Showing posts with label Eastern. Show all posts


 (ரவிப்ரியா)

பெரியகல்லாறு மயானத்திற்குப் பின்னால் உள்ள கடற்கரையில் ஞாயிறு (14) மாலை 4.30 மணியளவில். நண்பர்களுடன் நீராடச் சென்ற இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாலச்சந்திரன் லெஷான் என்ற 17வயது மாணவன் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். அவரோடு நீராடச் சென்ற ஏனைய இரு மாணவர்களும் கடற்கரையில் இருந்தவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.;

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன், கற்குடா கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணியை மேற் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளனர். 

15ந் திகதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என என வானிலை ஆராய்ச்சி நிலையம் பலதடவை மீனவர்களுக்கு விடுத்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் கடலில் இறங்கிய மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். 


 (வி.சுகிர்தகுமார் 0777113659)


 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  நினைவேந்தலின் 5ஆவது தொடர் நிகழ்வும் அவர்தம் உறவுகளை கௌரவித்தலும் நிகழ்வும் நேற்று மாலை (14) திருக்கோவிலில்  நடைபெற்றது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் தோழர் மாறன்  தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அம்பாரை மாவட்ட செயலாளர் சி.புண்ணியநாதன் திருக்கோவில் முன்னாள் பிரதேசசபை தவிசாளர் கமலராஜன். தமிழீழ மக்கள் விடுதலைக் இயக்க திருக்கோவில் பிரதேச பொறுப்பாளர் நேசன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அம்பாறை மாவட்ட தலைவர் தோழர் சங்கரி, செயலாளர் தோழர் கங்கா,   ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் கரன் மற்றும் தோழர்கள், வரதன், சற்குணம், கிட்டு, தாஸ், கேதன் உயிர்நீத்தவர்களின் உறவுகள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த உயிர்நீத்தவர்களின் உருவப்படத்திற்கு உறவுகள் இணைந்து ஈகைச்சுடரேற்றினர்.
 தொடர்ந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயிர்நீத்தவர்களின் உறவுகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உயிர் நீத்த அனைத்து உறவுகள் சார்பாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடிவிற்காக முன்னெடுத்த அர்ப்பணிப்பான நடவடிக்கை மற்றும் அவர்களை நினைவு கூரவேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார்.
மேலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால செயற்பாடுகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்தார்.
இதன் பின்னராக உயிர்நீத்தவர்களின் உறவுகள் கௌரவிக்கப்பட்டதுடன் உயிர்நீத்தவர்களின் புகைப்படங்களும் ஒப்படைக்கப்பட்டன.


 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடந்த ஆறு வருடங்களாக கடமையாற்றி இறக்காம பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும்  ஏ.எல்.யூ. ஜுனைதாவுக்கு பிரியாவிடை நிகழ்வு சமுர்த்தி வங்கி சங்க கூட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி வங்கி சங்கத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் உள்ளிட்ட உதவி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உள்ளக கணக்காய்வு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கணனி உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா அவர்களின் சேவைகள் மற்றும் அவரின் ஆளுமைகள் பற்றி அதிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நினைவுகூர்ந்து  பாராட்டி, வாழ்த்தினர்.இதில் சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் சார்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எப்.றிகாஸா ஷர்பீனினால் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா பற்றி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு கையளித்து வைக்கப்பட்டது.

மேலும் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதாவின் கடந்த ஆறு வருட கால மக்கள் சேவையினை பாராட்டி, கெளரவிக்கு முகமாக சமுர்த்தி வங்கிச் சங்கம், சமுர்த்தி வங்கி, பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு, கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உள்ளக கணக்காய்வு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இணைந்து பென்னாடை போர்த்தி, அன்பளிப்புகளையும் வழங்கி கெளரவித்தனர்.


 (வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு பிரதேச செயலகம் நடாத்தும் நடமாடும் சேவை நாளை 16.05.2023(செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 04.00 மணி வரை நடைபெறும் என்று பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவிருக்கும் இந் நடமாடும் சேவையில் ஆட்பதிவு திணைக்களம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை காணிகள் பிரிவு இலங்கை மின்சார சபை கல்வி திணைக்களம் பிரதேச சபை உள்ளிட்ட 15 நிறுவனங்கள் சேவையை வழங்க இருக்கின்றன.

