Showing posts with label Accid. Show all posts


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


இச் சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


மாவனெல்ல, மணிக்காவ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 


#மட்டக்களப்பில்  பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் #நிமலரஞ்சன்  காலமானார்.


 மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட  காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள்   திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் இயற்கை எய்தினார் .


திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமுகத்தாலும் பார்க்கப்படுகிறார். தனது வைத்தியத் திறமையினால்  நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த  வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல  முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.


அன்னாரின் இழப்புக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.