Showing posts with label Culture. Show all posts


 (வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தினவிழா பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.

மகளிர் தின விழாவின் மூன்றாவது  நிகழ்வாக மகளிருக்கான "மனைப் பொருளாதார முகாமைத்துவ செயலமர்வானது"  நேற்று முன்தினம் (2024.03.09)  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் வளவாளர்களாக  தங்கவேல் சக்திவேல் (முதன்மை பயிற்றுவிப்பாளர், நிபுணத்துவ ஆலோசகர்  மற்றும் திருமதி சக்தீஸ்வரி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வினை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

இந்த செயலமர்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் மூலம் தாம் நல்ல ஆலோசனைகளையும் சிறந்த அனுபவத்தையும் பெற்றுக் கொண்டதாக பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .


வி.சுகிர்தகுமார் 0777113659 

 மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களிலும் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது.
அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் பனங்காடு பாசுபதேசுவரர் போன்ற பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களிலும் விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
மாலை 6 மணிமுதல் ஆரம்பமான முதாலம் ஜாம பூஜையினை தொடர்ந்து இடம்பெற்ற நான்கு ஜாம பூஜைகளிலும் பெருமளவிலான பக்தர்கள் பங்கேற்றனர்.
யாக பூஜைகள் இடம்பெற்றதுடன் சிவலிங்கத்திற்கு பாலாபிசேகமும் விசேட அபிசேக அலங்கார பூஜைகளும் இடம்பெற்றன.
இவ்வருடம் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றதுடன் அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை பிரதிஷ்டா கலாநிதி தற்புருச சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் அவர்களும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ பழனிவேல்குருக்கள் கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

  


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விரதத்தை முன்னிட்டு இன்று (8) வெள்ளிக்கிழமை காலை பூஜை வழிபாடுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

பிரதேச செயலகம் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

மாணவரிடையே குருத்தோலை பின்னுதல் நிறைமுட்டிவைத்தல் கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளில் போட்டி இடம்பெற்றது.

அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

 


மஹா சிவராத்திரியின் தீபங்கள் இந்து சமூகத்தின் உணர்வைப் பற்றவைப்பது போல், அனைத்து இலங்கைப் பிரஜைகளின் வாழ்விலும் ஒளியேற்றும் ஆசீர்வாதமாக இருக்கட்டும்.


( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி  தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில்  மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில்  நடைபெறும்.

அது தொடர்பான செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா  சென்ற கூட்டறிக்கை வாசிக்க ஆரம்பமானது.

சங்கத்தின் பொருளாளர் க..தியாகராஜா  பொருளாளர் அறிக்கை முன்வைக்கப்பட்டது.

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் அமரர் ஆ.மு.சி. வேலழகனது நூல் வெளியீடு மற்றும் நினைவுப் பேருரை பற்றிய தீர்மானமெடுக்கப்பட்டது.

 சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் சார்ந்த கருத்துக்கள் செயற்குழு உறுப்பினர்களால்  முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.  சங்க பொதுச்செயலாளரின் நன்றியுரையுடன்  நிறைவுற்றது.



அம்பாறை மாவட்ட தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த 'யூத் போரம்- 2024' நிகழ்வு கல்முனை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எல்.எம். சாஜித் அவர்களின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு வாபா றோயலி மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டதுடன் மேலும் விசேட அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸீல், கிழக்கின் கேடயம் பிரதானியும், கிழக்கு மாகாண அனைத்துப்பள்ளிவாசல்கள் பொதுநிறுவனங்கள் சம்மேளன நிறைவேற்று குழு உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், அட்டாளைசேனை நலன்புரி அமைப்பின் தலைவர் அதிபர் ஏ.ஜி.அன்வர் நௌஸாத், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், எம்.ஏ. ஹலீலுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, இணைப்பு செயலாளர் சட்டத்தரணி சப்ராஸ் நிலாம் உட்பட தேசிய புகழ்பெற்ற கலைஞர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடாத்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில் 2024.03.03 ஆம் திகதி பல்கலைக்கழக கலை கலாச்சார கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


தமிழ் கூட்டமைப்பு

முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்... சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் #சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


அக்கரைப்பற்று நூரானியா ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் இன்றைய தினம் இஜ்திமா இடம்பெற்றது.

அக்கரைப்பற்றிலும் அதன் அயற் கிராமங்களிலிருந்தும் சுமார் 2000 இற்கும் அதிகமானவர்கள் ஆண்களும், பெண்களும் பங்குபற்றியிருந்தனர்.

இதற்காள ஏற்பாட்டை நூரானியா ஜும்ஆ மஸ்ஜித் அக்கரைப்பற்று நம்பிக்கையாளர் சபை செய்திருந்தது.

ரமழானை எவ்வாறு அரிய சந்தர்ப்பமாக மாற்றுவது என்ற தலைப்பில்,அஷ்ஷேய்க்: M.H. லபீர்‌ முர்ஸி) அவர்கள் என்ற தலைப்பில், சன்மார்கச் சொற்பொழிவு இடம் பெற்ற வேளையில் எடுத்துக் கொண்ட படம் இது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகம் சர்வதேச தாய்மொழி தினத்தை (21.02.2024) முன்னிட்டு ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் நேற்று முன்தினம் (2024.02.27)  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது .

தாய்மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகின் அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில் பெப்ரவரி 21ம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language Day) ஐ.நாவின் யுனெஸ்கோ 1999ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. 

இதனையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து பெப்ரவரி 21ம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகின்றது.

 "நமது தாய்மொழியை  நினைத்து நாம் பெருமிதம் அடையலாம். ஆனால் இன்னுமொருவருடைய மொழியை சிறுமைப்படுத்துவது மனித அறமாகாது" என்பது தாய்மொழிகள் தினம் சொல்லும் செய்தி.
இதன்போது "நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு" எனும் தலைப்பின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளர் த. சஞ்சீவி சிவகுமாரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கணேஷா கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கிய 126வது சிறப்பு பட்டிமன்றம் "தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது......தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது" எனும் தலைப்பில்  இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவல உத்தியோகத்தர்கள், பிரதேச மூத்த எழுத்தாளர்கள், மாணவர்கள்  என பலரும் கலந்துகொண்டிருந்தனர்


 பிஜிஎம் கிங் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் விமானம் ஏறினார். இங்கே சில சிறப்பம்சங்கள் உள்ளன.


 ( காரைதீவு  சகா)


 அன்றையகாலகட்டத்தில் ஆலயங்கள் சமூகத்தை வழிநடத்தும் நீதிமன்றமாகவும் விளங்கியது. ஆனால் இன்று நிர்வாக சிக்கலில் மாட்டி பல ஆலயங்களில் நீதிமன்றத்தில் நிற்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு மடத்தடி மீனாட்சி அம்மனாலய விசேட நிர்வாக சபை கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வேதநாயகம் ஜெகதீசன் கவலை தெரிவித்தார் .

நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயவிசேட நிருவாக சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது .

அங்கு அரசஅதிபர் மேலும் கூறுகையில்.

அம்பாறை மாவட்டத்தில் இன்று 21 ஆலயங்கள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. பணம் நேரம் என்பன வீணாக விரயமாகின்றன. உகந்தமலை முருகன் ஆலயமும் நீதிமன்றில் உள்ளதை அறிவீர்கள். அதனால் லாகுகலை பிரதேச செயலாளர் வசம் அவ் ஆலயம் பரிபாலிக்கப்படுகிறது.
விசேட அமைவிடம் பொருந்திய இவ் ஆலயம் மிகவும் பலத்த சவால்களுக்கு மத்தியில்  கும்பாபிஷேகம் கண்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. அதற்காக இந்த ஆலய நிர்வாக சபையை பாராட்டுகின்றேன். அதேவேளை இங்குள்ள நிர்வாக நடவடிக்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் .அந்த ரீதியிலே இந்த கூட்டம் இடம்பெறுகின்றது. என்றார்.
கூட்டத்தில்
ஆலய பரிபாலன சபையின் ஆலோசனைகளான வி.ரி.சகாதேவராஜா வா.குணாளன் வி.ஜயந்தன்  மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
 மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிந்தவூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் 16ஆம் தேதி சங்காபிஷேகம் இடம்பெற இருக்கின்றது. அவ்வளையில் ஆலய வரலாற்று நூலான " "மரகதம் "என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது என தலைவர் கூறினார்.



( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த தைப்பொங்கல் விழா நேற்று(16) வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..

முன்னதாக மாட்டு வண்டி சகிதம் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
அதிதிகளாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் கோ.வசந்தராஜா அம்பாறை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் திருமதி புவிராஜினி விஷ்ணுரூபன் 
 உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா , கல்முனை ஹற்றன் நாஷனல் வங்கி முகாமையாளர் ஏ. நிர்மலகுமார் பற்றியா 125 வது ஆணாடுவிழாக்குழு பொருளாளர் எஸ்.சிறிரங்கன் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்யாலயா அதிபர் ரிசாட் மற்றும் மாணவர்களும், சிங்கள மகா வித்தியாலய அதிபர் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
-

அங்கு பற்றிமா பழையமாணவர்களானவைத்திய கலாநிதி டாக்டர் வசந்தராஜா பொறியியலாளர் புவிராஜினி ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டாரர்கள்.


 ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்......,


ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலையின்  விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - பள்ளிவாசல் தலைவரும்  பிரதேச  நீர்ப்பாசன பொறியியலாளர் 

ஏ. எஸ் .எம். இர்ஷாத் தலைமையில் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலய பிரதான  மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


 நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்கள


ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யிது அலிசாகிர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 


அத்துடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்

 எம். எஸ். நழீம்  அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தின் முன்பள்ளிக்கான  முன்னாள் உதவிக்கல்வி பணிப்பாளர் எம். எச் .எம் .நசீர் மற்றும் ஏறாவூர் கோட்ட பாலர் பாடசாலையின் இணைப்பாளர் 

 சக்கினா பௌசூல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன் அதிதிகளால் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 

பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 


#Rep/VithusanJeyachanthiren.

