Showing posts with label Janaaza. Show all posts


தகவல்: அஸ்மி ஏறாவூர்


தன்னாமுனை விபத்து; காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் வபாத்; 3 பேர் வைத்தியசாலையில் 


மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


காத்தான்குடியை சேர்ந்த EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டியே விபத்தில் சிக்கி உள்ளது.


குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி - சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தகவல்: அஸ்மி ஏறாவூர்


 யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இன்று அதிகாலை 10.02.2024 காலமடைந்தாக அறியக் கிடைக்கிறது. 


கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இலங்கையின் தமிழ் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. 


அன்னாரின் மறைவினால் துயறுற்றுள்ள அவரது குடும்பத்தினர்,  மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


යාපන විශ්වවිද්‍යාලයේ අධ්‍යාපන දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය ආචාර්ය දම්බයියා කලාමණී මහතා  2024.02.10 වන දින උදෑසන අභාවප්‍රාප්ත වූ බව දැනගන්නට ඇත.


 ශ්‍රී ලංකාවේ දෙමළ අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ උන්නතිය සඳහා ආචාර්ය දම්බයියා කලාමණීගේ දායකත්වය අතිමහත්ය.


ආචාර්ය දම්බයියා කලාමණීගේ වියෝවෙන් විපතට පත් වූ ඔහුගේ පවුලේ අයට සහ සිසුන්ට අපගේ බලවත් ශෝකය ප්‍රකාශ කරමු.




அக்கரைப்பற்று முதலியார் வீதியைச்சேர்ந்த

ஓய்வு பெற்ற ஆசிரியை AR #மரியம்கண்டு 

(#மர்யம்வீவீ #ரீச்சர்)

காலமானார் இன்னாலில்லாஹ்


இவர் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் #MIMநயீம் அவர்களின் மனைவியும்


மர்ஹூம்களான

அப்துர்ரஹீம் ஹாஜியார்

(வட்டான) பாத்தும்மா ஆகியோரின் மூத்த மகளாரும் 


Nafeel (CEO,Nukemi)

Nafeela tr (USA)

Hafeela tr (USA)

Taib 

Haseen Naheem (UK)

ஆகியோரின் தாயாரும்


Ameen (Accountant)(USA)

Jaleel (NSB)(USA)

ஆகியோரின் மாமியுமாவார்


#ஜனாஸா #தொழைகை 

இன்று(28/1/24) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜூம்மா பெரிய பள்ளிவாசலில் தொழுவிக்கப்பட்டு

#பட்டியடிப்பிட்டி #மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


தகவல்

மகன் நபீல்

 *ஜனாஸா அறிவித்தல்......*



*முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்ழாஹ் அவர்களி நீண்ட கால மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட், ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் ஏ எம் எம் ஜாபிர் அவர்கள் சற்று முன் ஏறாவூர் தள வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.*


*இன்னாலில்ழாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்*. 


நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 


#Rep/RikkasAhamed

அக்கரைப்பற்று 4 முதலியார் வீதியில் வசித்து வந்த அலித்தம்பி அன்சார் (வங்கி உத்தியோகத்தர்) தற்போது கொழும்பில் வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் 


இவர் மர்ஹும் அலித்தம்பி வட்டானையின் முத்த மகனாவார்


பாறூக் (milk board)

கலீல்

கால்தீன் (கலால் கட்டுப்பாடு உத்தியோகத்தர்)

நக்கீல் (ஆசிரியர்)

ஹாரூன்

ஹிசாம்

றஸாம்

றஸ்மி

செய்யது பாத்தும்மா

நோனா

சாபிறா

றுவைஸா

ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.


இன்ஷாஅல்லாஹ் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்


 கொழும்பு - பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் எம்.எம்.எம். நௌஷாத் தனது 57வது வயதில் டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் ஜித்தாவில் காலமானார்.


ஜித்தா, SLT மைதானத்தில் நடைபெற்ற பழைய சஹிரியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அங்கோரா, பாக்தாத், கோர்டோவா மற்றும் இஸ்தான்புல் ஹவுஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜித்தாவில் தங்கியிருக்கும் ஜாஹிரியர்களிடையே இந்தப் போட்டி விளையாடப்பட்டது. நௌஷாத் பாக்தாத் இல்லத்திற்காக விளையாடினார்.