 


பாறுக் ஷிஹான்


ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீதிக்கான மய்யத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு  நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில்   புதன்கிழமை(11) மாலை  இடம்பெற்றது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிக்கான மய்யத்தினால் இந்த கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மேற்படி நிகழ்வானது நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றதுடன் நீதிக்கான மய்யத்தின் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி, சட்டத்தரணி எம்.ஷிபான், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர்களான எம்.வை. அமீர், எஸ்.ஜனூஸ் உள்ளிட்ட ஊடகவியலாளர்களான அஸ்லம் எஸ்.மெளலானா, பாறூக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தவிர  நீதிக்கான மய்யத்தினால் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு "மகிழும் இதயம்" திட்டத்தினூடாக கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

மாளிகைக்காடு நிருபர்


கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை)  செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய கோரி பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் அவர்கள் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (0) காலை சந்தித்தார்.

 இந்த சந்திப்பில் ஜெ. லியாக்கத் அலி அவர்களின் இடம் மாற்றத்தை ரத்துச்  செய்யுமாறு தான் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து பிரதமர் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த இடமாற்றத்தை ரத்து செய்வதற்கான  நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் என ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார். 

கடந்த 2021.03.01 முதல் பெரியளவிலான இடப்பரப்பையும், பல்லின சமூக பரம்பலையும் கொண்ட கல்முனைக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெ.லியாக்கத் அலி இரண்டு வருடங்கள் மட்டுமே குறித்த சேவை நிலையத்தில் கடமையாற்றியுள்ள நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை அளித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அவரது இடமாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதமருக்கு சில தினங்களுக்கு முன்னர்  கோரிக்கை விடுத்திருந்தார்.

நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த ஜெ.லியாக்கத் அலி சிறந்த நிர்வாகியாகவும், தனது பொறுப்புகளை பாரபட்சமின்றி செய்ததன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயருடன் இருப்பவர் என்றும், பல்லின சமூகங்கள் வாழும் கல்முனையில் சிறந்த நிர்வாகத்தை வழங்கியவர் என்றும் மேலும் தனது கோரிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அன்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


 (வி.ரி. சகாதேவராஜா)


 அம்பாறை மாவட்டத்தில் இவ்வருட சிறுபோக நெற்செய்கைக்கான நெல்விதைப்பு பணிகள் ஜரூராக  இடம் பெற்று வருகின்றது.


இப்போகத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் 65,000 ஹெக்டேயர் நெற்காணியில் நெற்செய்கை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரமானிய பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

 


பாறுக் ஷிஹான்


பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்(DCDC & SGBV MEETING)

கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் முதலாவது காலாண்டுக்கான பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்களின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இன்று நடைபெற்றது.

இவ்அபிவிருத்தி குழு கூட்டமானது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம்(AWF) நிதி  அணுசரனையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே.காமிலா மகளீர்  அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெனிதா பிரதீபன் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் தலைமையில் நெறிப்படுத்தப்பட்டது.


மேற்படி கூட்டத்தில்  பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி ,சிறுவர் , பெண்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகள் மற்றும் சவால்கள்  பால்நிலை சார் வன்முறைகளை குறைப்பதற்கான செயற்திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முஹம்மத் அஸ்மிஇ கல்முனை பிரதேச செயலக கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் எம்.எச்.ஜனுபா இகல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரியும்  உப பொலிஸ் பரிசோதகருமான குமாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உத்தியோகத்தர் ரூபினி, சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர்,  பாடசாலை உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ,  முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி தலைவி, சமூதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள்,ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



நேற்று (07) காலை பாடசாலைக்கு பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் மாணவனை காணவில்லை.


குறித்த மாணவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர். இவர் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும் குறித்த மாணவன் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி பயிலுகிறார்.


நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வகுப்பில் இருந்து பிஸ்கட்  வாங்குவதற்காக வெளியே சென்றதாக சக மாணவர்களின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் இந்த படத்திலுள்ள உடை அணிந்து சென்றுள்ளார். 


தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

0773609218

0776510154

0772309254

0754389097

0778420916

0672220179.

(அதிகம் பகிர்ந்து உதவிடுங்கள்)

 


நூருல் ஹுதா உமர்


மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்கில் இணைந்த கரங்கள் அமைப்பினால் நாடு தழுவிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஷ்ட மற்றும் தொழில் வாய்ப்பற்ற குறைந்த வருமானத்தில் வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கமு/திகோ/ஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கும், பொத்துவில் கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன இன்று இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன்,மா.ஜெயநாதன், தி.சதிஸ்குமார்.  ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இன் நிகழ்வில் கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் க. சந்திரகாசன்,  மற்றும் ஆசிரியர் க. கருணாகரன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 


கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் அனுமதியுடன் நடாத்தப்பட்ட பயிற்சி நெறியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை திருக்கோயில் பிரதேச சபையின் நிதி உதவியாளர்  வேலுப்பிள்ளை கருணாகரன் பெற்று பெருமை சேர்த்தார்.

ஆறு மாத கால உள்ளூராட்சி மன்ற நிதி முகாமைத்துவ டிப்ளமோ பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே 11ஏ, 1 பி யைப் பெற்று முதலிடத்தை  பெற்றுக்கொண்ட அவருக்கும் ஏனைய 55பேருக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
யு.என்.டி.பி (UNDP) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் இலங்கை பட்டய கணக்கறிஞர் நிறுவனத்தினால் கிழக்கு மாகாண முகாமைத்து அபிவிருத்தி பயிற்சி பிரிவில் நடாத்தப்பட்ட ஆறு மாத கால உள்ளூராட்சி மன்ற நிதி முகாமைத்துவ டிப்ளமோ பயிற்சி நெறி கடந்த ஆறுமாத காலமாக நடைபெற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அனுராதா ஜஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எம்.பி.மதநாயக்க. கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.கோபாலரத்தினம் பிரதிப் பிரதம செயலாளர்களான (நிர்வாகம்) சு.மன்சூர் ஆளனி மற்றும் பயிற்சி  ஆர்.யு.அப்துல் ஜலீல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி தினத்தில் ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் திணைக்களின் பணிப்பாளர்கள், பிராந்திய உள்ளூராட்சி  ஆணையாளர்கள், மாநகர ஆணையாளர்கள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றி பயிற்சியில் சித்தி பெற்ற 56 பேருக்கான சான்றிதழ்கள் அகதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
விசேடமாக மாகாண மட்டத்தில் 11ஏ, 1 பி யைப் பெற்று முதலிடத்தை பெற்று முதலாம் இடத்தை திருக்கோயில் பிரதேச சபையின் நிதி உதவியாளர் வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் அவருக்கான சான்றிதழையும் நினைவுச் சின்னத்தையும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர்; வழங்கி கௌரவித்தார்.
மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட கருணாகரனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(


காரைதீவு சகா)

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை சிறப்பிக்கும் வகையில், கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றியம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவுடன் இணைந்து நடாத்தும் *“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”* இரத்ததான நிகழ்வானது இன்று (5) வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது.


இன்று காலை 9 மணி முதல் இவ் இரத்த தான நிகழ்வு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இடம்பெறும்.

வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் குருதித் தேவைப்பாட்டினை கருத்தில்கொண்டு குருதிக் கொடையாளர்கள் அனைவரும்  வருகைதந்து உதவுமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் லோ.சுலக்ஷன் கோரிக்கை விடுத்தார்.


 (நூருல் ஹுதா உமர்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கடந்த புதன்கிழமை (03) பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவினால் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கல்முனை கல்வி வலய கமு/கமு/அல்-மிஸ்பா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

சர்வதேச வாய்ச்சுகாதர தினத்தையொட்டி தொடர்ந்தேர்ச்சியாக பிராந்திய வாய் சுகாதார நிபுணர் வைத்தியர் எம்.எச்.கே சரூக்  அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகளில் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, கமு/கமு/ அல்-மிஸ்பா வித்தியாலய பிரதியதிபர், சுகாதார உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
கமு/கமு அல்-மிஸ்பாஹ் மாணவர்களினால் வாய்ச் சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகளும் இதன் போது முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 


பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட   மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி மாணவ , மாணவிகள்  ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் ஒரு வழிப்பாதை  பெயர்ப் பலகையினை பொருத்தியுள்ளது .

