Showing posts with label Janaza. Show all posts

 


மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷனம் PMMA காதர் மாமா காலமானார். இவரது ஜனாசா தற்போது மருதமுனை அக்பர் கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.



 #NihaanMohammed.

தோப்பூர் பொது நூலகத்தின் நூலக உதவியாளர் #அபூபக்கர்_முஹ்ஸீன் (#மௌலவி) நேற்றிரவு வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்......


அன்னாரை சந்திக்கும் போதெல்லாம் தோப்பூர் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றியும், நூலகத்தின் வளர்ச்சி

தொடர்பான தூரநோக்கு சிந்தனையுடனே இன்முகத்துடன் பல ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். எந்த பொறுப்புக்களை கொடுத்தாலும் திறம்பட செய்து அமானிதமான முறையில் இறையச்சத்துடன் செயலாற்றக்கூடிய ஒருவர் தன்னால் முடிந்த பணிகளை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற உணர்வாளர். அன்னாரின் இழப்பை ஏற்க உள்ளம் மறுக்கிறது. 

பல வருடங்கள் சமூகப்பணியில் இவரோடு இணைந்து பயணித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்..! 

ஒரு நேர்மையான மனிதரை இறைவன் அழைத்துக் கொண்டான். 


அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஷ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக...ஆமீன்...



அக்கரைப்பற்று, கொழும்பு மருதானைப் பள்ளிவாயல்களின் முன்னாள் பேஸ் இமாம் குத்துாஸ் மௌலவி அவர“கள் வயது (83) இன்று காரமானார்.



இவர்

ஆயிஷாவின்

கணவரும்


Ramzy Kuddoos 

Rumaizi Kuddoos 

Abdul Kuddoos Ahmed Mazahir 

Saleeth Kuddoos 

Mirzina 

Fasli 

ஆகியோரின் தந்தையும்


Mohamed Naleer 

Pallithamby Nawfar 

ஆகியோரின்

மாமனாரும்


Nashhath Ahamed 

Nafhath Ahamed 

ஆகியோரின்

உம்மப்பாவும்

ஆவார்...


இன்று பட்டினப்பள்ளியில்

ஜூம்மா தொழுகையை தொடர்ந்து ஜனாஸா

தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கத்திற்காக

தைக்காநகர் மையவாடிக்கு கொண்டு செல்லப்படும்

ஜனாஸா அறிவித்தல்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மைதானப் பொறுப்பு அதிகாரி சல்மான் காலமானார்..


சல்மான் நல்ல ஒரு மனிதராக வாழும் காலத்தில் எல்லோரிடமும் நகைச்சுவை உணர்வுடன் பழகிய ஒருவர்…


நல்ல ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராகவும் வர்ணனையாளராகவும் பிரதேசம் எங்கும்   

தடம் பதித்த ஒருவர்…


அட்டாளைச்சேனைச் பிரதேசத்தில் விளையாட்டுத்துறைக்கு அவர் அர்ப்பணிப்பு மிகையாக இருந்தது..


அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்..

 




அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி அதாவது எச் எம் பி பேங்க் பின்வீடு Maswooth Hassan Ahamed Nabreez அவர்களின் தந்தை ஹஸன் (அலாவுதீன்) என்பவர் இன்று காலமானார் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இவர் பட்டினப்பள்ளி நிர்வாக உத்தியோகத்தர் கடமை புரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது

 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மரணமடைந்த உடலொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 2024.11.23 அன்று 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா எனும் சாய்ந்தமருது 16 ஐ சேர்ந்த ஒருவர் சண்டை ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும், சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவருக்கு அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து வைத்தியசாலை சிகிச்சையளித்து வந்ததாகவும் இன்று (26) அதிகாலை 04.30 மணி அளவில் அவருக்கு உடலில் நோவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாகவும், மரணத்திற்கான காரணம் என்ன என்பதை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே அறிய முடியும் என்றும் மரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அறிவித்துள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இன்று காலை காலமான 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் குடும்பத்தினர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் வைத்தியசாலை தரப்பினர் வெளியிடும் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகநபரின் தரப்பிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு பக்கசார்பாக நடப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆதம்பாவாவிடமிருந்து வாய்மூல அறிக்கையை பெறுவதிலும் அவர்கள் கால இழுத்தடிப்பு செய்ததாகவும் இந்த மரண விசாரணை நியாயமாக நடைபெற்று குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகங்களே இந்த விடயத்தை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.எம்.எஸ். முபாரக் (PC88489) துரிதமாக செயற்பட்டு குறித்த கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா அல்லது நோயினால் ஏற்பட்ட மரணமா என்பதை கண்டறிய முன்னெடுத்த நடவடிக்கையின் பயனாக கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.ஆர்.எம். கலீல் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து உடலை பார்வையிட்டதுடன் உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எஸ். மோகனவர்ண தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 




அக்கரைப்பற்று முதலியார் வீதியை சேர்ந்தவரும்  வெல்லம்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

#அப்துல் #கபூர் 

இன்று மாலை(27/10/2023)

களுபோபிலை வைத்தியசாலையில்

காலமானார் 

இன்னாலில்லாஹ்


இவர்

சுமையாவின் கணவரும்

சஸ்னா

நஸ்ஸஹத்தாரா

அம்மார்

ஆகியோரின் தந்தையும்


மர்ஹூம்

முகமட் இப்றாலெப்பை 

ஹாஜியாரின் மகனும்


ஹாசிம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

அன்சார் (கணக்காளர்)

ஆகியோரின்

சகோதரரும்


மர்ஹூம் 

மொஹிடீன் 

(#சூனா #மாஸ்டர்)

சாலீம் BA 

ஹனிபா மதனி

ஆகியோரின் 

மைத்துனரும்


றிசாம் (farzan construction)

றியாட் Mohideen Riyadh 

ரியாஸ் 

Reenazz Salimu 

ஆகியோரின் மாமாவும் ஆவார்


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்


தகவல்

அன்சார்


பொத்துவிலை பிறப்பிடமாகவும் சின்ன உல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியரும் பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவருமாகிய அபூபக்கர் ஆதலெப்பை மௌலவி (ஷர்கி) அவர்கள் இன்று காலமானார். 


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் . 


அன்னாரின் ஜனாஷா தொழுகை பொத்துவில் மர்கஷில் நாளை காலை 6.30am மணியளவில் இடம்பெறுவதோடு ஜனாஷா நல்லடக்கம் பொத்துவில் ஜலால்டீன் சதுக்கத்தில் அமைந்திருக்கும்


பொது மையவாடியின் இடம்பெரும் என்பதை உற்றார் உறவினருக்கு அறியத்தருகின்றோம்.


தகவல் 

குடும்பத்தார்கள்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


தனக்காக வாழாது தன் இனத்தின் விடிவுகாய் இதுவரையும் செயல் பட்டு ஈழத்தின் ஏக்கத்தோடு இன்று உங்கள் மூச்சி ஓய்ந்து விட்டது ஐயா. ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவாவாறு இலங்கை தமிழரசு கட்சியின் காரைதீவு கிளை தலைவரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
              மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசா  நேற்று உடல் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அவரது மறைவு தொடர்பாக மேலும் ஜெயசிறில் தெரிவிக்கையில்..
எமது அம்பாறை மாவட்டத்தின் பல செயற்பாடுகளையும்,செயல் திட்டங்களையும் முன்னெடுத்த அக்கறை மிகுந்த ஒருவர்.  உரத்த குரலில்  எதிரியை  பதற வைத்த குரல் ஓய்ந்தது. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எதிர்காலத்தில் பல இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் வீர மண்ணின் விடுதலைக்காய் இறுதி வரை செயல்பட்டவர். தமிழ் தேசியத்தின் பாசறையில் வெற்றி பெற உழைத்தவர். தனக்காக வாழாது தன் இனத்தின் விடிவுகாய் இதுவரையும் செயல் பட்டு ஈழத்தின் ஏக்கத்தோடு இன்று உங்கள் மூச்சி ஓய்ந்து விட்டது ஐயா. தமிழர் தாயகம் தமிழர்களுடைய கையை மீறி போகக்கூடாது என்பதற்காக பல அழைப்புக்களை எடுத்து பேசி ஒவ்வொரு விடயமாக ஆலோசனை வழங்கிய ஒருவர் . அவரது கருத்துக்கள் எப்போதுமே பொன்னானதாகவே இருக்கும். ஆயுதமுனைக்கும் அடக்குமுறைக்கும் அடிபணியாது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு இளைஞனை போன்று செயல்படும் ஒரு சிறந்த வீரர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.


