Showing posts with label vacancies. Show all posts


 இலங்கை பொலிஸ் சேவையில் பயிலுநர் பொலிஸ் கொன்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் ஊடக மொழியில் திறமைச் சித்தியுடன் விண்ணப்பதாரி ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியெய்திருத்தல் வேண்டும்.மேலும் கணித பாடத்தில் இரு தடவைக்கு மேற்படாத தவணையில் சித்தி யெய்திருத்தல் வேண்டும்..


வயது :- 18-25


உயரம்:- 5 அடி 4 அங்குலம் ( 162.5 CM) ஆகக் குறைந்து


விண்ணப்பம் முடிவு :- 2022.01.31


வர்த்தமானி:- 2021.12.31


Share...

 




இலங்கை அதிபர் சேவை ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 26 ஜனவரி 2022

தமிழ் மொழிமூல பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை 1525

இலங்கை ஆசிரியர் சேவையிலுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பட்டதாரி ஆசிரியர் எனின் 5 வருட அனுபவமும், கல்வியியற்கல்லூரி, ஆசிரியர்ன பயிற்சி சான்றிதழ் எனின் 6 வருட அனுபவமும் தேவை

அதியுட்ச வயது 50

விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்

Graduate Teachers – 5 Years Experience

NCOE Diploma - 6 Years Experience


Closing date 26 Jan 2022


Vacancies

Sinhala Medium - 3193

Tamil Medium – 1525

 


Akkaraipattru Central Multi Purpose Cooperative Society Vacancies 2021


✔️ அக்கரைப்பற்று மத்திய பல்நோக்கு கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் 2021


✔️ பதவி வெற்றிடங்கள் 

⭕ Management Assistant

⭕ Watcher

⭕ Fuel Filler

⭕ Accountant

⭕ Regional Manager

⭕ General Manager


🗓️ விண்ணப்ப முடிவுத்திகதி - 2022/01/08



 முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு -  யாழ்ப்பாண பல்கலைக்கழகம். 


✔️  க.பொ.த சாதாரண தரத்தில் 06 பாட சித்தி மற்றும் க.பொ.த உயர் தர சித்தியுடன் ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்  


🗓️ விண்ணப்ப முடிவுத்திகதி - 2021/11/30

University of Jaffna, Sri Lanka | Discernment is Wisdomhttp://www.jfn.ac.lk

 


நீதிமன்ற புத்தக பைண்டர் தரம் IIIல் ஆட்சேரப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021


✔️ க.பொ.த சாதாரண தரத்தில் 06 பாட சித்தியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


🗓️ விண்ணப்ப முடிவுத்திகதி - 2021/12/15

மேலதிகத் தகவல்கயுளுக்கு 2021.11.05 இனது அரச வர்தமானி


 


போட்டிப்பரீட்சை அறிவித்தல்


(மத்திய மாகாணத்திற்குரியது)


மத்திய மாகாண நூலகர் சேவை தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்தற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


Recruitment to the posts of Librarians’ Service (Class III) in Local Government Institutions of Central Provincial Public Service - 2021



திறந்த போட்டிப்பரீட்சைக்கான தகைமைகள்


✅ சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி

✅ உயர் தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி

✅ நூலக டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்திருத்தல்

✅ வயதெல்லை : 18-35


முழுமையான விபரங்களுக்கு -  201.09.03 அரச வர்த்தமானி


⭕ முடிவுத்திகதி - 04.10.2021

 




யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்‌ கலை பீடத்தில்‌ பின்வரும்‌ வேலை வாய்ப்புகளுக்கு

விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளது…

FACULTY OF ARTS
Temporary Assistant Lecturer in Archaeology/ Christian Civilization/ Drama & Theatre Arts/ Economics/ English Language Teaching/ Fine Arts/ Linguistics/ Geography/ History/ Home Economics/ Information and Communication Technology/ Philosophy/Psychology/ Planning/ Political Science/ Sociology/ Tamil/ Translation Studies
Temporary Assistant Lecturer in Law
Temporary Demonstrator in Media studies
Temporary Instructor in Dance(Bharatham)/ Carnatic Music/ Miruthangam for the Department of Dance

