Showing posts with label Weather. Show all posts

ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பாரிய மின்னல் தாக்கம் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வெளியிட்ட குறித்த எச்சரிக்கை அறிக்கை இரவு 7.30 மணிவரை அமுலில் இருக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் கடற்கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ வரை வேகமாக காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடகிழக்கு ஆகிய மாகாணங்களிலும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது வட அகலாங்கு 4.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.1E இற்கும் அருகில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 800 கிலோமீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளது. 

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும் தொடர்ந்து ஓரு சூறாவளியாகவும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இத்தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை அண்டியதாகவும் விலகியும் நகரக்கூடுவதுடன் 2019 ஏப்ரல் 30ஆம் திகதிமாலை அளவில் (இந்தியா) வடதமிழ்நாட்டுக் கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது 

பொதுமக்களும்கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கை தேயிலைச் சபையில் பதவி வெற்றிடங்கள்

பதவிகள்

01. வெப்மாஸ்டர் - பட்டம்

02. வரவேற்பு உத்தியோகத்தர் - உயர் தரம்

விண்ணப்ப முடிவுத்திகதி - 26.02.2019
விபரங்கள் SUNDAY OBSERVER 2/10

தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (பெப்ரவரி 09ஆம் திகதி) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக வடமத்தியமாகாணத்திலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு, வடக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வவ்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கம்பஹா மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)


குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நிலான்ஷி படேல், உலகிலேயே நீளமான தலை முடியை கொண்டவர் என்கிற சாதனை படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் அவரிடம் வழங்கியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"இவர் சிறு வயது முதலே தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பலனாக தற்போது அவருக்கு 5.7 அடிக்கு தலை முடி உள்ளது.

கிளிநொச்சியில் நேற்றிரவு (21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 

வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

சில கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு, படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளமையால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர். 

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது. 

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)

இன்றிலிருந்து எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் ம​ழையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் அதிக மழை பெய்யக்கூடுமென்றும், அத்தோடு இன்று மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
---------------------------------------------------------
(2018 டிசம்பர் 15ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது)
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழமான தாழமுக்கம் 2018 டிசம்பர் 14ஆம் திகதி 2330 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 540 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 8.8N, கிழக்கு நெடுங்கோடு 86.2E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.
இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மீனவர்கள் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.
நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் வட மாகாணத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும். நாடு முழுவதும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
(2018 டிசம்பர் 15ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது)
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழமான தாழமுக்கம் 2018 டிசம்பர் 14ஆம் திகதி 2330 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 540 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 8.8N, கிழக்கு நெடுங்கோடு 86.2E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.
இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மீனவர்கள் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் டிசம்பர் 16ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்
அடுத்த 24 மணித்தியாலத்திற்கு
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கின் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்குமுதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
நாட்டுக்கு கிழக்காக உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படுவதுடன் நாட்டுக்கு மேற்காக உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு - வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும், இத் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி, மற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்த வேகத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய திடீரென்ற கடல் கொந்தளிப்பு போன்றவற்றுக்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. 

கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

நாட்டுக்கு கிழக்காகவும் மேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இத்தாலியிலுள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 100 பேர்களில் 10 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் கிழக்குப்பகுதியிலுள்ள கடற்கரை நகரமான அன்கோனாவிற்கு அருகிலுள்ள இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோரினால்டோ என்ற இடத்திலுள்ள அந்த இரவு நேர விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தபோது, யாரோ ஒருவர் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதாக கூறியதால் ஏற்பட்ட பீதியின் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலி இரவு விடுதியில் நெரிசல்: ஆறு பேர் பலி; 100 பேர் காயம்
இத்தாலியின் பிரபல ராப் இசை கலைஞரான எபஸ்தா என்பவர் 'தி லன்டேர்னா அஸ்ஸுரா' என்னும் இரவு விடுதியில் நடத்திய நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றதாக தெரிகிறது.
கிறித்தவ மதம் தொடர்பான சிறப்பு நாள் கொண்டாட்டத்தின்போது, அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் செனிகாலியா, அன்கோனா ஆகிய பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்படன்னர்.
இத்தாலி இரவு விடுதியில் நெரிசல்: ஆறு பேர் பலி; 100 பேர் காயம்படத்தின் காப்புரிமைVIGILI DEL FUOCO
உள்ளூர் அவசரகால உதவி அமைப்பு இந்த சம்பவம் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றி உள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் இத்தாலியின் டுரின் நகரில் கால்பந்து தொடரொன்றின் இறுதிப்போட்டி ஒளிப்பரப்பப்பட்டபோது, பட்டாசு சத்தத்தின் காரணமாக ஏற்பட்ட பீதி கூட்ட நெரிசலாக மாறியதில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது. 

வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ விருத்தியடைந்து மாலையில் அல்லது இரவில் வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் பரவக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சில இடங்களில், குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

வளிமண்டலவியல் திணைக்களம்

பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் அனைத்தும் இன்று (05) காலை திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலன்னறுவை வலயத்துக்கான நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது. 

10 வான் கதவுகள் 1 அடி அளவில் திறந்துவிடப்பட்டுள்ளன. இதிலிருந்து நொடிக்கு 1 400 கன அடி நீர் ஒரு வான் கதவிலிருந்து வெளியேற்றப்படுகிறது. 

அதனால் அம்பன் கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் நீர்ப்பாசன அலுவலகம் அறிவித்துள்ளது

யாழில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பழைய பார்க் வீதிக்குக் குறுக்காக பாரிய மரமொன்று சரிந்துவீழ்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்.மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக வீதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது மேலும் பலமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து இன்று (09) வட அகலாங்கு 14.30 பாகை மற்றும் கிழக்கு நெடுங்கோடு 87.50 பாகைகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியானது திருகோணமலைக்கு 950 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊவா மாகாணத்தில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

(வளிமண்டலவியல் திணைக்களம்)

நாட்டில் நிலவுகின்ற தொடர் மழை காரணமாக களு மற்றும் கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்று பல்வேறு பகுதிகளில் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் காலி கொழும்பு பிரதான வீதியில் அகுன தொடக்கம் தொடகமுவ வரை கடல் அலைகள் வீதிவரை வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு தொடக்கம் இவ்வாறு அலை வீதிவரை வந்துள்ளது
இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தோனேசியாவின் செலபஸ் தீவில் இன்று 7.5 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்தநில நடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான அடை மழை காரணமாக கண்டியை அண்மித்த அக்குறனை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

நேற்று,ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அக்குறனை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்குரணையில் தற்சமயம் வெள்ளம் வடிந்து வருகின்றது.

இதேவேளை இன்று பெய்த கடும் மழையின் காரணமாக நாவலபிட்டி நகரமும் வௌ்ளத்தில் மூழ்கியிருந்ததாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் (ஒக்டோபர் 1 முதல் 3 வரை) தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

2018 செப்டம்பர் 30 ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் பாணந்துறையில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அக்கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. 

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்கிழக்கு திசையிலுள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளிலும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். 

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.