Showing posts with label education. Show all posts

 



(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் மற்றும் காரைதீவு கோட்டங்களைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கு  இலவச சீருடையும் இலவசப் புத்தகங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த 20 ம் திகதி நடைபெற்றது.

நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாச்சார மண்டபத்தில்  பாடசாலை அதிபர் எம்.டீ.நௌபல் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நிந்தவூர் பிரதேச  ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி  எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான சீருடை மற்றும் புத்தகங்களையும் வழங்கி வைத்தார்.

கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றியாஸா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம் சஜித் , இணைப்புச் செயலாளர் பீ.எம்.எம்.ஜஃபர் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் கோட்டமும் காரைதீவு தமிழ் கோட்டங்களைச் சேர்ந்த 41 பாடசாலை மாணவர்களுக்கு இவ் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரது பங்கேற்புடன் நடைபெற வேண்டுமென்ற கல்வியமைச்சின்  பணிப்புரைக்கமைய நிந்தவூர் மற்றும் காரைதீவு  பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோக நிகழ்வு  இங்கு இடம்பெற்றது.

 


அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமாக கௌரவ A,C.றிஸ்வான் அவர்கள் கடந்த 2024.01.01 கடமையேற்றதன் பின்பு அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன.

நீதிமன்றின் நீண்ட காலமாக ஓட்டடை ஒடிசல் விழுந்து காணப்பட்டிருந்த  வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புணரமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான,புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு,  போன்றவையும்,  இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று நீதின்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த  பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.


இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட  வாகனத் தரிப்பிடம் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியுமான றிஸ்வான் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்பலகையினை திறந்து திரை நீக்கம் செய்து வைத்தார். 

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க மூத்த துணைத் தலைவர், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. றசீத் அவர்கள், அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தும் போது, பல தசாப்தகாலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்டிருந்த, அக்கரைப்பற்று நீதிமன்று,கடந்த 2024.01.01 கௌரவ  நீதிபதியாக  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் கடமையேற்றதன் பின்பு, பல்வேறுபட்ட மாற்றங்களகை் கண்டு வருகின்றது என்பதாகத் தெரிவித்தார்.அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சிமன்றங்களக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான கௌரவ  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் உரைநிகழ்த்தும் போது, குறுகிய காலத்தில் இப் பணிகளைச் செய்து முடிக்க அரும்பணியாற்றிய, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், களப்பணியில் ஈடுபட்ட சமூதாயஞ்சார் பணியாளர்களுக்கும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான திறப்பு விழாவினைச் செய்து கொடுத்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

 இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். 

 


பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


பெற்றோருடன் பாடசாலைச் சமூகம் மிக நெருக்கம் கொண்டு செயற்படுவதன் விளைவாய் இப்பாடசாலையின் பெற்றோர் ஒருவர் தாமாகவே முன்வந்து ஒரு தொகுதி மாணவர் கதிரை, மேசை என்பவற்றை இதன்போது அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்து நிகழ்வைச் சிறப்பித்த சம்மாந்துறை வலையக்கல்விப் பணிப்பாளருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பெற்றோருடன் பாடசாலைச் சமூகம் மிக நெருக்கம் கொண்டு செயற்படுவதன் விளைவாய் இப்பாடசாலையின் பெற்றோர் ஒருவர் தாமாகவே முன்வந்து ஒரு தொகுதி மாணவர் கதிரை, மேசை என்பவற்றை இதன்போது அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


 ( வி.ரி. சகாதேவராஜா)

நாவிதன்வெளி கணேசா வித்தியாலயத்தில் 2024ம் ஆண்டிற்கான தரம்-1 இற்கு புதிய மாணவர்களை  உள்வாங்கும் வித்தியாரம்ப நிகழ்வானது புதிதாகக் கடமையேற்றுள்ள அதிபர் திருமதி கா.துரைலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன் போது அதிபர் அவர்களை ஆசிரியர்கள்,மாணவர்களால் பொன்னாடை போர்த்தி வரவேற்கப்பட்டார்கள்..
விழாவில்  பிரதம அதிதியாக வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் .சி.பிரதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அப்பாடசாலையில் தரம்-9வரை கற்று தரம்-10 இற்கு ஏனைய பாடசாலைக்கு கற்கச் செல்லும் மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வும் நடைபெற்றது.


