Showing posts with label Courts. Show all posts

 


தமது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

 


கடந்த 2020-12-21ஆம் திகதி மரணமடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் ஜனாஸா, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்து, அவரது ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல், கடந்த 25 நாட்களாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்து, அவரது பி.சி.ஆர்.அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையின் பிரகாரம் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடக்கோரி கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த அதேவேளை வெள்ளிக்கிழமை திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் அவரால் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2021-01-08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த 2020-12-21ஆம் திகதி சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபர் சிறிது நேரத்தில் மரணித்திருந்தார். அதேவேளை, அவரது மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது கொவிட் தொற்று இருப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னரான பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையானது மட்டக்களப்பிலுள்ள விசேட தொற்று நோயியல் நிபுணரால் வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலத்தை அடக்கம் செய்வதற்காக கையளிக்குமாறு அவரது குடும்பத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதிலும் அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் கடந்த 05ஆம் திகதி கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீபை நேரடியாக சந்தித்து, இந்த விடயத்தில் தலையிடுமாறும் ஜனாஸாவை பெற்றுத்தர உதவுமாறும் வேண்டிக்கொண்டதன் பேரில், அவர் அந்த ஜனாஸாவை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு, சட்டத்தரணி என்ற ரீதியில், கோரிக்கை கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) ஒன்றை அன்றைய தினமே அவசரமாக கையளித்திருந்தார். எனினும் ஜனாஸா விடுவிக்கப்படவில்லை.

இதையடுத்து, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபினால் முறைப்பாட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அது அன்றைய தினமே நீதவான் ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணிகளின் வாதத்தில் திருப்தியுற்ற நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஏற்றுக்கொண்டது.

அத்துடன் குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08ஆம் திகதி பரிசீலித்த நீதிமன்றம், குறித்த ஆவணத்தை நீதிமன்ற வழக்கேட்டில் கோவைப்படுத்தியதுடன் இந்த ஆவணத்தை மையப்படுத்தி 2021-01-11ஆம் திகதி  வழக்கை ஆதரிப்புக்காக எடுக்குமாறு பணித்திருந்தது.

அன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, திடீர் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை கோரப்பட்டு, 2021-01-13ஆம் திகதிக்கு அவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையை மையப்படுத்தி, சில அறிவுறுத்தல்களை வழங்கிய நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்தது. இதனிடையே 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் சட்டத்தரணி றகீபினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது குறித்த நபரின் மரணமானது சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் சம்பவித்துள்ளது என வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அன்றைய தினம் ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கையளிக்கப்பட்ட ஜனாஸா சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இம்மனு சார்பில் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகி, முக்கிய பங்காற்றியிருந்தனர்.


வில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதி, அழிக்கப்பட்டமைக்க எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றிற்கு இன்று தீர்;ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வனப் பகுதியை அழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரிஷாட் பதியூதீன், அமைச்சராக இருந்த காலப் பகுதியில், வில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியை, அழித்து, முஸ்லிம் குடியேற்றங்களை செய்தார் என அவர் மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12

அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல், தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்றுநோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு இருக்கின்ற நிலையில், கொரோனாவினால் உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட வேண்டுமென திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.



 

COVID-19 வைரஸினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென வர்த்தமானியை மீளத் திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரியிருந்தனர்.


சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.


எனினும், இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் சிலர் அந்தப் பதவிகளை வகிக்காமையினால், பிரதிவாதிகளின் பெயர்களை மாற்றுவதற்கு இடமளிக்குமாறும் புதிய பிரதிவாதிகளாக பெயரிடப்படுவோருக்கு அறிவித்தல் விடுக்க அனுமதியளிக்குமாறும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.



 

அதற்கு அனுமதியளித்த நீதியரசர்கள், மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன், 9 அவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி

இலங்கை நாடாளுமன்றத்தன் எதிர்வரும் 9ஆவது அமர்வில் நீதிமன்ற விளக்கமறியலில் உள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


இந்த நிலையில், நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக சிறையிலுள்ள இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.


இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர ஆகியோர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின் போது, அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருந்தார்.


இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் ஏற்பாடுகளில் போது இரத்தினபுரி - காஹவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) 9ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொள்ள நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.


மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளாக 54 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.


சிறைச்சாலையில் இருந்தவாறு, ஒரு பிரசார கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாத நிலையில், மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பிள்ளையானுக்கு செலுத்தப்பட்டன.