Minimum Requirements/Qualifications:
A Degree with specialization in the relevant subject with First Class or Second Class (Upper Division) Honours;
OR
A Degree with specialization in the relevant subject with Second Class (Lower Division) Honours;
OR
(a) A Degree with specialization in the relevant subject without Honours or any other degree with at least Second Class Honours,
and
(b) a recognized postgraduate degree in the relevant subject

Salary and Other Benefits
Demonstrator/ Temp. Instructor – Rs. 40, 920/- p.m (Fixed)
Temporary Assistant Lecturer – Rs. 49,860/- p.m (Fixed)
In addition to the above salary, the allowances approved by University Grants Commission applicable to the posts will also be paid.

Application Form/விண்ணப்ப படிவம்/අයදුම්පත්‍රය
Applicants are requested to fill online application form given in the link below:

>Click Here<

Applicants are required to submit application form along with the scanned copy of the statement of degree and paid Bank Slip for the deposit of a sum of Rs.100/- credited to any branch of the People’s Bank in favour of University of Jaffna Collection Account and the reference Number is : 970000090000387 of Bursar, University of Jaffna on or before the closing date.

ஆன்லைன்‌ படிவம்‌ மூலமாக உங்கள்‌ விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப வேண்டும்‌
விண்ணப்பத்துடன்‌ சேர்த்து ஸ்கேன்‌ செய்யப்பட்ட உங்கள்‌ Degreeகான Statement
மற்றும்‌ மக்கள்‌ வங்கியின்‌ யாழ்ப்பாண பல்கலைக்கழக கணக்கிற்கு 100 ரூபாய்‌
செய்து அதற்கான பற்றுச்‌ சீட்டை யும்‌ ஸ்கேன்‌ செய்து இணைத்து அனுப்ப வேண்டும்‌..

Acc.No – 970000090000387

කරන ලද රු .100/- ක මුදලක් තැන්පත් කිරීම සඳහා අයදුම්කරුවන් විසින් අයදුම්පත්‍රය හා උපාධි ප්‍රකාශනයේ ස්කෑන් කළ පිටපත සහ ගෙවූ බැංකු පයාපනය විශ්වවිද්‍යාලයේ එකතු කිරීමේ ගිණුමට පක්ෂව මහජන බැංකුවේ ඕනෑම ශාඛාවකට බැර ත්‍රිකාව සමඟ ඉදිරිපත් කළ යුතුය.

Submission of Applications will not be entertained in person. Only short-listed applicants will be called for an interview.

Registrar
University of Jaffna

 




பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்கள் .இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில்  வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


விபரங்கள்;www.jfn.ac.lk


Non Academy Vacancies 2021 : University of Jaffna


 Data Collector – Vacant – 20 posts


 Coordinator – Data Collection & Data quality – Vacant – 01 post


Phlebotomist – Vacant – 2 posts


Medical Laboratory Technician – Vacant – 2 posts


Computer Operator – Vacant – 2 posts

சிங்களம்-ஆங்கிலம்/ தமிழ்-ஆங்கிலம்/ சிங்களம்-தமிழ் மொழிகள்

அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்தும் போது, முதன்மையான பணியொன்று தொழில்சார் மொழிபெயர்ப்பாளர்களினால் நிறைவேற்றப்படுகிறது. மொழிபெயர்ப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் காணப்பட்ட போதும் உரிய தகைமைகளை உடையோர் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். இந் நிலைமையைக் கருத்திற் கொண்டு  மொழிபெயர்ப்பிற்கான தொழில்சார் தகைமையை (DOL Professional Qualification in Translation) ஏற்படுத்துவதற்காக, மொழிபெயர்ப்பு குறித்த ஒருவருட கால  முழுநேர தொழில்சார் கற்கைநெறியொன்று அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புத் துறையில் ஆர்வமுள்ள  மற்றும் பின்வரும் தகைமைகளைக் கொண்ட பட்டதாரிகளை எழுத்துத் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இப்பாடநெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் பின்னர் அரச மொழிபெயர்ப்பாளர் என்ற ரீதியில் வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரிகள் பின்வரும் மூன்று மொழி வகைகளின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

