Showing posts with label Sabragamuwe. Show all posts

ஹிரான் பிரியங்கர
உடப்பு மற்றும் ஆனமடு கிராமங்களுக்கு மக்கள் பயணம் செய்வதற்காக, கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வௌ்ளப்பெருக்கினால் முந்தல் பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய, சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வௌ்ளநீர் வடிந்தோடாமையின் காரணமாக ​ போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
 எனவே பொதுமக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இவ்வாறு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
100 வருடங்கள் பழைமையான குறித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், மழைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளாந்தம் கடற்படையினர் பாதுகாப்பான முறையில் படகுச் சேவையை மேற்கொண்டு வருவதுடன், சுமார் 1,500 பேர் நாளாந்தம் இதில் பயணிப்பதாகவும், ஆனால் அவர்களிடம் எவ்வித கட்டணத்தையும் கடற்படையினர் அரவிடாது, சேவை மனப்பாங்குடன் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 வரை படகுச் சேவை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

திருமணமாகாத அவர் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் (25) மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை காப்பாற்ற நீரில் நீந்திச் சென்று கொண்டிருக்கும் போது குறித்த பொலிஸ் காண்ஸ்டபிள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனார். 

நேற்று காணாமல் போனது முதல் அவரை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் தரைப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதுதவிர பிரதேசவாசிகளும் குழுக்களாக இணைந்து காணாமல் போயுள்ள பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு முதல் ஒரு பாடசாலை செல்ல ஆரம்பிக்க வேண்டி இருந்தும் பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்துள்ள சிறுமி தொடர்பான செய்தி ஒன்று இரத்தினபுரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

ஆறு வயதுடைய குறித்த சிறுமி தொடர்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

பாடசாலைக் கல்வியைப் பெற வேண்டிய வயதை எட்டியுள்ள துளங்சா விக்ரமசிங்க என்ற சிறுமி தற்போது கல்வியின்றி வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்தச் சிறுமி இரத்தினபுரியின் மத்தியில் நிரந்தர வதிவிடத்தை கொண்டுள்ள போதிலும் நகரிலுள்ள மூன்று பிரதான பாடசாலைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

யுத்த சமயத்தில் அங்கவீனமடைந்த இராணுவ வீரரான சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு பாடசாலை ஒன்றை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

பண நோட்டுக்களை விநியோகித்து வெசாக் தானம் வழங்கிய அபூர்வமான சம்பவம் ஒன்று மாவனல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனில் திசாநாயக்க தனது பெற்றோருக்கு புண்ணியம் தேடி இந்த தானத்தை வழங்கியுள்ளார். இவர் சுதந்திரக் கட்சியின் சார்பில் மாகாண சபையில் உறுப்பினராக கடமையாற்றியிருந்தார். 

இன்று (29) காலை அவரது வீட்டின் முன்பாக 9.30 மணியளவில் ஆரம்பமான பணநோட்டுக்கள் தானம் வழங்கும் நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. 

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தம் புதிய நூறு ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன், இந்துனில் திசாநாயக்க தனது கையாலேயே அனைவருக்கும் பணநோட்டுக்களை விநியோகித்து உள்ளார்.

நாத்தாண்டிய - தங்கொட்டுவ வீதியில் இருக்கின்ற தும்மோதரை பாலம் தாழிறங்கியுள்ளதால் அந்த வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது. 

நேற்று இரவு அந்த பாலத்தின் மேல் சென்ற லொறி ஒன்று சென்ற போது தாழிறக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பல ஆண்டுகள் பழமையான இந்தப் பாலம் கடந்த காலங்களில் பல தடவைகள் சேதமடைந்த போதிலும் அதற்கு நிரந்தர தீர்வொன்று வழங்காமையின் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையை அடுத்து, கேகாலை – யட்டியாந்தோட்டை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 60 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீடுகளிலுள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் சமன் அநுர தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் கூறினார்.

பலத்த காற்று காரணமாக வீதிகளில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பலத்த காற்று காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் சமன் அநுர சுட்டிக்காட்டினார்.

ரன்தம்பே நீர் தேக்கத்தின் வான் கதவுகளை திறக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு மணித்தியாலங்களில் இந்த வான் கதவுகளை திறக்கும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிலையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாக அதனை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னாள் சம்பரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளார். 

கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நிகழ்வின் போதே அவர் அந்தக் கட்சியு்ன் இணைந்து கொண்டுள்ளார்.

