Showing posts with label Accident. Show all posts


அக்கரைப்பற்று அம்பாரை வீதியில்.இன்று இடம்பெற்ற  வீதி விபத்தில்,அக்கரைப்பற்று -03, ஆலிம் வீதியைச் சேர்ந்த முஹம்மது சரிப்  அப்துல் ஜப்பார் 69 வயது என்பவர் உயிரிழந்துள்ளார். இவரது ஜனசா தற்சமயம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


 #பொத்துவில் சியாத்

ஜனாஸா அறிவித்தல்


கடந்த 21 ம் திகதி அதாவது நேற்று முன் தினம் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய மூவரில் இரண்டு பேர் சம்பவ தினமே உயிரிழந்திருந்தனர். அதில் உயிர் தப்பிய

சித்திக் என்பவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இன்னாலாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அவரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

 


விபத்து:


காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயம் முன்பாக டெலிகொம் சந்தியில் சற்றுமுன் மட்டக்களப்பு பக்கம் இருந்து வந்த கார் ஒன்றுடன் செட்டிபாளையத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டது. 


இதில் பயணித்த மோட்டார் வாகன சாரதி மற்றும் அவரது உறவினருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.

 


.சுகிர்தகுமார் 0777113659   




திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கப்பிள்ளையார் ஆலய அருகாமையில் உள்ள வளைவில் வெகனார் காரொன்று இன்று (30) நண்பகல் அளவில் விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளான கார் சேதமடைந்துள்ளபோதும் தெய்வாதீனமாக வாகனத்தை செலுத்தியவர் காயங்கள் எதுவுமின்றி மீட்க்கப்பட்டார்.
உகந்தை பகுதியிலிருந்து வருகை தந்த கார் அக்கரைப்பற்று பிரதேசத்தை நோக்கி பயணித்திருந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளைவில் வீதியை விட்டு விலகிய கார் பாதையின் ஓரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சிறிய தூணை உடைத்துக்கொண்டு பாய்ந்து விபத்துக்குள்ளானதாக அறிய முடிகின்றது.
வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் இதேநேரம் விபத்து தொடர்பான விசாரணையினை திருக்கோவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

 


ஆசிரியர் முஹம்மது அஸாம் உயிரிழந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நண்பன் #நுஸைக் அஹமட்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

என்ற செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.



 


தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்ற விபத்தில் அதன் பிரதான பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார். 

54 வயதான உபுல் செனரத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலையை அண்மித்து நேற்றைய தினம்(15) இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது. 

மிருக வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன், அந்த மரம் மின் கம்பத்தில் சாய்ந்தமையினால் மின் கம்பமும் முறிந்துள்ளது. 

குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனருகில் சென்றுகொண்டிருந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின் கம்பம் வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார். 



கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லொரி ஒன்று சற்று முன்னர் வெளிகந்த-ரிதிதென்ன பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விதத்தில் நுரையின் சாரதி காய் மறைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.




வாகன விபத்தில் 4 பேர் வபாத்


தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் கஹடகஸ்திகிலிய 

SAM கொமினிகெசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா

(கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர்  ஸஹாப்தீன் ஆசிரியர் அவர்களின் சகோதரர் ) அவர்கள் மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வாகன ட்ரைவர் உட்பட நான்கு பெயர்கள்  இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்😭🥺💔

 

உம்றா செல்வதற்காக பாஸ்போட் செய்வதற்காக கொழும்புக்குச்  சென்று திரும்பி வரும் வழியில் இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. 


ஏனைய விபங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 


ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாகும் தருணம். 



அக்கரைப்பற்று கல்முளை பிரதான வீதியில், முன்னால் சென்ற முச்சக்கர வண்டியில், பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. முச்சகர வண்டியின் பின் புறத்தில் சேதம்.  மோட்டார் சைக்கிளில் சென்றவர்  தெய்வாதீனமாகத் தப்பினார்.

 ( வி.ரி. சகாதேவராஜா)



மக்கள் வங்கியின் இந்து மாமன்றத்தினர் வருடாந்தம் நடத்திவரும் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கான உலருணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இம்முறையும் உகந்தையில் நடைபெற்றது.