  1. சிங்களம் - ஆங்கிலம் மொழி வகை
  2. தமிழ் - ஆங்கிலம் மொழி வகை
  3. சிங்களம் - தமிழ் மொழி வகை

ஆட்சேர்ப்புக்கான தகைமைகள்/ நிபந்தனைகள்

  1. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  2. சிறந்த நடத்தையுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் இருத்தல் வேண்டும்.
  3. இலங்கையின் எந்தப் பகுதியிலும் பணியாற்றுவதற்கு இணங்குதல் வேண்டும்.
  4. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் 35 வயதுக்கு குறைவானவராகவும் இருத்தல் வேண்டும்.
  5. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியில் கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமைகள்

(i). சிங்களம் - ஆங்கிலம் மொழி வகை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்

(ii). தமிழ் - ஆங்கிலம் மொழி வகை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்

(iii). சிங்களம் - தமிழ் மொழி வகை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் பட்டத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்

மற்றும்

க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (தாய்மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

மற்றும்

க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது

சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) அல்லது மொழிபெயர்ப்பு (சிங்களம்/தமிழ் மொழி பிரிவின் கீழ்) டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

அரசகரும மொழிகள் ஆணையாளர்  நாயகத்தினால்  நடாத்தப்படும் எழுத்துத் பரீட்சையொன்றின் பெறுபேறுகளின் அடிப்படையில் மற்றும் தகைமைகளைப் பரீட்சிக்கும்  நேர்முக பரீட்சையின் பின்னர்  முன்மொழியப்பட்ட ஒருவருட கால தொழில்சார் கற்கைநெறிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆட்சேர்ப்பிற்கான நிபந்தனைகள்

தாங்கள் விண்ணப்பிக்கும் மொழி வகைக்குரிய  ஒவ்வொரு  வினாத்தாளுக்கும் குறைந்த பட்சம் 40% மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரிகளில் முறையே அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்ட 25 விண்ணப்பதாரிகள் அம்மொழி வகையின் கீழ் பாடநெறியை பயிலுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு 03 மொழி வகைகளுக்கு 75 பயிலுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி ஒருவர் தனது வாய்ப்பை நிராகரிப்பாராயின், முன்னுரிமை அடிப்படையில் பட்டியலில் அடுத்து அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரிக்கு  சந்தர்ப்பம்  உரித்தாகும்.

ஒவ்வொரு பட்டதாரி பயிலுநருக்கும் மாதாந்தக் கொடுப்பனவொன்று இவ் ஒருவருட காலப் பகுதியில் வழங்கப்படும்.

பரீட்சை நடாத்துதலும் பாடத்திட்டமும்

எழுத்துப் பரீட்சை - பாடத்திட்டம்

மொழி வகைவினாத்தாள்உள்ளடக்கம்நேரம் (மணித்தியாலங்கள்)மொத்தப் புள்ளிகள்சித்தியடைந்த புள்ளிகள்
சிங்களம் - தமிழ்மொழிபெயர்ப்பு – சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு

மொழிபெயர்ப்பு – தமிழ் மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு

நிர்வாகம் , சட்டம், விஞ்ஞானம், தொழிநுட்பவியல், இலக்கிய ஆவணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  பகுதிகளை மொழிபெயர்த்தல்.
2 ½




2 ½
100




100
40




40
சிங்களம்- ஆங்கிலம்மொழிபெயர்ப்பு – சிங்கள மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு

மொழிபெயர்ப்பு – ஆங்கில மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு
2 ½




2 ½
100




100
40




40
தமிழ்- ஆங்கிலம்மொழிபெயர்ப்பு – தமிழ் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு

மொழிபெயர்ப்பு – ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு
2 ½




2 ½
100




100
40




40

(க.வே. - எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுகையில் அகராதிகள் மற்றும் சொற்களஞ்சியங்களின் பிரதிகளை பயன்படுத்துவதற்கு  அனுமதிக்கப்படும். இலத்திரனியல் சாதனங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தல் முற்றாகத் தடை.)

