Showing posts with label North Western. Show all posts

இலங்கையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நகரில் இன்று காலை இரண்டு குழுக்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த மோதலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான போலீசார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் மோதலை தோற்றுவிக்கும் வண்ணம் சமூக வலைத்தளத்தில் பதிவொன்று பதிவேற்றம் செய்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம் பகுதியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவிக்கின்றார்.
சிலாபம் நகரில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர்.


வடமேல் மாகாண பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரியதொரு சந்தர்ப்பம்.
விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 14.01.2019 ஆகும்.


1. கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III


2. குடியேற்ற அதிகாரி தரம் III

 

3. சட்ட அலுவலர் தரம் III



4. விவசாய ஆலோசகர் தரம் III

 

5. பட்டதாரி ஆசிரியர் தரம் III

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் சுமார் 60 பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரல்ல பகுதியில் சற்றுமுன்னர் இந்த விபத்து நடந்துள்ளது.
தனியார் பேருந்துகள் இரண்டு விபத்துக்குள்ளாகின எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும், எம்பிலிப்பிட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளாகின எனத் தெரிவிக்கப்படுகிறது.

குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர். 

குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக 5 நபர்கள் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

படகில் பயணித்த ஐவரில் மூவரை மீட்டுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காணாமல் போனவர்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவரொருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சிலாபம் – சவராண முஸ்லிம் வித்தியாலயத்தில், தரம் 11 இல் கல்வி கற்ற மொஹமட் வைஸ்ஸூல் (வயது 16) என்ற மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலையின் பிரதான மாணவ தலைவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 15ம் திகதி இரவு மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பிய போது அவரை மறித்த மாணவர்கள் சிலர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதன்போது , குறித்த மாணவன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாணவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ச)

முந்தலம், கீரியங்கள்ளி பகுதியில் துவிச்சக்கர வண்டி ஒன்று ஓடையில் விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

கொழும்பு பகுதியை சேர்ந்த மொஹமட் காசிம் நிஸார் எனும் 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

தாயின் சகோதரியுடைய திருமண நிகழ்வில் கலந்துகொள்வதகற்காக கீரியங்கள்ளிக்கு வந்த போதே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். 

கீரியங்கள்ளி - ஆன்டிகம பாதையில் நண்பர்களுடன் வினோதமாக துவிச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டிருந்த போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் அருகில் இருந்த ஓடையில் விழுந்துள்ளது. 

