Showing posts with label Western. Show all posts

சற்றுமுன் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கடை தொகுதி ஒன்றில் பாரிய தீ பிடித்துள்ளது.
தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், curtain திரைச்சீலை விற்பனை செய்யப்படும் ( முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான) கடை ஒன்றும் அதற்கு பக்கத்து கடையுமே சேதமானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் விடுதலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறிய கருத்தை கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார். 

இன்று காலை கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை ஆற்றியுள்ளதாகவும், எனினும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். 

அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்கள் வௌியிடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும், நியுயோர்க் டைம்ஸ் சர்ச்சையை மறக்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்ப விஜயகலா மகேஷ்வரன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். 

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும், பதவியை கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் காவிந்த ஜயவர்தன கூறினார்.

கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், அந்தக் கட்டளையை மீறி கொழும்பு - 07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையில் சீன வர்த்தகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றை கட்டியுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

கொழும்பு -07, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தையை அண்மித்த பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படுகின்ற அதிக சத்தம் மற்றும் தூசி எழும்புவது சம்பந்தமாக பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை என்பவற்றுக்கு அறிவிக்காமல் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்த ஹோட்டல் வௌிநாட்டவர்களுக்காக மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் வௌ்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான மெரைன் டிரைவ் வீதி போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். 

அதன்படி நாளை (24) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை இந்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018ம் ஆண்டு தேசிய சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நாளை குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொழும்பு நகரின் வாவிக் கரையோரங்களை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ், கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. 

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால், மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் இந்தப் பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. 

உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பேரே வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

காலி - கொழும்பு பிரதான வீதியின் பேருவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (03) காலை களுத்துறையில் இருந்து அளுத்கம திசையை நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

பென்தர, ஹபுரகல பகுதியை சேர்ந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 29 வயதுடைய பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாளை வரும் மற்றும் செல்லும் சில விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திர கடற் பரப்பிள் நடைபெற உள்ள விமான சோதனை ஒன்றின் காரணமாகவே நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மேலதிக விபரங்களுக்காக 1979 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த ஓமானின் - மஸ்கட் நகரில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பகுதியில் இன்று காலை காணப்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. 

அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த யூ.எல் - 206 என்ற விமானம் அதிகாலை 5.20 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இதன்போது இந்த விமானத்தில் 130 பயணிகள் இருந்ததாக ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தில் இருந்த பயணிகளை இறங்க அனுமதிக்காத மத்தள விமான நிலைய அதிகாரிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பகுதியில் காலநிலை சீரானதும் மீண்டும் அந்த விமானத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர். 

காலை 6.30 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 6.47மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளது.

#IsmailUvaizurRahman.
ரத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை என்று தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவம் நேற்று இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை தந்தையின் உயிரிழப்பு காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்



கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று (24) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் குறித்த பாலத்தினை திருத்தி அமைக்கும் வேலைகளுக்காகவே இன்று தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அனேகமானோர் இந்த நாட்டில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கமான வெற்றி இது, அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

கெகுலலிய பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த குறித்த நபரை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

கெகுலலிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலைமையில் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனவே தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக களனி, கொலன்னாவ, தொம்பே, கடுவலை மற்றும் ருவன்வெல்ல பகுதிகளில் வௌ்ள அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

றத்மலானை பொருபான பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது. 

தெஹிவளை மற்றும் மொரட்டுவ தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

கொலன்னாவ உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் (10) பத்து மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