மர்ஹூம் நௌஷாத் 1999 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜித்தாவில் பணியாற்றி வருகிறார். அவர் இறந்தபோது, ​​அவர் ஜெட்டாவில் உள்ள செங்கடல் கடல்சார் சேவையில் கொள்முதல் அதிகாரியாக இணைக்கப்பட்டார்



இவரது பூர்வீகம் கொழும்பு மருதானை மொஹிதீன் மஸ்ஜித் வீதி என்பதுடன் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு மகளுக்கும் தந்தையாவார்.


இறுதி இறுதிச் சடங்குகளுக்காக நௌஷாத்தின் குடும்பத்தினர் ஏற்கனவே ஜித்தாவுக்குச் சென்றுவிட்டதாக அவரது சகோதரர் மொஹமட் ஃபாஹிம் கொழும்பு டைம்ஸிடம் தெரிவித்தார்.


அவரது மரணம் அகால மரணம் என்று ஜெட்டாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சவூதி அரேபியாவில் இருந்து கொழும்பு டைம்ஸிடம் தெரிவித்தார். ”நான் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கச் சென்றேன், அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவரைப் பார்த்தேன். நான் வேறொரு விழாவிற்குப் புறப்பட்டதால் மைதானத்தில் என்னைக் கண்டார்"


Rep/SukirthKumR

அக்கரைப்பற்று இலங்கை வங்கியினூடாக கிடைக்கப்பெற்ற நல்ல உறவு. காணும் இடம்மெல்லாம் சுகிர் அண்ணன் எப்படி சுகம்.? என்ன செய்து தரவேண்டும் ? என சிறிய புன்முறுவலுடன் உரையாடி எவ்வளவு வேலைப்பழு இருந்தாலும் கடமையினை செய்து தரும் தம்பி துசாந்தனின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


நீங்கள் எதிர்பார்த்த CRM வந்து விட்டது. இனி உங்கள் வேலை இலகுபடுத்தப்படும் என அவ்வப்போது மகிழ்ந்து கொள்ளும் நல்லுள்ளம். இலங்கை வங்கியில் நடைபெறும் நிகழ்விற்கு நிகழ்ச்சி தொகுப்பாளனும் அவரே. நம்மை அன்போடு உபசரிக்கும் நற்குணம் கொண்டவரும் அவரே. 


அக்கரைப்பற்று இலங்கை வங்கியில் சில நிகழ்வுகளில் நான் அவ்வப்போது கலந்து கொண்டாலும் துசாந்தனின் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொள்ளவோ அல்லது அவரது இடமாற்றத்தின் பின் நன்றி சொல்லவோ கிடைக்காமை மிக மன வேதனை தருகின்றது. 


எதுவானாலும் எல்லாம் அவன் செயல் என கடந்து செல்ல முடியவில்லை. நமக்கு தேவையான பலரை அன்மைக்காலமாக  இறைவன்விரைவாகவே  அழைத்துக்கொள்வதன் காரணம் விளங்கவில்லை   


 உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.

 


அக்கரைப்பற்று 2ஆம் குறிச்சி, AVV வீதியைச் சேர்ந்த MA.நாகூர் பாத்தும்மா என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


 அன்னார்  மாப்பிள்ளை டெயிலர் என்று அழைக்கப்படும் மர்ஹூம் எம்.ஐ.ஆதம்லெப்பை என்பவரின் அன்பு மனைவியும் மர்ஹூம்களான முகம்மது அலியார் முக்குலுதும்மா ஆகியோரின் அன்பு மகளும் 

அஜீர்,ரஷீதா,

மர்ஹூமா ஹைருன் நிஹாரா, சித்தீக், 

அல்ஹாபிழ் மௌலவி அமீர் அம்ஜத் பலாஹி,ரிஸ்வான் என்பவர்களின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா

ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பட்டின ஜும்ஆ பள்ளி வாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்

மகன் அல்ஹாபிழ் மௌலவி

அமீர் அம்ஜத் (பலாஹி)

 


#ஜனாஸா_அறிவித்தல்!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் தனது 67ஆவது வயதில் 2023/12/22 இன்று காலை 06:30 மணியளவில் கொழும்பு தனியார் (கிங்ஸ்) வைத்தியசாலையில் காலமானார்.


இன்று பகல் 1மணிக்கு ஜனாஸா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் அன்னாரின் ஜனாஸாவை அவருடைய கிண்ணியா இல்லத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.


யா அல்லாஹ்...

