது என்பதை நாங்கள் தெரிந்து கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

      Twitter பதிவை கடந்து செல்ல, 1

      Twitter பதிவின் முடிவு, 1

      ட்விட்டரின் சந்தா சேவை தளமான, ட்விட்டர் ப்ளூவின் பயனர்களுக்குத்தான், டிவிட்டர் சோதனை செய்யும் எந்த ஒரு புது வசதியும் முதலில் கிடைக்கப்பெறும்.

      இந்த வசதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் ட்வீட்களில் தவறுதலாக ஏற்படும் எழுத்துப் பிழைகளை, ட்வீட்க்கு கிடைத்த லைக்குகள், பதில்கள் உள்ளிட்டவை பாதிக்காத வகையில் அவற்றில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். நிறுவனத்தின் நுகர்வோர் தயாரிப்புகளின் துணைத் தலைவர் ஜே சல்லிவன் செவ்வாயன்று ஒரு தகவலில், இந்த எடிட் வசதி "பல ஆண்டுகளாக மிகவும் கோரப்பட்ட ட்விட்டர் அம்சம்" என்று கூறினார்.


      இருப்பினும், இந்த வசதியை "பாதுகாப்பான முறையில்" எவ்வாறு உருவாக்குவது என்பதை நிறுவனம் ஆராய்ந்து வந்ததாக அவர் கூறினார். "இந்த எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நேர வரம்புகள், கட்டுப்பாடுகள் மற்றும் எடிட்டை பற்றிய வெளிப்படைத்தன்மை போன்ற தகவல்கள் இடம்பெறாமல் இந்த வசதியை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் அது தவறுதலாக கையாளப்படலாம்."

      மேலும் அவர் கூறுகையில், "பொதுவெளி உரையாடல்களை, உள்ளதை உள்ளவாறு பாதுகாப்பது எங்களுக்கு மிக முதன்மையான முன்னுரிமையாகும். அதனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதி தொடர்பான வேலைகளில், இவற்றையும் கணக்கில் கொள்வோம்" என்றார்.

      கடந்த 2018-ஆம் ஆண்டு ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி, வெளிப்படைத்தன்மை பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த வசதியை "அநேகமாக ஒருபோதும்" அறிமுகப்படுத்தமாட்டோம் என கூறினார்.

      ட்விட்டரின் போட்டி சமூக ஊடக தலங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், பயனர்கள் தங்களின் பதிவுகளை எடிட் செய்யும் வசதியை வழங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலும் இந்த வசதியை வரவேற்கும் மனநிலையில்தான் உள்ளார்.

      Twitter பதிவை கடந்து செல்ல, 2

      Twitter பதிவின் முடிவு, 2

      ட்விட்டரில் 9.2% பங்குகளை வைத்துள்ள ஈலோன் மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார். இந்த தகவல் பகிரப்பட்டதற்கு பிறகு, ஈலோன் மஸ்க் கடந்த திங்களன்று, ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டர் கணக்கில் நடத்தினார். இந்த கருத்து கணிப்பில் இதுவரை சுமார் 40 லட்சம் பேர் பங்கெடுத்துள்ளனர்.

      கடந்த செவ்வாய் அன்று ஈலோன் மஸ்க் நிர்வாக இயக்குனர் குழுவின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எடிட் செய்யும் வசதி குறித்து ஆராய்ந்து வருவதாக ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று ட்விட்டர் கூறியது. ஆனால் அது ஏப்ரல் 1 முட்டாள்கள் தின நகைச்சுவையாகவே பரவலாக கருதப்பட்டது.

      ஈலோன் மஸ்க்

      பட மூலாதாரம்,GETTY IMAGES

      வட அமெரிக்காவின் தொழில்நுட்ப பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் கூறுவது என்ன?

      ஈலோன் மஸ்க் டவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குழுவில் நியமிக்கப்படுவதற்கு முன்பே, ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் வருகைக்கு பிறகுதான் இந்த எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

      ட்விட்டர் கருத்துக் கணிப்புகள் அறிவியலுக்குப் புறம்பானவை. இருப்பினும் ஈலோன் மஸ்க் கருத்து கணிப்பின் அடிப்படையில், நடைமுறைப்படுத்தக்கூடிய முடிவுகள் எடுக்கும் திறன் கொண்டவர். கடந்த ஆண்டு நவம்பரில், ஈலோன் மஸ்க் தனது டெஸ்லா பங்குகளில் 10% விற்க வேண்டுமா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில், 80 லட்சம் பின்தொடர்பவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன் முடிவில் பெரும்பான்மையானவர்கள் விற்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில் அவர் அதை செய்தார்.

      சமீபத்தில் ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில், ட்விட்டரின் எடிட் வசதி தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்திய நிலையில், இதை ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், "ஈலோன் மஸ்க் நடத்தும் கருத்துக்கணிப்பு மிக முக்கியமானது. அதனால் அதற்கு கவனமாக வாக்களியுங்கள்" என்று கூறியுள்ளார்.

      இதன் மூலம், நடத்தப்படும் கருத்து கணிப்பின் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் எடிட் செய்யும் வசதி தொடர்பான கொள்கை முடிவில் மாற்றத்துக்கான சாத்தியக்கூறு உள்ளது என தெரிகிறது.

      ஒரே இரவில் ஈலோன் மஸ்க் ட்விட்டரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் அவர், முடிவுகளை எடுப்பதற்கான நிலைப்பாட்டை, அவரை பின் தொடர்பவர்களியிடம் விட்டுவிடுகிறார் போல தெரிகிறது.

      இவையெல்லாம் அவரது முதல் நாளில் நடந்தவை, இனி வரும் நாட்களில் பல முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. அப்படியான முக்கியமான இடத்தில் அவர் உள்ளார்.

      இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

      Powered by Blogger.