Showing posts with label corona. Show all posts

 


கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர்.


யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத்தியுள்ளது.


இந்த புதிய டெல்டா பிளஸ் திரிபு ஏற்கெனவே உள்ள திரிபுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என் சொல்வதற்கு ஆதாரம் இதுவரை இல்லை.


தற்போது பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளே, இந்த திரிபுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்யும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



பிரிட்டனில் ஏற்படும் கொரோனா தொற்றில் வழக்கமான டெல்டா திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்றழைக்கப்படும் இந்த திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில் ஆறு சதவீதம் பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீப கால அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின


பிரிட்டனின் டெல்டா திரிபை விட, டெல்டா பிளஸ் திரிபின் பரவும் விகிதம் அதிகமாக இருப்பதாக சில ஆரம்பகட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, டெல்டா திரிபைப் போல, டெல்டா ப்ளஸ் திரிபு கவலைக்குரிய திரிபு வகைகளில் ஒன்றாக கருதப்படவில்லை. இது தான் கொரோனா திரிபுகளின் ஆபத்தை பொறுத்து வழங்கப்படும் படிநிலைகளில் உச்சபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.


உலக அளவில் பல கொரோனா திரிபுகள் உள்ளன. வைரஸ் பிறழ்வு எப்போதுமே வழக்கமாக நடக்கும் ஒன்று தான், எனவே புதிய திரிபைக் காண்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.



AY.4.2 திரிபில் உள்ள சில புதிய பிறழ்வுகள் மனித உடலுக்குள் இருக்கும் செல்களை பாதிக்க வைரஸ் பயன்படுத்தப்படும் ஸ்பைக் புரதங்களை பாதிப்பதாக உள்ளன.


கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே Y145H மற்றும் A222V பிறழ்வுகள் பல்வேறு கொரோனா துணைவரிசைகளில் காணப்பட்டன.


தற்போது இருக்கும் கொரோனா வைரசின் பல்வேறு திரிபுகளுக்கு எதிராக, புதிய கொரோனா தடுப்பூசி மேம்பாடு தொடர்பாக எந்த வித பரிந்துரைகளும் இல்லை.


"எல்லா கொரோனா திரிபுகளுக்கும் ஒரே மாதிரியான பொது சுகாதார அறிவுரைகள்தான் வழங்கப்படுகின்றன. யார் எல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களோ, அவர்கள் எல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு எப்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறதோ, அப்போது முன்வந்து பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளுங்கள்" என பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ஜென்னி ஹாரிஸ் கூறியுள்ளார்.


"எப்போதும் எச்சரிக்கையோடு இருங்கள். மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், மற்றவர்களை உள் அரங்குகளில் சந்திக்கும் போது காற்றோட்டத்துக்காக ஜன்னல் கதவுகளை திறந்துவிடுங்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிசிஆர் சோதனை செய்து கொள்ளுங்கள், நெகட்டிவ் என சோதனை முடிவு கிடைக்கும் வரை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார் ஜென்னி.


 (க.கிஷாந்தன்)

 


18- 20 வயது பிரிவு மாணவர்களுக்கு 'பைசர்' தடுப்பூசி ஏற்றும் பணி நுவரெலியா மாவட்டத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆயிரத்து 676 மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 11 பாடசாலைகளைச் சேர்ந்த மேற்படி மாணவர்களுக்கு
கொட்டகலை மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலைகளில் வைத்து காலை 8 மணி முதல் நண்பகல் 10 மணிவரை தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பாடசாலை மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று முதல் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 18 தொடக்கம் 19 வயது வரைக்குமான பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் பாடசாலை கல்வியை நிறைவு செய்து வெளியேறிய மாணவர்களுக்குமே இவ்வாறு  தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு வருவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேநேரம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம் கல்முனை பிராந்தியத்தில் பல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறுவதுடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் பாடசாலைகள் யாவும் திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகளும் தங்கு தடையின்றி இடம்பெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகளில் வைத்தியர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கடமையாற்றி வரும் நிலையில் பாடசாலை ஆசிரியர்களும்; இணைந்து மாணவர்களை பதிவு செய்தல் மற்றும் ஒழங்குபடுத்தல் விழிப்பூட்டல் நடவடிக்கை என பல்வேறு செயற்பாடுகளில் முற்றும் முழுதாக ஈடுபட்டு வருகின்றனர்.