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்றம் செல்ல நீதிமன்றம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தம்மை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஆணைக்குழுவை நியமித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகிய அரச ஊழியர்களின் முறைப்பாடு தொடர்பில் விசாரிக்க மாத்திரமே ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் Avant Garde நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச ஊழியர் அல்லாத ஒருவரினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விசாரிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால் தமக்கு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறும் மனுக்களை விசாரித்து இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி தடையுத்தரவு பிறக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களான சந்திர ஜயதிலக்க, சந்திரா பெர்னாண்டோ உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நிஷ்ஷங்க சேனாதிபதி அரசின் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார உள்ளிட்டோர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செங்கலடி நிருபர்-

கிழக்கு மாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயருபன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கொவிட்19 நிதியத்திற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனுமதியின்றி சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பிடித்தமையானது அவர்களின் அடிப்படை உரிமை மீறும் செயலாகும் என தெரிவித்தே அதனை எதிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே மாதம் சம்பளப் பட்டியலிலிருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தின் குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டிருப்பதோடு மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுகாதார விதி முறைகளுக்கு முரணாக சில வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அறிவுறுத்தலுக்கமைய திறக்கப்பட்டு விருப்பமின்றி அனுமதி பெறப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் 2020.06.12 அன்று எஸ்.சி.எப்.ஆர்.166/220 இலக்கத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், மாகாண கல்விச் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயருபன் ஆகியோர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

செங்கலடி நிருபர்

பே.சபேஷ்

கொவிட் 19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மனுதாரர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் உயர் நீதி மன்றத்துக்கு வருகைதந்தபோது எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் வெற்றியீட்டுவதற்கு பிரார்த்தியுங்கள்.

பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட வெலிக்கடை பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல, நீதிமன்றத்தில் ஆஜராகியபோது பிணை வழங்கப்பட்டுள்ளது

#IsmailUvaizurRahman.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக M.K.M.மன்சூர் அவர்களைப் பணிபுரியும் படி, திருமலை மேல் நீதிமன்று இன்று  ஆணை பிறப்பித்தது. மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமை புரிந்து வந்த M.K.M மன்சூர் அவர்களை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இடை நிறுத்தியிருந்த அதேவேளை, அவருக்குப் பதிலாக நிசாம் என்பவரை நியமித்தும் இருந்தார்.

இதனை ஆட்சேபித்து, தமக்கு  நியாயம் கோரி ஆணை மனுவொன்று சிரேஸ்ட சட்டத்தரணி கிண்ணியா சபறுல்லாவினால் திருமலை மாகாண மேல் நீதிமன்றில் அண்மையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தின் பின்னர், இன்றைய தினம்  வழங்கப்பட்ட ஆணையில், மாகாணக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்தும் கடமை புரிய M.K.M.மன்சூருக்கு அனுமதி வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான அடிப்படை மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தள்ளது. இவரது வழக்கு எதிர்வரும் ஜீன் மாதம் முதலாம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.


  (பின்னிணைப்பு)

வரலாற்றில் முதன் முறையாக உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு மண்டபத்தில் நடந்த விசாரணையாக இது கருதபப்பட்டது.3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்ற அமர்வுகள் இன்றி நாடு இயங்க முடியாது - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டுள்ளார்.

மனுதாரர்களான விக்டர் ஐவன், சரித்த குணரத்ன சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தமது சமர்ப்பணத்தை முன்வைத்தார். ஜனநாயகத்தின் துாண்களாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை,நீதித்துறை போன்றவை காணப்படுகின்றது. அதில் ஒன்று இழக்கும் முக்காலை் இல்லாத கதிரையாகின்றது என்று வாதிட்டார்.
.

”நாடாளுமன்றம் இல்லையேல்,அங்கு ஜனநாயகம் இல்லை” என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டு வந்தார். மேலும்  தேர்தல் இடம் பெறுவதற்கு 5 வாரங்களுக்கு முன்னர் பிரச்சாரங்கள் செய்ய வேண்டிய தேவைப்பபாடு உள்ளது. அது இங்கு நடைபெறச் சாத்தியப்பாடுகள் இலலை. எனவே ஜீன் 20ந் திகதி தேர்தலை நடத்த முடியாமல் போகும் என்றும் கருத்துரைத்தார்.

(முந்தைய செய்தி)
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 


எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்கு பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

தமது பிணையானது மேல் நீதிமன்றினால், நேற்றைய தினம் ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து, தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்றைய தினம்,மேன் முறையீட்டு மன்றில் இன்று மேன் முறையீடு செய்துள்ளார்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக இரண்டு மனுக்கள் மீஉயர் நீதிமனறில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, டொக்டர் அனில் ஜயசிங்க, சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டள்ளனர்.

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக, சட்ட மாஅதிபர் உத்தரவுக்கமைய முன். அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நீதிமன்றில் சரணடைந்த பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசார குமாரவுக்கு ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைககப்பட்டள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.