Showing posts with label Sri lanka. Show all posts

 (ஏ.எம்.ஹஸ்னி)



பொத்துவில் பிரதேச மக்களுக்களுக்காக ஒரு துண்டுக் காணியையேனும்
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்  பெற்றுக்கொடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின்  முன்னாள் பிரதி தவிசாளருமான ஏ.எம்.தாஜுடீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவிலைப் பொறுத்தவரை செங்காமம், துக்வெல்ல, உடம்பன்குளம், தகராம்பெல, ஆமவெட்டுவான், கிராண்கோவை, சோனிகம உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் காணிப்பிரச்சினை உள்ளது. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளதா? அல்லது ஒரு துண்டு நிலத்தைக்கூட முஷாரப் எம்.பியினால் விடுதலை செய்ய முடிந்ததா? எனப் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மண்மலை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பேசுகின்றனர் மண்மலை பிரதேசத்தில் ஏதாவது அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றதா? மக்களுடைய குடியிருப்புக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றதா? அங்குள்ள மக்கள் அன்று அனுபவித்த அதே இன்னல்களை இன்றும் அனுபவித்துக்கொண்டே இருக்கின்றனர். இன்று அங்கு மலசலகூடம் கட்டிக்கொள்ள முடியாது. மக்கள் எல்லை வேலிகளை அமைத்துக் கொள்ள முடியாது. குடி நீருக்காக ஒரு கிணற்றைக்கூட நிர்மாணிக்க முடியாது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்த இடத்தை சவாலுக்குட்படுத்துகின்றனர்.

இருக்கின்றனர். இங்கு தனிப்பட்ட ஒருத்தருக்காக வாக்குகள் இல்லை. மிகக் குறுகிய காலத்துக்குள்ளே இந்தக்கட்சி பொத்துவில் பிரதேசத்தில் அளப்பெரிய சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.

இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.


இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


 இலங்கை மாணவன் மதீனா விபத்தில் வபாத்

சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். இவருடைய ஜனாஸா மதீனா புனித ஜன்னத்துல் பக்கி மையவாடியில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

 


கனேடிய அமைச்சரிடம்  “போரின் சாட்சியம்” நூலின் முதற்பிரதி...


வன்கூவரில் நேற்று இடம்பெற்ற #போரின்_சாட்சியம் வெளியீட்டு விழாவில் நூலின் முதற்பிரதி கனடாவின் முடியரசு-பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 


வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து மரணம்!

அவரது வயிற்றில் இருந்த சிசுவை காப்பாற்ற எடுத்த முயற்சியும் தோல்வி.


 (நூருல் ஹுதா உமர்) 


கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுச்சோதனை இன்று(20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹிலா இ்ஸ்ஸடீன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறுாக், பொது சுகாதார பரிசோதகர்களான எம்.ஜுனைடீன், ஜே.எம்.நிஜாமுடீன், ஐ.எல்.எம்.இத்ரீஸ், எம். ரவிச்சந்திரன் ஆகியோர்களினால் பொது சந்தையில் உள்ள வர்த்தக நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் பொது சந்தை வர்த்தகர்களுக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதன்போது  பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டதுடன் சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற முறையில் காணப்பட்ட வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் கல்முனையில் நேற்று(21) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும்,கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டார்மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியகச் செயலாளர் பி.எம்.எம்.ஜஃபர்,நிருவாக கிராம உத்தியோகத்தர் உதார,கிராம உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


UpDated  
தியத்தலாவை, ஓட்டப் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.


 உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை! 



அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள திருமதி துஷாரி ஜெயக்கொடி நேற்று (19) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.


உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை(21) முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெறவுள்ளது.


திருமதி துஷாரி ஜெயக்கொடி அண்மையில் இலங்கையில் நடைபெற்ற திருமணமான அழகிப்போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் போட்டியில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளார்.


நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர் மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார்.


இந்நிலையில் உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள துஷாரி ஜெயக்கொடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Rep/Faslin.

 ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா.



சர்வமத சின்னங்களையிட்டு பட்டம் செய்து பறக்கவிட்ட மாணவன் முதலிடம்


மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா இன்று(19)  சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் முதல் தடவையாக இந்தப் பட்டத் திருவிழா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 


இந்த பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றினர்


இதில் ஆரையம்பதி மகா வித்யாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த . ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்


இதில் முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு

உமாபத சர்மா கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர்

வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 


இந்த பட்டத் திருவிழாவில் பெருமளவிலான பொது மக்கள் சிறுவர்கள்  கலந்து கொண்டு பட்டத் திருவிழாவை கண்டு கழித்தனர்

 


யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவன் கி.கிரிசிகன் (15) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமான சம்பவம் பாடசாலை சமூகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

 


நூருல் ஹுதா உமர்


சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் தொடர்ந்தும் திடீர் சோதனை நடவடிக்கை சாய்ந்தமருதில் இடம்பெற்று வருகிறது.
தொடர்ந்தும் இன்று (20) சாய்ந்தமருது பிரதேச சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது சாய்ந்தமருதின் பிரபல கடைகளில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள், மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் பொருட்கள், முறையான களஞ்சிய வசதிகள் மேற்கொள்ளப்படாத உணவுப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டது.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார குழுவினர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தம் இல்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் களான  ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

 


மாளிகைக்காடு செய்தியாளர்


காரைதீவு பிரதேச செயலக பிரிவின் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் தலைமையிலும், பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களின் ஏற்பாட்டிலும் இன்றையதினம் (19) இடம்பெற்றது.

இதன்போது இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கான அனுமதியினை பெற்று கிடைக்கப்பெறும் வளங்களை பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிப்பது தொடர்பிலும், விவசாயிகளின், அதிகாரிகளினதும் வேண்டுகோளுக்கமைவாக நீரியல் உயிரின பிரச்சினைகள்தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. மேலும் அப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதனூடாக கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பிலும் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.  

 


#Rep/Firthowze.

SLPS -3, SLTES -3, SLEAS - 3 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி பெற்ற சாதனை சகோதரி #ரஹிமாவுக்கு வாழ்த்துக்கள்!


வடமத்திய மாகாணத்தில் இருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 SLPS -3, இலங்கை ஆசிரிய கல்வியில் சேவை தரம் 3. SLTES -111, இலங்கை கல்வி நிர்வாக சேவை SLEAS -111 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி அடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ள அளுத்கம தாருல் ஸலாம் வித்தியாலய அதிபர் மொஹமட் பாரூக் சல்மத்துல் ரஹீமாவின் சாதனை  இம் மாகாணத்தில் இதுவரை எட்டப்படாத ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இச்சகோதரியின் சாதனைப் பயணத்தை நாமும் மனதார வாழ்த்துவோம்!

 


வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


நூருல் ஹுதா உமர் 


இலங்கை நூலக சங்கத்தின் 18 வது தேசிய ஆய்வு மாநாடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில், நூலக சங்க ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகருமாகிய கலாநிதி முஹம்மட் மஜீட் மஸ்றூபா தலைமையில் 2024.04.18 ஆம் திகதி இடம்பெற்றது.

இலங்கை நூலக சங்கம் 1024 அங்கத்தவர்களைக் கொண்ட, நூலகர்களுக்கான தொழில் முறை தராதரங்களைப் பேணுகின்ற, நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் கற்கை நெறிகளை நடாத்துகின்ற ஒரு தொழில்சார் சங்கமாகும். இந்நிறுவனம் தனது வருடாந்த மாநாடுகளை தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நடத்தி வருகின்றது. இம்முறை 18 வது தேசிய ஆய்வு மாநாடு 'நூலகங்கள் மற்றும் சமூகத்தின் இணைப்பு: சமூக விரிவாக்கல் சேவைகள் மூலம் பிணைப்பினை வலுப்படுத்தல்'' எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்றது.

