Showing posts with label Janaza. Show all posts

 


அக்கரைப்பற்று 02 ஆம் குறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் #காலித்_sir #புனே_மாஸ்டர் [விவசாயம் ] இன்று வபாத் ஆனார்


அன்னார்

#சக்கரத்தம்பி_விதனையார் அவர்களின் #மகனும்


மர்ஹூம்கள்

#அமீர்_மாஸ்டர்

#ஜமீல்_மாஸ்டர்

மற்றும்

#ஜெசீமா_டீச்சர் 

#எக்கீன்_மாஸ்டர் [சகாத் நிதியம் ] 

ஆகியோரின் #சகோதரரும்


#இர்பான்

#சுமையா

ஆகியோரின் #தகப்பனாரும் 


#உவைஸ் (மர்ஹூம் தம்பிப் போடியார்ர மகன் ) அவர்களின் #மாமனாரும்


மர்ஹூம் TS. சஹீத் அவர்களின் சம்பந்தியும் ஆவார்


நல்லடக்கம் இன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறும்


ஜனாசா அவரது மகன் இர்பான் அவர்களின் வீட்டில் உள்ளது [ பிரதான வீதி Ioc Akkaraipattu ஷெட்டுக்கு முன்னால் ]


#பிற்குறிப்பு :

இவர் இந்தியாவின் புனே மாநிலத்தில் கற்று வந்ததால் புனே மாஸ்டர் என்று அழைக்கப்பட்டார்

அந்தப் பெயர் பின்னர் விரவி பூனா மாஸ்டர் என்று அழைக்கப்பட்டார்

 


ஜனாசா அறிவித்தல்!


அக்கரைப்பற்று 06ம் குறிச்சி

நர்ஜிஸா  (சோபி) கொழும்பில்  காலமானார்


இன்னாலில்லாஹி வஹின்னா 

இலைஹி ராஜிஊன்


குத்தூஸ் மௌலவியின் இரண்டாவது புதல்வர் றுமைஸ்  அவர்களின் அன்பு மனைவியும்


ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹும் அபூசாலி மாஸ்டர் அவர்களின் மகளும்


றிஸ்வான் (TFC) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார் 


நல்லடக்கம்  பின்னர் அறிவிக்கப்படும்


 Import Mirror  ஊடகத்தில் முன்பு பணிபுரிந்து , பின்பு வெளிநாடு சென்ற  ஒலுவில் #இஜாஸ்

மன்னம்பிட்டி பஸ் விபத்தில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


மன்னம்பிட்டி கொட்டடி பாலத்தில் இன்று (9) நடந்த பஸ் விபத்தில் மரணமடைந்த நபர் இஜாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


ஒலுவில் வைத்தியசாலை வீதி 2ஆம் குறுக்கை சேர்ந்த இஜாஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அன்னாருக்காகவும் அவருடைய குடும்பத்தினர்களுக்காகவும் பிரார்த்திப்போம்....


(உறவினர்களுக்காக மர்ஹூம் இஜாஸ் உடைய புகைப்பபடம் முதல் கொமன்டில்.)



அக்கரைப்பற்று ஒன்று முதலாம் குறிச்சியைச் சேர்ந்த பாத்திமா காசிம் பாவா என்பவர் காலமானார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இஸ்மாயில் ஸ்டோர் உரிமையாளர் மர்ஹூமம் O.M.இஸ்மாயில் ஹாஜி அவர்களின் மனைவியும்  M.I.M. ஜுனைட் சித்திசல்மா சபீனா நஜிமா Ashroff Ismail  ரிபாயா ஆகியோரின் தாயாரும் ஆவார்


Mim Rafeek சியான் டிராபிக் ஜிப்ரி காரியப்பர்  Dr அப்துல் ஜப்பார் Dr A.M ஜவுபர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்  


நல்லடக்கம்

இன்ஷாஅல்லாஹ்!

நாளை திங்கள் காலை 06 மணியளவில் பதூர்நகர் மையவாடியில் நடைபெறும்


முன்னாள் நீதிபதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி. சறோஜினிதேவி அவர்களின் கணவனார் திரு. இளங்கோவன் காலமானார். www.ceylon24.com தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.