 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த உயிரிழப்புகள் 17 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,507 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


ஆர்மி தினத்தை முன்னிட்டு 241 வது படையணியினருக்கு அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையினால் ஆர்மி தினத்தை முன்னிட்டு 241 வது படையணியினருக்கு அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையினால் கொரோனா கட்டுப்பாட்டு பொருட்கள் கையளிப்பு !


நூருல் ஹுதா உமர்


மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கடுமையாக உச்சம் தொட்டிருக்கும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.


அதன் ஒரு கட்டமாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் ஆர்மி தினத்தை முன்னிட்டு 241 வது படையணியினருக்கு "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்களும் நீர் சூடாக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது. அது மாத்திரமின்றி தொடர்ந்தும் அம்பாறை, தீகவாவி, போன்ற பிரதேசங்களுக்கும் அரச காரியாலயங்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸார், தனிமைப்படுத்தப்பட்டோர், ஊடகவியலாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்குமாக இதுவரை ஏறத்தாழ 85 ஆயிரம் "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது நாட்டை ஆட்கொண்டிருக்கும் மூன்றாம் அலையில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.


இது மாத்திரமின்றி கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் ஏற்பாட்டில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.


நூருல் ஹுதா உமர்


மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கடுமையாக உச்சம் தொட்டிருக்கும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.


அதன் ஒரு கட்டமாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் ஆர்மி தினத்தை முன்னிட்டு 241 வது படையணியினருக்கு "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்களும் நீர் சூடாக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது. அது மாத்திரமின்றி தொடர்ந்தும் அம்பாறை, தீகவாவி, போன்ற பிரதேசங்களுக்கும் அரச காரியாலயங்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸார், தனிமைப்படுத்தப்பட்டோர், ஊடகவியலாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்குமாக இதுவரை ஏறத்தாழ 85 ஆயிரம் "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது நாட்டை ஆட்கொண்டிருக்கும் மூன்றாம் அலையில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.


இது மாத்திரமின்றி கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் ஏற்பாட்டில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

 


11 ஆண்கள், 12 பெண்கள்

- 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 19 பேர்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 23 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 13,354 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 23 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 13,377 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

 


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 40 மரணங்கள் நேற்று (04) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 13,102 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 மரணங்களுடன், இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 40 மரணங்கள் நேற்று (04) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 13,102 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 13,142 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. பதிவாகியுள்ளது.

 


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 72 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 12,376 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 72 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 12,448 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 72 பேரில், 42 பேர் ஆண்கள்,30 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 60 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



கொரோனாவை சுதேச வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்த   1000 வைத்தியர்கள் தயாராக உள்ளதாக வேலைவாய்ப்பற்ற சித்தவைத்திய சங்கம் தலைவர்  வைத்தியர் ஹபில் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது

ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்திய துறைகளில் பட்டம் பெற்று உள்ளக பயிற்சிகளை நிறைவு செய்த 1000 வைத்தியர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து அரச நியமனம் கிடைக்காமல் வேலைவாய்ப்பற்ற நிலையில் வீட்டில் இருக்கும் துர்ப்பாக்கிய நிலை நம் நாட்டில் மட்டும் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தற்போதைய கொரோனா இடர் காலத்தை கருத்தில் கொண்டு சுகாதார துறையை வலுப்படுத்த வேலையற்ற சுதேச வைத்தியர்களுக்கு அரச நியமனம் வழங்கி கொரோனா சிகிச்சை நிலையங்களில் சேவையாற்ற வழி செய்வதே அரசின் புத்திசாலித்தனமானதும் ஆரோக்கியமானதுமான முடிவாகும் என நினைக்கிறேன்.

