Showing posts with label Accident. Show all posts

 


பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.  https://online.ebmd.rgd.gov.lk  என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியும்.  www.rgd.gov.lk என்ற இணையத்தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


Rep/SarjunLafir

கல்முனை அமானா வங்கி தனியார் பஸ் நிலையத்தில் தற்போது இடம்பெற்ற விபத்து.....

 


ஆஜராக முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் அந்த வளாகத்தில் திரண்டிருந்தனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.

பண மோசடி விவகாரம் தொடர்பாக அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட இருந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று கைதானார்.

மலேசியாவின் பூமி புத்திரர்களுக்கான Jana Wibawa scheme என்ற நிதியுதவி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மொஹைதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியை சேர்ந்த இருவர் மீது கடந்த மாதம் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது

 


மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபரை பணிப்பு !


மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் ஜனாதிபதிக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் முன்னுரிமை அளித்து, இந்த விஷயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபரை எழுத்துமூலம் பணித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமருக்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் சீ.ஏ. சுனித் லோச்சணவுக்கும் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாகி பாவிக்க முடியாத நிலைக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. உடனடியாக மாற்று இடத்தில் புதிய ஜனாஸா மையவாடியை அமைக்கவேண்டிய தேவை உள்ளதால் உடனடியாக புதிய காணியொன்றை இதற்காக பெறவேண்டியுள்ளது. இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து புதிய காணியொன்றை வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை அரசாங்க அதிபர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு  மாளிகைக்காடு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் கடந்த மாதம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

மேற்படி அரச முக்கியஸ்தர்களுக்கு முன்வைத்த கோரிக்கையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராம மக்களின் ஜனாஸா மையவாடி கடலரிப்பில் முழுமையாக சேதமாகியுள்ளதுடன், ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்ட போன வரலாறுகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் விதமாகவே ஜனாதிபதி செயலகம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த பணிப்பை விடுத்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயம் துரித கெதியில் முன்னெடுக்கும் என நம்பப்படுகிறது.

 


ராமு தனராஜா

ஹப்புத்தளை லயன் குடியிருப்பில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்!


ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடரத்மலை மேல் பிரிவில், லயன் குடியிருப்பொன்றில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதில் குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.

எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. ஏனைய வீடுகளுக்கும் தீ பரவாமல், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின் கசிவினால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


ராமு தனராஜா

 


பாறுக் ஷிஹான்


ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில்  பெண் ஸ்தலத்தில்  மரணம்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று  ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில்   குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் ஓட்டோவில் பிரயாணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்த  நிலையில்  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசiலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம்  ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த   மீராமுகைதீன்  பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் இறந்த பெண்ணின்  அக்கரைப்பற்று  மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக  காரைதீவு  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

குறித்த விபத்தானது  அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன்  ஆட்டோ ஒன்று  மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார் 0777113659




சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் றொபேட் பேடன் பவளின் 166 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு நிகழ்வுகள் நேற்று (22) இடம்பெற்றன.
இதற்கமைவாக கல்முனை அக்கரைப்பற்று பிரதேச சாரணர் சங்கத்தின்  ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஜ.உதுமாலெவ்பை ஒருங்கிணைப்பில் கல்முனை அக்கரைப்பற்று பிரதேச சாரணர் சங்கத்தின் தலைவரும் சம்மாந்துறை பிரதேச செயலாளருமான அல்ஹாச் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக மல்வத்தை இராணுவ முகாமின்  24ஆம் பிரிவு காலாட்படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரெல் விபுல சந்திரசிறி சிறப்பு அதிதியாக சாரணர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் மாணவர்களின் வான்ட் வாத்திய இசை மற்றும் சாரணர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னராக பாடசாலை மண்டபத்தில் சாரணர்களின் சத்தியபிரமாணம் நிக்ழவு இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் அதிதிகளின் உரை உள்ளிட்ட கௌரவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் சாரணர் சங்கத்தின் அக்கரைப்பற்று திருக்கோவில் சம்மாந்துறை கல்முனை வலயக் கல்வி அலுவலக உறுப்பினர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சாரணர் சாதனை மாணவர்களும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

 


(ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை கல்வி வலயத்தின் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்..ஹைதரலி  குருநாகல் நாரம்மல  சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியான ஹைதர் அலி முன்னதாக மட்டக்களப்பு கல்வி வலயத்திலும் பிரதிக் கல்வி பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி உள்ளார்.