ஏனைய சிறுவர்கள் உடனடியாக சம்பவம் தொடர்பில் அருகி் உள்ளவர்களிடம் அறிவித்தும் குறித்த சிறுவனை மீட்டு முந்தலம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே சிறுவன் உயிரிழந்திருந்தான். 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனமடுவ நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றினை தீ வைத்துக்கொளுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 3 சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனமடுவவில் கடந்த 10 ஆம் திகதி ஹோட்டல் ஒன்று இனவாதிகளால் தீ வைத்துக்கொளுத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில், பாடசாலை மாணவர்  உள்ளிட்ட 16 வயதுடைய மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கண்டி மாவட்டத்திலும், அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தபோது பெரிதும் இலக்கு வைக்கப்பட்டவை முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்தான். அவற்றில் பெரு வணிக நிறுவனங்களும் மிகச் சிறிய கடைகளும் உணவு விடுதிகளும் அடக்கம். குறிப்பாக, கண்டி மாவட்டத்தின் நிலைமை மிகவும் மோசம்.
முஸ்லிம்கள் அங்கு பெருத்த சேதத்தை எதிர்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது நாம் கூறப்போகும் நிகழ்வு நடந்தது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்னும் இடத்தில். இங்கும் முதலில் நடந்தது வன்செயல்கள்தான் என்றாலும் இங்கு மனிதம் இன்னமும் உயிர்வாழ்கிறது என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக நடந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள மக்கள் தமது மனித நேய உணர்வை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய நிகழ்வு இது என்றேகூட சொல்லலாம்.
ஆனமடுவவில் இருப்பது ஒரேயொரு முஸ்லிம் உணவகம். அதன் பெயர் மதீனா முஸ்லிம் ஹோட்டல். முஸ்லிம்களின் புனித தலம் ஒன்றின் பெயரைக் கொண்டது. அது ஒன்றும் பெரிய உணவு விடுதியல்ல. சாதரணமான பயணிகள் மற்றும் உள்ளூர் உழைப்பாளிகளுக்கான உணவு விடுதி.
அது நேற்று அதிகாலையில் திடீரென இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. உரிமையாளர்கள் ஓடிவந்து பார்த்தபோது எரிந்துகொண்டிருந்த உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள் அணைத்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே இரு பாட்டில்கள் இருந்ததால் பெட்ரோல் குண்டுமூலம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
கடை முற்றாக எரிந்து போனதைப் பார்த்த உடன் அதன் உரிமையாளர் நவ்பர் மனதில் தோன்றிய விசயம், 'இனி இங்கு தொழில் செய்ய முடியாது' என்பதுதான். தன்னை பார்க்க வந்தவர்களிடம் அதனைக் கூறியே அவர் கவலைப்பட்டிருக்கிறார். அந்த ஊர் மக்கள் பொதுவாக இவர் மீது அனுதாபம் கொண்டவர்கள். அவரது உணவு விடுதியின் உணவாலும் கவரப்பட்டவர்கள்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் நவ்பரிடம், 'இன்று இரவுக்குள்ளேயே கடையை மீண்டும் கட்டி வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்கள்.
இன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுமார்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மாலையே உணவகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, சிறு சிறு பழுதுகள் போக புதிய உணவகமாக அது உருவெடுத்திருந்தது.
பொதுமக்களும், வணிகர்களும், மதகுருமாரும் ஒன்றாகக் கூடி உணவகத்தை கட்டியிருக்கிறார்கள். எரிந்துபோன கூரையை நீக்கிவிட்டு புதிதாக அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.
தனது தந்தை முழுமையான மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார் நவ்பரின் மகனான ஏ.எம். அனூஸ். இவர் ஒரு ஆசிரியர்.
உணவகத்தை சீரமைத்து தந்த ஊர் மக்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்றும் அனூஸ் கூறுகிறார்.
இலங்கையில் கடந்த காலங்களில் பல வன்செயல்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இப்படி நடந்திருக்கின்றன.
தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான மோதல்களும் நடந்திருக்கின்றன. இவற்றினால் இலங்கையின் பெயர் சர்வதேச மட்டத்தில் பின்னடைந்தும் இருக்கிறது. ஆனால், அவ்வப்போது கேட்கும் ஆனமடுவ சம்பவம் போன்றவவை கூறும் செய்திகள்தான் இங்கு இன்னமும் மனிதம் எஞ்சியிருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன.
இங்கு சாந்தியும், சமாதானமும் திரும்பும் என்பதில் நம்பிக்கை கொள்ள வைப்பவையும் இவையே என்கின்றனர் இங்கு உள்ள சகவாழ்வுக்கான சில செயற்பாட்டாளர்கள்.



சிலாபம் - இனிகொடவெல பகுதியில் பேருந்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (11) அதிகாலை 2.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தினை சேர்ந்த 54 வயதுடைய பெசில் பெட்ரிக் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

பேருந்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அவரின் நிலமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வடமேல் மாகாணத்தில் இன்று (09) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார்.

சிலாபம், இரணவில பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10  வயது சிறுவனின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சமிந்துகம மேற்கு, இரணவில பிரதேசத்தில் வசிக்கும் ஜுவன் பேடிகே சுசித் நிர்மால் எனும் 10 வயது சிறுவன், பெப்ரவரி 25 ஆம் திகதி காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு, சமிந்துகம கிராமப் பகுதியிலுள்ள இரணவில காட்டுப் பகுதியில் வைத்து சடலாமாக மீட்கப்பட்டிருந்தான்.
காணாமல் போன சிறுவன், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவருடன் சென்றிருந்ததோடு, அவர் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.
இரணவில கிராமத்திற்கு தேங்காய் விற்பதற்காக வரும் குறித்த சந்தேகநபரின், நிரந்தர முகவரி குறித்து எவ்வித தகவலும் இன்றிய நிலையில், சந்தேகநபர் பெப்ரவரி 27 ஆம் திகதி சிலாபத்திலிருந்து சென்றமை தெரியவந்துள்ளது.  அத்துடன் அவர் பாரிய மீன்பிடி வலைகளைக் கொண்ட வாடியில் பணிபுரிந்த ஒருவர் எனும் தகவலும் கிடைத்துள்ளது.
அதனையடுத்து குறித்த நபரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். அதற்கமைய குறித்த சந்தேகநபர் இன்று (04) காலை முல்லைத்தீவு, நாயாறு பகுதியிலுள்ள மீனவ கிராமம் ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில், முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 27 வயதுடைய மொஹமட் நஸீர் எனும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