அன்னாரின் சக பாவங்களையும் மன்னித்து உன்னுடைய மேலான ஜன்னத்துல் பிர்தெளஸை நஸீபாக்கிடுவாயாக! ஆமீன்!


தகவல்!

கொழும்பிலிருந்து

அப்துல்லாஹ் மஹ்ரூப்MP

 


புத்தளம் இஸ்லாஹியா கலாசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) சற்று முன் காலமானதாக ஊர்ஜித தகவல்.

 


மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷனம் PMMA காதர் மாமா காலமானார். இவரது ஜனாசா தற்போது மருதமுனை அக்பர் கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.



 #NihaanMohammed.

தோப்பூர் பொது நூலகத்தின் நூலக உதவியாளர் #அபூபக்கர்_முஹ்ஸீன் (#மௌலவி) நேற்றிரவு வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்......


அன்னாரை சந்திக்கும் போதெல்லாம் தோப்பூர் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றியும், நூலகத்தின் வளர்ச்சி

தொடர்பான தூரநோக்கு சிந்தனையுடனே இன்முகத்துடன் பல ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். எந்த பொறுப்புக்களை கொடுத்தாலும் திறம்பட செய்து அமானிதமான முறையில் இறையச்சத்துடன் செயலாற்றக்கூடிய ஒருவர் தன்னால் முடிந்த பணிகளை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற உணர்வாளர். அன்னாரின் இழப்பை ஏற்க உள்ளம் மறுக்கிறது. 

பல வருடங்கள் சமூகப்பணியில் இவரோடு இணைந்து பயணித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்..! 

ஒரு நேர்மையான மனிதரை இறைவன் அழைத்துக் கொண்டான். 


அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஷ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக...ஆமீன்...


 #Varatharajan

சுவடிக்காப்பகம்   ஒன்றை இழந்த துயர்!!

--------------------------------------------------------------------------


யோகராசா மாஸ்டர் என்றும் சேர் என்றும் என்னால் அன்பாக அழைக்கப்பட்ட பேராசிரியர் யோகராசா அவர்களின் மறைவு எனது வாழ்வில் ஓர் அதிர்ச்சியூட்டிய பிரிவாகவே அமைந்துள்ளது.


நான் ஊரில் ஈழநாடு நிருபராகவிருந்த காலத்தில் " கருணை யோகன்" என்ற‌  ஆக்கங்களையும் அவரது சனசமூக நிலையச் செய்திகளையும் கொண்டுவந்து தரும் யோகராசா மாஸ்டர் பின்னர்  விரிவுரையாளர் யோகராசாவாகவும் பேராசிரியர் யோகராசாவாகவும் வந்தபோதும் எப்போதும் அவர் எனக்கு சேர்! தான்.


கடந்த மாதம்  மாஸ்டரைத் தொடர்பு கொண்டபோது அவரது துணைவியார் திலகம் அக்காதான் மறுமுனையில் வந்தார். மாஸ்டர் மகரகமயில் உள்ளதாகச் சொன்னார். சோதனைக்காக அங்கு தங்கி நிற்பதாகச் சொன்னார்.


பின்னர்  அழைத்துக் கேட்டபோது -அப்படியொன்றுமில்லை; மாஸ்டர் கதைக்கிறார் வழக்கம்போல பகிடிக்குக் குறைச்சல் இல்லை' என்றதுடன் தான் தமது உடல்நிலை காரணமாக மட்டக்களப்புக்கு வந்துவிட்டதாகவும் மாஸ்டருக்கு ஒருவர் துணைநிற்பதாகவும்,அவரது மாணவர் ஒருவர் தினமும் போய்ப் பார்ப்பதாகவும் சொன்னார்.


கடந்தவாரம் கடைசியாக அவரது துணைவியாருடன் பேசியபோது விரைவில் இங்கு ( மட்டக்களப்புக்கு) வருவார் என்றும் இப்போதும் பகிடியாகக் கதைக்கிறார் என்றும் சொன்னபோது "சேர்  வந்ததும் கதைக்கிறேன். கேட்டதாகச் சொல்லுங்கள்" என்று சொன்ன‌ எனக்கு சற்று முன்னர்  முகநூலைத் திறந்தவுடன் நண்பர் ராகவனின்  Eliyathamby Ragavan செய்தியை  அறிந்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.


உடனடியாக அவர் துணைவியார் திலகமக்காவுக்கு எடுத்தேன்.

