கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் மூடப்படும்





கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று (24) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவெல - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் குறித்த பாலத்தினை திருத்தி அமைக்கும் வேலைகளுக்காகவே இன்று தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.