சாய்ந்தமருதில் எரிபொருள் விநியோகம் ஒழங்கமைக்க "Fuel Master Management"





 நூருல் ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட செயலகத்தினால் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் அமுலுக்கு வரும் வரை சாய்ந்தமருது பிரதேசத்தில் எரிபொருளை (பெற்றோல், டீசல் ) அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், தொடர்ச்சியாக ஒரு நபர் பெறுவதைத் தடுத்தல், கருப்புச் சந்தையினை குறைத்தல் ஆகியனவற்றை நோக்காக கொண்டு   "Fuel Master Management" என்ற App, நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் நேற்று12.07.2022 அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலி மூலம் சாய்ந்தமருது IOC இல் பெற்றோல் விநியோகிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டது. எனினும் இறுதிக்கட்டத்தில் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் பிரவேசித்ததால் மக்களுக்கு பெற்றோல் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

எனவே அனைவரும் எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது அதனடிப்படையில் 12/07/2022 ல் பெற்றோல் விநியோகிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும்10 நாள் இடைவெளியின் பின்னரே பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு கிழமைக்கு 2 அல்லது 3 வவுசர்கள் எரிபொருள் பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் 12/07/2022 ல் பெற்றோல் பெறாதவர்கள் மாத்திரம் சமுகம் தந்து வேறுதினத்தில் பெற்றோலை பெறமுடியும். எரிபொருள் பெற வரும் பொதுமக்கள் இந்த APP System க்கு முழுமையாக ஒத்துழைப்பு தரும் பட்சத்தில்  உத்தியோகத்தர்கள் தன்னார்வ  சேவையாக இதனை செய்ய தயாராக உள்ளார்கள். 

தன்னுடைய ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த Appஐ  உருவாக்குவதற்கு உதவி புரிந்த Inncome Developers நிறுவனத்திற்கு  நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வாகனங்களை பதிவு செய்வதற்கு உதவி செய்த அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்