சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள்





வி.சுகிர்தகுமார் 0777113659 

 மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களிலும் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது.
அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் பனங்காடு பாசுபதேசுவரர் போன்ற பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களிலும் விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
மாலை 6 மணிமுதல் ஆரம்பமான முதாலம் ஜாம பூஜையினை தொடர்ந்து இடம்பெற்ற நான்கு ஜாம பூஜைகளிலும் பெருமளவிலான பக்தர்கள் பங்கேற்றனர்.
யாக பூஜைகள் இடம்பெற்றதுடன் சிவலிங்கத்திற்கு பாலாபிசேகமும் விசேட அபிசேக அலங்கார பூஜைகளும் இடம்பெற்றன.
இவ்வருடம் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றதுடன் அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை பிரதிஷ்டா கலாநிதி தற்புருச சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் அவர்களும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ பழனிவேல்குருக்கள் கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.