மேலும் இது தொடர்பாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் கொளரவ  சிசிர ஜயகொடி அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. மற்றும் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் அலுவலகங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மாறாக அலோபதி துறையில் உள்ளக பயிற்சியை தொடங்காத மாணவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பது மிக்க வேதனை அளிக்கிறது.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இலவச கல்வியை கற்று சுகாதார துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களாகிய எமக்கு உடனடியாக அரச நியமனம் வழங்கி நாட்டு மக்களுக்கு புத்துணர்ச்சியுடன் சேவையாற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


சுகிர்தகுமார் 0777113659 


  உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கிவரும் அரசாங்கத்திற்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் என அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள்; கருத்து தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையினை தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியினையும் பாரட்டினையும்  தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நமது நாடும் அதற்கு முகம் கொடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நிலை காரணமாக இதுவரையில் 1600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் அன்மையில் கூறியிருந்தார். ஆனாலும் அதனையும் தாண்டி அரசாங்கம் மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றது.
பல நாடுகளில் தடுப்பூசியினை பணம் கொடுத்து பெறுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் நமது நாட்டின் அரசாங்கம் முற்றும் முழுதாக இலவசமாக தடுப்பூசியினை வழங்கி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது.
மேலும் வீடுகளில் முடங்கி கிடக்கின்ற முதியவர்களுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் சுகாதாரத்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்போடு நடமாடும் சேவை மூலமும் தடுப்பூசியினை வழங்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் இங்கு வாழும் பெரும்பலான மக்கள் சினோபாம் இரண்டாவது தடுப்பூசியினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மாறாக நலமுடனேயே உள்ளோம்.
 இதன் காரணமாக இன்று ஓரளவேனும் தொற்று கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்தமட்டிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு காரணமாக இருந்து செயற்பட்டுவரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் என பலருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கிவரும் அரசாங்கத்திற்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் என அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள்; கருத்து தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையினை தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியினையும் பாரட்டினையும்  தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் நமது நாடும் அதற்கு முகம் கொடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நிலை காரணமாக இதுவரையில் 1600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் அன்மையில் கூறியிருந்தார். ஆனாலும் அதனையும் தாண்டி அரசாங்கம் மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றது.
பல நாடுகளில் தடுப்பூசியினை பணம் கொடுத்து பெறுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் நமது நாட்டின் அரசாங்கம் முற்றும் முழுதாக இலவசமாக தடுப்பூசியினை வழங்கி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது.
மேலும் வீடுகளில் முடங்கி கிடக்கின்ற முதியவர்களுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் சுகாதாரத்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்போடு நடமாடும் சேவை மூலமும் தடுப்பூசியினை வழங்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் இங்கு வாழும் பெரும்பலான மக்கள் சினோபாம் இரண்டாவது தடுப்பூசியினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மாறாக நலமுடனேயே உள்ளோம்.
 இதன் காரணமாக இன்று ஓரளவேனும் தொற்று கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்தமட்டிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு காரணமாக இருந்து செயற்பட்டுவரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் என பலருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 


வெளியிறங்கிய நபர்கள் மீது சாய்ந்தமருதில் கொரோனா பரிசோதனை : தொடர் விமர்சனங்களை சந்திக்கும் சுகாதாரத்துறை ! 


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் அத்தியவசியத் தேவையின்றி வெளியிறங்கிய நபர்கள் மீது பாதுகாப்பு துறையினரும் சுகாதாரத்துறையினரும் பீ.சி.ஆர். நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அமுலில் இருக்கும் போது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வரும் சந்தர்ப்பத்தில் வீதியில் தக்க காரணங்களின்றி  உலாவித்திரிந்தவர்களின் மீது இந்த பீ.சி.ஆர். நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து கொரோணா நோயினை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை பகிரங்கமாக கேட்டுக்கொண்டது. 


இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.  பீ.சி.ஆர். பரிசோதனைக்கு ஆளான பலரும் அத்தியவசிய தேவைக்கு தாங்கள் வெளியேறிய போது அனுமதி அட்டைகளை காட்டியும் அதனை கவனத்தில் கொள்ளாது பாதுகாப்பு படையினரை முன்னிலைப்படுத்தி தங்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனை செய்ததாகவும், உள்வீதியில் இவ்வகையான பரிசோதனைகளை செய்வதாகவும் குற்றம்சாட்டி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர். குறித்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பணியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த பிந்திய இரவுநேரம் வரை அர்ப்பணிப்புடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.



நூருல் ஹுதா உமர் 


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் சனிக்கிழமை ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 17 பேருக்கு மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அடிப்படையில் மூவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இதன்போது 20 பி.சி.ஆர். மாதிரிகளும் எடுக்கப்பட்டதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர், இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே மக்கள் அத்தியவசிய தேவையை தவிர வீணாக வெளியில் வர வேண்டாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


நூருல் ஹுதா உமர் 


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் சனிக்கிழமை ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 17 பேருக்கு மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அடிப்படையில் மூவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இதன்போது 20 பி.சி.ஆர். மாதிரிகளும் எடுக்கப்பட்டதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர், இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே மக்கள் அத்தியவசிய தேவையை தவிர வீணாக வெளியில் வர வேண்டாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

 


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 157 மரணங்கள் நேற்று (10) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 10,995 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 157 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 11,152 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 157 பேரில், 70 பேர் ஆண்கள், 87 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 130 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


(கிஷாந்தன்)

 

நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் - 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (11.09.2021) ஆரம்பமானது. 

 

சீன தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இன்று முதல் இவர்களுக்கு ஏற்றப்படுகின்றது.

 

பாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் ஏனைய சில நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

அந்தவகையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

 

இதனை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவிலான இளைஞர்களும், யுவதிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

 


நிந்தவூரில் இன்று அஸ்ரா செனகா கொவிட்  தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை :  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர். 


நூருல் ஹுதா உமர் 


இன்று (11) காலை 8:00 மணி தொடக்கம் மாலை 2:00 மணிவரை கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற உள்ளன. இதுவரை தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் பொதுமக்களை அறிவித்தலொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார். 


அந்த அறிவித்தலில் மேலும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் சேவை மூலமும் இந்த தடுப்பூசிகள் வழங்குப்பட உள்ளதாகவும் நடமாடும் தடுப்புமருந்தேற்றல் சேவையும் தொடர்ந்து இடம்பெற இருப்பதனால் இச்சேவையினை பெற இதுவரையிலும் பதிவுசெய்து கொள்ளாதோர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக 0677284670 எனும் ஹொட்லைன் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.


மேலும் இன்று (11) காலை 8:00 மணி தொடக்கம் நண்பகல் 12:00 மணிவரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அஸ்ரா செனகா (AstraZeneca) கொவிட் 19 இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இரண்டாவது அஸ்ரா செனகா (AstraZeneca) தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மேலும் அந்த அறிவித்தலில் தெரிவித்துள்ளார்

 


நாட்டில் நேற்று (09) 131 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (10) தெரிவித்துள்ளார்.


 

நூருல் ஹுதா உமர்

கொரோனா மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 42784 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. 2 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு டெல்டா திரிபின்  தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆகவே தடுப்பூசிகளை நீங்கள் பெற்றுக்கொண்டாலும் இத்தாக்கங்களில் இருந்து பாதுகாக்க சில நாட்கள் செல்லும் என  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அங்கு கருத்து தெரிவிக்கும் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள  4 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில் கொரோனா வைரஸின் பிறழ்வு வகை   டெல்ரா வகை திரிவு பரவலாக அதிகரித்துள்ளமை  தொடர்பில்  ஆய்வு கூட அறிக்கைகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. கொரோனா மூன்றாவது அலையில் மொத்தமாக 42784 நோயாளர்களும் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.  இதனால் ஆகஸ்ட் மாத மூன்றாம் நான்காம் வாரங்களில்  நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டிருந்தது.
எனினும் செப்டம்பர் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து.

