Showing posts with label Disaster. Show all posts


டோக்கியோ:

ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், 
கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. 
மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. 

புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி 
அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.


மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  

தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. 

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் 15 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் பலர் அட்சுமா கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. #Japanquake  #Hokkaidoquake 

ஜகர்தா:

ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திவரும் இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மீண்டும் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Indonesiaearthquake

பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக்கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து மேற்கே-தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Indonesiaearthquake #Lombokisland #Lombokislandearthquake

#IsmailUvaizurRahman.
கேரளாவில் பெரு வெள்ளம் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


பேரழிவில் அரசியல் செய்யும் மோடி அரசு..
ஒக்கி புயலின்போது தமிழக மீனவர்களை திட்டமிட்டே கைவிட்டதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பேரழிவை சந்தித்து வருகிறார்கள்..
ஆனால் பட்டேல் சிலைக்கு 2 ஆயிரம் கோடியை ஒதுக்கிய மோடி அரசு கேரள அரசுக்கு கிள்ளி கொடுக்கிறது. காரணம் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆள்கிறார்கள்..
ஆக இந்த தருணத்தில் நாம் கேரள மக்களுடன் துணை நிற்க வேண்டும்.. களத்திற்கு போக முடியாத சூழலில் இருக்கும் நண்பர்கள் நம்மால் முடிந்த பொருளாதார உதவியை கேரள மக்களுக்கு செய்வோம்..
இதேவேளை,கேரள மக்களுக்காக தனது தங்க கம்மலை கழற்றி கொடுத்துள்ளார், முஸ்லீம் சகோதரி.
'' கேரளாவில் வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது'' என ட்வீட் செய்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
''கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனையை உரித்தாக்குகிறேன். நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளதும், இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதும் கோரமான நிலை'' என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
''நேற்று மட்டும் இரண்டு லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு நன்றி. அவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரை மீட்டதாக செய்திகள் வந்துள்ளன. போற்றப்படாத நாயகர்கள் - மீனவர்கள்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கேரளா வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி.

வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம். மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஐ தொட்டுள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
கேரளாவில் 8 நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக இதுவரை 39 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசின் வருவாய்த் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பேரிடர் காரணமாக சுமார் 8,979 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது கேரளாவிலுள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் கூறுகிறார்.
மேலும், இந்த இயற்கை பேரிடரில் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 21 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. இதன் மொத்த சேத மதிப்பு 16.65 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது.
"இப்படியொரு பேரழிவை பார்த்ததில்லை"
கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இடுக்கியும் ஒன்று. பிபிசி தமிழிடம் பேசிய இடுக்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஷி அகஸ்டின், மீட்புப் பணியில் முப்படைகளும் துரிதமாக ஈடுபட்டு வருவதாகவும், இடுக்கியில் உள்ள மீட்பு முகாமிலுள்ள பொதுமக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
கேரளா வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இடுக்கி முகாமில் சுமார் 500 பேர் தங்கியிருப்பதாகவும் அதில் 70 பேர் குழந்தைகள் என்றும் தெரிவித்த ரோஷி அகஸ்டின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக அலோபதி, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு
இடுக்கியை தவிர்த்து எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வயநாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடியாத வெள்ளம், சின்னாபின்னமான கேரளா!படத்தின் காப்புரிமைGETTY IMAGES
20,000 வீடுகள் முழுமையாக பாதிப்பு
இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதத்தை முதற்கட்டமாக கணக்கிட்டதில் சுமார் 8,316 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் வீடுகளும், பொதுப்பணித்துறையின் கீழ் போடப்பட்ட 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளும் சேதம் அடைந்துள்ளதாகவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு
1924 ஆம் ஆண்டுக்கு பிறகு, கேரளா எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ள பேரிடர் இது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், 27 முக்கிய அணைகளில் நீர் நிரம்பியுள்ளதால் திறக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேரளா வெள்ளம்
இதுபோன்று தீவிரமாக ஏற்படும் இயற்கை பேரிடர்கள் அரிதானவையே என்றாலும் அது மாநிலத்திற்கு ஏற்படுத்தியுள்ள சேதம் மிக அதிகம் என்று முதல்வர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொத்துவில் பசறிச்சேனை கிராமத்தில் யானை உட்புகுந்து களியாட்டம்

பொத்துவில் பசறிச்சேனை(பெரிய உல்லை) பகுதியில் இன்று அதிகாலை 3மணியளவில் யானைகள் ஊருக்குள் உட்பிரவேசித்து தென்னைமரங்கள்,வேலிகள் போன்றவைகளை தாக்கி கலியாட்டம் சுமார் 10யானைகளுக்கு மேல் உட்புகுந்து உள்ளன.  இதனால் மக்கள் பீதீயடைந்து கொண்டு இளைஞர்களின் உதவியுடன் யானைகளை திரத்தினர்.
எந்த வித உயிர்தேசங்களும் இல்லை என இவ்வூர் மக்கள் தெரிவிந்தனர்.

