மூத்த ஒலிபரப்பாளரரும், வழக்கறிஞருமான விமல் சொக்கநாதன் அகால மரணம்





இலங்கையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மூத்த ஒலிபரப்பாளரரும், வழக்கறிஞருமான விமல்  சொக்கநாதன் விபத்தொன்றில் அகால மரமடைந்துள்ளார்.



 'இலண்டனிலிருந்து விமல்' என்னும் நுால் கடந்த  மே மாதம்  இலங்கையில் வைத்து அவரால்  வெளியிட்டு வைக்கப்பட்டது. அதவே விமல் சொக்கநாதன் இலங்கையில் கலந்து கொண்ட இறுதி நிகழ்வாகும். இசையும் கதையும், செய்தி வாசிப்பு என்று இலங்கை வானொலியில் அன்று தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்த விமல் சொக்நாதன்  இலங்கை வானாலியில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர். தொழிச்சார் சட்டத்தரணியான இவர் .இலண்டன் சென்று, உலகப் புகழ்பெற்ற பிபிசி தமிழோசையில், செய்திவாசிப்பாளராகவும் கோலோச்சினார். அன்னார் இறக்கும் போது அவருக்கு வயது 75.


ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும்  பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்த-லண்டனில் இருந்து முழங்கி வந்த தமிழோசையில் செய்தி வாசித்ததால் தரணியெங்கும் புகழ் அடைந்த நண்பர் விமல் சொக்கநாதன் மரணம் என்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொல்லொனாத் துயரம்” என இலங்கை ஒலிபரப்பு துறையின் முதுபெரும் ஒலிபரப்பாளர் வி.என்.மதியழகன் தனது முகநூலில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


விமல் சொக்கநாதன் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


விமலின் பிரிவால் துயருறும் உலகளாவிய வானொலி நேயர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் www.ceylon24.com குழுமம் தமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.