(எஸ்.அஷ்ரப்கான்) 

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட காலத்தில் பல குணாதிசயங்களை கொண்ட உபவேந்தர்களை தன்னகத்தே உள்வாங்கி அதன் கல்வி, ஆய்வு மற்றும் அபிவிருத்தி பாதையில் வீறு நடை போட்டு முன்னேறிச் செல்கின்றது.

அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிச் சென்ற உபவேந்தர்களில் பல்கலைக்கழகத்தின் ஆயுள் உள்ளமட்டும் என்றுமே நினைவு கூறத்தக்க பெயர் நாமம் என்றால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிற்பி முன்னாள் உப வேந்தர் பேராசிரியர். எம்.எல்.ஏ. காதர் அவர்களாவார்.

பேராசிரியர். எம்.எல். ஏ. காதர் அவர்கள் சுகயீனமுற்ற நிலையிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை தனது உயிருடன் சுமப்பவர். அவரை செங்கமளமிட்டு வரவேற்று அவரைக் கண்டு அளவளாவும் அரிய நிகழ்வு இன்று 2024.02.21 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரது தலைமையில் இடம்பெற்றது.

பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடாதிபதிகள், நூலகர், பதில் நிதியாளர் மற்றும்  பேராசிரியர்கள்  உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகம் திரண்டிருந்தது.

நிகழ்வின்போது உபவேந்தர் றமீஸ் அபூபக்கர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மற்றும் கலை கலாச்சார பீட அரசியல்துறையின், துறைத்தலைவர் கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அத்துடன் சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் எம்.எம். பாஸில், நூலகர் எம்.எம். றிபாஉடீன், கலாநிதி எம்.அப்துல் ஜப்பார், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கல்விசார ஊழியர் சங்கத்தின் செயலாளர்  எம்.எம்.எம். காமில் உள்ளிட்டோர் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர். எம்.எல். ஏ. காதர் தொடர்பான தங்களது உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டனர்.

மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள், கிழக்கில் யுத்த மேகம் சூழ்ந்த நிலையில்; கிழக்கு மண் மாணவர்கள் கண்ட அவலங்களை களைவதற்காக தனது எண்ணக் கருவில் தோன்றிய தென்கிழக்கிற்கான பல்கலைக்கழக உருவாக்கம் எனப்படுவது செயற்பாட்டு வடிவமாக ஆரம்பிக்கப்பட்டு; அது பின்னாடி தென்கிழக்கு பல்கலைக்கழகமாக உருவாக்கம் பெற்ற போது அதன் முன்னோடியாக அதன் கல்வி அதன் ஆளணி அதன் உருவாக்கம் போன்றவற்றில் தன்னை முதன்மைப்படுத்தி தன்னை ஒரு கடை நிலை ஊழியனாக அர்ப்பணித்து; இன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் கிழக்கின் ஒரு கேந்திர நிலையமாக ஒரு சர்வதேச தர பல்கலைக்கழகமாக உருவாவதற்கு அதன் முதுகெலும்பாக செய்யப்பட்டவர்தான் என்றும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் எம்.எல்.ஏ காதர் அவர்கள்,

மறைந்த தலைவர் எம். எச். எம்.அஷ்ரப் அவர்களின் கனவுக்கு உருவம் கொடுத்து சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முன் நின்றதுடன் தனது சேவைகாலத்தில் கலை கலாச்சார பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம் போன்றவற்றின் உருவாக்கங்களில் தன்னை முழு நேர ஊழியனாக அர்ப்பணித்து சேவையாற்றிய ஒரு செம்மல் பேராசிரியர். எம்.எல்.ஏ. காதர் அவர்கள்.