 அம்பாறை பிராந்திய முகாமையாளர் திருமதி எம் எம் ஏ. அமரசிறி தலைமையில் உணவுப்பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அம்பாறை  உதவி பொது முகாமையாளர் டபிள்யூ.முத்துகல மட்டக்களப்பு உதவி பொதுமுகாமையாளர் என் அருட்செல்வம் அம்பாறை பிராந்திய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் .

 பாதயாத்திரிகர்கள் 500 பேருக்கு மக்கள் வங்கி இலச்சினை பொறித்த பேக்குடன் 500 உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குமண தேசிய சரணாலய முன்றலில் வைத்து மக்கள் வங்கியின் இந்து மாமன்ற உறுப்பினர்களால் இப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதற்கு மக்கள் வங்கியின் அம்பாறை மொனராகலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு வன்னி ஆகிய பிரதேச மக்கள் வங்கியின் இந்து மாமன்ற உறுப்பினர்கள் பங்களிப்புச் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியில் இன்று (21) காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊருடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகன விபத்து....


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேராக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது ...


இன்று அதிகாலை  4.30 இற்கு இந்த விபத்து நிகழ்ந்தது. பதுளையில் இடம்பெற்ற நடன  நிகழ்வுக்குச் சென்று திரும்பிய குழுவினர்,பயணித்த வேன் மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹாலிஎல பகுதியில் விபத்து 8 யுவதிகள் உட்பட 11 பேர் காயம்!



 


பொத்துவில்-16  பாக்கியவத்தையில் வசிக்கும் நியாஸ் ரைவர் அவர்களின் 23வயதுடைய  மகன் தெளபான்  இன்று(2023.04.26) மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது வேக கட்டுப்பாடு இழந்து  கல்லில் மோதுண்டு  விபத்திற்குள்  உள்வாங்கப்பட்டு  மரணமடைந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னஇலைஹிர்ராஜியூன்.

யாஅல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கிடுவாயாக..ஆமீன்


.சுகிர்தகுமார் 0777113659 


 அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் மற்றும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் அவர்கள் நேற்றிரவு (28) விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அலுவலக வாகனத்தில் கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கி  பயணித்துக்கொண்டிருந்தபோதே வெலிக்கந்தை செவனப்பிட்டி பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
விபத்தில் வாகனத்தின் சாரதியும் கொழும்பு நோக்கி பயணம் செய்த மற்றுமொரு உத்தியோகத்தரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த வ.பரமசிங்கம் சுவாட் அமைப்பின் நீண்ட கால உத்தியோகத்தர் என்பதுடன் தற்போது அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவராகவும் மற்றும் சுவாட் அமைப்பின் தலைவராகவும் செயற்படுவதுடன் தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கனுடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இனநல்லுறவு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தியவர் என்பதுடன்; அம்பாரை மாவட்டம் மாத்திரமன்றி தேசிய ரீதியிலும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பாடுபட்டவர்.
அன்னாரது இழப்பு தொடர்பில் பல்வேறு அரச அரசசார்பற்ற நிறுவனங்களும் சமூக அமைப்புக்களும் தனிநபர்களும் ஆழ்ந்த அஞ்சலியினை தெரிவித்து வருகின்றனர். 


 


நூருல் ஹுதா உமர்)


2022/23 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று காரைதீவு பிரதேச செயலக மாவடிப்பள்ளி கிழக்கு கிராம பிரிவில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.

சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதேச செயலாளரின் உரையினைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 20 கிலோ அரிசி பக்கற்றுக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இராஜகுலேந்திரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம் எம் அச்சிமுகமட், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அலியார், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நலன் விரும்பிகளும் பயணாளிகளும் கலந்து கொண்டனர்.

இவ் அரிசி விநியோகமானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இரண்டு கட்டங்களாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேசத்தில் உள்ள 17 கிராம பிரிவுகளைச் சேர்ந்த குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் இதில் நன்மையடையவுள்ளனர். அவர்களுக்கான அரிசி விநியோகமானது எதிர்வரும் நாட்களில் தத்தம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காரியாலயங்களில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது

 


இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உயிரிழப்புக்கு காரணமான பஸ் சாரதியினை விளக்கமறியலில் 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக நீதிபதி தெசிபா  ரஜீவன்-கட்டளை பிறப்பித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.