மாகாண மட்டத்தில் முதலாம் இடம்




 


கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் அனுமதியுடன் நடாத்தப்பட்ட பயிற்சி நெறியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை திருக்கோயில் பிரதேச சபையின் நிதி உதவியாளர்  வேலுப்பிள்ளை கருணாகரன் பெற்று பெருமை சேர்த்தார்.

ஆறு மாத கால உள்ளூராட்சி மன்ற நிதி முகாமைத்துவ டிப்ளமோ பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே 11ஏ, 1 பி யைப் பெற்று முதலிடத்தை  பெற்றுக்கொண்ட அவருக்கும் ஏனைய 55பேருக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
யு.என்.டி.பி (UNDP) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் இலங்கை பட்டய கணக்கறிஞர் நிறுவனத்தினால் கிழக்கு மாகாண முகாமைத்து அபிவிருத்தி பயிற்சி பிரிவில் நடாத்தப்பட்ட ஆறு மாத கால உள்ளூராட்சி மன்ற நிதி முகாமைத்துவ டிப்ளமோ பயிற்சி நெறி கடந்த ஆறுமாத காலமாக நடைபெற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அனுராதா ஜஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எம்.பி.மதநாயக்க. கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.கோபாலரத்தினம் பிரதிப் பிரதம செயலாளர்களான (நிர்வாகம்) சு.மன்சூர் ஆளனி மற்றும் பயிற்சி  ஆர்.யு.அப்துல் ஜலீல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி தினத்தில் ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் திணைக்களின் பணிப்பாளர்கள், பிராந்திய உள்ளூராட்சி  ஆணையாளர்கள், மாநகர ஆணையாளர்கள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றி பயிற்சியில் சித்தி பெற்ற 56 பேருக்கான சான்றிதழ்கள் அகதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
விசேடமாக மாகாண மட்டத்தில் 11ஏ, 1 பி யைப் பெற்று முதலிடத்தை பெற்று முதலாம் இடத்தை திருக்கோயில் பிரதேச சபையின் நிதி உதவியாளர் வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் அவருக்கான சான்றிதழையும் நினைவுச் சின்னத்தையும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர்; வழங்கி கௌரவித்தார்.
மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட கருணாகரனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.