த ஹங்ரி ஐ ரீயூனியன், ஃபேட் ஆல்பர்ட், கோஸ்ட் டாட் போன்ற பல படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் பில் காஸ்பி. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
81 வயதாகும் பில் காஸ்பி ஒரு பல்கலைக்கழக ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
2004 ஆம் ஆண்டு பிலெடல்பியாவில் உள்ள அவரது வீட்டில் டெம்பிள் பல்கலைக்கழக ஊழியர் ஆண்ட்ரியா கான்ஸ்டான்ட் என்ற பெண்ணுக்கு போதையூட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்றிலுருந்து பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவரை காமக்கொடூரன் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாழ்நாள் முழுவதும் மாதா மாதம் மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அவருடைய பெயர், அருகில் உள்ள பள்ளி மற்றும் முக்கிய இடங்களில் பாலியல் குற்றவாளியின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். சிறையில் காஸ்பி இ-மெயில்களை பார்ப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


Post a Comment
Post a Comment