Showing posts with label Courts. Show all posts

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உருப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபடுவார். 2016 ஆம் ஆண்டு இடம் மெற்ற விபத்து தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டார் #lka #SriLanka

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் திருப்தியில்லை என்று சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லை- சன்னி வக்பு வாரியம்
சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் சஃபரியாஃப் ஜிலானி
புதுடெல்லி:

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார்.


சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அயோத்தி தீர்ப்பு குறித்து அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் சஃபரியாஃப் ஜிலானி கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு திருப்தியில்லை. தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாக கருதக்கூடாது.  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனைத்து கருத்துக்களையும் நாங்கள் மறுக்கவில்லை. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது. தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்குப் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்பின் முழு விவரத்தை படித்தப்பின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

இதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை (இன்று) முடிவடைந்தது. மற்ற வாதங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 23 நாட்களுக்குள் இதன் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதாக இந்து மகாசபையின் வழக்கறிஞர் வருண் சின்ஹா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
  • பாபர் மசூதி இடிப்பு முதல் இதுவரை: 
விசாரணையின் கடைசி நாளான இன்று நிர்மோனி அக்காரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் ஜெயின், அயோத்திக்கு பாபர் வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றார்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது
இதனால், கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகிறது.
காமினி வியங்கொட மற்றும் கலாநிதி சந்திரகுப்த தேநுவர ஆகியோரினால் இந்த மனு கடந்த 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான ஆய்வுகள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரினால் கடந்த 30ஆம் தேதி முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நீதிமன்றம்
இதன்படி, இந்த மனுவை கடந்த 2ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆராய்வதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமொன்று, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியினால் நியமிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் போலீஸ் மாஅதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரும் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்

ராஜபக்‌ஷவின் வரவேற்புபடத்தின் காப்புரிமைBBC
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட விடயங்களை அடுத்து, அவருக்கு இலங்கை கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கை குடிமகன் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவித உரிய ஆவணங்களும் கிடையாது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க குடியுரிமையை கைவிடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆகியன அவருக்கான கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியவற்றை விநியோகித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தமைக்கான உரிய ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இலங்கை கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியன விநியோகிக்கப்பட்டது, சட்டவிரோதம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு, கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தவிர்ப்பதுடன், அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியவற்றை இடைநிறுத்தும் வகையில் இடைகால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

வழக்கு விசாரணை

இலங்கை நீதிமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த வழக்கு மீதான விசாரணைகள் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த 2ஆம் தேதி முதல் நடத்தப்பட்டிருந்தன.
வழக்கின் பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கிடையாது என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நெரின் புள்ளே தெரிவித்துள்ளார்.
ஆவணங்கள் இன்றி இந்த வழக்கை முன்னோக்கி கொண்டு செல்வதன் ஊடாக தனது தரப்பினருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நீதவான் நீதிமன்றமொன்றில் தற்போது நடைபெறுகின்ற வழக்கு விசாரணை நிறைவடையாத தருணத்தில், இவ்வாறான வழக்கொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றம் நடத்தி செல்வது சர்ச்சைக்குரிய விடயம் எனவும் ரொமேஷ் டி சில்வா கூறியுள்ளார்.
நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்கு விசாரணைகளின் ஊடாக கோட்டாபய விடுதலை செய்யப்படுவாராக இருந்தால், இவ்வாறான வழக்கொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடத்துவது சரியானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்ப்பை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
Image captionதீர்ப்பை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த விடயங்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னோக்கி கொண்டு செல்ல அதிகாரம் கிடையாது எனவும், இந்த மனுவை நிராகரிக்குமாறும் ரொமேஷ் டி சில்வா கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், மனுதாரர்களுக்கு விடயங்களை தெளிவூட்ட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட இதன்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோட்டாபயவிற்கு விநியோகிக்கப்பட்டுள்ள குடியுரிமை சட்டவிரோதமானது என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் சுரேன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
குடியுரிமை சட்டத்தின் 19ஆவது சரத்தின் பிரகாரம், இரட்டை குடியுரிமை விநியோகிப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு மாத்திரமே அதிகாரம் உள்ளதாக சுரேன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
எனினும், கோட்டாபயவிற்கான குடியுரிமை ஆவணத்தை, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் வெளியிடவில்லை என கூறிய சட்டத்தரணி, அதனை அப்பேதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே விநியோகித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விநியோகிக்கப்பட்டுள்ள குடியுரிமை ஆவணமானது, சட்டத்திற்கு முன் செல்லுபடியாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தின் பின்னர் அரசாங்கம் சார்பில் நெரின் புள்ளே விடயங்களை தெளிவூட்டியிருந்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் காணப்படுவதாகவும், அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படாத தருணத்தில் அந்த அதிகாரங்கள் ஜனாதிபதி வசமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவு செய்யப்படாத பட்சத்தில், அதற்கான பொறுப்பு அனைத்தும் ஜனாதிபதி வசம் காணப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி வெள்ளிகிழமை இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த முதல் தடவையாக தெரிவு செய்யப்படுகின்றார்.
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறை தினம் என்பதுடன், 21ஆம் தேதி கோட்டாபயவிற்கான இரட்டை குடியுரிமை தொடர்பான ஆவணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இந்த காலப் பகுதியில் புதிதாக தெரிவான அரசாங்கத்தின் அமைச்சரவை நியமிக்கப்படாத பின்னணியில், எவ்வாறு குடியுரிமை ஆவணம் விநியோகிக்கப்பட்டது என்ற கேள்வி மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வினவப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாமல் பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் இடைமனுதாரராக இணைந்துகொள்ள அனுமதி கோரி நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி, பழைய முறைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு எம்.ஏ. சுமந்திரன் தனது மனுவின் ஊடாக கோரியுள்ளார். 