 இவர் நாளை மறுநாள் 24.02.2023 வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

 .


சுகிர்தகுமார் 
 


 விடுதலைக்காய் எழுச்சி கொள்வோம் பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் நிகழ்விற்கு இணையாக அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் இன்று அக்கரைப்பற்று சின்னமுகத்துவார கடற்கரை பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
  அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற நிகழ்வுகளில் அரங்கத்தின் தலைவி உள்ளிட்ட இணைப்பாளர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் அலுவலகத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து பெண்கள் அடக்கு முறைக்கு எதிராக வாசகங்களை தாங்கிய சுலோக அட்டை மற்றும் பதாதைகளை தாங்கியவாறு அங்கிருந்து சைக்கிள் சவாரி மூலமாக சின்னமுகத்துவாரத்தை சென்றடைந்தனர்.
அங்கு மனித இனத்தில் கிட்டத்தட்ட சரிபாதியாக அடையாளங்காணப்படும் பெண்கள் மீதான வன்முறைகளை இல்லாதொழிக்க வேண்டுவதாகவும் இது தொடர்பிலான விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் உரையினையும் நிகழ்த்தினர்.
வன்முறைகளிலிருந்து விடுதலை பெற்ற சமூகங்களுக்காக எழுச்சி கொள்வோம், முதலாளித்துவத்தின் நுகர்வுப்பண்பாட்டிலிருந்து விடுதலை பெறுவோம் என எழுச்சி கொள்வோம், பூமிக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர எழுச்சி கொள்வோம் போன்ற கருத்துக்களையும் பாடல்கள் மூலமாகவும்; பேச்சுக்கள் மூலமாகவும் வெளியிட்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


கல்வியற் கல்லூரிகளில்  கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவ ஆசிரியர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிக்கான மய்யம் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவில் புதன்கிழமை (08) முறைப்பா டொன்றினை செய்துள்ளது.

இம்முறைப்பாட்டினை சிரேஷ்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ, நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில், நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

இது குறித்து நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த பல வருடங்களாக கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் சமய பாடநெறிகளுக்கு கல்வியல் கல்லூரிகளுக்கு சமமான எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தமிழ் மொழி மூலமாக இந்து, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாம் பாட நெறிகளுக்கு கல்வியல் கல்லூரிகளில் 30 மாணவர்கள் உள்ளிருப்பு செய்யப்பட்டனர். 2016,2017 ஆண்டுகளிலும் மூன்று பாடநெறிகளுக்கு சமமானவர்களை உள்வாங்க பட்டிருந்தனர்.


கூறியுள்ள இந்நிலையில் இஸ்லாம் பாடநெறிக்கு  இம்முறை கல்வியல் கல்லூரியில் 10 மாணவர்களை மாத்திரம் அனுமதி வழங்க இருப்பது பாரிய சந்தேகத்தை எழுப்புகின்றது. 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


கிறிஸ்தவ பாடநெறியை பொறுத்தவரை கல்வி அமைச்சரின் அண்மைய வர்த்தமானியில் பல மாகாணங்களில், தேசிய பாடசாலையில் தமிழ்மொழி  மூலமாக கிறிஸ்தவ ஆசிரியருக்கு வெற்றிடம் இருப்பதாக கூறி இருக்கும் நிலையில் மேலும் கிறிஸ்தவ பாடமானது ரோமன் கத்தோலிக்கம், கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவம் என இரண்டாக பிரிந்து காணப்படும் நிலையில் இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் இப்பாட ஆசிரியருக்கான வெற்றிடங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இருப்பதாக கூறி இருக்கும் நிலையில் மேலும் கிறிஸ்தவ பாடமானது ரோமன் கத்தோலிக்கம், கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவம் என இரண்டாக பிரிந்து காணப்படும் நிலையில் இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் இப்பாட ஆசிரியருக்கான வெற்றிடங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.


மேற்படி விடயம் தொடர்பாக உடனடி விசாரணை ஒன்றை நடத்தி கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்து இஸ்லாம் கிறிஸ்தவ பாட நெறிகளுக்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்ப்பு செய்ய ஆலோசனை வழங்குமாறு முறைப்பாட்டில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 



காத்தான்குடி ஆதார வைத்தியசாலயில் கடமையாற்றும் பெண் வைத்தியர் பயணித்த வேன் விபத்து 


வைத்தியரின் மாமா மற்றும் சிறிய மகள் மரணம்


4 பேர் காயம்


இன்று மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ்-சிறிய ரக வேன் மோதியதில் இடம் பெற்ற விபத்தில் சிறும ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் புத்தளம் சிலாபம் பகுதியைச் சேர்ந்த பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்பத்தினர் பயணித்த வேனே விபத்துக்குள்ளாகியுள்ளது.


