Showing posts with label Lawyer. Show all posts

 


வழக்கு இலக்கம்: HC/NE/WRIT 04/24


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மத்திய மாகாண, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில்


வழக்கு இலக்கம்: HC/NE/WRIT 04/24


மனுதாரர்:

எஸ். மோகனராஜன்,

இல. 30, சென்லியனாட்ஸ் தோட்டம்,

ஹல்கரனோயா.


எதிர்மனுதாரர்கள்:

மதுபாணி பியசேன (செயலாளர் - முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சு, மத்திய மாகாண சபை, பல்லேகல, குண்டசாலை).


மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள், மாகாண கல்வி சேவை ஆணைக்குழு உட்பட மேலும் நால்வர் (மொத்தம் 5 எதிர்மனுதாரர்கள்).


 மனுதாரரின் நீதிமன்றக் கோரிக்கைகள் 


1.இந்த பேராணை மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, மேல்நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.

2.எதிர்மனுதாரர்களுக்கு இது தொடர்பான உத்தியோகபூர்வ நீதிமன்ற அறிவித்தல்களை (Notices) அனுப்ப வேண்டும்.


3."P14" என்ற கடிதத்தின் மூலம் 19.06.2024 அன்று நடத்தவிருந்த அதிபர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வை, இந்த வழக்கின் இறுதி முடிவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவை வழங்க வேண்டும்.


4.கல்வி அமைச்சினால் தன்னிச்சையாக நடத்தவிருந்த அதிபர் நியமன நேர்முகத் தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், அதனைத் தடுக்கவும் பேராணைகளை (Writ of Certiorari மற்றும் Writ of Prohibition) வழங்க வேண்டும்.


5.கல்வி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர் மற்றும் ISA-க்கள் (ஆசிரிய ஆலோசகர்கள்) உட்பட, வலப்பனை கல்வி வலயத்தில் அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும் மற்றும் நேர்முகத் தேர்வை நடாத்தவும் உத்தரவிடும் வகையிலான செயலுறுத்துப் பேராணை (Writ of Mandamus) வடிவிலான ஒரு கட்டளையை வழங்கவும்.


6.வலப்பனை வலயத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வுகள் முறையாக நடத்தப்படும் வரை, திருமதி எம். ரஞ்சனி பிரியதர்ஷினி அவர்கள் சென்லியனார்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராகத் தொடர்வதற்கும், அவரது கடமைகளுக்கு எதிர்மனுதாரர்கள் இடையூறு விளைவிப்பதைத் தடுப்பதற்கும் உத்தரவிட வேண்டும்.


7.தற்போதைய அதிபரை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது இடமாற்றம் செய்வதற்கோ எதிர்மனுதாரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் (Writ of Prohibition).


8.இந்த வழக்கிற்கான செலவுத் தொகையை மனுதாரருக்கு பெற்றுத்தர வேண்டும்.

நீதிமன்றம் பொருத்தமெனக் கருதும் ஏனைய நிவாரணங்களை வழங்க வேண்டும்.


வழக்கின் தீர்ப்பு விபரம் (Judgement Details)


மத்திய மாகாணம் வலப்பனை கல்வி வலயம் சென் லெனாட்ன்ஸ் தமிழ் மகா வித்யாலய அதிபர் நியமனம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

அதன்படி வலப்பனை கல்வி வலய கல்வித் திணைக்கள அதிகாரிகள் உட்பட ஏனைய பாடசாலைகள் அனைத்துக்கும் முறையாக வேறு ஒரு தகுதியான குழுவின் ஊடாக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என ரிட் எழுத்தாணை (Writ of Mandamus) மாகாண மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை சட்டத்தரணி திரு. எஸ். மோகன் ராஜன் அவர்கள் தன்னுடைய பெயரில் பொதுநலன் கருதி தானாகவே தாக்கல் செய்து, அவரே இந்த வழக்கில் தோன்றி விவாதித்திருந்தார். அந்த அடிப்படையிலே வலப்பனை கல்வி வலயம், கல்வி திணைக்கள பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி சேவை ஆணைக்குழு ஆகியோருக்கு எதிராக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி திணைக்களம் மற்றும் கல்வி அதிகாரிகள் தமது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்தமைக்கும், ஊழல்களில் ஈடுபடுகின்றமைக்கும் எதிராக இந்த தீர்ப்பு தக்க பாடத்தினை புகட்டியுள்ளது. அத்தோடு வழக்கு தாக்கல் செய்தமை, அதற்கான செலவுகள் என்ற அடிப்படையில் சட்டத்தரணி எஸ். மோகன்ராஜ் அவர்களுக்கு நஷ்ட ஈடு (வழக்குச் செலவு) வழங்கவும் கௌரவ மேல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.



 ( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் "நிருத்தியார்ப்பணம்"  பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார  மண்டபத்தில்,  கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன்  பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன  பணிப்பாளர்  பேராசிரியர்  கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதிகளாக  நிறுவனத்தின்  நடனம் அரங்காற்றுகை திணைக்கள சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி , மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியகல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்  கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு,  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .

அழைப்பு அதிதிகளாக கல்முனை வலய நடன ஆசிரிய ஆலோசகர் ரிகே.றீசா பத்திரண மற்றும் திருக்கோவில் ஆசிரிய ஆலோசகர் திருமதி.தங்கமாணிக்கம் சிறப்பித்தார்கள் .
நடனத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாணவிகளின் நடன ஆற்று கைகள் சிறப்பாக நடைபெற்றன.

 


வழக்கு பதிவேட்டின் பக்கங்களைக் கிழித்த சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

SC Rule No. 16/2023


Decided on 06.08.2025


"Respondent Attorney-at-Law has been found guilty of an act of deceit which is also a malpractice, acting in terms of Section 42 of the Judicature Act,

the Respondent Attorney-at-Law... be removed from office as an Attorney-at-Law"

2023ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவறையில் வழக்கு பதிவேட்டின் இரண்டு பக்கங்களை கிழித்த சம்பவம் தொடர்பாக சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்ன, ஏமாற்றும் நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, உயர் நீதிமன்றத்தால் சட்டத்தரணிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமின் ஏனைய நீதியசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.


குறித்த சட்டத்தரணியின் செயல்கள் நாட்டின் சட்டத் துறையின் மதிப்பை சேதப்படுத்தியுள்ளதாகவும், அவர் நீதித்துறைச் சட்டத்தின் சில பிரிவுகளையும் உயர்நீதிமன்ற விதிகள் 60 மற்றும் 61ஐ (சட்டத்தரணிகளுக்கான நடத்தை மற்றும் ஒழுக்கம்) மீறியுள்ளதாகவும் பிரதம நீதியரசர் தமது தீர்ப்பில் அறிவித்தார்.


அத்துடன்,குறித்த பதிவேட்டை பார்வையிட அனுமதி பெறும் போதே அவர் பொய்யான பெயரொன்றை வழங்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதிவாதியை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறும், அந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்துமாறும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டார்.

 மஸாஹிமாவுக்கு கிடைத்த நீதி 


தர்மச்சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்

என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. - ஹஸலக பொலிஸ் OIC சொந்த நிதியில் நஷ்டயீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஈஸ்டர் தாக்குதலைத்தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை, ஹஸலகவைச்சேர்ந்த சகோதரி மஸாஹிமா அநியாயமாகக்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். உண்மையில் கப்பலின் சுக்கான் கொண்ட புகைப்படம் வரையப்பட்ட ஆடையைத் தான் அவர் அணிந்தார்.  


இந்நிலையில், பின்நாட்களில் விடுதலையான சகோதரி மஸாஹிமா தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாகக்கூறி உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது. 


நீதியரசர்களான யசந்த கொடேகொட, குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் கொனேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது. 


அதற்கமைய, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் விதி 12(1), 13(1), 13(2) மஸாஹிமா விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.


அத்துடன், அப்போதைய ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC ஜெ.பி ஷந்தன நிஷாந்த தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபா நஷ்டயீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், வழக்கு செலவுகளை (Cost) அரசு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது. 


4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற குறித்த வழக்கில் சட்டத்தரணி பாத்திமா நுஷ்ராவின் வழிகாட்டலில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, சட்டத்தரணி இர்பானா இம்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் ஆஜராகினர். 


நீதிக்காக போராடிய சகோதரி மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. (C)

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.