Showing posts with label Sri lanka. Show all posts

 


இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.


இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.


இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.


இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.


இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது.


அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.


ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.


இஸ்ரேல் - இரான் இடையே என்ன பகை? நண்பர்கள் பகையாளி ஆனது எப்படி?

36 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் செலுத்திய ஏவுகணைகள், ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது எப்படி?

15 ஏப்ரல் 2024

பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி

இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது.


பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது.


Instagram பதிவை கடந்து செல்ல

Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


ஏற்பு மற்றும் தொடரவும்

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

எண்ணெய், தங்கம் விலை உயர்வு

இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன.


வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது.


ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன.






கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.


இரானிய அமைச்சர் எச்சரிக்கை

இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.


"இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தா


இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடக்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் இன்று மக்களைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது
‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.

 


வளைகுடா நாடுகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது - சில பகுதிகளில் ஓராண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச நிலையத்திலும் வெள்ளம் சூழந்தது. இதனால் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.


உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே, நகரின் நிதி மையம் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள சாலைகள் நீரில் மூழ்கின. இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையில் செல்வது கடினமானது. ஆனால், இவர்கள் இதை ஒரு சவாலாக பார்க்கின்றனர்.


துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. வளைகுடா நாடுகள் பொதுவாக வெப்பமான, வறண்ட வானிலைக்கு பெயர் பெற்றவை, ஆனால் அங்கு அடிக்கடி அதீத மழைப் பொழிவும் ஏற்படுகிறது.


ஓமனில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் போலீசார் மீட்டனர். நாடு முழுவதும் பதினெட்டு பேர் இறந்தனர் - அவர்களில் பள்ளி மாணவர்களும் பேருந்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.


மின்னல், வெள்ளத்தால் பஹ்ரைனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகள் மூடப்பட்டன, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இன்று புதன்கிழமை சில இடங்களில் தீவிர புயல் மழை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41 வது வருட நிறைவை முன்னிட்டும்,  குரோதி புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டு கழகமும்,  விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடத்தும் 26 வது மாபெரும்  கலாச்சார விளையாட்டு விழா எதிர்வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவில் நடைபெற இருக்கிறது.

காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற இருக்கும் கலாச்சார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.


சீர்பெறு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான எந்திரி என் .சிவலிங்கம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் , கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களப்பணிப்பாளர் யு. சிவராஜா ஆகியோரும் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள்.
 முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் மற்றும் ஏனைய சிறப்பு நட்சத்திர  கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

 இந்த நிகழ்விலே விசேடமாக காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வருடகால வரலாற்றை உள்ளடக்கிய "விபுலவிருட்சம்" என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றது. அத்துடன் கல்வித்துறை சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள் என்று கழக செயலாளர் எஸ்.கிரிசாந்த் தெரிவித்தார்.


நூருல் ஹுதா உமர்

பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று இன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டு அந்த நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஷகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இந்த சுற்றிவளைப்பின் போது தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு எவ்வித அரச அங்கீகாரமுமின்றி இயங்கிவந்த மருத்துவ நிலையமும், அழகுக்கலை நிலையமும், பயற்சி நிலையமும் நடத்தி வந்த நபர் இணங்காணப்பட்டதுடன் அவரிடமிருந்த மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகளும் கைப்பற்றப்பட்டது. மட்டுமின்றி முறையான கல்வித்தகமையோ, தொழில்தகைமையோ இல்லாத குறித்த நபர் மருத்துவ பரிந்துரைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத மருந்துகளை பாவித்து வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டதுடன் அவர் மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திய சான்றுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

கல்முனை மாநகர பிரதேசத்தில் மூன்று கிளைகளைக் கொண்டு இயங்கிய இந்த நிலையம் மனித உயிர்களுக்கும், சுகாதார நிலைக்கும் சவால் விடும் வகையில் இயங்கி வந்தமையை கண்டறிந்து இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை சுதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திடீர் சுற்றிவளைப்பில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை பிராந்திய சுற்றாடல் உணவு பாதுகாப்பு பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌஸாத், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்சத் காரியப்பர், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராசா, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான ஏ.எம்.பாறுக், ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஜே.எம். நஜிமுதீன், ஐ.எல்.எம்.இத்ரீஸ் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் அவர்களின் ஆலோசணைக்கிணங்க காரைதீவு பிரதேச பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்களில் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பரிசோதனை இடம்பெற்று.

உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டது.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதர்களினால் இதன் போது உணவு மற்றும் நீரினால் பரவகூடிய நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.

 


அமெரிக்கா NASAவில் கடமை புரியும் புத்தளத்தைச்சேர்ந்த #ரொஸ்மின் #மஹ்ரூப் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...


புத்தளம் நகர பிரதேசத்தை சேர்ந்தவரும், அமெரிக்கா NASAவில் கடமை புரிந்து வந்தவருமான ரொஸ்மின் மஹ்ரூப் அமெரிக்காவில் வபாத்தானார்.


புத்தளம் சாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் வானியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் அமெரிக்கா NASAவில் கடமை புரிந்து வந்தவராவார்.


திடீர் சுகயீனமடைந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்து உள்ளார்.


யா அல்லாஹ்!

அன்னனாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்!