ஊழியர்கள் இடத்தில் வேலை வாங்குவதில் முகாமையாளராக இருப்பவர்கள் ஒவ்வொரு விதம் ஆனால் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் ஒரு வித்தியாசம் என்பது உண்மையானது.

முற்போக்கு சிந்தனை, நேர்மை, கடமை தவறாமை போன்ற உயரிய குணங்களை தன்னகத்தே கொண்டதுடன் பெறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எதிர்வினை சார் குணங்கள் அறவே அற்றவர்.

பல்கலைக்கழகத்தின் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர்நிலை உத்தியோகத்தர் வரையும் தட்டிக் கொடுத்து அரவணைத்து அவர்களின் சேவைகளை பாராட்டி தோள் மீது தோள் கொடுக்கும் தோழனாகவும், வழிகாட்டும் வழிகாட்டியாகவும், ஆலோசனை செய்யும் ஆலோசராகவும், சுக துக்கங்களில் பங்கெடுக்கும் சகோதரனாகவும், தலைமை தாங்கும் தலைவனாகவும் செயற்பட்டு; இந்த பல்கலைக்கழக உருவாக்கத்தின் ஒவ்வொரு படித்தரங்களிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 

இதன் காரணங்களாலயே அனைத்து தரப்பு ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் என அனைவராலும் என்றுமே நினைவு கூரத்தக்க ஒருவராக பேராசிரியர் எம்.எல்.ஏ காதர் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை.

கிழக்கு மண்ணின் கல்வியின் தாகம் நிறைவேற வேண்டும் என்று ஒவ்வொரு கனப்பொழுதிலும் தனது ஒவ்வொரு சிந்தனைகளிலும் தனது மனம், என்ன ஓட்டங்களிலும் இருந்ததுடன் தான் சேவையாற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழகம் திறம்பட தாபிக்கப்பட்டு அதன் வெளியீடுகளில் எமது சமூகம், எமது பிராந்தியம், எமது நாடு போன்றவற்றிற்கு அங்கு பயின்றவர்கள் முதன்மையான நபர்களாக உள்வாங்கப்பட்டு சேவை ஆற்ற வேண்டும் அதேபோல பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகும் மாணவச் செல்வங்கள் நாட்டின் சிறந்த கல்வியலாளர்களாக சேவையாற்ற வேண்டும் என்ற அவரது உயரிய அவா தற்பொழுது நிறைவேறி வருகின்றமை சிறப்பாகும்.

இன்று அவர் ஒரு நோயாளியாக தனது வீட்டில் முடங்கி இருந்த போதிலும் அவரது முற்போக்கு சிந்தனைகள், எண்ணங்களோ என்றுமே சமூகத்தின்பாலும் தனது பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயற்பாடுகளின்பாலும் தங்கியுள்ளது எமக்கான பெரும் வரப்பிரசாதமாகும்.

பல்கலைக்கழக சூழலில் இன்று நாம் எவ்வளவு உயரிய அடைவுகளை கண்டிருந்தாலும் அதன் அர்ப்பணிப்பு மிக்க உருவாக்கங்களுக்கு முதுகெலும்பாக தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய ஒரு செம்மல் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்கள் என்றும் எமது சமூகத்தாலும் எமது கல்வியலாளர்களாலும் நினைவு கூரத்தக்கவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. 


மாளிகைக்காடு செய்தியாளர்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் பணிப்பாளரும், மயோன் குரூப் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கல்வி உதவித்திட்டம் (Rizley Musthaffa Education Aid) மூலமாக தனது சொந்த நிதியில் இருந்து சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச். எம் அஷ்ரப் வித்தியாலயத்தின் வேண்டுகோளை ஏற்று பாடசாலையின் Smart Class Room க்கு தேவையாக இருந்த Multi மீடியா மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் பணிப்பாளரும், மயோன் குரூப் தலைவருமான றிஸ்லி முஸ்தபா தனது கல்வி உதவித்திட்டம் (Rizley Musthaffa Education Aid) மூலமாக தனது சொந்த நிதியில் இருந்து இந்த Multi மீடியாவை வழங்கி வைத்தார்.

