கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு





 (சர்ஜுன் லாபிர்)


கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மகளிர் அபிவிருத்தி சங்கங்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று(16) இஸ்லாமாபாத் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் கல்முனை மகளிர் சகவாழ்வு சங்கத் தலைவி எம்.றிலீபா வேகம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக் கலந்துரையாடலின் போது மகளிர் அபிவிருத்தி சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,எதிர் கால திட்டமுன்மொழிவுகள் சங்களின் நடைமுறை  சார் நிர்வாக பிரச்சினைகள்,கட்டிட தேவைகள் என பல்வேறுபட்ட பிரச்சினைகள் சங்க பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம்,கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் சப்றாஸ் நிலாம்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல் அர்சத்தீன் உட்பட கிராம மட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்