மருதமுனையைச் சேர்ந்த

(A.R.Mohamed.Basheer-90வயது)

சற்றுமுன்னர் வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்)   

ஜனாஸா இன்று மாலை


05.00மணிக்கு மருதமுனை ஹிதாயா ஜும்ஆப்பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, மருதமுனை மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மண்ணறை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தியுங்கள்.


சம்மாந்துறை முன்னாள் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ALM தாஸீம்(SLAS) அவர்கள் வபாத்தானார்கள்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 05.00 மணிக்கு மருதமுனையில் நடைபெறும்.

 


அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் ஜீனியர் கல்லூரி வீதியினைச்_சேர்ந்தவரும்,. தற்போது கத்தாரில் வசித்துவந்த வருமான

சகோதரர் றமீஸ் https://www.facebook.com/faees.ramees?mibextid=LQQJ4d அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த சகோதரர் றமீஸ் சவுதி அரேபியா தம்மாம்யில் வபாத்தானார்.  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன் 


அவரது ஜனாஸா  நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் .

 


நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தரும், கவிஞரும், எழுத்தாளருமான ஏ. எல். எம். மக்கீன்(மக்கீன் ஹாஜியார்) சற்றுமுன்னர்  காலமானார்.


இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.


அன்னாரின் மறுமையின் சிறப்புகளுக்காக பிரார்த்திப்போம்.


செய்திப் பரிமாற்ற உதவி : அல்ஹாஜ் ஏ. ஷபாஅத் அஹமட்




குருநாகல் தல்கஸ்பிடிய பிரதேசத்தை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனும் United 17 இளைஞர் சம்மேளனத்தின்  செயலாளருமான சகோதர நண்பன் Zamry Ahamed  அவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வபாத்தாகிவிட்டார்கள்.


إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْن 🤲🤲


اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ


மிகவும் சிறிய வயதில் அல்லாஹ் உன்னை அழைத்துக் கொண்டான்,

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்..


உன் தாழ்மையான பேச்சும், இனிய புன்னகை முகமும் மனதில் மறவா நினைவுகள்.

உமக்காக நாம் துஆ செய்கிறோம்.


யா அல்லாஹ் நாம் அனைவரும் சாட்சி சொல்கிறோம், ஒரு நல்ல ஆத்மாவை உன்னிடம் அனுப்பி வைக்கிறோம்

எமது சகோதரனுக்கு மேலான ஜென்னதுல் பிர்தவ்சை நிரந்தர தங்குமிடமாக ஆக்குவயாக.


ஆமீன் 🤲 


சகோதரரே இன்ஷா அல்லாஹ்  சுவனத்து பூஞ்சோலைகளில் மீண்டும் சந்திப்போம்.

 


ஜனாஸா_அறிவித்தல் 


அக்கரைப்பற்று - 04 பெரிய பள்ளியடியை சேர்ந்த மர்ஹும் MTM. ஹனிபா ஆசிரியரின் மனைவி ஆதம்லெப்பை சித்தி பாத்தும்மா இன்று காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னாஃ இலைஹி ராஜிஊன்.