-சுஐப் எம்.காசிம் –
அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை (02) புத்தளம், வெட்டுக்குளச் சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்ஸி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உட்பட பெருந்திரளான மக்களும் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
என்மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே, நான் சார்ந்த அகதிச் சமூகத்தை “வந்தான் வரத்தான், பிச்சைக்காரர்கள், சொப்பிங் பேக்குடன் வந்தவர்கள்“ எனவும் நாகரீகமில்லாமல், புத்தளத்து அரசியல்வாதிகள் ஒருசிலர் வாக்குகளுக்காகத் தேர்தல் மேடைகளில் கூறி வருகின்றனர்.
புலிகளால் விரட்டப்பட்டு, உடுத்த உடையோடு புத்தளத்துக்கு வந்து, கால்நூற்றாண்டுக்கு மேலாக இந்த மண்ணிலே உங்களோடு ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழும் எம்மை, இவ்வாறான அரசியல்வாதிகள் கேவலமாக விமர்சிக்கின்றனர். இழந்துபோன தங்களது அதிகாரத்தை மீண்டும் எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, இவர்கள் குத்துக்கரணம் போடுகின்றனர். எனினும், எமது சகோதரர்களான புத்தளத்து மக்கள் அன்பானவர்கள், பண்பானவர்கள், எதற்கும் விலை போகாதவர்கள், எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் எம்முடன் இன்னுமே ஒட்டிஉறவாடியே வருகின்றனர். இந்த நிலையில், அந்த மக்களின் மனங்களிலே நச்சு விதைகளை இந்த அரசியல்வாதிகள் விதைத்து வருகின்றனர்.
புத்தளம் மண்ணையும், மக்களையும் வடக்கு முஸ்லிம்கள் ஒருபோதுமே மறக்கவில்லை, மறக்கவும்மாட்டார்கள். அதுமட்டுமின்றி இரண்டு சாராரும் இரண்டறக் கலந்து, ஒட்டி உறவாடி வாழ்கின்ற இந்த அன்புப் பிணைப்பை உடைத்தெறிவதன் மூலமே, தமக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என்று ஒருசில மரக்கட்சி அரசியல்வாதிகள் அலைந்து திரிகின்றனர்.
இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற நோக்கம் வடக்கு முஸ்லிம்களுக்கும் இல்லை, அவர்களின் பிரதிநிதியான எனக்கும் இல்லை. என் உயிருள்ள வரை இந்த மாவட்டத்தில் எந்தத் தேர்தலிலும் நான் போட்டியிடப் போவதுமில்லை. அதற்கான தேவையும் இல்லை. அவ்வாறான ஆசையும் எனக்குக் கிடையாது. எனவே, எவரும் வீணாக அச்சம்கொள்ள வேண்டாம்.
வன்னி மக்கள் எனக்கு அளித்த வாக்குகளினால் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு, நான் வன்னிக்கு மட்டுமல்ல, புத்தளம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பணியாற்றி வருகின்றேன். புலிகளால் துரத்தப்பட்டு அகதியாகி, எம்.பியான நான் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விரட்டப்பட்ட போது, இறைவனிடம் பிரார்த்தித்தேன். இறைவன் எம்மைக் கைவிடவில்லை. அதிகாரங்கள் கிடைத்தன. அதன்மூலம் வேரொடும், வேரடி மண்ணோடும் துரத்தப்பட்ட அகதிச் சமூகத்தின் அவல நிலையைப் போக்க என்னால் ஓரளவு முடிந்தது.
அதேபோன்று, புத்தளத்துக்கும் நாங்கள் பணியாற்ற விழைந்த போது, கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் அதிகாரங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள் அதனைத் தடுத்தனர். பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டனர். எம்மைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி, அகதி மக்களை நாங்கள் இந்தப் பிரதேசத்தில் நிரந்தரமாகத் தங்க வைக்கப் போகின்றோமென்று, பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டனர். ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டோம்.
இங்கு வாழும் வடக்கு முஸ்லிம்களை மீண்டும் அவர்களது தாயகத்தில் குடியேற்ற வேண்டும் என்பதில் நான் முனைப்பாகவும், உறுதியாகவும் இருக்கின்றேன். அதற்கான பிரயத்தனங்களில் நான் ஈடுபடும் போதுதான், என்னை இனவாதிகள் மோசமாகத் திட்டுகின்றனர். தொடர்ச்சியான பல்வேறு வழக்குகளை எனக்கெதிராகத் தொடுத்துள்ளனர். இனவாதிகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தீனிபோட்டு வருகின்றனர். மு.கா தலைமை மேடைகளிலே என்னை விமர்சிப்பதையே குறிக்கோளாகவும், தொழிலாகவும் செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
புத்தளத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், தனது தலைவனுக்கு தான் எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல என்ற பாங்கில், என்னைப் பற்றிய அபாண்டங்களைப் பரப்பி வருகின்றார். என்மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்வினால், வடக்கு முஸ்லிம்கள் அனைவரையும் மலினப்படுத்துவதோடு, அவர்களை மனக்கவலை கொள்ள வைக்கின்றார். சமூக வலைத்தளங்களின் மூலம் இவர்கள், கூலிக்கு ஆளமர்த்தி இரவு பகலாக எம்மை தூசித்து வருகின்றனர்.
என்னதான் இவர்கள் செய்தாலும், நாளுக்குநாள் எமது கட்சியின் செல்வாக்கும், மவுசும் அதிகரித்து வருகின்றது. மு.கா வினர் இழந்து போய்கொண்டிருக்கும் தமது செல்வாக்கை சரி செய்வதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, மக்களைப் போலியான வழிக்கு இட்டுச் செல்கின்றனர். இந்த விடயங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
புத்தளத்து மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவே, நாங்கள் எமது கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியலை இந்த மண்ணுக்கு வழங்கி, உங்களை கௌரவித்தோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