நேர்முகப்பரீட்சை

நேர்முகப்பரீட்சைக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. இப்பரீட்சை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் தகைமைகளை பரிசீலிப்பதற்கு மட்டுமே நடாத்தப்படும்.

பரீட்சைகளை நடாத்துதல்

2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்/ சமர்ப்பிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

  1. அரசகரும மொழிகள் திணைக்கள இணையதளத்திற்கு பிரவேசித்து நிகழ்நிலை மூலமாக மட்டுமே அனுப்பிவைத்தல் வேண்டும்.
  2. பரீட்சைகளுக்கான அனுமதியட்டைகள் மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படுவதால், சரியான மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடுதல் கட்டாயமானதாகும்.
  3. கணனிமயப்படுத்தும் வசதிக்காக விண்ணப்பப்படிவம் ஆங்கில மொழிமூலம் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும்.
  4. விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது அல்லது இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011-287723 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

 

 

 

 


பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல்

http://www.languagesdept.gov.lk/web


 



30.07.2021ம் திகதிக்குரிய அரச வர்த்தமானியில் அடங்கியுள்ள அனைத்து வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்....


(Tamil, Sinhala & English)


1️⃣ சுகாதார அமைச்சு


⭕ ஆரம்ப தர வைத்திய உத்தியோகத்தர்களுக்கும் பல் சத்திர சிகிச்சை வைத்திய உத்தியோகத்தர்களுக்குமான திணைக்களப் பரீட்சை - 2021


2️⃣ பரீட்சை அறிவித்தல்


 இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III இற்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021


3️⃣ நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொதுப் போட்டிப் பரீட்சை - 2021


4️⃣ தொழில் அமைச்சு


⭕ வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர் (சிங்களம்) தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021


 




இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின்


⭕ Agriculture

⭕ Science

⭕ Commerce and Management

⭕ Arts and Culture

⭕ Health-Care Sciences


போன்ற பீடங்களில் வெற்றிடமாக காணப்படும்,


1️⃣ Professor


2️⃣ Senior Lecturer Gr I


3️⃣ Senior Lecturer Gr II


4️⃣ Lecturer (Unconfirmed)


5️⃣ Lecturer (Probationary)


கல்விசார் ஊழியர் பதவிகளுக்கும் 


நூலகத்தில் காணப்படும்


6️⃣ Assistant Librarian


கல்வி சாரா ஊழியர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 


🌐 முழுமையான விபரங்களுக்கு - https://www.esn.ac.lk


💾 முடிவுத்திகதி - 25.08.2021


 23.07.2021 அன்று பிரசுரமான அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ள அனைத்து வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...www.gazette.lk


⭕ தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை 


2️⃣ வெற்றிடங்கள் - இலங்கைப் பாராளுமன்றம்


⭕ உதவிச் செயலாளர் நாயகம் பதவி


3️⃣ பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் கமிட்டி


⭕ சுகாதார அமைச்சிற்காக தரம் II பல் வைத்திய நிபுணர்கள் பதவிக்கு

ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020

 


இந்த வார அரச வர்த்தமானியில் வெளியாகிய வேலைவாய்ப்பு மற்றும் போட்டி பரீட்சை விபரங்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.

www.gazette.lk

The Open Competitive Examination for the Recruitment to the Post of Sri Lanka Administrative Service

The Open Competitive Examination for the Recruitment to the Post of Sri Lanka Education Administrative Service

The Open Competitive Examination for the Recruitment to the Post of Sri Lanka Planning Service

The Open Competitive Examination for the Recruitment to the Post of Sri Lanka Accountancy Service

The Open Competitive Examination for the Recruitment to the Post of Sri Lanka Scientific Service


tவிண்ணப்ப முடிவுத் திகதி 16 Aug 2021


ஞாபகமூட்டல்


கிராம அலுவலர் போட்டிப்பரீட்சை 2021


விண்ணப்ப முடிவுத்திகதி 19.07.2021 ஆகும்


உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம அலுவலர் தரம் IIIக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


(ONLINE மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்)


COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF GRAMA NILADHARI –2020(2021)


கல்வித் தகைமைகள்


1️⃣ முதன் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் ஏதாவதொரு மொழியிலான பாடம்  மற்றும் கணிதம் உள்ளிட்ட குறைந்தபட்சம் நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் ஒரே தடவையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர ( சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்


மற்றும்


2️⃣ கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப்) பரீட்சையில் சகல பாடங்களிலும் ( பொது அறிவுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல வேண்டும். பழைய பாடத்திட்டத்தின் கீழ் (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.