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அத்தியாவசியம் என சுமந்திரன் தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். 

சுமந்திரன் தனது மனுவில், மாகாண சபை தேர்தலை தடைகள் இன்றி நடத்த முடியவில்லையா என்று முடிவு செய்யுமாறு நீதிமன்றத்தை கேட்டுள்ளார். 

ஜனாதிபதியால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம், நாளை மறுதினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு அறிவித்துள்ளது.
நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, டெனீஸ்வரனுக்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட ஏனைய அமைச்சர்கள் நியமனமும் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நியமனங்களை வழங்குவதற்கு, முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை எனவும்  வழக்கின் செலவுகள் அனைத்தையும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனே வழங்கவேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

#IsmailUvaizurRahman.
சட்ட விரோத கருக்கலைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியமை, அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பு என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து குருனாகல மருத்துவ நிபுணர் Drஷாபி ஷிஹாப்தீனிற்கு பிணை வழங்குவதாக குருனாகல நீதிமன்று சற்று முன் கட்டளையிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட வைத்தியரை 250,000 ரூபாய் ரொக்க பிணையிலும் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப்பினையிலும் நீதிமன்றம் விடுவித்தது #lka 

#SriLanka #Kurunegala

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மக்கள் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவார்கள் என்பதினால் வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித முதலிகே நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது. 

பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற 16 மாணவ மாணவிகள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றிருந்த தம்மை இலங்கை மருத்துவ சபை தம்மை பதிவு செய்யவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். 

இதன்காரணமாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
தர்ம சக்கரத்தைக் கொண்ட ஆடையை அணிந்து சென்றை இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைத்திருப்பதானது தமக்கு ஆழ்நத கவலையயை உண்டு பண்ணியுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தமது ருவிற்றரில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுத்து வைத்திருப்பதானது, சர்வதேச குடியியியல், குற்றவியல சட்டப் பிரிவுகளையும், தண்டனைச் சட்டக் கோவைப் பிரிவினையும் மீறிய செயலென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.


Shocked by the Sri Lankan authorities’ misuse of the ICCPR and Penal Code provisions to wrongfully detain people. The absurdity of the purported “offence” should be sufficient to release her immediately and provide her with compensation.

இதேவேளை, தர்ம சக்கரத்தை அவமதித்ததாக விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.மசாஹிமா என்பவர் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

சிலாபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர் என கைது செய்யப்பட்ட முகநூல் பதிவிட்ட இளைஞருக்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல். #Chilaw #lka #Srilanka #EasterSundayAttacksLK

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடியது மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக வல்வெட்டித்துறை போலீசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு நவம்பா் மாதம் 26ம் தேதியன்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஒரு குழுவினர் முயற்சித்திருந்தனர்.
பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு
எனினும், அப்போது பிறந்தநாள் நிகழ்வினை செய்யவிடாமல் வல்வெட்டித்துறை போலீசார் அதனை தடுத்திருந்ததுடன், வழக்கு பதிவு செய்வோம் என போலீசார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம், பதாகைகள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதற்கான கேக் ஆகியன வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் உறுப்பினர் ஒருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கான அழைப்பாணையை வல்வெட்டித்துறை போலீசார் அவர்களுக்கு வழங்கியுள்ளனா்.
பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு
இந்த அழைப்பாணையின் பிரகாரம் எதிர்வரும் 31ம் தேதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவா் கோ.கருணானந்தராசா, மற்றும் நகரசபை உறுப்பினா் பொ.சிவஞானசுந்தரம் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்தினை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கம் உள்ளிடவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.