இந்த வித்தியாரம்ப விழாவில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான எம்.என்.எம்.ஏ. மலிக் கௌரவ அதிதியாகவும் மேலும் ஓய்வுபெற்ற சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஏ.எம். றிஸ்வான், முன்னாள் பிரதி அதிபர் அப்துல் நிஸார், பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர்,  ஆசிரிய ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் 2024ம் கல்வி ஆண்டுக்கான புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான ஏடு தொடக்க விழா இன்று பாடசாலை பகுதி தலைவர் டி.கே .எம். மௌஸீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம் றிசாத் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை சபா கோல்ட் ஹவுஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஃப். எம். சகி, "டே நைட் "பென்சி ஹவுஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  ஏ. எம். சிறாஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தரம் இரண்டு மாணவர்களினால் புதிய மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளால் புதிய மாணவர்களுக்கும் கிரீடம் அணிவித்தும்,  இனிப்பு பொதிகளும் வழங்கி, ஏடு தொடக்கி வைத்துக் கௌரவிக்கப்பட்டனர். மேலும்  வருகை தந்த கௌரவ அதிதிகளினால் புதிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பாடசாலையின் பிரதியதிபர் எம்.ரீ.ஏ. மனாப், பாடசாலையின் பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
 

 


பாடசாலைகளுக்கான இலவச book பெற்றுக்கொள்ளலாம்.

தரம் : 5, சுற்றாடல் பாட முழு அலகுகளையும் உள்ளடக்கிய வினா விடை தொகுப்பு
தரம் :5 புலமைப் பரிசில் பரீட்சை சுற்றாடல் பாடத்திற்கு கடந்த வருடம் (2023) நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் பயன்பெற்ற இந்நூல் இவ்வருடமும் (2024) பல புதிய விடயங்களுடன் நூலுறுவாக்கம் பெற்றுள்ளது
தரம் :5 மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைகள் தேவை எனில் தொடர்பு கொள்ளவும்
Whatsapp 0766615145.
நூலாசிரியர் : எஸ். ஐ. எம். இபாம் B.A. Hon's Special in Geography (UOP), P.G.D.E (OUSL), Dip in H. R.(UOP), M.Ed (R).
பாடசாலைகளுக்கான விலை : 800/= (20% கழிவுடன், ஆசிரியருக்கு 1 book free, post charge free, book கிடைத்ததும் பணம் செலுத்தலாம்
Like
Comment
Send

 


(வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் கபொத சாதாரண தர பரீட்சைக்கு எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான மாகாணமட்ட முன்னோடி கணிப்பீடு பரீட்சை இன்று(19) திங்கட்கிழமை ஆரம்பமானது.

கிழக்கு  மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களிலும் இந்த முன்னோடி கணிப்பீடுப் பரீட்சை  இன்று(19) திங்கட்கிழமை தொடக்கம்  மார்ச் மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கின்றது என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் வலயங்களுக்கு
வழங்கிய அறிவுறுத்தலில்..
 
" இலங்கையில் கபொத சாதாரண தரத்தை பொறுத்தவரை நான்காவது இடத்தில் இருந்த கிழக்கு மாகாணம்  ஆறாம் இடத்தை அடைந்தது.அதாவது தசம் நான்கு புள்ளிகளினால் இரண்டு நிலைகள் பின் தள்ள வேண்டிய ஏற்பட்டது .இதற்கு பொருளாதாரம் நெருக்கடி முதல் பல காரணங்களை கூறலாம் .
இருந்த பொழுதிலும் தற்போது அவை ஓரளவு தணிந்துள்ள நிலையில் எமது மாணவர்களை சிறந்த அடைவுமட்டத்தை அடைய மாகாண மட்டத்தில் முன்னோடி பரிட்சையை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இப் பரிட்சை உரிய கண்காணிப்போடு  முறைப்படி நடத்தப்பட்டு அந்தந்த வலயங்களில் குழு நிலை மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டு மார்ச் மாதம் ஏழாம் திகதிக்கிடையில் நிறைவு செய்யப்பட்டு ஒன்பதாம் தேதி இடையில் மாகாணத்துக்கு சகல முடிவுகளும் வந்து சேர வேண்டும் .
இதனை அடிப்படையாக வைத்து எதிர்வரும் குறுகிய காலத்துக்குள் பரிகார வேலை திட்டம், மேலதிக வகுப்பு, விசேட வேலைத்திட்டம் என்பதனை இந்த மாணவர்களுக்காக மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

 எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுமாறு வேண்டுகிறேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Sugirthakumar Vijayarajah

நாமும் ஒரு முறை வாழ்த்தலாமே!

திருவள்ளுவர் வித்தியாலயத்தில் 5 இலட்சம் செலவில் மேடை அமைத்துக்கொடுத்துள்ள அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி அகிலன் அவர்களுக்கு பிரதேச மக்கள் சார்பில் வாழ்த்துகளும் நன்றியும்.
பாடசாலை அதிபர் தங்கேஸ்வரன் மற்றும் கல்வி சமூகத்தின் கோரிக்கையினை ஏற்று தாங்கள் முன்னெடுத்த இக்காரியம் பாராட்டப்படவேண்டியது.
இதுபோன்ற சேவைகளை நீங்கள் தொடர வேண்டும் .
என்பதுடன் கல்விக்கான தேவையினை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் இறைவனின் ஆசிர்வாத்தினை பெற்றுக்கொள்கின்றோம்.
ஆகவே சமூகத்தினை உயர்த்துவது கல்வியால் மாத்திரமே முடியும் என்பதும் இதற்காக உழைப்பது நமது தலையாய கடமை என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது.

 


(எம்.என்.எம்.அப் ராஸ்)


 பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கு பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயரிய சிந்தனையின் கீழ் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் அனுமதியுடன் பல்கலைக்கழகத்துக்கு மிகவும் அண்மையில் இருக்கும் அல் ஹம்றா பாடாசலையில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் இன்று(15) கலை கலாச்சார பீடம், தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் உள்ளிட்ட பல்வறு இடங்களை பார்வையிட்டதுடன் கலை கலாச்சார பீடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்விலும் கலந்துகொண்டனர். 

 கலை கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்வில் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்கள் பிரதான பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி யூ.எல். அப்துல் மஜீட், கலை கலாச்சார பீட சமூகவியல் துறையின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.றிஸ்வான் ஆகியோரும் மாணவர்களின் உளவள விருத்தியோடு சம்மந்தப்பட்ட உரைகளை ஆற்றினர்.

அல் ஹம்றா பாடசாலையின் அதிபர் அஷ்செய்க் யூ.கே. அப்துர் றகீம், வலய தலைவர் ஏ.சி. இஸ்மாயில், பிரதி அதிபர் அஹமட் ஜுமான், பிரதி அதிபர்

ஜெ. வஹாப்டீன், பிரதி அதிபர் எம்.ஏ. கமறுன் நிஷா, வலய பிரதி தலைவர் எம்.ஏ. அஹமட் பாரிஸ், ஆசிரியர்களான எம்.ஏ.சி.எம். இஹ்சாஸ், எம்.ஐ. முஸ்பிறா, எம்.எஸ்.எம். சத்தார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைப்பிரிவு மேற்பார்வையாளர் எஸ்.எம்.வி.எம். அலி அக்ரம் அவர்களும் இவர்களுடன் இணைந்திருந்தார்.

 


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

 

இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

 



 (எம்.என்.எம்.அப்ராஸ்) 

 பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு ட்ரோன் கெமரா(Drone Camera) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு தென்கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாச்சார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.நிஜாமிர் தலைமையில் சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று(14)இடம்பெற்றது. 


