Showing posts with label Eastren. Show all posts

 


( வி.ரி. சகாதேவராஜா)

றொட்டரி மாவட்டம் 3220 ன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ஜெரோம் இராஜேந்திரன்     கல்முனைக்கு விஜயம் செய்தார்.

றொட்டரி கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று முன்தினம்  கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தார்.


 பின்னர் அவர் தலைமையிலான கூட்டம் கல்முனை வெள்ளை தாமரை மண்டபத்தில் நடைபெற்றது.
 கழகத்தலைவர் ஏ எல் ஏ. நாசர் தலைமையில் , செயலாளர்  கே . குகதாசன் , பொருளாளர் வீ  விஜயசாந்தன் உட்பட சகல அங்கத்தவர்களும் பங்குபற்றினர்.

 றொட்டரி மாவட்ட செயலாளர் என். றமனா மற்றும்  உதவி ஆளுநர் தி .ரகுராம் ஆகியோரும் பங்குபற்றியதுடன், ஆளுநர் கழகத்தின் முன்னேற்றத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


 மாளிகைக்காடு செய்தியாளர்


லக்ஸ்டோ நெட்வொர்க் ஸ்ரீலங்காவின் 27 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற "திறமைக்கான தேடல் மகுடம் சூட்டும் விழா" சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நிறுவனத்தலைவர் ஊடகர் அறிவிப்பாளர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி ஏ.எல்.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் நாட்டின் நாலா பகுதிகளிலும் இருந்தும் "திறமைக்கான தேடல் விருதை பெற தகுதியான கலைஞர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது கலைஞர்களின் கலை, இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எஸ்.எல்.எஸ். முஹீஸ், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், கமு/கமு/ மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் நஸ்லின் ரிப்கா அன்சார், தொழிலதிபர் சிங்கர் எஸ்.எச்.எம். ஜிப்ரி, தொழிலதிபர் ஏ. ஆர். முகம்மது கியாஸ், லக்ஸ்டோ நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் அமைப்பாளர் கலாபூசனம் எம்.அருளம்பலம் உட்பட, கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கலை, கலாசார, ஊடக, சமூக சேவையில் சேவையாற்றி வரும் பல் துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான உணவுப் பொருட்களும் தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.


 (வி.ரி. சகாதேவராஜா)

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் அணிவகுப்பு இடம்பெற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பணிப்பாளரினால் சிறப்புரை வழங்கப்பட்டது.

தனது உரையில், வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் இக்கட்டான நிலையில் சிறந்த முறையில் கடமையாற்றுவதை பாராட்டியதுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு திருப்தியான சிறந்த சேவையை வழங்குவதற்கு ஆலோசனையும் வழங்கியதோடு எந் நிலை வந்தாலும் அவற்றை வென்று சிறந்ததொரு வைத்திய சேவையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இதேபோன்று சிறந்த சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி எமது பிரதேச வாழ் மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சுதந்திர தினத்தில் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதியபரிபாலகர் என்று.சசிதரன், தாதியபரிபாலகி திருமதி எல்.சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள், பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி.ரோஷி சுகுமார் மற்றும் விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள், பொறுப்பு உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், நிறைவுகான் தொழில் வல்லுனர் சேவை உத்தியோகத்தர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், விடுதி மேற்பார்வை உத்தியோகத்தர்கள், சிற்றூழிய மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களும், ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாற்சோறும் வழங்கி இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வினை காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றபோது...