மறுமுனையில் துணைவியாரின் சகோதரி பேசினார்.

இன்று மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரவிருந்ததாக அறிவித்ததுடன் சேரும் தன்னுடன் பேசியதாகச் சொன்னார்.நடந்தவற்றைச் சொன்னார்..


சேருடன் கதைப்பதற்கு ஆவலாயிருந்தேன்- என்றேன்


மறுமுனையில் அழுகை!


சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டீர்களே சேர்! - அழுதேன்.


சேர்!


உங்களுடைய நகைச்சுவை ததும்பும் ஆழமான கருத்துகளும் விமர்சனங்களும் உங்களை நினைக்கும் அனைவருக்கும் இன்று வந்தபடியிருக்கும். பலரின் மனங்களில் உலா வருவீர்கள் சேர்!


என்னை வெளிவாரியாக  தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கொண்டு ஏனைய ஏதேனும் பாடங்களுடன் பட்டநெறி ஒன்றைக் கற்று தமிழ் மொழியிலும் இலக்கணத்திலும் பட்டம் பெறவேண்டும் என்று ஊக்கியவர் யோகராசா சேர் அவர்களே!


எனது தொலைக்காட்சி நிலையத் தொழிற் பழு காரணமாக- கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் மாதாந்த வகுப்புகளுக்கு போகத் தவறிய போது 

அவர் நைசாகச் சொல்லிக் கடிந்த விதம் என்றும் என் மனதில் அடிக்கடி வருவதுண்டு.


ஊடகத்துறையில் உள்ளவர்கள் தமக்கு எல்லா விடயங்களிலும் அறிவு உள்ளது இனி என்ன கற்க‌விருக்கிறது என்று எண்ணுவதுண்டு.அதனால் மேற்கொண்டு எதையும் படிக்க விரும்புவதில்லை. பட்டமேதும் படித்து இடையில் விடுவதுண்டு.

பல்லைக் கடித்துக் கொண்டு படித்து முடித்துவிட்டீர்கள் என்றால் ஒரு பட்டமும் கிடைத்ததுடன், தமிழ் மொழியில் உள்ள விடயம் பற்றி நீங்கள் சொல்வதற்கும் பேசுவதற்கும் ஓர் அங்கீகாரம் கிடைத்ததாகவிருக்கும் என்றார். உங்கள் பதவிக்கு நல்லது" என்றார்.


நான் கிழக்குப் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு கொழும்பிலிருந்து போகும்போது பேராசிரியர் மனோ சபாரத்தினம் அவர்களின் தயவில் அங்குள்ள மாணவர் விடுதியில் தங்குவதுண்டு.


நண்பரும் ஊடகவியலாளருமான உதயகுமார் Rasanayagam Uthayakumar  இல்லத்திலும் தங்குவேன்.


யோகராசா மாஸ்டர்  என்னிடம்

" நீங்கள் இங்கு வரும் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள்.என்னுடன் வந்து தங்குங்கள், வந்தால் நானும் பின்னேரத்தில் சில பாடங்களைப் பற்றிக் கதைக்க, விளக்க உங்களுக்குப் பிரயோசனமாயிருக்கும்" என்று சொல்லி தம் வீட்டில் வந்து தங்கிப் போகச் சொன்னார். அங்கு தங்கினேன்.


யோகராசா சேர் உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்துவதற்கு கொழும்புக்கு வருவதுண்டு.


கொழும்புப் பல்கலைக் கழகத்தில் ஊடக டிப்ளோமா நெறி மாணவர்க்கு ஊடகத்தில் மொழி தொடர்பான வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.


அவற்றுக்காக வரும்போதெல்லாம் கொழும்பில் நடைபெறும் இலக்கியக்கூட்டங்களில் பேசவும் பஙகுபற்றவும் தமது நேரசூசியைத் திட்டமிட்டுக் கொள்வார். தமது நேரத்தை விடாமல் இவற்றில் செலவழிப்பதே அவர் வழக்கம். 


பல்கலைக்கழக ஊடக மாணவர்களுக்கு ஊடகங்கள் தமிழ் மொழிப் பிரயோகத்தில் விடும் தவறுகளை இலக்கண விளக்கத்துடன் விளக்கிய ஆசான் அவர் .


