Showing posts with label corona. Show all posts


(க.கிஷாந்தன்)

 

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

 

இதன் காரணமாக தொற்றாளர்கள் கல்வி கற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தொற்றுக்குரிய மாணவர்கள் கல்விக் கற்ற வகுப்புகளுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். இன்று பாடசாலைக்கு 150 மாணவர்கள் வரை சமூகமளித்திருந்தாக அவர் கூறினார்.

 

இவர்களில் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

 

அதேபோல் இன்று 63 ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

 

தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பை பேணியவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 500 மாணவர்கள் வரையில் வீடுகளில் இருக்க பணிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.


 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



8 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் இனங்காணப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜனவரி 22 திகதி மறுஅறிவித்தல் மூடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.


சுமார் 31 உத்தியோகத்தர்களிடம்  இன்று(13) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அனர்த்தம் இலங்கையில் பரவல் அடைந்த பிற்பாடு இக்காணி பதிவகத்தில் 3 ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 


பாரிஸ்:


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள பல்வேறு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தடுப்பூசி செலுத்தாமல் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைவருமான ஜோஸ் எவ்ரார்டு (76),  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார். இவர் வடக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள பாஸ் டி கெலைஸ் பகுதியைச் சேர்ந்தவர். 

இவரது மரணம் தடுப்பூசியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது என்ற கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.15 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான அணித்தலைவர் தசுன் சானக்கவுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.


 


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.


கங்குலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

சவுரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கங்குலி குடும்பத்தினர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 (க.கிஷாந்தன்)

 

'ஒமிக்ரோன்' வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானத்தால் தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது." - என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார்.

 

நுவரெலியாவில் 19.12.2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 
" ஒமிக்ரோன் பிறழ்வே உலகுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் நாளாந்தம் 70 பேர்வரை ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கைக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதுவரை நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  


இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமிக்ரோன் உறுதியாகியுள்ளது. அவர் டிசம்பர் 9 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். 11 ஆம் திகதிவரை இருந்துள்ளார். டிசம்பர் 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கொழும்பில் கசினோ விளையாடியுள்ளார்.  


அந்த கசினோ நிலையத்துக்கு வந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு செயற்பட்டால் எப்படி ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுக்க முடியும்?

அவர் வந்த விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலையத்துக்குள் தீர்வையற்றக் கடைகளில் இருந்தவர்கள் என பலரும் அவரால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இவை தொடர்பில் உரிய வகையில் தேடுதல் நடத்தாவிட்டால் எப்படி நிலைமையைக் கட்டுப்படுத்துவது? இது சுகாதார அமைச்சுக்கு விளங்காதது ஏன்?  


இலங்கையில்  விமான நிலையம் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நைஜிரியாவுக்கு சென்றுவந்த நிலையில் ஒமிக்ரோன் தொற்றிய தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒரு தடுப்பூசிகூட பெறவில்லை. அவ்வாறு பெறாதவர் எப்படி வெளிநாடு சென்றிருக்க முடியும்? சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதில்ல.


வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலாப்பயணிகள், அரசியல் பலம்மிக்க சுற்றுலா ஏஜன்களால் ,தமக்கு தேவையான ஹேட்டல்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றது. இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.

எமது நாடு ஒரு தீவு. இங்கு வைரஸ் பரவுவதை தடுக்கலாம். 2ஆவது அலையைக்கூட தவறான அரசியல் தீர்மானத்தால்தான் ஏற்பட்டது.  இன்று பி.சி.ஆர் பரிசோதனை உரிய வகையில் மேற்கொள்ளப்படுவதில்லை. உண்மையான தரவுகளும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எவ்வித திட்டமிடல்களும் இன்றி, போலியான தகவல்களை மையப்படுத்தியே தற்போத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன."  -என்றார். 

 




இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 23 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 14,461 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 23 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 14,484 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த 23 பேரில், 15 பேர் ஆண்கள், 08 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 20 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


கொரோனா தொற்றானது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளன.இந்த வரிசையில் தற்போது பெல்ஜியம் நாட்டில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 


உருமாற்றமடைந்த  ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.


இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 4 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், ஒமைக்ரான் வைரஸால் ஆபத்திலுள்ள நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.


அதன்படி, ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்தடைந்த 15 பேர், நாட்டின் தலைநகரில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது.


இவர்களுடன் அறிகுறிகள் உள்ள மற்றவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் தொற்று சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


மேலும், புதிய விதிமுறையின்படி, ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனைகள் கட்டாயம் எடுக்கப்படுகிறது. அதன் முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.


மேலும், பிற நாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் தோராயமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.


