Showing posts with label Slide. Show all posts

 


(வி.ரி.சகாதேவராஜா)

சமகாலத்தில் பேசுபொருளாக  இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது  தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .
ஆனால் அதற்கு முன்பு முன்மொழியப்பட்ட கல்முனை நாவிதன்வெளி வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷையான கல்முனை மத்தி  கல்வி வலயத்தை முதலில் தோற்றுவிக்க வேண்டும்.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி செயலாளரும், கல்முனைத்தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி அருள்.நிதான்சன் தெரிவித்தார் .

கல்முனை ஊடக மையத்தில் இன்று (28) வியாழக்கிழமை நடைபெற்ற அவசர ஊடகச் சந்திப்பில் பேசுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அங்கே அவர் மேலும் தெரிவிக்கையில்..

கல்வி வளங்களை பகிர்வதில் ஏற்படுகின்ற பாரபட்சம் மற்றும்
கல்வி நிர்வாக சேவைகளில்  இருக்கின்ற நெருக்கடிகளையும் சவால்களையும் குறைத்து நிருவாகத்தை இலகுவாக்குவதற்கும் மாணவர்களுக்கும் கல்வி சமூகத்துக்கும் தேவையான பாரபட்சமற்ற கல்வியை நீதியாக வழங்கும் பொருட்டும் கல்முனை மத்தி கல்வி வலயத்தை
தனியாக பிரிப்பது என்பது எமது பல தசாப்த கால கோரிக்கையாகும்.

எனவே கல்முனை வலய தமிழ் பாடசாலைகள் மற்றும் நாவிதன்வெளிக் கோட்ட தமிழ் முஸ்லிம் பாடசாலைகளை இணைத்து 48 பாடசாலைகளுடன் தனியான கல்முனை மத்திவலயத்தை ஸ்தாபிக்க இந்த அரசு முன்வர வேண்டும். என்றார்.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சபையினால் நகரத்தை அழகு தாவரங்களை பூச்சாடிகளில் வைத்து அதிக செலவில் அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டம் ஒழுங்கான திட்டமிடலும் மேற்பார்வையும் இல்லாத காரணத்தினால் தாவரங்கள் வாடி, வதங்கி செத்து மடிந்து வருவதுடன் நகரத்துகு வரும் ஆடுகள், மாடுகள் போன்ற கட்டாக்காலி  மிருகங்களினால் சேதப்படுத்தப்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட மாநகர சபை உயர் அதிகாரிகளும் இத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்து செயல்படுத்தியவர்களும் கண்டும், காணாதவர்கள் போல் இருந்து வருவது கல்முனை மாநகர வரியிறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் மத்தியில் ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி பேசும் விடயமாக இருந்து வருகின்றன.

இவ்வாறு கல்முனை பிரதேசபையின் முன்னாள் உறுப்பினரும் நற்பிட்டிமுனை பழில் பவுண்டேசன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேசகீர்த்தி ஏ. அப்துல் கபூர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தை தெரிவித்துள்ளார். இக்கடிதத்தின் பிரதி அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது விடயமாக முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் தேசகீர்த்தி ஏ. அப்துல் கபூர்  மேலும் தெரிவித்துள்ளதாவது, தங்களின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கிய விடயங்களான தமிழ், முஸ்லிம் இளைஞர்களின் உயர் கல்வி நோக்கம் கருதியும் வாசகர்களின் நன்மை கருதியும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட கல்முனை பொது நூலகம் மாநகர சபையினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

இது நற்பிட்டிமுனை கிராமத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தை கட்டிட தொகுதி முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் 2010.04.04 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இப் பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி மக்கள் பாவணக்கு வழங்கப்படாத நிலையில் கடந்த 15 வருடங்களாக ஆடுகள்,மாடுகள் மற்றும் மனநோயாளர்கள் தங்கி வாழும் இடமாக இன்று வரை இருந்து வருகின்றன.