அன்னார்

Dr சனூபர் 

Dr சனூஷ் 

Dr உறுஜா 

Dr சபீல் 

சப்ரி bsc ஆகியோரின் தாயாரும் 


Dr நிஹால் காரியப்பரின் மாமியாரும்


ஜமால்டீன் ஆசிரியர் அபுல் ஹஸன் ஆசிரியர் மர்ஹும் மீரா சாஹிப் ஆசிரியர் றஷீதா ஆசிரியை மஃபிறா ஆசிரியை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.


இவரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகையுடன் பெரிய பள்ளி வாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல் மகன் Dr சனூபர்

 


*ஜனாஸா அறிவித்தல்...*


        இலங்கை நாட்டின் பிரபல தஃவா பேச்சாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரான் பின்னூரி ஹஸ்ரத் அவர்கள் காலமாகி விட்டார்கள் , அன்னாரின் ஜனாஸா மல்வானையில் வைக்கப்பட்டுள்ளது , முடியுமான அனைவரும் ஜனாஸாவில் கலந்து கொள்வோம்.


إنا لله وإنا إليه راجعون 

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار 


2023.08.06 /1445.01.18



முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான #பாயிஸ் அவர்கள்  வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....


தற்போது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்...


யா அல்லாஹ்!

அன்னாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்!

 


சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் நம்பிக்கையாளர் சபை தலைவரும் ஓய்வு பெற்ற கல்முனை சாஹிராக் கல்லுாாியின் ஆசிரியருமான, சட்டத்தரனி MCA.Azeez சற்று முன்னர்  இறையடி எய்தினார்.  Former Wakf  tribunal Member, and former commissioner of Legal aid Commission of Sri Lanka 

ஜனாஸா தெஹிவளையில் இல. 92,/16, வைத்திய ரோட், அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.ஜனாஸா நாளை வியாழக்கிழமை 03.08.2023 லுஹர் தொழுகையின் பின் களுபோவிலை  உள்ள ஜும்மா பள்ளிவாசலில  நல் அடக்கம் செய்யப்படும்

(1) டொக்டர். றியாஸ் -லங்கா கொஸ்பிட்டல், (2)றிசாம் துபாய்,(3)றிசான் -சமபத் வங்கி-4 கன்சுல் றிசானா, கன்சுல் றிபாய ஆகியோரின் அன்புத் தந்தையும், 

டொக்டர் இஸாக் (பொலிஸ் வைத்தியசாலை)  பொறியியலாளர் பிக்னாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்


இலங்கையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மூத்த ஒலிபரப்பாளரரும், வழக்கறிஞருமான விமல்  சொக்கநாதன் விபத்தொன்றில் அகால மரமடைந்துள்ளார்.



 'இலண்டனிலிருந்து விமல்' என்னும் நுால் கடந்த  மே மாதம்  இலங்கையில் வைத்து அவரால்  வெளியிட்டு வைக்கப்பட்டது. அதவே விமல் சொக்கநாதன் இலங்கையில் கலந்து கொண்ட இறுதி நிகழ்வாகும். இசையும் கதையும், செய்தி வாசிப்பு என்று இலங்கை வானொலியில் அன்று தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்த விமல் சொக்நாதன்  இலங்கை வானாலியில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர். தொழிச்சார் சட்டத்தரணியான இவர் .இலண்டன் சென்று, உலகப் புகழ்பெற்ற பிபிசி தமிழோசையில், செய்திவாசிப்பாளராகவும் கோலோச்சினார். அன்னார் இறக்கும் போது அவருக்கு வயது 75.


ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும்  பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்த-லண்டனில் இருந்து முழங்கி வந்த தமிழோசையில் செய்தி வாசித்ததால் தரணியெங்கும் புகழ் அடைந்த நண்பர் விமல் சொக்கநாதன் மரணம் என்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொல்லொனாத் துயரம்” என இலங்கை ஒலிபரப்பு துறையின் முதுபெரும் ஒலிபரப்பாளர் வி.என்.மதியழகன் தனது முகநூலில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


விமல் சொக்கநாதன் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


விமலின் பிரிவால் துயருறும் உலகளாவிய வானொலி நேயர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் www.ceylon24.com குழுமம் தமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.