தென்கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்களது வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த செயலமர்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வின்போது களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத்தின் புவியல்துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி அவர்களும் பேராசிரியர் ஏ.ஜி.அமரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களும்,தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல்.பௌசுல் அமீர்,கலாநிதி றபீகா அமீர்டீன், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.முகம்மட் றினோஸ்,விரிவுரையாளர் ஐ.எல்.முகம்மட்சாஹிர், விரிவுரையாளர் ஏ.எல்.ஐயூப்,விரிவுரையாளர் எம்.என்.நுஸ்கா பானு,விரிவுரையாளர் எம்.எச். எப்.நுஸ்கியா உள்ளிட்டவர்களும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர் அவர்களும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர். 

ட்ரோன் கேமர (Drone Camera) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு விரிவான செயல்முறை பயிற்சிகளையும் விரிவுரைகளையும் ஆற்றினர்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வருகையை மகிழ்விக்க தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மேலும் நிகழ்வின்போது நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.


 


கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வின்போது….

 


(வி.ரி.சகாதேவராஜா)


 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ. முஸரப் தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதை அடுத்து அங்கு பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் வலயக்கல்விப் பணிமனையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 அங்கு நிர்வாக உத்தியோகத்தரின் சேவைகள் பற்றி பலரும் பாராட்டி பேசினர் .

இறுதியில் அவருக்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்கள் .

இறுதியில் நிருவாக உத்தியோகத்தர் முஷரப் ஏற்புரை வழங்கினார்.



நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (10) ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகவும் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டு உரையாற்றினார். முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கலை கலாச்சார பீடத்திலிருந்து 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார். அத்துடன் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்த்தின் சார்பில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூருல் ஷிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது. 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செய்னுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார். மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவின் மூன்றாவது அமர்வில் விசேட பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபார்சின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி அவர்கள் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து
2017/2018 ஆம் கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான்பாவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது. பொறியியல் பீடத்தில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லா சுவீகரித்துக் கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விரும் முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லாவுக்கே கிடைத்தது.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்செலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக பெற்றுக்கொண்டார்.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிபுக்கு வழங்கப்பட்டது.

இன்று (11) நான்காவது ,ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கையின் புகழ் பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க தாய்க்கிளையின்  116வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் எதிர்வரும் 25.02.2024 ( ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் பழைய மாணவர் சங்க தாய்க்கிளையின் தலைவரும் இயேசுசபை துறவியுமான வண.அருட்தந்தை.ரி.சகாயநாதன்  தலைமையில் நடைபெறவுள்ளது.

  நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆயுட்கால அங்கத்தவர்கள் அனைவரையும் அழைக்கப்படுகிறார்கள்.

மட்/புனித மிக்கேல் கல்லூரி,
மட்டக்களப்பு.பழைய மாணவர் சங்கம் (தாய்க்கிளை) செயலாளர் மேற்படி அழைப்பை விடுத்துள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று 2024.02.10 ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக ஆரம்பமானது.


இன்றைய இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.


பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.


முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.


இன்றைய தினத்தில் கலை கலாச்சார பீடத்திலிருந்து 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார். அத்துடன் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார்.


2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.


இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்த்தின் சார்பில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூறுல் ஸிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது.


2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார்.


மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மானர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.


 விழாவின் மூன்றாவது அமர்வில் விஷேட பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபார்சின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி அவர்கள் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து 

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான்பவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது.


பொறியியல் பீடத்தில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லா சுவீகரித்துக் கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விரும் முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லாவுக்கே கிடைத்தது. 


2016/2017 ஆம் கல்வி ஆண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்செலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக பெற்றுக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிபுக்கு வழங்கப்பட்டது.


பட்டமளிப்பு விழாவின் நேரடியாக ஒலி ஒளிபரப்பு பல்கலைக்கழக ஊடகப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட https://www.seu.ac.lk/conv24/ என்ற இணையத்தள பக்கத்தினூடாக ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டது விஷேட அம்ஷமாகும்.


நாளை 2024.02.11 நான்காவது ,ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.