காத்தான்குடி ஆதார வைத்தியசாலயில் கடமையாற்றும் பெண் வைத்தியர் பயணித்த வேன் விபத்து
வைத்தியரின் மாமா மற்றும் சிறிய மகள் மரணம்
4 பேர் காயம்
இன்று மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ்-சிறிய ரக வேன் மோதியதில் இடம் பெற்ற விபத்தில் சிறும ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் புத்தளம் சிலாபம் பகுதியைச் சேர்ந்த பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்பத்தினர் பயணித்த வேனே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேனை செலுத்தி வந்த சாரதியான வைத்தியரின் மாமாவும் வைத்தியரின் மகளும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும்; வைத்தியர் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி பெண் வைத்தியரான முப்லிகா குழந்தை பிரசவ விடுமுறையை நிறைவு செய்த பின்னர் கடமைக்கு திரும்புவதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வேனில் வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வைத்தியரின் கணவர் விடுமுறையில் வெளிநாட்டிலிருந்து ஊர்வந்திருந்த நிலையில் அவர் நேற்று மீண்டு வெளிநாடு சென்றுள்ளார்.
அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இவர்கள் திரும்பியதாகவும் தெரிய வருகின்றது
.



Post a Comment
Post a Comment