✅ வயதெல்லை : 21 - 35


போட்டிப்பரீட்சை பாடங்கள்


1️⃣ மொழித் திறன் 

2️⃣ பொது அறிவு மற்றும் உளச்சார்பு


🌐 முழுமையான விபரங்களுக்கு : https://bit.ly/3vUu8k5


முடிவுத்திகதி : 19.07.2021

 


வடக்கு மாகாணசபை இணையத்தில் வெளியாகிய வேலைவாய்ப்பு மற்றும் போட்டி பரீட்சை விபரங்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.

www.np.gov.lk

  • OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO CLASS 3 GRADE 1(c) OF SLTS FROM ENGLISH DIPLOMA HOLDERS FOR PRIMARY (ENGLISH) TEACHERS IN NORTHERN PROVINCE – 2021
  • OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO CLASS 3 1(a) OF SLTS FROM GRADUATE FOR GUIDANCE AND COUNSELING VACANCIES IN TAMIL MEDIUM SCHOOLS OF NORTHERN PROVINCE – 2021
  • Limited Competitive Examination for Promotion to Supra Grade of Northern Provincial Management Service Officers’ Service – 2019(2020)
  • Competitive Examination for Promotion to Supra Grade of Northern Provincial Management Service Officers’on Merit Basis – 2019(2020)


உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம நிலதாரி தரம் IIIக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கிராம அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


*கல்வித் தகைமை:*


*தாய் மொழி மற்றும் கணிதம் உட்பட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 4 பாடங்ளில் சி சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்*


மற்றும்


*க.பொ.த உயர் தரத்தில் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு தவிர்ந்து அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.*



*தெரிவு முறை:* *போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு*



விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் ஆகக்குறைந்தது 3 வருடங்கள் வசிக்க வேண்டும். 



*வயது எல்லை:*

21 க்குக் குறையாது 35 க்கு மேற்படாதிருக்க வேண்டும்




சம்பளத்திட்டம் : ரூ 28940-10 x 300-11 x 350-10 x 560-10 x 660-ரூ47990' 


*விண்ணப்ப முடிவுத் திகதி 2021-06-28*





பிறரும் பயன்பட வேண்டும் என்பதால் பகிருங்கள் அரச வர்த்தமானி 28/05/2021

*Closing date 28 June 2021*

 


UNIVERSITY VACANCIES!


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்


✅ FACULTY OF APPLIED SCIENCES

✅ FACULTY OF ARTS AND CULTURE

✅ FACULTY OF ISLAMIC STUDIES & ARABIC LANGUAGE

✅ FACULTY OF MANAGEMENT AND COMMERCE 

✅ FACULTY OF ENGINEERING 


போன்ற பீடங்களில் வெற்றிடமாகக் காணப்படும்


1️⃣ Professor

2️⃣ Senior Lecturer Grade I

3️⃣ Senior Lecturer Grade II

4️⃣ Lecturer (Unconfined)

5️⃣ Lecturer (Probationary)

6️⃣ Instructor in Computer Technology Gr.II


போன்ற கல்வி சார் ஊழியர் பதவிகளுக்கும், 


அத்துடன் பின்வரும் கல்வி-சாரா ஊழியர்கள் பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


7️⃣ Assistant Network Manager Gr.II

8️⃣ System Engineer Gr.II


 http://psc.wp.gov.lk/si/?page_id=13681

மேல்மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் - 2021 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