இருப்பினும், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் சுமார் 375 பேர் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


வி.சுகிர்தகுமார் 0777113659 



இரு தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படும் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் இரு தடுப்பூசியினையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு மாத்திரமே குறித்த மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் கூறினார்.
அதாவது இரு தடுப்பூசியினை ஏற்றி மூன்று மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு மாத்திரம் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கோளாவில் வைத்திய சிகிச்சை நிலையத்திலும் நாளை (29)காலை 8 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆகவே 60 வயதிற்குமேற்பட்ட இரு தடுப்பூசியினை ஏற்றி மூன்று மாதத்தினை பூர்த்தி செய்தவர்கள் மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து விடுபடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கொரோனா தொற்றுநோய்க்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர் என   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன்  தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(22) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கடந்த 3 தினங்களாக கல்முனை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டு நிலைமை தளர்த்தப்பட்ட நிலையிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் கொவிட் -9 தொற்று அதிகரித்த நிலைமையை காட்டியுள்ளது.10 தொடக்கம் 20 வீதம் வரையான கொவிட் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது.

இதனடிப்படையில் எமது கல்முனை பிராந்தியத்தில் 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.தொற்றுக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.


 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அன்டீஜன்  கொரோனா பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன்  தெரிவித்துள்ளார்.


கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(22) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கடந்த 3 தினங்களாக கல்முனை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.இலங்கையில் தற்போது கட்டுப்பாட்டு நிலைமை தளர்த்தப்பட்ட நிலையிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் கொவிட் -9 தொற்று அதிகரித்த நிலைமையை காட்டியுள்ளது.10 தொடக்கம் 20 வீதம் வரையான கொவிட் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது.

இதனடிப்படையில் எமது கல்முனை பிராந்தியத்தில் 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.தொற்றுக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர்.அத்துடன் இன்று(22) மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன்  கொரோனா பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் மொனராகலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.மேலும் பல இடங்களிலும் தாற்று அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.கல்முனை பிராந்தியத்திலும் தடிமல் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.ஆகவே எமது பரிசோதனை நடவடிக்கையிலும் கட்டுப்பாட்டு செயற்பாட்டிலும் சநற்று இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

பொதுமக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்தவர்களாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதும் சுகாதார பழக்க வழக்கங்களை மிக இறுக்கமாக கடைப்பிடியுங்கள்.பல இடங்களில் சுகாதார நடைமுறைகளை மீறி பொதுமக்கள் ஒன்றுகூடுவது தொடர்பாக முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.எனவே இவ்வாறான செயற்பாடுகள் எமது சமூகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் .அநேகமாக தொற்றுக்குள்ளானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களாவர்.எவ்வாறாயினும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் ஊடாகவே இத்தொற்றுக்களில் இருந்து நாம் பாதுகாப்பு பெற முடியும் என்றார்.

 


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 22 மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 14,086 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 22 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 14,108 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.


இவ்வாறு மரணமடைந்த 22 பேரில், 13 பேர் ஆண்கள், 09 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 16 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


கொரோனா பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் பிபிசியிடம் கூறினார்.

முகக்கவசம் அணிவது உடனடியாக வைரஸ் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று கூறினார் க்ளூக்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் பல நாடுகளிலும் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இப்படி ஒரு எச்சரிக்கை சமிக்ஞை வந்துள்ளது.

குளிர் காலம், போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது, ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவின் டெல்டா திரிபு பரவுவது என பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் பரவலுக்குப் பின் இருப்பதாக டாக்டர் க்ளூக் கூறினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பது, அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது, புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை செயல்படுத்துவது போன்றவை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    "கொரோனா வைரஸ் மீண்டும் ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிக உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது" என பிபிசியிடம் கூறினார். "வைரஸ் பரவலை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என நமக்குத் தெரியும் எனவும் கூறினார்.

    கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சொல்வதை கடைசி வாய்ப்பாகக் கருத வேண்டும் என கூறினார் க்ளூக். ஆனால் இப்போது அது தொடர்பாக சட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் விவாதங்கள் நடத்தப்படுவது சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

    "அதற்கு முன் கொரோனா பாஸ் போன்ற வழிகளும் உள்ளன" என்றார். "இது சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு அல்ல, மாறாக தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான ஒரு சாதனம்" என்றார் அவர்.

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒரு சட்ட ரீதியிலான தேவை என ஐரோப்பிய பிராந்தியத்தில் முதல் நாடாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது ஆஸ்த்திரியா. இந்த புதிய அறிவிப்பு வரும் 2022 பிப்ரவரி முதல் அமலுக்கு வரும், ஆனால் இதை எப்படி செயல்படுத்துவது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் கோப்புப் படம்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,

    கொரோனா வைரஸ் கோப்புப் படம்

    இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் புதிய உச்சத்தை தொட்டிருப்பதையும், குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருப்பதையும் சமாளிக்க ஆஸ்த்திரியாவில் புதிய தேசிய அளவிலான ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.