 


இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு வந்திருந்த இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் அப்துல் மஜீத் மொஹமட் நிஜாம் ஜம்ரத்தில் கல்லை எறிந்துவிட்டு ஜம்ரத்திலிருந்து வந்து கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் குருநாகல், பனகமுவவை வசிப்பிடமாகவும், இப்னகமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.

 


அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் யுஏ.சகீது ஹாஜியார் இன்று காலமானார்.


கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல உலமாக்களையும் பல கல்விமான்களையும் உருவாக்கிய யு.ஏ.சகீது ஹாஜியாரின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது.


இஸ்லாமிய மார்க்க விழுமியங்களோடு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கல்வியாளர்களையும் மார்க்க பற்றாளர்களையும் நாடு பூராகவும் உருவாக்கியவர்.


அட்டாளைச்சேனை மண்ணில் பல பள்ளிவாசல்களை நிறுவுதலில் முன்னின்று உழைத்தவர்.


இவரின் இழப்பு அட்டாளைச்சேனைக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்குமானது.


இவரின் இழப்பால் அட்டாளச்சேனை மண் மிகவும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளது.




 அக்கரைப்பற்று ABAA Anas அம்பாரை வைத்தியசாலையில் , அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் காலமானார். இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு அம்பாரை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

சகோதரர் அனஸ் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டமுதுமானி

Yls Hameed Sir அவர்கள் இன்று (25) அதிகாலை கொழும்பில் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...


அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக... ஆமீன்!

 


கொழும்பு லெயாட்ஸ் புறோட்வேயினைச் சேர்ந்த இலங்கை வானொலியின் சிரேஸ்ட  அறிவிப்பாளர் அஸ்மி சாலிஹ் மாரடைப்பு நோயினால் பாதிப்புற்று இன்று காலமானார். அன்னார் இறக்கும் போது அவருக்கு வயாது 50. 

 இலங்கை வானொலியின் வானொலிக் கலைஞராகத் திகழ்ந்து வந்த  அஸ்மி சாலிஹ் 1992ம் ஆண்டு இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாரளகத் தேர்வு செய்யப்படட்டார். பின்னாட்களில் 1998 ம் ஆண்டு செய்தி அறிவிப்பாளராகவும் மிளிர்ந்தார்.  இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில்  நிரந்தர முன்னாள் அதிகாரி இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 

 


ஒலுவிலைச் சேர்ந்த B.அப்துல் வஹாப் காலமானார். (20.05.2023) இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 

அன்னார் முன்னாள் மருதமுனை அல் மனார் தேசிய பாடசாலை ஊழியரும் தற்போதய மஹ்மூத் பாலிகா பெண்கள் பாடசாலையின் ஊழியருமாவார். 

#நல்லடக்கம் மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஒலுவில் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


(MIM.IBRAHIM)

பல தசாப்தங்களாக இலங்கையில் கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென 

அனைத்திலும் சாதனை மேல் சாதனை படைத்து சகல சமூகத்தினர் மத்தியிலும் 

பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்த அன்பு 

நண்பர் கலாபூஷணம் K.சந்திரசேகரன் 

அவர்கள் இன்று (2023.04.29) நமையெலாம் 

பிரிந்தது மாறாத் துயரளிக்கிறது!


எவ்வளவோ அனுபவமிக்க பல்துறைக் 

கலைஞர் என்றாலும் புதியவர்களையும் 

கலையுலகில் சோபிக்க மனம் திறந்து 

வழிகாட்டிய அவரது மறைவு அவரோடு 

கொஞ்சமாவது பழகிய ஒவ்வொருவர் 

மனதிலும் பெரும் தாக்கத்தை நிச்சயமாக 

ஏற்படுத்தவே செய்யும்!


அவரோடு பழகிய இனிய தருணங்களை 

மறக்கவே முடியாது! நான் வானொலியோடு 

மும்முரமாகத்  தொடர்புபட்டிருந்த காலகட்டத்தில் அவரது விளம்பர நிறுவனம் அனுசரணை வழங்கிய "கேர்ண் தரும் 

கலையரங்கம்" உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் வாராவாரம் குறுநாடகங்கள் எழுதி அவரோடு நடித்த 

நாட்களை இப்போதும் நினைத்தாலே இனிக்கிறது! இலங்கை வானொலிக்கு 

மாத்திரமன்றி அப்போது புதிதாய்த் 

தோன்றிய FM99 தனியார் வானொலியிலும் 

அவரது விளம்பர நிகழ்ச்சிக்குப் பிரதியெழுதிய காலமும் மறக்க முடியாதது!

