சட்டமா அதிபர் திணைக்கள தன்னிலை விளக்கம்


 


உண்மையில் என்ன நடந்தது என்ற நிதர்சனம் புரியாமல் வெவ்வேறு நபர்கள் இப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்க முயற்சிப்பதையும், கருத்து தெரிவிப்பதையும் அவதானிப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது.


கற்றறிந்த நீதிவான் அவர்கள், கெளரவ சட்டமா அதிபர் தன்னை அவரது திணைக்களத்துக்கு வரவழைத்து தனது உத்தரவை மாற்றச் சொன்னார் என்ற கற்றறிந்த நீதிவானின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும்.


மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 7 எழுத்தாணை விண்ணப்பங்களில் மூன்றில் கற்றறிந்த நீதிவான், தனது அதிகாரப்பூர்வ /தனிப்பட்ட கோதாவில் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த வழக்குகள் 11.10.2023 அன்று ஆதரிப்பதற்காக அழைக்கப்பட இருகின்றன.


இந் நிலையில்14.09.2023 ஆந் திகதி, கெளரவ சட்டமா அதிபரின் உதவியைக் கோரியும், அவருக்காக ஆஜராகுவதற்கு அரச சட்டவாதி ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறும் அவர் நீதிச் சேவை ஆணைக் குழுவை எழுத்து மூலம் கோரியிருந்தார். 


நீதிச் சேவை ஆணைக் குழுவானது தனது 15.09.2023 எனத் திகதியிட்ட கடிதத்தின் மூலம் கற்றறிந்த நீதிவான் சார்பில் மேன் முறையீட்டு நீதி மன்றில் ஆஜராகுமாறு கெளரவ சட்டமா அதிபர் அவர்களை கோரி இருந்தது.


இந்தப் பின்னணியில், அதிகாரிகளின் தேவையான ஒப்புதலுடன் 21.09.2023 அன்று கற்றறிந்த நீதிவானுடன் ஆலோசனை நடாத்த கெளரவ சட்டமா அதிபர் முடிவு செய்தார்.


எனவே முதலில் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயம், தனது உத்தரவை மாற்றுமாறு கற்றறிந்த நீதிவானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக கெளரவ சட்டமா அதிபரினால் கற்றறிந்த நீதிவான் சட்டமா அதிபர்  திணைக்களத்திற்கு "அழைக்கப்பட்டிருக்கவில்லை"  மாறாக கற்றறிந்த நீதிவான் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு சேவை நாடுனராகவே, சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.எனவே இது உண்மையில், சட்டத்தரணி-சேவை நாடுனருக்கிடையேயான உறவின் அடிப்படையில் அமையப்பெற்ற ஒரு சந்திப்பாகும்.


திணைக்களத்துடனான கூட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுவிட்டு, அவருக்கே நன்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக,

அவர் இந்த அபத்தமான/ பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் உண்மையான நோக்கத்திற்கு அவர் ஒரு திருப்பத்தை கொடுப்பது மிகவும் நெறிமுறையற்றதும் தொழில்முறையற்றதுமாகும்.


மேற்கூறியவை இந்த முழுச் சம்பவத்தின் சரியான உண்மைப் பின்னணியாகும்.