அவரிடம் அவரது நகைச்சுவை கலந்த விளக்கத்தைக் கற்ற ஊடக மாணவப் பரம்பரை தமிழ் மொழியைச் சீராகப் பிரயோகிக்கும் என்பது நிச்சயம்.


சக்தி ரிவி தொடங்கிய ஆரம்ப காலப் பகுதியில் அதன் முதலாவது காலைநேர நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான காலைக்கதிர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள‌ அழைத்திருந்தேன்.


தம்மைப் பற்றியல்லாமல் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப் பற்றித் தாம் கதைக்க விரும்புவதாகவும் அறிவிப்பாளர்கள் அல்லாமல் என்னையே நேர்காணல் செய்யவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும்  கேட்டார். "சிவத்தம்பி சேர் பற்றி நீங்களும் அறிந்திருப்பதால் ஒரு கலந்துரையாடல் போல செய்யலாம்" என்றார்.

அவரின் விருப்பப்படி அந்த நேர்காணலை நானே செய்தேன்.


யோகராசா மாஸ்டர் சிவத்தம்பி சேர் எழுதிய பல நூல்களைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்தார்.


நேரடி நிகழ்ச்சியில் அவர் கதைக்கும் போதே அவ்வளவு நூல்களையும் காட்டினோம்.


சக்தி ரிவியின் தொடக்ககாலம்.‌கலையகத்தில் இரண்டு கமராக்களே இயங்கிய காலம் அது.


சிவத்தம்பி சேர் பிற்காலத்திலும் விதந்து பாராட்டிய நிகழ்ச்சியாக -அவரைப் பற்றிய ஓர் ஆவணமாக- அந்த நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெருமை யோகராசா சேர் அவர்களுக்கே சொந்தமானதாகும். 


சில மாதங்களுக்கு முன் அவருக்கு நான் தொலைபேசி அழைப்பு எடுத்தபோது வழமைபோல நீண்ட நேரம் கதைத்தார்.


கடைசியில்,நேரத்தைக் கேட்டு விட்டு "படுங்கள் நித்திரை தான் முக்கியம்" என்றார்.


அண்மையில் அவரது துணைவியாருடன்  கதைத்தபோது "சேர் யார் நேரம் என்று பார்க்காமல் ஒவ்வொருவராகக் கதைப்பார். கதைத்து முடிந்ததா என்று பார்த்தால் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். அல்லது வாசிப்பார்.

வீட்டிலுள்ள எல்லாப் பேப்பர் துண்டுகளிலும் எழுதி  வைத்திருப்பார். கலண்டர் பின்பக்கம், இடைவெளி என்று காணும் கடதாசி எல்லாம் எழுதிவந்தார்.

வீடு திருத்த வருபவர்கள் காணும் கடதாசி பேப்பர்களை எல்லாம் எடுத்து ஒரு புறமாக வைக்கப் பழகிவிட்டார்கள் என்று சொன்னார்.


யோகராசா மாஸ்டர் போலவே நகைச்சுவையாகப் பேசும் அவர்-" மாஸ்டர் பஸ்ஸில் போகும்போது பஸ் கண்டக்டர் டிக்கெற் தருமட்டும் அவனைப் பார்த்தபடியே இருப்பார். நாங்களென்றால் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்குவது சோதனையாளர்கள் வந்தாலும் என்ற பயத்தில்.


ஆனால் மாஸ்டர் பார்ப்பது அதற்காக அல்ல.

எழுதுவதற்கு ஒரு சிறு துண்டு கிடைக்கும் என்ற ஆவலே அதற்குக் காரணம்" என்று சிரித்தார்


என்னையும்  அன்றைக்குச் சிரிக்க வைத்தது இந்தச் செய்திக்காகத்தானா சேர்? - என்று இன்று  நினைக்கிறேன்.


அவருடன் உரையாற்றும்போது ஒருமுறை 'பாரதியாரின் குரு அல்வாய்ச் சாமி பற்றிய நிகழ்ச்சி "ஸ்கைப்பில்"உஙகளைப் பார்த்தேன் சேர் நிகழ்ச்சி நன்றாக இருந்தது" என்றேன்


ஸ்கைப்பில் தான் பங்கு பற்றுவதை விரும்புவதில்லை என்றார்‌.


ஏன் சேர்- என்றேன்.


தான் மற்றவர்கள் கதைக்கும்போது அடிக்கடி தூங்கிவிடுவதாகவும்

அதிலுள்ள ஒருவர் அலைபேசியில் வந்து தம்மை எழுப்பிவிடுவதாகவும் சொன்னார். 