அமரர் மரிக்கார் ராம்தாஸ் எழுதிவந்த 

"கோமாளிகள்" வானொலி நாடகத் தொடரைப் பின்னாளில் நான் எழுத 

வாய்ப்புக் கிடைத்தபோது நண்பர் 

K.சந்திரசேகரனுக்காகப் " பண்டிதர்" என்ற 

பாத்திரத்தை உருவாக்கியபோது அவரது 

அபார நடிப்பால் நேயர்கள் மத்தியில் 

பெரும் வரவேற்பைப் பெற்றது! காலப்போக்கில் நாட்டின் அசாதாரணமான 

சூழ்நிலைகளால்  பல கலைஞர்கள் 

புலம்பெயர்ந்தும், சிலர் மறைந்தும் போனதால் கலை நிகழ்வுகள் குறைந்து 

போனாலும் சந்தர்ப்பம் வாய்க்கும் 

போதெல்லாம் சந்திரசேகரனின் திறமை 

வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது!


கலாசாரத் திணைக்களத்தில் பல்வேறு ஆலோசனைச் சபைகளில் அங்கம் வகித்த 

அவர் சில சந்தர்ப்பங்களில் என்னையும் 

துணையாக அழைத்துச் சென்ற சந்தர்ப்பங்கள்! அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் வலுக்கட்டாயமாக 

எனக்கு முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்து வைத்து  எனது வானொலி 

அனுபவங்களை எழுத வழிகாட்டினார்!

ஆரம்ப நாட்களில் என் பல பதிவுகளை 

அவரேதான் முகநூலில் பதிவேற்றம் செய்தார்! 


சமீபகாலமாக காலமாக அவர் இந்தியாவிலேயே அவரது சொந்தங்களோடு வாழ்ந்து வந்ததால் 

நேரில் சந்திக்க முடியாத போதும் 

தினம் தினம் முகநூல் வழியாக 

உறவாட முடிந்தது! இனி தினம் தினம் 

முகநூலில் சஞ்சரிக்கும்போது அவர் 

நெஞ்சில் நிழலாடுவார்!


அந்த நல்ல மனிதரின் ஆத்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகளைக் கண்ணீருடன் 

காணிக்கையாக்குகிறேன்!

 


பொத்துவிலைச் சேர்ந்த அன்வர் ஹாஜியார் (46 வயது) காலமாகியுள்ளார். இவரது தந்தை அட்டாளைச்சேனையினையும், தாய் அக்கரைப்பற்றையும் சேர்ந்தவர்கள். இவர் மணமுடித்த இடம் பொத்துவிலாகும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இவர் கிராம உத்தியோகத்தர் சானாஸ் அவர்களின் மச்சான் ஆவார்.


உடல்நலமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கல்முனைக்கு கொண்டு செல்லும் போது இடையில் வைத்து உயிரிழந்துள்ளார் என தகவல் அறிய முடிகிறது.

ஆத்திமுனை மைவாடிக்கு வேலி அமைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் அவரின் நண்பர்கள் குழுவுடன் வந்து அந்த மையவாடியின் வேலிக்கு கல் வைக்கும் போதே அவரை இறுதியாக கண்டேன் அல்லாஹ் அவருக்கு அந்த பாக்கியத்தை கொடுத்திருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ்.


அவர் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகமான நேரத்தை தீனுக்காக செய்திருக்கிறார் என்பதை எனது சிறுவயதில் இருந்து அறிந்திருக்கிறேன்.


 அவரின் நற் செயலுக்கு அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக

 


நீர்கொழும்பு சாத்தார் ஆசிரியர் காலமானார். 


நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், உதவி அதிபருமான ஓய்பெற்ற  சாத்தார் ஆசிரியர் (வயது 81) Rafaideen abdul shaththar இன்று காலை காலமானார். 