 


வி.சுகிர்தகுமார் 0777113659   

  வெள்ளப்பாதிப்பால் சேதமடைந்த விவசாய செய்கையினை அறுவடை செய்ய மறுக்கும் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறும் இடத்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்திலும் இவர்கள் விவசாய அறுவடையில் ஈடுபட முடியாத வண்ணம் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாரை மாவட்ட விவசாயிகளின் நிலை மலையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதையாக மாறியுள்ளது. இந்நிலை தொடர்பில் விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அம்பாரை தோணிக்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளப்பாதிப்புக்கு பின்னர் அறுவடை ஆரம்பமான நிலையில் சில அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் செயற்பாடுகள் காரணமாக மேலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.
வெள்ளத்தினால் வீழ்ந்துள்ள வேளாண்மை செய்கையினை அறுவடை செய்ய சில அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருவதாகவும்; இதனால் தமது விவசாய செய்கையினை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பது மற்றுமொரு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் தலையீடு செய்து உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை உடன் எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நம் நாட்டை பொறுத்தவரையில் விவசாயத்துறை அபிவிருத்தியில் அம்பாரை மாவட்டமும் கணிசமான அளவு பங்களிப்பு செய்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் பலரது வயல் நிலங்களும் சேதமாக்கப்பட்டது. இதனால் விளைச்சலிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அத்தோடு சிறிய குளக்கட்டுகள் வாய்க்கால்கள் வரம்புகள் போன்றவற்றிலும் பாரிய முறிவுகள் ஏற்பட்டு பல இலட்சம் ரூபா செலவு செய்து சீர்படுத்தப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய தீர்வினை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது.



வி.சுகிர்தகுமார் 0777113659  


 தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்களின் இறுதிநாள் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று (03)இடம்பெற்றது.
பொது நிர்வாக சுற்று நிருபத்திற்கமைவாக அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அரசகரும மொழித்தேர்ச்சி தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்புக்கள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களின் இறுதிநாள் கலை நிகழ்வுகளும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் இருமொழி வளவாளர்களான  திருமதி சரோஜா தெய்வநாயகம், சந்துணி மகேசிகா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கணக்காளர் பிரகஷ்பதி கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பயிற்சி நெறியினை நிறைவு செய்த அரச உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களின் சேவையினை பாராட்டும் வகையில் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் மொழி அறிவு அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் தேவையானதொன்றெனவும் மொழியாற்றல் உள்ளவர்கள் உலகில் பல விடயங்களை சாதிக்க முடியும் எனவும் கூறினார்.
ஆகவே அரச உத்தியோகத்தர்களுக்கு அரசும்  தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமும் வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


மாளிகைக்காடு நிருபர்

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள கல்முனை கமு/கமு/ பஹ்ரியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலயம், மருதமுனை - பெரியநீலாவணை கமு/கமு/ அக்பர் வித்தியாலயம், கல்முனை கமு/கமு/ அஸ் ஸுஹரா வித்தியாலயம், கல்முனை கமு/கமு/ அஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விஜயம் செய்து பாடசாலைகளின் குறைநிறைகளையும், கல்வி மேம்பாட்டு தேவைகளையும் பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.  

இந்த விஜயத்தின் போது மாணவர்களிடம் கல்வி மேம்பாடு தொடர்பிலும், எதிர்கால கல்வி நிலைகள் தொடர்பிலும், பாடசாலை கால ஒழுக்க விடயங்கள் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியதுடன் கல்முனை கமு/கமு/ பஹ்ரியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலயம், மருதமுனை - பெரியநீலாவணை கமு/கமு/ அக்பர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண சபை ஊடக கிடைக்கப்பெற்ற பாடசாலை புத்தக பைகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலைகளின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து


 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை  ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி நேற்று முன்தினம் (30) வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் தொழுநோய் தின நிகழ்வு நடைபெற்றது.

வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன்   தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் டாக்டர்.என். தமிழ்வண்ணன் கலந்து சிறப்பித்தார்.

வரவேற்புரையினை தோல் நோய் மருத்துவர் டாக்டர் ஜே.எச்.. மஷாகிட் வழங்கியதோடு விசேட உரையினை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் வழங்கியிருந்தார்.

தோல் வைத்திய நிபுணர் டாக்டர் என். தமிழ்வண்ணனினால் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.

அவர் தனதுரையில் தொழுநோயின் வரலாறு, அதன் வகைகள், அறிகுறிகள் முக்கியமாக தொடுகையுணர்வு குறைவான தோலின் நிறமாற்றங்கள், நரம்புத்திரள்கள், ஏனைய தோலின் மாற்றங்கள் இதற்கு சிகிச்சை முறைகள் மருந்துகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமாக விவரித்தார்.

இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் டாக்டர் தமிழ்வண்ணனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

நன்றியுரையினை தோல் சிகிச்சை பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி.வி. இராஜலோஜினி  நிகழ்த்தினார்.

நிகழ்வில் வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம் என் எம். சுவைப், வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆர்.. கணேஷ்வரன், தாதிய பரிபாலகர் திரு. என். சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி எல். சுஜேந்திரன், பிரதம மருந்தாளர் பி.சுதர்ஜினி, பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி. ரோஸி சுகுமார், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து  சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. என்..மனோஜினி தொகுத்து வழங்கியிருந்தார்.

 


பாறுக் ஷிஹான்


அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை  இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டபணமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகம் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.இதன் பின்னர் சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும்  மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை  பொலிஸாரால் அவர்  கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை  செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில்   செவ்வாய்க்கிழமை(30) அன்று குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர்  உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான்  எம்.எஸ். காரியப்பர் வீதிப் பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்ட மன்று  1 500 ரூபா தண்டபணமும் 55 000 ரூபா நஷ்டஈடும்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபரின் சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் இசட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திப் பின்னணி


வீதிப் பெயர் பலகையை இடித்துச் சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன் கைது- பிணையில் செல்ல அனுமதி 

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக   ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் விசாரணை  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை  றொட்டரிக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 917  பயனாளிகளுக்குரிய மூக்குக் கண்ணாடிகளை கல்முனை  ஆதார வைத்தியசாலையில் வழங்கி வைத்தது.

கல்முனை ஆதார வைத்தியசாலை கேடபோர் கூடத்தில் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண் சிகிச்சை முகாமின்போது இக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

 Global Hand Charity  என்னும் அவுஸ்ரேலிய அமைப்பின் அனுசரணையுடன், றொட்டரிக்கழகம் Bill Point, அவுஸ்ரேலியா,றொட்டரிக்கழகம் கொழும்பு என்பவற்றின் பங்களிப்புடனும் இவ்வேலைத்திட்டம் கல்முனை றொட்டரிக்கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வானது  15 அவுஸ்ரேலிய கண் வைத்திய நிபுணர்களுடன் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவும் இணைந்து 
நடாத்தப்பட்டது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு  வைத்தியசாலைப்பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

 கண்வைத்திய நிபுணர் டாக்டர்  என்.நிரோசன்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்  ரீ ஜே அதிசயராஜ் அவுஸ்ரேலிய குழுவினர் தலைவர் ஜோன் மான்fவீல்ட்  உடபட ஏனைய அங்கத்தவர்களும், கல்முனை றொட்டரிக்கழக தலைவர் லயன் ஏ எல் ஏ நாசர் மற்றும் அங்கத்தவர்களும், வைத்தியசாலை  நிர்வாக உத்தியோகத்தர், தாதியர்கள்  உட்பட ஏனைய சில  உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.

இச்சிகிச்சையின் போது 197  கற்றறக் (Cataract) நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களுக்கான வில்லைகள் ( lenses) கிடைத்ததும் கண் அறுவகைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்  கல்முனை றொட்டரிக்கழகத்தினாலல் மேற்கொள்ளப்படும்.
இவ்வேலைத்திட்டம் கடந்த ஆறு மாதங்களாக சமூக சேவைப்பணிப்பாளர் மு  சிவபாதசுந்தரத்தின் வழிகாட்டலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி.சகாதேவராஜா) 


 இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

 மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் தேதி மூன்று மணிக்கு நடைபெற இருக்கின்ற இந்த சுதந்திர தின விழா தொடர்பான முன்னோடி கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பில் உள்ள ஆளுநர் சுற்றுலா விடுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

 கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழு பார்வையிட்டது.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

சகல மாகாண செயலாளர்களும் கல்வி புலத்தினரும் கலந்து கொண்டார்கள்.


அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்தியத்தில் மகத்தான மருத்துவ சேவையை
வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை  ஆதார வைத்தியசாலை கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களுக்காக வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

வைத்தியசாலை வெளியிடப்பட்ட  சிகிச்சைகளின் புள்ளி விபரங்களின் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

சேவைகள் வருமாறு..

வைத்தியசாலையின் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிகள் (Inward Admission) - 37620, வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் (OPD Admissions) - 147079, சாய்சாலை நோயாளர் (Clinic Patients) - 112831, வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திர சிகிச்சைகள் (General Surgeries) - 3804, பாரிசவாத சிகிச்சைகள் (Stroke Patients) - 331, கண் சத்திர சிகிச்சைகள் (Eye Surgeries) - 2603, CT ஸ்கேன் சேவை எண்ணிக்கை - 5544, ஆய்வுகூட பரிசோதனைகள் - 540000 மற்றும் இதர மருத்துவ சேவைகளாக ECG, Daycare Surgeries, இயன் மருத்துவ சேவை (Physiotherapy), நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் (Patient Safety and Health Information Desk/ Relax),  X - Ray, USS போன்றவற்றின் மூலம் கிட்டத்தட்ட 111216 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2023 ஆம் ஆண்டு மாத்திரம் 372 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 

இவ் வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய மக்கள் மட்டுமன்றி ஏனைய வெளி பிராந்தியங்களில் இருந்து வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


 அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வழமை நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர்(20)அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 

 அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினருடன் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், ஜனாதிபதி செயலக உயர் மட்ட அதிகாரி ஆர். நிசாந்தன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர், மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எச்.ஏ.அஹ்மத்,அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் மற்றும் உலக உணவுத்திட்டத்தின் உயர்மட்ட உறுப்பினர்களான சந்த்ரதிலக்க வீரசிங்க, டப்ளியு.எஸ்.ஐ.பெனாண்டோ, ஜெ.ஹெட்டியாராச்சி, எம்.நிஹ்மத் ஆகியோருடன் இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த குழுவினர் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் பல்கலைக்கழக பொறியலாளர் எம்.எஸ்.எம். பஸில் ஆகியோருடன் விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த உபவேந்தர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சுமூக நிலைக்கு கொண்டுவர பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அவசரமாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து பல்கலைக்கழகத்தை பாதுகாக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தனது கருத்தில் தங்களது மாவட்ட செயலக மட்டத்தில் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை அதிகபட்சமாக 76.9 மீற்றர் மழை விழ்ச்சி மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது

மாவட்டத்தில் (19) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 76.9 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு பகுதியில் பதிவாகியுள்ளது.
இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான வாகனேரியில் 26.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவு குளத்தில் 12.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 24.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும உறுகாமத்தில் 17.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக உன்னிச்சையில் 3.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் சுப்பிரமணியம் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

 


(கு.மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணராகப் பணிபுரிந்து,மாற்றலவாகிச் செல்லும் மகப்பேற்று நிபுணரான திரு ஜீரேகா விக்ரமசிங்க அவர்களுக்கான பிரியாவிடை நேற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தயட்சகர் ஜனாப் ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இவரது சேவை நலனைப் பாராட்டிப் பொன்னாடையும் போர்த்தப்பட்டதுடன் கௌரவிப்பும் இடம்பெற்றது


 


