அயோத்தி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்


அயோத்தி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை (இன்று) முடிவடைந்தது. மற்ற வாதங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 23 நாட்களுக்குள் இதன் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதாக இந்து மகாசபையின் வழக்கறிஞர் வருண் சின்ஹா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
  • பாபர் மசூதி இடிப்பு முதல் இதுவரை: 
விசாரணையின் கடைசி நாளான இன்று நிர்மோனி அக்காரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் ஜெயின், அயோத்திக்கு பாபர் வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றார்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.