பெரியகல்லாற்றுக் கடலில் நீராடிய மாணவர் மாயம்





 (ரவிப்ரியா)

பெரியகல்லாறு மயானத்திற்குப் பின்னால் உள்ள கடற்கரையில் ஞாயிறு (14) மாலை 4.30 மணியளவில். நண்பர்களுடன் நீராடச் சென்ற இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாலச்சந்திரன் லெஷான் என்ற 17வயது மாணவன் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். அவரோடு நீராடச் சென்ற ஏனைய இரு மாணவர்களும் கடற்கரையில் இருந்தவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.;

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன், கற்குடா கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணியை மேற் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளனர். 

15ந் திகதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என என வானிலை ஆராய்ச்சி நிலையம் பலதடவை மீனவர்களுக்கு விடுத்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் கடலில் இறங்கிய மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.