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)


 பெரியமுல்லை லாசரஸ் வீதியில் அமைந்துள்ள இவரது இல்லத்தில் ஜனாஸா தற்போது வைக்கப்பட்டுள்ளது. 


அல் ஹிலால் மத்திய கல்லூரியின் மிகவும் பிரபல்யமான ஆசிரியர் இவர். சித்திரப்பாட ஆசிரியரான இவர், விளையாட்டு, பாடல் மற்றும் கலை இலக்கிய விடயங்களில் திறமை காட்டியவர். மாணவர்களுக்கு வழி காட்டியவர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

 இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகள் இரு மகன்கள். இவரது மூத்த மகன் முஹம்மத் சியாம்  ஆசிரியராக பணியாற்றியவர். அவர் ஒரு பாடகர்.  தற்போது வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இரண்டாவது மகன் Mohamed Sarooj  சமூக சேவை விடயங்களில் அதிக ஈடுபாடு உடையவர். மர்ஹும் சத்தார் ஆசிரியரின் மனைவியும் பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதி வருபவராவார்.

எப்போதும் உற்சாகமாக காணப்படும் இவர் எல்லோரோடும் அன்பாக பழகி வருபவர். தன் சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக அக்கறை உடையவர். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். தனது கருத்தை எப்போதும் வெளிப்படையாக பேசுபவர்.

பெரியமுல்லை சமூகம்  முக்கியஸ்த்தர் ஒருவரை இழந்துவிட்டது.


இன்று இரவு இரவு 10:30 மணிக்கு

பெரியமுல்லை யூசுபியா பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம் பெற்று,

 நீர்கொழும்பு பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெற உள்ளது.


ஏக இறைவன் அவருக்கு   மேலான  சுவர்க்கத்தை வழங்குவானாக.

 

அட்டாளைச்சேனை 4 ஆம் குறிச்சியைச் சேர்ந்த மர்ஹூம் கே.எல்.சுலைமாலெவ்வை ஆசிரியரின் மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை ஆயிஷா பீவி அவர்கள் காலமானார்.



அன்னார் அஸ்ஹர் ஆசிரியர் (லன்டன்), அஜ்வத் ஆசிரியர் (ஜப்பான்), அன்சார் (வதிவிட திட்ட முகாமையாளர், அக்கரைப்பற்று), அத்ஹம் ஆசிரியர் (ஜப்பான்), நசபியா ஆசிரியை ஆகியோரின் அன்புத் தாயாரும், 

மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் அவடர்களின் மாமியாரும், மர்ஹூம் நூறு முஹம்மத், அபூசாலி VCO (லன்டன்) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.



இவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி அப்துல்லாஹ் அவர்களின் மாமியுமாவார். ஜனசா நல்லடக்கம் இன்று இரவு +7:30 இற்கு அட்டாளைச்சேனையில் இடம்பெறும்.


 


தெல்தோட்டை, 30 வீட்டைச் சேர்ந்த *முன்னாள் பாத்தஹேவாஹட்ட பிரதேச சபை தலைவர்

அல்ஹாஜ் சுபுஹான்* அவர்கள் காலமானார். 


*_إنا لله وإنا إليه راجعون_* 


அன்னார்

காலஞ்சென்ற

▪️அபூபக்கர்

▪️சாரா உம்மா

ஆகியோரின் அன்புப் புதல்வரும்


பூமா அவர்களின் அன்புக் கணவரும்


▪️ரிஸ்வான்

▪️ரிஸ்வானா

ஆகியோரின் அன்புத் தந்தையும்


▪️ஷிஹாப் தீன்

▪️ரஹ்மதுல்லாஹ்

▪️பைரூஸ்

▪️ரஹ்மா பீபீ

▪️நஸீரா உம்மா

▪️மஸாஹிரா

▪️ஜனூபா

▪️ஜெலீலா

ஆகியோரின் சகோதரரும்


▪️ரியாஸ்

▪️நஸீமா

ஆகியோரின் மாமனாரும் ஆவார்..


*நல்லடக்கம்*


♦️ திகதி : 2023.04. 10


♦️ நேரம் : மாலை 5.00மணி


♦️இடம் : மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ மையவாடி. 


அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இரக்கம் உள்ள றஹ்மானே பொறுமை வழங்குவாயாக. 