தகைமைகள்


1️⃣ விண்ணப்பிக்கும் பாடத்துறையில் பட்டதாரியாக இருத்தல்

2️⃣ சாதாரண தரத்தில் மொழி கணிதம் உட்பட 3 திறமைச்சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி (in Two Sitting)

3️⃣ ஒரே தடவையில் உயர் தரத்தில் சித்தி பெற்றிருத்தல் (in One Sitting)


விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்


1. ஆரம்ப கல்வி

2. கணிதம்

3. விஞ்ஞானம்

4. சிங்களம்

5. தமிழ்

6. வரலாறு

7. சித்திரம் (புவியியல்)

8. சித்திரம் (குடியுரிமைக்கல்வி)

9. விசேட கல்வி

10. தகவல் தொழில்நுட்பம்

11. ஆங்கிலம்

12. வர்த்தமாக பாடங்கள்

13. சித்திரம்

14. சங்கீதம் (கீழைத்தேயம்)

15. சங்கீம் (கர்நாடகா)

16. நடனம் (Indigenous)

17. நடனம் (Barathanatyam)

18. சங்கீதம் (Western )

19. நாடகம்

20. இரண்டாம் மொழி சிங்களம்

21. இரண்டாம் மொழி தமிழ்

22. விவசாயம்

23. சுகாதாரம்

24. நூலக ஆசிரியர்

26. பௌத்த சமயம்

27. கிறிஸ்தவ சமயம்

28. இந்து சமயம்

29. இஸ்லாம் சமயம்

30. கிறிஸ்தவம்(Noc RC)

31. மனையியல்


(குறிப்பு விண்ணப்ப படிவங்களை ONLINE ஊடாக சமர்ப்பித்து, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை தரவிரக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.)


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Secretary,

Western Provincial Public Service Commission,

No. 628,

10th Floor, 

Jana Jaya City Building,

Nawala Road , Rajagiriya.


 


ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அனுமதி - 2021

முடிவுத்திகதி : 27.04.2021


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Director of Education

Teacher Education Administration Branch,

Ministry of Education

Isurupaya,

Battaramulla

இலங்கை கல்வியமைச்சினால் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்லூரியினால் இரண்டு வருடகால ஆசிரியர் பயிற்சியை வழங்குதல் - 2021க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன



விண்ணப்பிப்பதற்கான தகைமையுடையவர்கள்:


1. அரச பாடசாலைகளில் சேவையாற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள்


2. கல்வியமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலுள்ள அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நியமனத்தைப் பெற்றுள்ள ஆசிரியர்கள்


3. பதிவு செய்யப்பட்ட பிரிவெனாக்களில் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நியமனத்தைப் பெற்றுள்ள பிரிவெனா ஆசிரியர்கள்


4. மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தினால் அமூல்படுத்தப்பட்ட தொலை,

பிரின்செட், ஆசிரியர் கல்லூரிகளின் பழைய பாடவிதானம், பட்டதாரி அல்லாத பயிற்றப்படாத

ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர் பாடநெறியினை தொடர்ந்து தோல்வி அடைந்ததாக உரிய ஆசிரியர் பயிற்சிப் பொறுப்பாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள்


விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்


1. சிங்களம்

2. ஆரம்பக் கல்வி

3. சமூக விஞ்ஞானம்

4. விஞ்ஞானம்

5. கணிதம்

6. விவசாய விஞ்ஞானம்

7. மனைக்கல்வி

8. ஆங்கிலம்

9. பௌத்த சமயம்

10. கிறிஸ்தவ/ரோமன் கத்தோலிக்க சமயம்

11. இந்து சமயம்

12. இஸ்லாம்

13. சித்திரம்

14. சங்கீதம்

15. நடனம்

16. அரபு

17. விசேட கல்வி

18. கைத்தறி கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பம்

19. வர்த்தகம்

20. தமிழ்

21. உடற்கல்வி

22. இரண்டாம் மொழி (சிங்களம்/தமிழ்)

23. தகவல் தொழில்நுட்பம்

24. ஆலோசனை 

25. நூலக விஞ்ஞானம்


🌐 முழுமையான விபரங்களுக்கு 

📅 முடிவுத்திகதி : 27.04.2021

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.