பேடன் பவளின் 166 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு




 


வி.சுகிர்தகுமார் 0777113659




சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் றொபேட் பேடன் பவளின் 166 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு நிகழ்வுகள் நேற்று (22) இடம்பெற்றன.
இதற்கமைவாக கல்முனை அக்கரைப்பற்று பிரதேச சாரணர் சங்கத்தின்  ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஜ.உதுமாலெவ்பை ஒருங்கிணைப்பில் கல்முனை அக்கரைப்பற்று பிரதேச சாரணர் சங்கத்தின் தலைவரும் சம்மாந்துறை பிரதேச செயலாளருமான அல்ஹாச் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக மல்வத்தை இராணுவ முகாமின்  24ஆம் பிரிவு காலாட்படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரெல் விபுல சந்திரசிறி சிறப்பு அதிதியாக சாரணர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் மாணவர்களின் வான்ட் வாத்திய இசை மற்றும் சாரணர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னராக பாடசாலை மண்டபத்தில் சாரணர்களின் சத்தியபிரமாணம் நிக்ழவு இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் அதிதிகளின் உரை உள்ளிட்ட கௌரவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் சாரணர் சங்கத்தின் அக்கரைப்பற்று திருக்கோவில் சம்மாந்துறை கல்முனை வலயக் கல்வி அலுவலக உறுப்பினர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சாரணர் சாதனை மாணவர்களும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.