புத்தளம் மாவட்டத்தில் வரட்சி




நாடளாவிய ரீதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 122,000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மகிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 192,699 குடும்பங்களைச் சேர்ந்த 640,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டமே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் 67,095 குடும்பங்களை சேர்ந்த 217,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருணாகல் மாவட்டத்தில் 40,610 குடும்பங்களைச் சேர்ந்த 29,910 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் 28,286 குடும்பங்களைச் சேர்ந்த 101, 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் 27,221 குடும்பங்களைச் சேர்ந்த 93,73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 7342 குடும்பங்களை சேர்ந்த 26,809 பேர் பாதிக்கப்படைந்துள்ளனர்.
அதேவேளை முல்லைதீவு மாவட்டத்தில் 3492 குடும்பங்களை சேர்ந்த 10,763 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தை சேர்ந்த 3902 குடும்பங்களை 13,868 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் 2158 குடும்பங்களை சேர்ந்த 5615 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 1810 குடும்பங்களை சேர்ந்த105 891 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.