 இவ்வருடம் வித்தியாசமான முறையில் இலங்கையின் தேசிய மொழிகளை முதன்மைப்படுத்தி மும்மொழிகளிலும் சிங்கள மொழி, தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி மூலம் இவ் ஆய்வு மாநாடு நடத்தப்படுகின்றது. இலங்கை நூலக சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு. பிருத்தி லியனகே மற்றும் முன்னாள் தலைவர் கலாநிதி ஆனந்த திஸ்ஸ ஆகியோரின் நெறிப்படுத்தல்களில் இவ் ஆய்வு அமர்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்களும், முதன்மை பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக நூலகர் ஆர். மகேஸ்வரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக நூலகர் கலாநிதி டபிள்யூ.ஜெ. ஜெயராஜ் அவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களும் கலந்து சிறப்புச் சொற்பொழிவாற்றினர். கிழக்கு பல்கலைக்கழக பிரதி நூலகர் எஸ். சாந்தரூபன் இணைத் தலைவராக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் முதன்மை அமர்வின் தலைமையினை கலாநிதி திருமதி கே. சந்திரசேகர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் நூலகர் அவர்கள் ஏற்றிருந்தார். மாநாட்டின் செயலாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி ஜெனன் அவர்களும், இணைச் செயலாளராக ஏ.எல்.எம். முஸ்தாக், கல்முனை பொது நூலகர்; அவர்களும் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் பொது நூலகர்கள், பாடசாலை நூலகர்கள், விசேட நூலகர்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்த வகையில் இம் முறை தமிழ்மொழி மூலம் கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறித்த நிகழ்வு இடம்பெற்றது வரலாற்று சிறப்புமிக்க ஓர் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆய்வு மாநாடு இரண்டு கட்ட அமர்வுகளாக இடம்பெறுகின்றது. முதல் அமர்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட, தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 26ம் திகதி கம்பஹா பொது நூலகத்தில் சிங்கள மொழி மூலம் நடைபெற உள்ளது. 

இம்மாநாட்டுக்கு பல்கலைக்கழக நூலகர்கள், பீடாதிபதிகள், நிருவாக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில்சார் நூலக வல்லுனர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் நூலகவியலைக் கற்கின்ற மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர் 


உணவு பாதுகாப்பு தொடர்பான வருடாந்த மாவட்ட மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (18) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாடு நிருவாகப் பிரிவுக்கான சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் பானுஜ, உணவுக் கட்டுப்பாடு நிருவாகப் பிரிவுக்கான சிரேஷ்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர் ஜவாத் மரைக்கார் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்கள் பதிவு செய்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார வைத்திய அதிகாரிகளினால் காத்திரமான விளக்கக்காட்சியுடன் கூடிய பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


குரோதி சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும்  இணைந்து நடாத்திய 26வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலை நிகழ்ச்சிகள்  கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் இன்று (20) சனிக்கிழமை காலை மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக  ஆரம்பமாகியது.

காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.

கழக போசகர்களான சிவ.ஜெகராஜன், வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

நான்கு கிலோமீட்டர் நீள மரதன் ஓட்டத்தில் ஏழு போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

 காரைதீவு பொலிசார் மற்றும் காரைதீவு பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்தன.

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கல்வி முகாமைத்துவத்திற்கான பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் எம்.எச்..றியாஸா நியமனம் பெற்றுள்ளார்.

காரைதீவு கோட்டத்திற்கான கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன், கல்முனை கோட்டத்திற்கான கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆகியோருக்கு மாகாண கல்வி செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆரம்பப் பிரிவு கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளராகவும் நியமனம் பெற்றுள்ளார்.

அதே வேளை எம்.எல்.எம்.முதர்ரிஸ் உடற்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளருக்கான கடிதத்தினையும் பெற்றுக் கொண்டார்.

 நியமனக் கடிதங்கள் அனைத்தும் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன

 


மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (89) அமெரிக்காவில் காலமானார்.


உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952, 1956ல் ஒலிம்பிக்கில் ஈழத்தமிழர் சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.