அது  எமக்கு ஆறுதலாக இருந்தாலும் இது மேலும் இவ்வாறு குறைவடைய செய்வது பொதுமக்களின் அன்றாட வாழக்கையிலும் இரண்டு தடுப்பூசிகளை பெறுவதிலும் ஏனைய தொற்றா நோய்களான நீரிழிவு நோய் உயர்குருதி அமுக்கம் ஏனைய சுவாச இருதய நோய்கள் இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இந்நோய்கள் இருப்பவர்களும் தடுப்பூசி முற்றாக பெறாதவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுமே அதிகமாக  மரணத்தை தழுவியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் எமக்கு போதுமான வகையில் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் தடுப்பூசியை இதுவரை பெறாதவர்கள் அவர்களது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்று தடுப்பூசிகளை  பெற்றுக்கொள்ள முடியும்.

எமக்கு தேவையான முழு தடுப்பூசிகளையும் அரசாங்கம் வழங்கி கொண்டிருக்கின்றது.மேலும் இப்பிராந்தியத்தில் உள்ள  20 வயது முதல் 30 வயது வரையானவர்களுக்கும் தடுப்பூசி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள சட்டதிட்டங்களை மக்களாகிய நீங்கள் அலட்சியம் செய்யாமல் தங்களது நலனில் ஒவ்வொரும் அக்கறை எடுக்க வேண்டும்.டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம்.ஏனெனில் 2 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆகவே தேவையற்ற ஒன்று கூடல்களை தவிருங்கள்.முகக்கவசங்களை நேர்த்தியாக  அணியுங்கள்.சமூக இடைவெளிகளை பின்பற்றி கொள்ளுங்கள்.மேலும் செப்டம்பர் இறுதி பகுதியில் எமது பகுதியில் இந்நோய் தாக்கம் மேலும் மேலும் குறைவடைந்து செல்லும் என்பதை எதிர்பார்க்கின்றோம் என்றார்.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



கொரோனா மூன்றாவது அலையில் மொத்தமாக 42784 நோயாளர்களும் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம்.ஏனெனில் 2 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.ஆகவே தடுப்பூசிகளை நீங்கள்(மக்கள்) பெற்றுக்கொண்டாலும் இத்தாக்கங்களில் இருந்து பாதுகாக்க சில நாட்கள் செல்லும் என  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.


இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்  இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கிழக்கு மாகாணத்தில்  உள்ள  4 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில் கொரோனா வைரஸின் பிறழ்வு வகை   டெல்ரா வகை திரிவு பரவலாக அதிகரித்துள்ளமை  தொடர்பில்  ஆய்வு கூட அறிக்கைகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. கொரோனா மூன்றாவது அலையில் மொத்தமாக 42784 நோயாளர்களும் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.  இதனால் ஆகஸ்ட் மாத மூன்றாம் நான்காம் வாரங்களில்  நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டிருந்தது.

எனினும் செப்ரம்பர் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து இருந்தாலும் எமக்கு ஆறுதலாக இருந்தாலும் இது மேலும் இவ்வாறு குறைவடைய செய்வது பொதுமக்களின் அன்றாட வாழக்கையிலும் இரண்டு தடுப்பூசிகளை பெறுவதிலும் ஏனைய தொற்றா நோய்களான நீரிழிவு நோய் உயர்குருதி அமுக்கம் ஏனைய சுவாச இருதய நோய்கள் இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