கடந்த காலங்களில்  பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலையை விட்டு வீடு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டு இருந்தனர்.

இந்த போக்குவரத்தை சீர்செய்வதற்கு அண்மைக்காலமாக கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று வந்துள்ளதுடன் கடந்த புதன்கிழமை (3)  ஸாஹிரா கல்லூரி வீதியினை ஒரு வழிப்பாதை மாற்றுவதற்கான பெயர்ப் பலகையினை கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம்  நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம்  குறித்த பெயர்ப்பலகையில்  பாடசாலை ஆரம்பிக்கும் நேரங்களில் காலை 7.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வெள்ளிக்கிழமை பாடசாலை விடும் நேரமான காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை உள்ள  நேரங்களில் பிரதான வீதியிலிருந்து ஸாஹிரா கல்லூரி வீதிக்கு எந்தவித வாகனங்களும் உட்செல்ல முடியாதவாறு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.


 (நூருல் ஹுதா உமர்)


கல்முனை கமு/கமு/ அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் பூரண அணுசரனையுடன் பாடசாலை முகப்புப் பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட "BRILLIANT PARK"  வேலைத்திட்டத்தை திறந்து வைத்து பாடசாலைக்கு கையளிக்கும்  நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது.

அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையில் கொடியேற்றும் கம்பம் மற்றும் நவீன பார்க் முறைமை இல்லாத குறையினை கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகம் நிறைவேற்றியுள்ளது. கடந்த காலங்களில் இவ் விளையாட்டுக் கழகம் இப்பாடசாலையில் கல்வி மற்றும் பெளதீக சார் வேலைத்திட்டங்களில் முழுமையான முறையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"BRILLIANT PARK"  வேலைத்திட்டத்தை திறந்து வைத்து பாடசாலைக்கு கையளிக்கும்  நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப்.நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ அஸ்தர், பாடசாலை பழைய மாணவிகள் சங்க பிரதித்தலைவரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். பழில், அக்கழகத்தின் உயர்பீட உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மாகாண மட்ட விஞ்ஞான வினா போட்டி நிகழ்வில்  அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி இரு மொழிக்கற்கை பிரிவினில்  கல்வி பயிலும் தரம் 7 ஐ சேர்ந்த MIF.இப்(f)பத் எனும் மாணவி முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 

 


இவருக்கான கௌரவிப்பு இன்று கல்லூரியில் இடம்பெற்றது


வி.சுகிர்தகுமார் 0777113659 
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்திருக்கும் சதொச விற்பனை நிலையத்தை அகற்றவிடாது தடுத்த ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கம், அக்கரைப்பற்று தெற்கு தமிழர் ஒன்றியம் உள்ளிட்ட நலன் விரும்பிகள் அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மட்டத்திற்கும் பிரச்சினையை கொண்டு சென்றனர்.
இதுவரை காலமும் சதொச விற்பனை நிலையம் அமைந்திருந்த கட்டடத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்தமை தொடர்பிலும் குறித்த நிலையம் வேறு பிரதேசத்திற்கு மாற்றப்படவுள்ளமை தொடர்பிலும் கடந்த வாரமே ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் பிரதேச செயலாளர் தலைமையிலான செயலக உத்தியோகத்தர்கள் சதொச நிலையத்தின் அதிகாரிகளை அழைத்து பொருத்தமான சில இடங்களை காண்பித்ததுடன் அவற்றில் ஓர் இடத்தினை தெரிவு செய்து பல இழுபறிகளுக்கு பின்னர் ஒப்பந்தம் செய்யும் நிலைக்கு கொண்டு சென்றனர். இதேநேரம் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கவனத்திற்கும் சிலர் கொண்டு சென்று உரிய இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரன் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதனை அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கத்தினர் அக்கரைப்பற்று தெற்கு தமிழர் ஒன்றியம் ஒன்றிணைந்து அதனை தடுப்பதற்கான முயற்சியினை முன்னெடுத்ததுடன் அவர்களும் பல்தரப்பட்ட அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேநேரம் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து சதொச நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அங்கிருக்கும் உபகரணங்களை அகற்ற விடாது தடுத்தனர்.
இது இவ்வாறிருக்க சதொச நிலை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரின் கவனத்திற்கும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர்களினால் கொண்டு செல்லப்பட்டு சதொச உயர்; அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