    ஒரு சுதந்திரமான சமூகத்தில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் மிகவும் கடினமானது, ஆனால் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா சுழலிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி என்றார் ஆஸ்த்திரிய நாட்டின் ஆட்சித் தலைவர் அலெக்ஸாண்டர் ஸ்கலென்பெர்க்.

    "இது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பிரச்சனை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இடம் கிடைக்காது. எனவே அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்" என அவர் பிபிசியிடம் கூறினார்.

    இந்த அறிவிப்பை எதிர்த்து, தலைநகர் வியன்னாவில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் போராட்டக்காரர்கள் 'தடுப்பூசி வேண்டாம்' "இதுவரை நடந்தது எல்லாம் போதும்' போன்ற பதாகைகளை ஏந்தினர்.

    பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    கொரோனா பரவல் வரைபடம்
    படக்குறிப்பு,

    கொரோனா பரவல் வரைபடம்

    செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    நெதர்லாந்தில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து, ரோட்டர்டாமில் கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அரசின் கட்டுப்பாடுகள் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    ஜெர்மனியில் மீண்டும் தேசிய அளவில் ஓர் ஊரடங்கு அறிவிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறமுடியாது என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.

    வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பிரிட்டனில் 44,242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தில் மீண்டும் ஒரு புதிய ஊரடங்கை கொண்டு வரும் திட்டம் இல்லை என தொடர்ந்து கூறி வந்தது அரசு. ஆனால் தேசிய பொது சுகாதார சேவையைப் பாதுகாக்க, பிளான் பி என்கிற பெயரில் கூடுதலாக சில கொரோனா விதிமுறைகளைக் கொண்டு வரலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

    சில உள்ளரங்கு இடங்களுக்கு கொரோனா பாஸ்போர்ட்டை கட்டாயமாக்குவது, உள்ளரங்குகளில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்த படியே வேலை செய்ய ஊக்குவிப்பது போன்றவை இந்த பிளான் பி திட்டத்தில் அடங்கும்.

     


    (சர்ஜுன் லாபீர்)


    கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலையின் அனுசரனையுடன் பாடசாலை மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்குமானகொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று இன்று(3) கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  தரம் 01 தொடக்கம் 05ம் தர மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதிய்யா தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

    இந் நிகழ்வுக்கு கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ ஆர்.எப் ரிப்சியா,சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.என் சூஸான் ஆகியோருடன் வைத்தியசாலையின் பயிலுனர் வைத்தியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிறப்பாக நடத்தினர்.

     


    வாஷிங்டன் :


    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 50 லட்சத்து 17 ஆயிரத்து 413-ஐ எட்டியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.75 கோடியை கடந்திருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

     


    (க.கிஷாந்தன்)

    தலவாக்கலை பகுதிகளிலுள்ள 16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் தலையீட்டுக்கும் அது வழிவகுத்தது. இறுதியில் ஒரு மணிநேர ஸ்தம்பிதத்தின் பின்னரே தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமானது.

    தலவாக்கலை தமிழ்த் தேசியக் கல்லூரி,  தலவாக்கலை சுமன தேசியக் கல்லூரி,  பாரதி தமிழ் மகா வித்தியாலயம், வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம், வட்டகொடை சிங்கள மகா வித்தியாலயம்,  சென்கிளயார் தமிழ் மகா வித்தியாலயம், கிரேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த  16-18 வயது பிரிவு மாணவர்களுக்கு இன்று சுமன தேசிய கல்லூரியில் 'பைசர்' தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    பாடசாலையை விட்டு இடைவிலகிய, சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியவர்கள் உட்பட சுமார் ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    தடுப்பூசியை பெறுவதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் சகிதம் வந்திருந்தனர்.  சீருடை மற்றும் வர்ண ஆடைகளில் மாணவர்கள் வந்திருந்தனர்.

    இதன்போது சீருடை அணிந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வர்ண ஆடைகளில் வந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

    இது தொடர்பில் தலவாக்கலை, லிந்துலை நகர சபை தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவரும், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினர். எனினும், தடுப்பூசி ஏற்றப்படவில்லை.

    இறுதியில் இ.தொ.காவின் மேல் மட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண சுகாதார பணிப்பாளருடன் தெலைபேசி மூலம் கலந்துரையாடி, அனுமதி பெற்றுக்கொடுத்தார். 

    இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

    Powered by Blogger.