வேனை செலுத்தி வந்த சாரதியான வைத்தியரின் மாமாவும் வைத்தியரின் மகளும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும்; வைத்தியர் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேற்படி பெண் வைத்தியரான முப்லிகா குழந்தை பிரசவ விடுமுறையை நிறைவு செய்த பின்னர் கடமைக்கு திரும்புவதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வேனில் வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வைத்தியரின் கணவர் விடுமுறையில் வெளிநாட்டிலிருந்து ஊர்வந்திருந்த நிலையில் அவர் நேற்று மீண்டு வெளிநாடு சென்றுள்ளார்.


அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இவர்கள் திரும்பியதாகவும் தெரிய வருகின்றது


.






 உயிரிழந்தவர்களின் விபரம்

01. அப்துல் ரஹீம் (55)

02. ஆயிஷா பாத்திமா (45)

03. மரியம் (13)

04. நபீஹா (08)

05. ரஹீம் (14)

06. நேசராஜ் பிள்ளை (25) - வேன் சாரதி 

07. சண்முகராஜ் (25) - முச்சக்கரவண்டி சாரதி

நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்..


 


நூருல் ஹுதா உமர்


அரச ஊழியர்களுக்கான 150 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நாள் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் அவர்களின் வழிகாட்டலில், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீளின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது உதவி  பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட  முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் , மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம்.பாயிஸ், பிரதம  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன்,  நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஏ.எல்.எம்.மாஹிர், எம்.எச்.எம்.ஹம்சார்
சிரேஸ்ட காணி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ராபி, சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர்  மற்றும் சிங்கள பாட வளவாளராக ஏ.எம்.எம்.முஜீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் பாடநெறி உத்தியோகத்தர் நலன்புரிசங்க செயலாளர் எம்.எஸ்.எம்.றியாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெறுகின்றது.

 பாறுக் ஷிஹான்


மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல்- அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்


மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட    பகுதிகளில் புதன்கிழமை(18)  இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.

கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் காண முடிகின்றது.

மேலும்  நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை  சாய்ந்தமருது மருதமுனை பகுதிகளில் பெற்றோல் இன்மையினால் பொதுமக்கள் திரும்பி செல்வதுடன் டீசல் எரிபொருள் சீராக இப்பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றது.

 



திருக்கோவில், மற்றும் தாண்டியடி பகுதிகளில் பாடசாலை மாணவர் களுக்கு, போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது.


 (க.கிஷாந்தன்)

 

எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது.

 

இதற்கான கட்டுப்பணம் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தலைமையிலான குழுவினரால், நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (12.01.2023) செலுத்தப்பட்டது.

 

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரண மைத்திரி குணரத்ன,

 

" நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் எமது கட்சி வாழைப்பழச்சீப்பு சின்னத்தில் போட்டியிடும். எமது கட்சியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இது மக்களுக்கான கட்சி. அதனால்தான் அனைத்து இன மக்களும் எம்மிடம் இணைந்து போட்டியிடுகின்றனர்.

 

மக்கள் மாற்றத்தைக்கோருகின்றனர். எனவே, ஊழல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை மக்கள் விரட்ட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

 

அதேவேளை, தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்மூலம் தேர்தலை பிற்போடலாமேதவிர, வேறு வழிகளில் அதனை செய்ய முடியாது. " - என்றார்.

 


கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது எதிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


தம்பிலுவிலைச் சேர்ந்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவரான சோபிதாவின் தயார்  திருமதி சிவஞானசுந்தரம் பரம்சோதி (72) இரவு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  காலமானார்


 


எமது ஆழ்ந்த அனுதாபங்கள்


வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இன்று 12.01.2023 காலமானார்.


மிகவும் கடினமான காலங்களில் தனது ஆளுமைத் திறனால் அற்புதமான சேவையை வடக்குக் கிழக்கு கல்விப் பரப்பில் சிறப்பாக முன்னெடுத்த பெருந்தகை. தீர்மானம் எடுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் துணிச்சல் மிக்க  பெருமகனார் மறைந்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.