‎الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ


(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன் : 2:156)


அல்லாஹூத் தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, கேள்விகணக்கை இலேசுபடுத்தி, அவர்களின் கப்றை விசாலமாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸை தங்கு தளமாக ஆக்கியருள்வானாக!


*community group*

https://chat.whatsapp.com/E5ERPrGgVjvI2DYfrT7IrQ


*Telegram:*

t.me/DeltotaJanazanewsAlert


*Facebook page*

Visit to Like *Deltota Janaza News Alert Page* https://www.facebook.com/104608547905023?referrer=whatsapp

தகவல்:மௌலவி முனீர் சாதிக்

 


தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர், சிவில் திணைக்கள தலைவர்( Head/ Department of Civil Engineering) பொறியியளாளர் எம் ஸி றியாஸ் (41 வயது) திடிர் சுகவீனமுற்று ,இன்று காலை மரணமடைந்துள்ளார். 

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவர்.  ராணாசின் கணவரான இவர், அப்துல்லா,09 மிசைல் 05வயது ஆகிய பிள்ளைகளின் தந்தையுமாவார்.


ஜனசா வைத்தியசாலை வீதி , சாய்ந்தமருது 09.இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.




 சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மௌலவி காலமானார் !


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உப தலைவராகவும், சாய்ந்தமருது ஸகாத் நிதிய தலைவராகவும் நீண்டகாலம் சேவையாற்றிய சாய்ந்தமருதூரின் மூத்த உலமா ஓய்வுபெற்ற பிரதியதிபர் அல்ஹாஜ் யூ.எல்.எம். காஸிம் மௌலவி அவர்கள் சனிக்கிழமை மாலை காலமானார். 


இவர் மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய பிரதியதிபராக இருந்து அப்பாடசாலையின் வளர்ச்சியிலும், பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டிலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருந்தார். ஓய்வுபெற்ற சாய்ந்தமருதின் மூத்த உலமாவான அல்ஹாஜ் யூ.எல்.எம். காஸிம் மௌலவி அவர்கள் பிரதேசத்தின் மார்க்க கல்வியை மேம்படுத்த தஃவா இஸ்லாமிய கலாபீடத்திலும் முன்னின்று தலைமை வகித்து அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உபதலைவராக மட்டுமின்றி அகில இலங்கை உலமாக்கள் சபை சாய்ந்தமருது கிளையிலும் தலைவராக, செயலாளராக இருந்து தனது மார்க்க பணியை சிறப்பாக செய்துள்ளார். 


சாய்ந்தமருது ஸகாத் நிதிய தலைவராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் மக்களுடன் இனிமையாக பழகி மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்நின்றதுடன் இணைக்க சபையிலும் சிறப்பாக பணியாற்றி நீதியை நிலைநாட்டி பிணக்குகளை இருசாராரும் பொருந்திக்கொண்டு ஒற்றுமையாக செல்லுமளவுக்கு தீர்ப்புக்களை வழங்கி மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார். 


எல்லோருடனும் இனிமையாக பழகும் இவரின் மரணச்செய்தியறிந்து பெருந்திரளானோர் ஜனாஸா வீட்டை வந்தடைந்திருந்தனர். சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சாய்ந்தமருது தக்வா மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. 


பள்ளிவாசல்களின் இமாமாக, பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களின் நிர்வாகியாக, ஆசிரியராக, பிரதியதிபராக, சமூக அமைப்புக்களின் பிரதானியாக மற்றும் சிறந்த உலமாவாக அவர் சமூகத்தின் பால் நிறைய சமூக சேவைகளை செய்துள்ளார். அன்னாரின் மரண செய்தியறிந்து உலமா சபையினர், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல், மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர் சமூகம், சிவில் அமைப்புகள், அரசியல்பிரமுகர்கள் எனப்பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

 


கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகவும்,சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியை வசிப்பிடமாகவும் கல்முனை மாநகர சபையில் மிக நீண்டகாலமாக படவரைஞர் (Draughtsman) மற்றும் தொழிநுட்ப உதவியாளர் (Technical Assistant) ஆக கடமையாற்றிய எனது  மன்சூர்  காலமானார். 


இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.




ஜனாஷா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.