 


திகன கும்புக்கந்துறை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நேற்றைய 15) தினம் நீராட சென்ற இளம் தம்பதியினர் உற்பட மூவர் நீரில் மூழ்கி உயிரழப்பு

திகன கும்புக்கந்துறை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்றைய தினம் நீராட சென்ற இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரழப்பகுறித்த தம்பதியினரை தேடும்பணி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேலை குறித்த சகோதரியின் ஜனாஸா எடுக்கப்பட்டது.
தொடர்ந்து சகோதரியின் கனவரின் ஜனாஸா தேடும்பணி இடம்பெற்றுக் கொண்டு இருக்கையில் அப்பணியில் இருந்த மற்றுமத சகோதரர் ஒருவரும் நீருக்கு அடியில் சென்றவர் மீண்டும் வருகை தரவில்லை, அவரை தேடும் பணியும் தொடர்ந்து இடம்பெற்றது. சிறுது நேரத்தின் பின் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதியாக மாலை 5.00 மணியளவில் குறித்த சகோதரரின் ஜனாஸாவும் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் சம்பவம் குறித்து தெல்தெனிய பொலீசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர்களான லோரி மற்றும் டோரி எனும் பெயர் கொண்ட, உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.



நோன்புப் பெருநாளை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர் சப்றாஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விக்கண்காட்சி ஒன்று ஏறாவூர், மீராகேணி, குறுக்கு வீதி பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தக்கண்காட்சியில் கல்வியை மையப்படுத்தி பல்வேறு விடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியானது தொடராக மூன்று வாரங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


( வி.ரி. சகாதேவராஜா
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு  கல்லடி ராமகிருஷ்ணபுரத்தில்  உள்ள இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் சிறுமியர் இல்ல மாணவர்களின் சித்திரை புத்தாண்டு
விளையாட்டு விழா இடம் பெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பரிசுகளை வழங்கி வைத்தார். 


 பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ஹட்டன், மொனராகலை, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு நேர அட்டவணைக்கு மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது


 நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் கடலரிப்பின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் மருதூர் சதுக்கம் என அழைக்கப்படும் கடற்கரை திடல் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. அது மட்டுமல்லாது, இந்த சதுக்கத்தோடு இணைந்ததாக காணப்படும் கொங்றீட் வீதியின் ஒரு பகுதி கடலுக்குள் உள்வாங்கப்படுள்ளதுடன், இவ்விடத்தில் அமைந்துள்ள மீனவர் பல்தேவை கட்டிடமும் இடிந்துவிழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டபோது கல் அணைகள் அமைக்கப்பட்டபோதும் இந்த பிரதேசத்தை அண்டியதாக கடலரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையினால் மருதூர் சதுக்கம் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை பாதுகாக்க கரையோரம் பேணல் திணைக்களம், பிரதேச செயலகம் என்பன இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இது குறித்து பிரதேச அரசியல்வாதிகள் கவனத்திலெடுத்து கல் அணை அமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களில் கல் அணை அமைத்து எஞ்சியிருக்கும் கற்களைப் போட்டு முதற்கட்ட ஏற்பாடுகளையேனும் செய்ய முயற்சிக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


வி.சுகிர்தகுமார் 0777113659 



  சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜைகள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


  
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.

 


இஸ்ரேல் மீதான ஈரானின் ராணுவத் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம்!

இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பாதுகாப்பிற்கு பிரிட்டன் துணை நிற்கும் - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிக்கை

 


ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

‘குறிப்பிட்ட இலக்குகளை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஎஸ் செய்திகளின்படி, அமெரிக்கா சில ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ‘இந்த அச்சுறுத்தல்கள் தேவையான இடங்களில் தடுக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன நடந்தது?
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?
ஆளில்லா விமானம் இதுவரை இஸ்ரேலை வந்தடைந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரான் இஸ்ரேலில் இருந்து 1,800 கி,மீ தொலைவில் உள்ளது. அதேநேரம், ஆளில்லா விமானங்களை எங்கு வீழ்த்தியது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல், லெபனான் மற்றும் இராக் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. சிரியா, ஜோர்டான் ஆகியவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கைப்படுத்தி வைத்துள்ளன.

ஏப்ரல் 1-ம் தேதி சிரிய துணைத் தூதரகம் தாக்கப்பட்ட பிறகு, இரான் பழிவாங்கும் விதமாகப் பேசியது. இந்தத் தாக்குதலில் உயர்மட்ட தளபதி உள்பட 7 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என இரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.

இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,ISRAELI PM'S OFFICE
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “இரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது இரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது,” என்றார்.

“இரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது,” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள்,” என்றார்.

மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,X/@POTUS
இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இரான் இஸ்ரேலை தாக்கினால், இரானுக்குள் பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்தனர்.

இரான் தாக்குதலின் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன், இஸ்ரேலை பாதுகாப்பதில் அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நின்று அவர்களைப் பாதுகாக்கும் என்றார்.

“அதிபர் பைடன் தெளிவாக இருக்கிறார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது.” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், இரானின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்காக நிற்பதாக உறுதியளித்துள்ளார்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானின் தூதரகம் மீதான தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.

கவலை தெரிவித்த ஐ.நா.
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று மாலை இரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மீது இரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வனேசா ஃப்ரேசியருக்கு இஸ்ரேல் எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல்கள் "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹூத்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இரான் தனது சர்வதேச கடமைகளை மீறுவதாகவும், "பல ஆண்டுகளாக ஸ்திரமின்மையின் சிற்பியாக" இருப்பதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது.

"தாக்குதல்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மேலும், இது இஸ்ரேலின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானிய ஆயுதப் படைகளின் முதன்மைப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு இரான் எழுதிய கடிதத்தில், "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தற்காப்புக்காகவும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும்" செயல்பட்டதாகக் கூறியுள்ளது.

 


புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து

சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.