மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்காக விஜயகலா மகேஷ்வரன் அவ்வாறு பேசியிருக்கலாம்




தமிழ் மக்களின் விடுதலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறிய கருத்தை கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார். 

இன்று காலை கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை ஆற்றியுள்ளதாகவும், எனினும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். 

அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்கள் வௌியிடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும், நியுயோர்க் டைம்ஸ் சர்ச்சையை மறக்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்ப விஜயகலா மகேஷ்வரன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். 

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும், பதவியை கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் காவிந்த ஜயவர்தன கூறினார்.