இந்தோனீஷியாவின் பிரபல சுற்றுலா நகரம் ஒன்றில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
படத்தின் காப்புரிமை
மத்திய இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு பாலியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீவு உலகம் முழுவதிலிருந்தும் இந்தோனீஷியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான இடமாக இருந்து வருகிறது.
இத்தீவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பெரிய கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் இதன் காரணமாக சிலர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தோனீஷியாவில் கடும் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட குழப்பம் குறித்து ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய ஒருவர், "நிலநடுக்கம் வலுவானதாக இருந்தது. என் வீட்டில் இருந்த அனைவரும் அச்சமடைந்தனர். அனைவரும் தெருவை நோக்கி ஓடினோம். மின்சாரமும் துண்டிக்கப்பட்டது" என்கிறார்.
வடக்கு லோம்போக்கின் வடகிழக்கு நகரத்தில் அமைந்துள்ள மட்டராம் பகுதியில்தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது.
இந்தோனீஷியா பேரிடர் முகமையின் செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ, "கட்டங்கள் இடிவதிலிருந்து தப்ப மக்கள் அனைவரும் வீதியிலும், திறந்தவெளி மைதானங்களிலும் திரள்கின்றனர். மக்களை மீட்பது மற்றும் வெளியேற்றுவதில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்." என்று ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர, 50க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் குழுவினர் தாங்களே இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்களின் அமாக் செய்தி நிறுவனம் வழியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்காளர் பதிவு இந்த மாதம்தான் தொடங்கியது.
வாக்களிப்பதற்கு தங்களை பதிவு செய்வதற்கு நின்றிருந்த மக்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.படத்தின் காப்புரிமைEPA
வாக்காளர் பதிவு தொடங்கியதில் இருந்து இதுபோன்ற வாக்காளர் பதிவு மையங்களில் குறைந்தது 4 தாக்குதல்கள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாக உள்ளது.

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 11.50 மணியளவில், தைவானின் கிழக்குக் கரைக்கு அப்பால் 20கிமீ தூரத்தில் 6.4ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹொவாலியன் நகரில், பாதியளவில் சேதமடைந்த விடுதிகளிலிருந்தும், குடியிருப்பு கட்டடங்களிலிருந்தும் 150 பேரை அவசரகால பணியாளர்கள் மீட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தின் புகைப்படங்களில், சாய்ந்த கட்டடங்கள், சிதறியுள்ள இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை பார்க்க முடிகிறது.

சேதமடைந்த கட்டடங்களில் மருத்துவமனை ஒன்று மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தில், 10 அடுக்கு மாடி கொண்ட மார்ஷல் விடுதியும் சேதமடைந்துள்ளது.
அவ்விடுதியில் சிலர் சிக்கியுள்ளதை பார்த்ததாகவும், தங்கள் மொபைலில் உள்ள விளக்குகள் மூலம் தாங்கள் இருப்பதை அவர்கள் தெரிவித்ததாகவும் சம்பவத்தில் நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சுமார் 40,000 வீடுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
நகரில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வரும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. அவசர உதவிகளுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
சுமார் 100,000 மக்கள் வாழும் ஹொவாலியன் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும்.
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி
தலைநகர் தாய்பேயிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்த்தாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் நிலநடுக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட சிறு சிறு அதிர்வுகளால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.
பல தினங்களாக, தைவானில் சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டு வந்தன; மேலும் அங்கு இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் கடற்கரை பகுதிகளை 7.9 அளவிலான நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு 
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொடியாக் நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட அந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவுக்குப் பின் 12.31 மணிக்கு நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ்.ஜியாலஜிகல் சர்வே கூறியுள்ளது.
"உயிர் மற்றும் உடைமைகளுக்கு அளவுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம்," என்று ஆன்கரேஜில் உள்ள அதிகாரிகள் கற்கரையோரத்தில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தோனேசிய ஜாவா தீவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
6:9 ரிச்டர் அளவில் சுமார் 20 செக்கன்கள் வரை இந்தோனேசிய ஜாவா தீவை உலுக்கிய பலம்வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள கட்டடங்கள் பல நொறுங்கியுள்ளதுடன் சுமார் 6 பேர் வரை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 

5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

கடுங்காற்று மற்றும் பலத்த மழையினால் நாட்டின் சில பகுதிகளில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.
பாலத்துறை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடுங்காற்றினால் ப்ளுமென்டல் வீதியில் வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மருதானை – ரீட் மாவத்தை, டொரிங்டன் மற்றும் கிரஹரி வீதியில் இரண்டு கார்கள் மீது மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
ஹுணுப்பிட்டிய ஜயந்தி மஹால் சந்தியில் லொறி ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிசை விகாரை வீதியில் வாகனத் தரிப்பிடம் ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் சொத்துக்களுக்கு சேதம் ஏறட்டுள்ளது.
மாதம்பிட்டி – ஹேனமுல்ல பிரதேசத்தில் சுமார் 150 வீடுகளுக்கு காற்றினால் சேதம் ஏறபட்டுள்ளது.
கொழும்பு நகரின் பல பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் கொடக்கவெல எல்பிட்டி பிரதேசத்தில் மரம் ஒன்று மின்சாரக் கம்பியில் வீழ்ந்தமையினால் 57 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ பொதுபிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மரம் வீழ்ந்தமையினால் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பதுளை – கொழும்பு ரயில் வீதியில் தெமோதர பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டது
பண்டாரவளை மற்றும் பெரகல பிரதேசங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.


இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலைக்கொண்ட தாழ்வுநிலை காரணமாக நேற்று மாலை முதல் கடும் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால், இலங்கையின் தென் பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள், மின்கம்பங்கள், பாரிய பதாகைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தென் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற நால்வரின் சடலங்கள் இன்றுகாலை தென் கடற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் கரையொதுங்கியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு
இந்த சீரற்ற வானிலை காரணமாக மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் சுட்டிக்காட்டினர்.
தென்மேற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட தாழ்வுநிலை தற்போது வலுவடைந்து கொழும்பிலிருந்து அரபு கடலை நோக்கி 350 கி.மீ தொலைவில் தற்போது காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றைய தினமும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என ஆய்வு மையத்தின் தலைவர் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.
களமிறங்கிய முப்படை வீரர்கள்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க முப்படையினரை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு
அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்தப்படியே உரிய தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.
வானிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு
மேலும், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு 10,000 ரூபாய் ஆரம்ப உதவியாக வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.