 ஊர்த்திகள் அனுப்பப்பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கத்தினர் அக்கரைப்பற்று தெற்கு தமிழர் ஒன்றியம் ஒன்றிணைந்து அதனை தடுப்பதற்கான முயற்சியினை முன்னெடுத்ததுடன் அவர்களும் பல்தரப்பட்ட அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதேநேரம் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து சதொச நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அங்கிருக்கும் உபகரணங்களை அகற்ற விடாது தடுத்தனர்.
இது இவ்வாறிருக்க சதொச நிலை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரின் கவனத்திற்கும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர்களினால் கொண்டு செல்லப்பட்டு சதொச உயர்; அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பின்னராக பொருட்களை ஏற்றுவது நிறுத்தப்பட்டு பார ஊர்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதுடன் புதிய இடத்தில் சதொச விற்பனை நிலையத்தை திறப்பதற்குரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
மக்களின் நலன் நிறைந்த இப்பணியில் கட்சி அரசியலுக்கப்பால் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது


 நூருல் ஹுதா உமர்


கல்முனை  மாநகர ஆணையாளர்  ஏ.எல்.எம். அஸ்மி அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள மாநகரை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு அமைய முதல்  கட்டமாக கல்முனை பொது மயானம் சனிக்கிழமை சிரமதானம் செய்து துப்புரவு  செய்யப்பட்டது.

மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமையை கல்முனை மாநகர  சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் யு.எம். இஸ்ஹாக் தலைமையில் மேற்பார்வை உத்தியோகத்தர்களான ஏ.எம்.அதுகம், எஸ்.விக்கினேஸ்வரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்த  சிரமதானப்பணி  கல்முனை  மாநகர  சபை  ஊழியர்களின்  பங்களிப்புடன் நடைபெற்றது.

நகரை  தூய்மைப்படுத்தும் மாநகர ஆணையாளரின் திட்டத்தில் முதல் நிகழ்வாக மயானத்தை தெரிவு  செய்தமைக்கு பிரதேச வாசிகள் பாராட்டு தெரிவித்தனர்.


 மாளிகைக்காடு நிருபர்


உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய எல்லை நிர்ணயக்குழு வெளியிட்ட நகலில் பாலமுனை பிரதேசத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான விடயத்தினை சீரமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை பிரதேச செயலத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எ.ஏ.சி.அகமட் சாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எப்.நஜிஹா முஸாபிர், பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.ஜவ்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.எம்.பாரீன், பாலமுனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.அலியார், ஊடகவியலாளர் ஐ.ஏ.சிறாஜ் உட்பட பாலமுனை அனைத்து ஜும்ஆப்பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள், அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய எல்லை நிர்ணயக்குழு வெளியிட்ட புதிய நகலில் அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்துடன் பாலமுனை 2ஆம் பிரிவு கிராம சேவகர் பிரிவை இணைத்துள்ளமை தொடர்பான விடயத்துக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரியே பிரதேச செயலாளரிடம் இம்மகஜர் கையளிக்கப்பட்டன. மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் ஆணையாளர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கான மகஜரின் பிரதிகளும்  பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலயத்தில் பொருளாதர உதவி தேவைப்படும் பாடசாலை மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (unicef)  உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஜிஹானா ஆலிப், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.ஏ.மலீக்,  உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜீத் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஏ. றாஸீக் (முறைசாராக் கல்வி) அத்துடன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.