"அதால நான் அப்படி இருந்து பேச விரும்புவதில்லை அந்த நேரம் ஏதாவது வாசிக்கலாம்; எழுதலாம் " என்றார் 


கண்டிப்பு, துயரம், விரக்தி எல்லாவற்றையும் நகைச்சுவையாகவே பகிரும் பண்பு நிறைந்தவர் என்பதை அவருடன் பழகிய அனைவரும் அறிவர்.


தொண்ணூறுகளில் மட்டக்களப்பில் விபத்துக்குள்ளாகிப் படுகாயமுற்ற‌ அவரது துணைவியாரை கொழும்பு விபத்து மருத்துவமனையில் பார்க்கப் போனபோது 

மாஸ்டர் மிக்க துயரத்துடன் நின்றிருந்தார்


"என்ன சேர் நடந்தது. நியூசில் பார்த்தோம்" என்றபோது 


நாட்டின் ஜனாதிபதி கூட கூட்டங்களுக்குத் தாமதமாகத் தான் வருகிறா..எங்கட அம்புலன்ஸ் ட்ரைவர் அவசரப்பட்டு முந்தியுள்ளான்" என்றார்.


இத்தனை தேடல்கள் ஆய்வுகள் வைபவங்கள் கட்டுரைகள் என்பவற்றுக்கு மத்தியில்  நாளாந்தம் தமது துணைவியாருக்குத் துணையாகப் பணிசெய்த அவரது வாழ்க்கைப் பயணத்தை அவரை அறிந்தோர் அறிவர்.


சில மாதங்களுக்கு முன் கதைக்கும்போது இரண்டு நாளாக மனது சரியில்லை என்றார்.

"ஏன் சேர்?'-என்றேன்.

"நூல் ஒன்றுக்கு அணிந்துரை கேட்டு வந்துள்ளான் பாவம் 

நல்ல ஆர்வம் உள்ள பையன்" என்று சொன்னவர் நூலைப்பற்றியும் சில வரிகளில் ஒரு பகிடியும் சொல்லி

"முன்பு கரேக்டர் சேட்டிவிக்கற் குடுக்கிற மாதிரி" டைப் பண்ணிக் கொண்டு வாங்கோ நான் கீழ சைன் பண்ணுறன்- என்று லெற்றர் கெற்றைக கொடுக்கவேண்டும் போல இருக்கு" என்றார்.

நான் அவர் வீட்டில் தங்கப்போன வேளையில் ஒருமுறை புலம்பெயர் கவிதைகள் வந்த பல‌ நூல்களை தரையில் பரவி வைத்திருந்தார்

அவை தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்போவதாகச் சொன்னார்.


இன்னொரு முறை போனபோது போராளிகள் எழுதிய ஆக்கங்களையும் நூல்களையும் பரவி வைத்திருந்தார்.

அதுவும் ஓர் ஆய்வுக் கட்டுரைக்காக..!


அண்மையில் கதைக்கும்போது கிழக்கிலங்கையில் மறைந்துள்ள பல ஆக்க இலக்கியங்களை எடுத்து வைத்திருக்கிறேன்

‌ 

கனடா தாய்வீட்டில் எழுதவுள்ளேன் என்று மிகவும் மகிழ்ச்சி ததும்பக் கூறினார்.


பல வெளிவராத நூல்கள் இலக்கியங்கள் பற்றி எழுத உள்ளேன் என்பதே கடைசியாகச் சொன்னது. பட்டத்திற்கான ஆய்வுக்குப் பின்னரும் தேடல்களை மும் ஆய்வுகளையும் தொடர்ந்து கொண்டிருந்த அறிஞர் யோகராசா அவர்கள்.


கடைசிவரையும் தேடிக்கொண்டேயிருந்தவர் தமது தேடற் பணியை இடையில் நிறுத்திவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டார் என்பதே  எல்லோரதும் துயரமாகும்


இலக்கியப் பரம்பரைக்கு மட்டுமன்று ஊடகப் பரம்பரைக்கும் யோகராசா மாஸ்டரின் மறைவு பேரிழப்பாகும்.


ஓர் அரிய சுவடிக்காப்பகத்தை இழந்துள்ளோம் என்பதை உணர்ந்து ஏங்குகிறோம் சேர்! 


