சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்




 


பாறுக் ஷிஹான்


பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்(DCDC & SGBV MEETING)

கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் முதலாவது காலாண்டுக்கான பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்களின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இன்று நடைபெற்றது.

இவ்அபிவிருத்தி குழு கூட்டமானது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம்(AWF) நிதி  அணுசரனையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே.காமிலா மகளீர்  அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜெனிதா பிரதீபன் ஆகியோரின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் தலைமையில் நெறிப்படுத்தப்பட்டது.


மேற்படி கூட்டத்தில்  பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி ,சிறுவர் , பெண்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகள் மற்றும் சவால்கள்  பால்நிலை சார் வன்முறைகளை குறைப்பதற்கான செயற்திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முஹம்மத் அஸ்மிஇ கல்முனை பிரதேச செயலக கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் எம்.எச்.ஜனுபா இகல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரியும்  உப பொலிஸ் பரிசோதகருமான குமாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உத்தியோகத்தர் ரூபினி, சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர்,  பாடசாலை உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ,  முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி தலைவி, சமூதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள்,ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.