Showing posts with label Weather. Show all posts

நாட்டின் தென் ​மேல் பகுதியில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும். * மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
#Weather

மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை நிலைமை : களுத்துறையில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

களுத்துறையில் இருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : களுத்துறையில் இருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

(க.கிஷாந்தன்)

மலைநாட்டில் தொடரும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார்.

இதன்படி லிந்துலை எகமுதுகம பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், ராணிவக்த பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், பேர்ஹம் தோட்ட பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அந்தந்த தோட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை  பிரதேச சபை முன்னெடுத்துள்ளது எனவும் தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார்.

எகமுதுகம பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடொன்று சரிந்து விழுந்த போதிலும் அதில் தங்கியிருந்த 9 பேரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.


களனி ஆறு, களு, நில்வலா கங்கை மற்றும் மீ-ஓயா, தெதுருஓயா ஆகியவற்றைஅண்மித்த பகுதிகளில் வாழ்வோருக்கு வௌ்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென் பகுதியிலுள்ள இந்து சமுத்திரத்தில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
#earthquake #srilanka

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பெய்து கொண்டிருக்கும் மழையானது எதிர்வரும் 4 அல்லது 5 தினங்களுக்கு இடையிடையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 19ம், 20ம், 21ம் திகதிகளில் இந்த மழையானது சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்திலும் மழை நான்கு அல்லது ஐந்து தினங்களுக்கு தொடர்வதுடன் 19ம், 21ம் திகதிகளில் மழையானது சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
K. Sooriyakumar
Meteorology Department

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் (டிசம்பர் 17ஆம் திகதி) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில்காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் காணப்படும் தற்போதைய மழையுடனான வானிலை, இன்றும் நாளையும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

கிழக்கு- மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் அந்தமான் கடற்பரப்பிலும் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேச நிலை ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.3 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.9 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து மேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு - வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.



இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல குழப்பமானது தற்போது வலுவடைந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் அனேகமான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை முக்கியமாக வடக்கு கிழக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் இன்று (25ம் திகதி) இரவு முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் சில பிரதேசங்களில் முக்கியமாக கிழக்கு வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் அனேக பிரதேசங்களில் பிற்பகல் 01.00 மணிக்கு பின்னர் மழை அளவு இடியுடன் கூடிய மழை காணப்படும்.

மத்திய சப்ரகமுவ வடமத்திய ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களைப் பொரறுத்தவரையில் இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல குழப்பம் காரணமாக இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்கள் பலவற்றிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

முக்கியமாக அம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு திருகோணமலை ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் இதயங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதுடன் விகடங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

எனவே மீனவர் சமூகம் மற்றுடம் கடல்சார் தொழிலாளர்கள் தனது கடல் நடவடிக்கையின் போது மிகவும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏனைய கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்தக் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதற்கு காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்திலும் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

சீரற்ற வானிலை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இடர் முகாமைத்துவ நிலையம் இன்றுகாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளது.
சீரற்ற வானிலையினால் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 3048 குடும்பங்களைச் சேர்ந்த 10823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் மேமலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலேயே உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

களுத்துறை - புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்தை, காலி - எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ மற்றும் பெத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிப்படைந்தோருக்கு உதவ விசேட தொலைபேசி எண் அறிமுகமாகியுள்ளது.

☎
011 – 2587229
☎
011 – 2454576

பலத்த மழை காரணமாக காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ, பத்தேகம ஆகிய பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை - தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் #lka #WeatherAlert


அம்பகமுவ, புலத்சிங்கள, கிரிஎல்ல, களவான, வரகாபொல, மதுகம ஆகிய பகுதிகளில் மண் சரிவு அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26 மணித்தியாலத்திற்கு கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடலை அண்டிய பகுதிகளில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும்இ இதன் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட;டுள்ளது.

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 8 வீடுகள் முழுமையாகவும், 703 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. .
இதேவேளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்பிராந்தியங்களில் வீசும் பலத்த காற்று காரணமாக இலங்கையைச் சேர்ந்த சுமார் 30 நீண்டநாள் ஆழ்கடல் படகுகள் மாலைதீவு கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த படகுகள் மாலைதீவு கரைக்குச் செல்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேர குறிப்பிட்டுள்ளார்.
கடலலையில் சிக்குண்டு சென்றுள்ள படகுகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும், படகிலுள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளனவா என்பது குறித்து கடற்படையினருடன் இணைந்து சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


#AD.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 கடைகள் இன்று (19) அதிகாலை 5.00 மணி அளவில் தாழிறக்கத்திற்கு உட்பட்டு இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இடிந்த பகுதியில் ஒருவர் சிக்குண்டு மாயமாகி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர். 

மலையக பகுதிக்கு பெய்து வரும் கடும் தொடர்ச்சியான மழையினை யடுத்தே இந்த தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த தாழிறக்கம் குறித்து கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானதுடன் இருக்குமாறும், மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது

களனி கங்கைக்கு அண்மித்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சில பிரதேசங்களில் பெய்து வருகின்ற அதிக மழை காரணமாக லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளன.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை தற்போதும் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் (50-75) மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்ஓரளவு கொந்தளிப்பாகவும்காணப்படும். 

(வளிமண்டலவியல் திணைக்களம்)


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.