 மீன் விற்பனை நற்பிட்டிமுனை கிராமத்தின் பிரதான சந்தியில் கொட்டில்கள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் நற்பிட்டிமுனை கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதுடன் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இது போன்ற முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் கல்முனை மாநகர சபை விஷேட ஆணையாளர் போன்றவர்களுக்கு பல தடவைகளாக கடிதம் மூலம் அறிவித்து வந்ததுடன் கிழக்கு மாகாண சபை ஆளுநர் அம்பாறை கச்சேரியில் 2025.02.06 ஆம் திகதி நடத்திய நடமாடும் செயலானியிலும் நேரடியாக சமுகம் கொடுத்து இப்பிரச்சினை சம்பந்தமாக எடுத்து கூறிய போதிலும் இது கால வரையில் தீர்வு கிடைக்கவில்லை..

 இதன் காரணமாகவே தான் நான் கல்முனை மாநகர சபையினால் கடந்த ஆண்டு இறுதியில் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி மேற்கொள்ளப்பட்டு கருகி அழிந்து வரும் அழகு தாவர நடுகைத் திட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ள முறைகேடான நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கல்முனை மாநகர சபையின் பொதுமக்களின் வரி அறவிட்டின் மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான நிதியை கொண்டு முன் திட்டமிடல் இல்லாது கல்முனை மாநகர சபையின்  நிர்வாக சீர்கேட்டினாலும் மேற்பார்வையின்மையினாலும் வாடி வதங்கி அழிந்து செல்வதை இட்டு கல்முனை பிரதேச மக்கள் கவலை அடைந்துள்ளார்கள்.

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எமது ஜனாதிபதியின் ஆழ, அகல அறிவினால் கடந்த கால ஆட்சியாளர்களினால் செய்யப்பட்டு  மூடி, மறைக்கப்பட்டு இருந்த ஊழல் சம்மந்தன கோவைகளை கண்டுபிடித்து நீதிக்கு முன்னால் நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதை போன்று கல்முனை மாநகர சபையினால் கடந்த காலத்திலும் தற்போதைய நிலையிலும் இடம்பெற்றுள்ள மக்களின் முன்மொழிவுகள் இல்லாமலும் முன் திட்டமிடல் இல்லாமலும் மற்றும் மேற்பார்வை இன்றி செய்யப்பட்ட வேலைகளும் அதற்காக செலவழிக்கப்பட்ட நிதி விடயங்களையும் ஒரு குழுவை நியமித்து உண்மை நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள் என்று அந்த அறிக்கையில் ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.

 


( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ஆதார வைத்தியசாலையின் உன்னத செயற்பாடுகளுக்கு சமூக பிரதிநிதிகள்  பேராதரவு வழங்க தயாராக இருப்பதாக வைத்தியசாலை 
பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணனுடனான சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த சந்திப்பு நேற்று  வைத்தியசாலையில் நடைபெற்றது.

கூடவே, உதவிப் பணிப்பாளர் மருத்துவர் சா.இராஜேந்திரன்,  கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதிய பரிபாலகர் அ.சசிகரன், நிருவாக உத்தியோகத்தர் அருள் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.

"சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை" 
என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, கல்முனைப் பிராந்திய சமூகம் சார்பாக  சட்டத்தரணி அருள்.நிதான்சன்  தலைமையில், சமூக செயற்பாட்டாளர்கள்  சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் இன்றைய நிலை ,அது எதிர்நோக்கும் சவால்கள் ,குறைநிறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

குழுவினர் சார்பில் கருத்து தெரிவிக்கையில்..
புதிய பணிப்பாளரான குணசிங்கம் சுகுணன் அவர்களை கல்முனை சமூகம் சார்பாக வரவேற்பதுடன், அவரின் வைத்தியசாலை சார்ந்த  எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள்,  நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீண்ட கால திட்டங்கள், என்பவற்றின் வெற்றிக்கு தாங்கள் தோளோடு தோள் நின்று பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும், 
எமது பங்களிப்பை சகல வழிகளிலும் மக்கள் சார்பாக வழங்குவதற்கு முன்வருவோம் என்ற உறுதி மொழியையும் கூறினார்கள்.