புத்தளம்- செல்லங்கந்தல் காட்டிலுள்ள யானையொன்று இன்று காலை  (14) புத்தளம் –அநுராதபுரம் வீதியின் 4ஆம் இலக்க மைல்கல்லுக்கு அருகில் உள்ள மின்சார வேலியை உடைத்துக்கொண்டு வீதிக்கு வந்துள்ளது.
குறித்த யானைகள் தமது தந்தங்களைப் பயன்படுத்தி மின்சார வேலிகளை உடைப்பதாக புத்தளம் வனஜீராசிகள் உதவி பணிப்பாளர் டபிள்யு. கே.எம்.எஸ். சந்தரரத்ன தெரிவித்தார்.
காட்டை விட்டு வெளியே வந்துள்ள யானையை காட்டுக்குள் துரத்துவதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 45 பயணிகளும் முந்தல் மாவட்ட வைத்தியசாலை மற்றும் புத்தளம் தள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த குறித்த தனியார் பஸ், 10ஆம் கட்டைக்கும் மதுரங்குளிக்கும் இடையில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையினால், இந்த விபத்து  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து இடம்பெற்றதன் பின்னர், கொழும்பு புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன, முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க சம்பவம் இடம்பெற்ற ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்ததுடன், போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 27 வருடங்களாகியும் இதுவரை தாம் மீள்குடியேற்றப்படவில்லை என தெரிவித்து புத்தளத்தில் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.
புத்தளம் தில்லையடி ரட்மல்யா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனுவும் மீண்டும் தமது குடியேற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இயற்கை அழிவுகள் ஏற்படும் போது அவர்களுக்கான குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது போல எமக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து எமக்கான தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடவத்தை, மங்கடவீதி சந்தியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு நோக்கி வரும் வீதியில் தண்ணீர் குழாய் ஒன்று வெடிப்பெடுத்துள்ளமையே இந்த வாகன நெரிசல் ஏற்படக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்காரணமாக மாற்று வழிகளை பயணிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தளம் - சிலாபம் வீதியில் முந்தலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பஸ் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று அதிகாலை 1.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம, ராஜங்கனய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜங்கனய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இருந்து கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

காமடைந்தவர்களில் நால்வரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வென்னப்புவ - வய்க்கால் பகுதியில் இரும்பு கம்பியை பயன்படுத்தி ஈரப் பலாக்காய் பறிக்க முற்பட்ட ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இவர் இரும்புக் கம்பியால் ஈரப் பலாக்காய் பறிக்க முற்பட்ட போது, குறித்த கம்பி, அருகில் இருந்த அதிஉயர் மின் கம்பத்தில் மோதியுள்ளது. 

இதனால், மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் கிடந்த அவர், நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஓசோன் படையைப் பாதுகாத்தல் சம்பந்தமான மொன்ட்ரியல் நடப்பொழுங்கின் 30ஆவது ஆண்டுகள் நிறைவையும் சர்வதேச ஓசோன் தினம் 2017ஐயும் முன்னிட்டு, கண்டக்குளிய சதுப்பு நிலத்தில், 2,000 கண்டல் தாவரங்கள், இன்று (18) நாட்டி வைக்கப்பட்டன.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் ஆளுநர் அநுராதா ஜயரத்ன, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கற்பிட்டி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 850 மாணவர்கள், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி, வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.என்.தாஹிர், புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, புத்தளம் வலய (தமிழ்)உதவிக் கல்விப் பணிப்பாளர் சற்.ஏ.சன்ஹிர் உட்படப் பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.