நூருல் ஹுதா உமர்


அனர்த்தங்கள்  மற்றும் அசாதாரண நிலைமைகள் போது பொதுமக்களுக்கு  உதவும் நோக்கில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் 2024.01.14 ந் திகதி நடைபெற்ற கூட்டத்தில் உலமாக்கள், அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் அனர்த்த முகாமைத்துவ சபை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சபைக்கு தலைவராக கல்முனை முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் என்.எம். நௌஸாத் அவர்களும் பொருளாளராக இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாத் அவர்களும் கல்முனை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜெலீல் பாகவி மற்றும் கல்முனை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அஷ்செய்க் முர்ஷித் முப்தி ஆகியோர் உதவி தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் உப செயலாளராக ஓய்வு நிலை மலேரியா தடுப்பு அதிகாரி எம்.ஐ.எம். சலாஹுத்தீன் அவர்களும் கணக்குப் பரிசோதகராக இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.எம்.எம். முஸ்த்தக்கீன் மௌலானாவும் நிருவாக சபையின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த கூட்டத்தின் தீர்மானங்களாக அனர்த்த முகாமைத்துவ சபைக்கு தனியான நிதியத்தை உருவாக்கி அதனை தொடர்ந்து செயற்படுத்துதல், முதல் கட்டமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் தரவுகளை பிரதேச செயலதத்தினூடாகப் பெற்று அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு உலர்உணவு வழங்குதல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


 (சர்ஜுன் லாபிர்)


கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மகளிர் அபிவிருத்தி சங்கங்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று(16) இஸ்லாமாபாத் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் கல்முனை மகளிர் சகவாழ்வு சங்கத் தலைவி எம்.றிலீபா வேகம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக் கலந்துரையாடலின் போது மகளிர் அபிவிருத்தி சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,எதிர் கால திட்டமுன்மொழிவுகள் சங்களின் நடைமுறை  சார் நிர்வாக பிரச்சினைகள்,கட்டிட தேவைகள் என பல்வேறுபட்ட பிரச்சினைகள் சங்க பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம்,கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் சப்றாஸ் நிலாம்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல் அர்சத்தீன் உட்பட கிராம மட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

 





அக்கரைப்பற்று அவசரகால வெள்ள அனர்த்த நிவாரணக் குழுஅக்கரைப்பற்றுப் பகுதியில் வெள்ளத்திளால் பாதிப்புற்றோருக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருகின்ற அதேவேளையில், பொது மக்களால் வீடுகளிலிருந்து வழங்கப்பட்ட உணவுப் பொதிகளையும் ஒன்று சேர்த்து பாதிப்புற்றோருக்குப் பகிர்ந்தும் வருகின்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளிலிருந்து சமைத்த உணவை வழங்குமாறு அவசரகால வெள்ள அனர்த்த நிவாரணக் குழு நேற்றிரவு விடுத்த வேண்டுகோளை ஏற்று எதிர்பார்த்த எண்ணிக்கைகளையும் விட அதிகமான உணவுப் பார்சல்களை அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் மற்றும் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி மக்களின் பசி தீர்க்க உதவிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள். ஜஸாக்கமுல்லாஹு ஹைரா.
அல்லாஹுத்தஆலா உங்களுடைய குடும்ப பொருளாதார வாழ்வில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக!
இப்பணியில் தொண்டர்களாக பணியாற்ற சகோதரர்களின் பணியை அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்வானாக!


 


நூருல் ஹுதா உமர்


அடைமழை காரணமாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி அணைக்கட்டுகள் எல்லாம் திறக்கப்பட்டமையால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்தித்து வரும் இவ்வேளையில் அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனையொட்டியதாக கிழக்கின் கேடயம் மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைசேனை போன்ற  பிரதேசங்களுக்கான நிவாரணப் பணியை இன்று (12) முன்னெடுத்தது.

கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் " அயலவருக்கு உதவுவோம்" செயற்திட்டத்தினூடாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஆரம்பித்த நாள் முதல் இந்த நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அம்பாறை- கல்முனை வீதியில் அபாயகரமான முறையில் வெள்ள நீர் வழிந்தோடி கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் கிழக்கின் கேடயம் அமைப்பினர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கான நிவாரணப் பணியை மூன்று அடிக்கு மேற்பட்ட வெள்ளத்தில் மிதந்தவாறு முன்னெடுத்தனர்.

அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள இடைத்தங்கல் முகாம் மற்றும் வீடுகளிலும் இந்த நிவாரணப் பணியை கிழக்கின் கேடயம் முன்னெடுத்தது.
 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.