கச்சத்தீவு  #KatchatheevuFestival2024 👇


▪️5 AM தொடக்கம் மு.ப 10 மணி வரை பேருந்து சேவை, (23) நண்பகல் 12 வரை படகு சேவை 

▪️படகு சேவைக்கு ஒரு வழிக் கட்டணம் 1500/-)

▪️உணவு & குடிநீர் ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும்

▪️மதுபானங்களை கொண்டு செல்லல் மற்றும் பாவித்தலுக்கு தடை



 (வி.ரி. சகாதேவராஜா)


வாகரை பிரதேசத்தில் உள்ள வெருகல் கல்லரிப்பு பழங்குடிக் கிராமத்தில் வள்ளுவம் அமைப்பின் பொங்கல் விழா நேற்று முன்தினம் சிறப்பாக கிராமிய சூழலில் இடம்பெற்றது.

 அடிப்படை வசதிகள் எதுவும் மற்ற கல்லரிப்புக் கிராமத்தில் வள்ளுவம் அமைப்பு பொங்கலுக்கென புதிய உடுப்புகள் பொங்கல் பானை முதல் சகல பொருட்களையும் வழங்கி இந்த பொங்கல் விழாவை நடத்தி வைத்தனர்.

 அங்கு மலையக மக்களின் 200 வருட வாழ்வியல் சரிதத்தை பிரதிபலிக்கும் சிறப்பு நிகழ்ச்சி அம்சங்களும் அங்கே இடம்பெற்றன.

கொழுந்து பறித்தல் தொடக்கம் மலையக கலை கலாசார பாரம்பரியங்கள்ளை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை வைத்தியசாலை வீதி என்று எந்த அடிப்படை வசதியும் அற்ற கல்லரிப்பு கிராமத்தில் 40 பழங்குடி குடும்பங்கள் வாழ்ந்து  வருகின்றன .

வள்ளுவம் அமைப்பினர் இந்த பொங்கல் விழா வழக்கம் போல செய்தனர். சமூக செயற்பாட்டாளர் ஆசிரியை மலர்ச்செல்வி இதற்கான ஒழங்கமைப்பை மேற்கொண்டிருந்தார்.

வள்ளுவம் அமைப்பு அந்த கிராமத்தை தத்தெடுத்து சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 





பழம்பெரும் தென்னிந்திய இசை மேஸ்திரி யுவன் ஷங்கர் ராஜாவுடன் எங்களது கூட்டுறவை அறிவிப்பதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மகிழ்ச்சி அடைகிறது!

இந்த வரவிருக்கும் களியாட்டத்திற்கான உத்தியோகபூர்வ விமானப் பங்காளியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் இணைந்து இசை ஆனந்தத்தின் புதிய உயரங்களுக்குச் செல்ல தயாராகுங்கள்!


 பிரதேச செயலக பொங்கல் விழா - 2024


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் துறைநீலாவணை கிராம பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய பிரதேச பொங்கல் விழா - 2024 நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.


காலை 8.30 மணியளவில் துறைநீலாவணை தில்லையம்பல பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று, ஆலயதுக்கு அருகாமையில் கதிரறுவடை நடைபெற்றதுடன்  நெற்கதிர்கள் பிரதேச செயலக பிரிவின் அறநெறி பாடசாலை மாணவர்கள், கலைக் கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளடங்கலாக பண்பாட்டு பவனியாக துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது.


கலாசார விழுமியங்களுடன் பண்பாட்டு பவனியாக கொண்டுவரப்பட்ட நெற்கதிர்கள் கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்ததும் சமய வழிபாடுகளுடன்  பாரம்பரிய முறையில்  உப்பட்டி அடித்து பொலிதூற்றப்பட்டு பின்னர் நெல் குற்றப்பட்டு பொங்கல் பானையில் புத்தரிசியிடப்பட்டு நிகழ்வுகள் இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டன.


மங்கல விளக்கேற்றல் நிகழ்வுகளை தொடர்ந்து, பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள், கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் கிராமிய நடனங்கள், பாடல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் என்பன அரங்கேற்றப்பட்டது.


மேலும் அறநெறி பாடசாலை மாணவர்கள், கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான கோலம் போடுதல், பூ மாலை கட்டுதல் மற்றும் கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் போன்ற  விளையாட்டுகள் என்பன இடம்பெற்றதுடன் வெற்றியீட்டியோருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. 


அத்துடன் துறைநீலாவணை யுனைடட் விளையாட்டு கழக நிருவாகத்தினரால் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் கண்ணகை அம்மன் ஆலய நிருவாக்கத்தினரால் அம்மன் புகழ் பாடும் இறுவட்டு ஒன்றும் வெளீயீட்டு வைக்கப்பட்டது.

 


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தின் புதிய கேட்போர் கூடம் இன்று 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று 17, பட்டினப் பள்ளி வீதி, இலக்கம் 120/1இல் அமைந்துள்ள மன்றத்தின் செயலகத்தில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.


அக்கரைப்பற்றின் பிரமுகர்கள் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உஸ்தாத் R. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கலந்து கொண்டார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.