நாளை பிற்பல் 02.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

நீர்க் குழாயில் மேற்கொள்ள உள்ள அத்தியவசிய திருத்தம் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மத்திய கொழும்பு மாணவர்கள் க.பொ.த. சா/த பரீட்சையில் வெற்றி பெற சிறந்த வழிகாட்டல்கள் அவசியம். கொழும்பில் பின்தங்கிய மாணவர்களை இலக்காக வைத்து; அவர்களின் தேர்ச்சி மட்டத்தையும், பெறுபேற்றையும், கல்வித் தரத்தையும் அதிகரிக்கும் நோக்கில்; ஆரம்பிக்கப்பட்ட CDDF ன் செயற்றிட்டம் வெற்றியளித்திருப்பதை கண்டு நாம் எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
கொழும்பு மாணவர்களின் கல்விப்பிரச்சினை எமது சமூகத்தின் அடிப்படை பிரச்சினையாகும். அதனைத் தீர்ப்பதற்கு இந்த மக்களோடு மக்களாக வாழும் எங்களுக்கு இலகுவான காரியமாகும். இந்த மக்களின் வாழ்க்கையையும், இந்த மக்களின் இதயத்துடிப்பையும் நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள். எனவே இந்த மக்களின் பிள்ளைகள எதிர்நோக்கும்; கல்விப் பிரச்சினையை உணர்வுபூர்வமாக எங்களால் அணுக முடிகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறினார்.
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் கூட்டம் நேற்று கொழும்பு 10 அஷ்ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே பாராளுமனற் உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு பாடசாலைகளில கபொத சா த பரீட்சையில் சாதாரண மட்டத்தை விட குறைந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களை இலக்காக வைத்து நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்து அங்கத்தவர்களுக்கு ஏ.டப்லியூ.ஏ. அஸீஸ் ஆசிரியர் விளக்கமளித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த முஜீபுர் றஹ்மான்,
வகுப்புகளில் பின்தங்கியிருந்த மாணவர்கள் ஊனுனுகு இன் இந்த பயிற்சியினால் பயன்பெற்று 58 வீதமான மாணவர்கள் க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர். இதை ஒரு வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது. இன்று குறைந்த பட்சம் சிற்றூழியராக அரசாங்க தொழில் ஒன்றைப் பெறுவதற்குக் கூட க.பொ.த. சாத பரீட்சையில் ஆகக்குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அதில் இரண்டு பாடங்களில் ஊ சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அரச சிற்றூழியர் தொழிலுக்குக் கூட மத்திய கொழும்பு இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை காரணம் அதிகமான இளைஞர்கள் பாடசாலையை இடை நடுவில் விட்டவர்களாகவும் அல்லது க.பொ.த. சாத பரீட்சையில் சித்திபெறாதவர்களாகவும் இருக்கின்றனர்.
இன்று எம்மிடம் தொழில் கேட்டு வரும் இளைஞர்களில் 20 பேரில் ஒருவர் மட்டுமே ஆறு பாடங்களில் சித்தியடைந்நவர்களாக இருக்கின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். கொழும்பு பாடசாலைகளில் வகுப்பில் பின்தங்கியிருந்த மாணவர்களை தெரிவு செய்து ஒரு குறுகிய கால பயிற்சி வழங்கி அவர்களில் 58 சத வீதமான மாணவர்களை வெற்றியடைய செய்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு உழைத்த ஆசிரிய குழாத்திற்கும், இந்த திட்டத்தை வெற்றியளிக்க நிதி மற்றும் ஆலோசனைகள் வழங்கிய எமது அமைப்பின் உறுப்பினர்களான திருவாளர்கள் ஷிஹாப் ஸரீம், பஹார்தீன், மற்றும் சட்டத்தரணி யு.ஏ. நஜீம் ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல தியாகங்களுக்கு மத்தியில் செயலாற்றிய CDDF அங்கத்தவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
இந்த வருடமும் கொழும்பு பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வருட பயிற்சிக்காக கொழும்பு பாடசாலைகளில் தேர்ச்சி மட்டம் குறைந்த பின்தங்கிய மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கான சிறந்த பயிற்சிகளை வழங்கவும் உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

பேருவளை கடலில் மூழ்கி அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கொழும்பைு, கிரேன்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அண்ணனும், 24 வயதுடைய தங்கையுமே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

பேருவளை பிரதேசத்தில், சிறிய தீவொன்றில் கலங்கரை விளக்கினை பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

குடும்ப உறவினர்களுடன் சுற்றலா சென்றுள்ள அவர்கள், அந்த தீவில் உள்ள கற்பாறை ஒன்றில் உட்கார்ந்திருந்த போது எழுந்த பாரிய கடல் அலை ஒன்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்தனகல்ல விகாரைக்கு அருகில் நேற்று (21) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.