உங்கள் புன்னகை கலந்த மென் குரலும் ஆர்வத்தைத் தூண்டும்  கதைகளும்  

எங்கள் நினைவுகளில் என்றும் கலந்தவை சேர்!


போய்வாருங்கள் சேர்!!


உங்களில் அன்பும் நட்பும் நன்றியும் உள்ளவர்களே பலர்.‌ அதில் நானும் ஒருவன்.


என்றும் நன்றியுடன்!

ஜனாஸா அறிவித்தல்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மைதானப் பொறுப்பு அதிகாரி சல்மான் காலமானார்..


சல்மான் நல்ல ஒரு மனிதராக வாழும் காலத்தில் எல்லோரிடமும் நகைச்சுவை உணர்வுடன் பழகிய ஒருவர்…


நல்ல ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராகவும் வர்ணனையாளராகவும் பிரதேசம் எங்கும்   

தடம் பதித்த ஒருவர்…


அட்டாளைச்சேனைச் பிரதேசத்தில் விளையாட்டுத்துறைக்கு அவர் அர்ப்பணிப்பு மிகையாக இருந்தது..


அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்..

 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மரணமடைந்த உடலொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 2024.11.23 அன்று 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா எனும் சாய்ந்தமருது 16 ஐ சேர்ந்த ஒருவர் சண்டை ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும், சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவருக்கு அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து வைத்தியசாலை சிகிச்சையளித்து வந்ததாகவும் இன்று (26) அதிகாலை 04.30 மணி அளவில் அவருக்கு உடலில் நோவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாகவும், மரணத்திற்கான காரணம் என்ன என்பதை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே அறிய முடியும் என்றும் மரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அறிவித்துள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இன்று காலை காலமான 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் குடும்பத்தினர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் வைத்தியசாலை தரப்பினர் வெளியிடும் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகநபரின் தரப்பிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு பக்கசார்பாக நடப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆதம்பாவாவிடமிருந்து வாய்மூல அறிக்கையை பெறுவதிலும் அவர்கள் கால இழுத்தடிப்பு செய்ததாகவும் இந்த மரண விசாரணை நியாயமாக நடைபெற்று குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகங்களே இந்த விடயத்தை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.எம்.எஸ். முபாரக் (PC88489) துரிதமாக செயற்பட்டு குறித்த கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா அல்லது நோயினால் ஏற்பட்ட மரணமா என்பதை கண்டறிய முன்னெடுத்த நடவடிக்கையின் பயனாக கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.ஆர்.எம். கலீல் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து உடலை பார்வையிட்டதுடன் உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எஸ். மோகனவர்ண தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

 


ஜனாஸா அறிவித்தல்:


 மட்டக்களப்பு Baby Care உரிமையாளர் சகோதரர் முனீர் அவர்கள் சற்று முன் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

  .




#அம்பாறை, #நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட #மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். அத்தோடு படுகாயமடைந்த 19 வயதுடைய மற்றுமொரு இளைஞன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார். மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த நிலையில் விபத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் விபத்தில் இறந்த இவ்விருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 #ஜனாஸா_அறிவித்தல்!

மன்னார் மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சமுர்த்தி உத்தியோகத்தரும் முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினருமான #KM_இக்பால்

ஹாஜியார் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


அன்னார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு தலைவரோடும் கட்சியின் ஏனைய பிரமுகர்களுடன் இணைந்து பணியாற்றிய நல்ல பண்புமிக்க ஒருவர். இவருடைய இழப்பானது கட்சிக்கும் தலைமைக்கும் மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இன்று இவர் நாளை நாம்!

இறைவனின் நாட்டத்தை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.


அன்னாருடைய மறுமை வாழ்வுக்காக இறைவனை பிரார்த்திபோம்🤲

 


ஜனாஸா அறிவித்தல்


சாய்ந்த மருதினை பிறப்படமாகவும், அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட, வீதி அபிவிருத்தி அதிகார சபையில் (RDA) பணி புரியும் சகோதரர் அமீன் (Tailer) சற்று முன்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்து காலமானார் இன்னாலில்லாஹி 

வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இவர் ஹபீலா உம்மாவின் அன்பு கணவரும், 

நிப்ராஸ்,

றிம்ஷாத்,

அப்ராஸ்,

அப்றா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.  


இவருடைய ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் 

பின்னர் அறிவிக்கப்படும்.


Admin

M.A.Razeek

Ex chairman.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.