(க.கிஷாந்தன்)
இரத்தினபுரி ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் படுங்காயம்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் 23.12.2017 அன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து தொடங்கொட வாவியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
படுங்காயமடைந்தவர்களுள் 41 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும், மூன்று பேர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் உள்ளதாகவும், விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் மாவட்டத்துக்குட்பட்ட பூக்குளம் மீனவக் கிராம மக்கள், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பலவற்றை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 
நான்கு தலைமுறைகளாக, தமது பூர்வீகக் கிராமத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்கள், போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். வில்பத்துக் காட்டின் எல்லையில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தில், 61 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள குளம் ஒன்றிலிருந்தே குடிநீரைப் பெற்றுக்கொள்கின்றனர்.
வரட்சியான காலப்பகுதியில் குளம் வற்றிவிடுவதால், சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.  இதேவேளை, அந்த மீனவக் கிராமத்துக்கு மின்சாரத்தைப் பெற்றுத்தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை காலமும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

(க.கிஷாந்தன்)
2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 03.12.2017 அன்று ஆரம்பமாகியது.
சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.
மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.
இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக 03.12.2017 அன்று மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்தமுறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது. 
அந்தவகையில் பலாங்கொடை - பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, அட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது.  மற்றைய ஊர்வலம் குருவிட்ட - இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது.
மேற்படி சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு அட்டன் நல்லதண்ணீர் புகையிரத இணைப்பு பஸ் சேவை அட்டன் டிப்போவினால் நடத்தப்படுகிறது.
இரத்தினபுரி வழியாகவும், அட்டன் வழியாகவும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை மேற்கொள்ள முடியும்.
மது அருந்த மற்றும் எந்தவிதமான இசைக்கருவிகள் கொண்டு செல்ல முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பல எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 122,000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மகிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 192,699 குடும்பங்களைச் சேர்ந்த 640,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டமே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் 67,095 குடும்பங்களை சேர்ந்த 217,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருணாகல் மாவட்டத்தில் 40,610 குடும்பங்களைச் சேர்ந்த 29,910 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் 28,286 குடும்பங்களைச் சேர்ந்த 101, 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் 27,221 குடும்பங்களைச் சேர்ந்த 93,73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 7342 குடும்பங்களை சேர்ந்த 26,809 பேர் பாதிக்கப்படைந்துள்ளனர்.
அதேவேளை முல்லைதீவு மாவட்டத்தில் 3492 குடும்பங்களை சேர்ந்த 10,763 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தை சேர்ந்த 3902 குடும்பங்களை 13,868 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் 2158 குடும்பங்களை சேர்ந்த 5615 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 1810 குடும்பங்களை சேர்ந்த105 891 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாவனெல்லை பகுதியில் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த நபர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவர் ஹெதெல - வத்தளை பகுதியைச் சேர்ந்த 50 வயதான முரளிதரன் என இனங்காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த அறையை வாடகைக்கு பெற்ற வேளை, மறுநாள் அங்கிருந்து செல்வதாக அவர் குறிப்பிட்ட போதும், நீண்ட நேரம் எந்தத் தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

இதன்போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெற்றுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

புத்தளம் கருவலகஸ்வெவ சியம்பலாவெ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வனப்பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கி பிரயோகமி் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்,
சம்பவத்தில் 18 மற்றும் 31 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

கலிகமுவ நகரத்தில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் கட்டிடம் முழுதாக சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை 02 – 02.30க்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கடைத் தொகுதிக்கு பின்னால் இருந்த வீடொன்றும் இதனால் சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த கட்டிடத்துக்கு அருகில் இருந்த இரண்டு கடைகளும் தீயினால் சேதமடைந்துள்ளது.
கண்டி , மாவனல்லை தீயனைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு சப்ரகமுவ மாகாணத்திலும் ஆதரவு கிட்டியுள்ளது. 

இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, 21 மேலதிக வாக்குகளால் இந்த யோசனை சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. 

இதேவேளை, நேற்று 20வது திருத்தச் சட்டம் தொடர்பான யோசனை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அகலவத்தை பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குகுலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புளத்சிங்கள, பதுரலிய, பலிந்தநுவர, அகலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ரத்தினபுரி - பட்டுகெதர பிரதேசத்தில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். 

5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கேகாலை, அவிஸ்ஸாவளை வீதியில் பிந்தெனிய, பிட்டகல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை மோட்டார் கார் ஒன்று வீதியை விட்டு விலகி குருகொட ஓயாவில் விழுந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென்று பொலிஸர் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய காரின் சாரதி மற்றும் 31 வயதுடைய மகன் என்று பொலிஸார் கூறினர்.

பிந்தெனிய பொலிஸார் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சற்றுமுன் மாவனெல்ல உஸ்ஸாஸ்பிட்டிய பகுதியில் நடந்த விபத்து!
பெண் ஒருவர் பலி! காயமடைந்த பலர் மாவனெல்ல ஹொஸ்பிட்டலில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது!

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.