ஏனெனில் இந்நோய்கள் இருப்பவர்களும் தடுப்பூசி முற்றாக பெறாதவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுமே அதிகமாக  மரணத்தை தழுவியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் எமக்கு போதுமான வகையில் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அதனால் தடுப்பூசியை இதுவரை பெறாதவர்கள் அவர்களது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்று தடுப்பூசிகளை  பெற்றுக்கொள்ள முடியும்.எமக்கு தேவையான முழு தடுப்பூசிகளையும் அரசாங்கம் வழங்கி கொண்டிருக்கின்றது.மேலும் இப்பிராந்தியத்தில் உள்ள  20 வயது முதல் 30 வயது வரையானவர்களுக்கும் தடுப்பூசி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள சட்டதிட்டங்களை மக்களாகிய நீங்கள் அலட்சியம் செய்யாமல் தங்களது நலனில் ஒவ்வொரும் அக்கறை எடுக்க வேண்டும்.டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம்.ஏனெனில் 2 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஆகவே தடுப்பூசிகளை நீங்கள்(மக்கள்) பெற்றுக்கொண்டாலும் இத்தாக்கங்களில் இருந்து பாதுகாக்க சில நாட்கள் செல்லும்.எனவே தேவையற்ற ஒன்று கூடல்களை தவிருங்கள்.முகக்கவசங்களை நேர்த்தியாக  அணியுங்கள்.சமூக இடைவெளிகளை பின்பற்றி கொள்ளுங்கள்.மேலும் செப்டெம்பர் இறுதி பகுதியில் எமது பகுதியில் இந்நோய் தாக்கம் மேலும் மேலும் குறைவடைந்து செல்லும் என்பதை எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு யுனிசெப் நிறுவனத்தினால் முன்களப் பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதில் முகக்கவசம், முகத்திரை, பி.பி.ஈ. பாதுகாப்பு அங்கிகள், தொற்றுநீக்கி (சனிடைசர்), உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கொண்ட பொதிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன.இதற்கு யுனிசேப் நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சு சார்பாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

 


(நூருல் ஹுதா உமர், பாறூக் சிஹான், எம்.என்.எம். அப்ராஸ்)


கொரோனா ஆரம்பித்த சீனா, இலங்கையில் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட பெலியகொட கிழக்கில் அக்கரைப்பற்று என கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக மீன்சந்தைகளிலையே அடையாளம் காணப்பட்டனர். அந்த வரிசையில் மாளிகைக்காடு பிரதேச மீன்சந்தையும் இணைந்து கொள்ள கூடாது என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். மாதக்கணக்கில் பாவித்த முகக்கவசங்களுடன் சிலரும், முகக்கவசங்களை ஒழுங்கான முறையில் அணியாமல் சிலரும் சந்தைகளில் உலாவித்திரிவது பாரிய ஆபத்தை பொதுமக்களுக்கு உண்டாக்கும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் கவலை தெரிவித்தார்.

இன்று பகல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 6800 பேரளவில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 157 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 50க்கும் குறைவானவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒரு இறப்பு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது இதன்மூலம் பிராந்தியத்தில் பாதுகாப்பான தெளிந்த நிலை உள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலை பொதுமுடக்கம் அமுலில் உள்ளதனால் கிடைத்த பெறுபேறாகவே நோக்க முடிகிறது. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினால் அதனால் உண்டாகும் பாதிப்பின் எதிரொலியை காணலாம்.

கல்முனை பிராந்தியத்தில் 500 கொரோனா தொற்றாளர்கள் அளவில் இப்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 100 பேர் வைத்தியசாலையிலும், இன்னும் 100 பேர் இடைத்தங்கல் நிலையங்களிலும் மேலும் 300 பேரளவில் வீடுகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்ற தகுதியானோரில் 95 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏனையோருக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் நடமாடும் முறையில் இடம்பெற்று வருகிறது. இரண்டாம் தடுப்பூசியை இதுவரை 75 சதவீதமானோர் பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏனையோருக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை சரியான பொறிமுறையொன்றை நிறுவி மீளத்திறக்க அரச உயர்மட்டத்தில் பல்வேறு கலந்தாலோசனைகள் இடம்பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதாரம், கல்வி, வர்த்தகம், தொழிற்சாலைகள் என்பன விரைவாக சாதாரண நிலைக்கு திரும்ப தங்களின் முழு அர்ப்பணிப்பை சுகாதாரத்துறை வழங்கிவருகிறது. ஏனைய துறையினரும் பொதுமக்களும் தமது முழு ஒத்துழைப்பை வழங்கினால் நாம் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.