அத்துடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கான வினைத்திறன் நிறைந்த சேவைகளை வழங்கும் பணிப்பாளர் அவர்களை வாழ்த்தி பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

 வைத்தியசாலை எதிர்கொள்ளும் குறைபாடுகளை சீர் செய்யவும், நோயாளர்களின் நலன்களை மதித்து திட்டமிட்டு செயல்படும் ஒரு துடிப்பான இளைஞர் என வைத்தியசாலை பணிப்பாளரை பாராட்டியதுடன், இவ்வாறான ஒருவர் இவ் வைத்தியசாலைக்கு கிடைத்தது கல்முனைப் பிரதேச மக்களுக்கு கிடைத்த சொத்து  எனவும் கூறினர்.

அத்துடன் இளம் சட்டத்தரணி நிதான்சன் தலைமையிலான குழு தேவை ஏற்படின் திங்கள் கிழமைகளில் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் குழுவினரின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார் . குழு சார்பாகவும்  வைத்தியசாலை நிர்வாக குழுவிற்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிதான்சன் தலைமையிலான குழு தேவை ஏற்படின் திங்கள் கிழமைகளில் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் குழுவினரின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார் . குழு சார்பாகவும்  வைத்தியசாலை நிர்வாக குழுவிற்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 சமூகமயமாதல் என்ற பெயரில் கலாச்சார சீர்குலைவு!

படங்கள்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சகோதர மொழி மாணவர்களின் இன்றைய நிலை. படங்கள்: சமூக வலைத்தளம்.




 #அக்கரைப்பற்று 5ம் குறிச்சியை சேர்ந்த , அக்கரைப்பற்று #மாநகர_சபையின் உறுப்பினர் பொறியிலாளர் #சிராஜுதீன் அவர்கள் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஜனாஷா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.



 ( கண்டியிலிருந்து  வி.ரி.சகாதேவராஜா)


இலங்கையின் பழம் பெரும் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா இன்று (23) புதன்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது .

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய 17 வது வேந்தர் பேராசிரியர் எம்ஏகேஎல் .திசாநாயக்க தலைமையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.

2023/24 இல் மருத்துவப்பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மருத்துவபீடமாணவர்களுக்கும்  முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் மற்றும் மிருக வைத்திய பீட மாணவர்களுக்கும் முதுமாணிப் பட்ட மாணவர்களுக்கும் இன்று புதன்கிழமை(23) காலை நான்கு மணிநேரம் பட்டமளிப்பு இடம் பெற்றது.

முன்னதாக கொட்டும் மழைக்கு மத்தியில் பட்டதாரிகள் மற்றும் வேந்தர் உபவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிருவாகிகளின் ஊர்வலம் இடம்பெற்றது.

தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெறும் ஜிம்னாசியம் மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து பல்கலைக்கழக கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைக்கப்பட்டது.

1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தில்  நடைபெறுகின்ற 86வது பட்டமளிப்பு விழாவில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டங்களை பெறுகின்றனர்.

காலையில் சுமார் 1200 பட்டதாரிகள் பட்டங்களை முறைப்படி பெற்றுக் கொண்டனர்.

பட்டமளிப்பு விழா நாளை(25) வியாழக்கிழமையும் நடைபெறுகின்றது .

இதனையொட்டி கண்டி பேராதனை பிரதேசம் களைகட்டியுள்ளது.



தென்னிந்திய சினிமாவின் ஐகான் மகேஷ் பாபுவை ஹைதராபாத்திலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் வரவேற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்!


இவ்வளவு புகழ்பெற்ற விருந்தினரை விமானத்தில் வரவேற்றதில் எங்கள் குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர்.


எங்களுடன் பறந்ததற்கு நன்றி



-யாழ். நிருபர் பிரதீபன்-

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 


சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் இன்று (18) காலை முன்னெடுக்கப்பட்டது. 

இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 


வி.சுகிர்தகுமார்                    


 திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசுக்கட்;சியின் உறுப்பினர்கள்; இன்று (10) பதவியேற்றனர்.
அக்கரைப்பற்றில் உள்ள அம்பாரை மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பங்குபற்றுதலுடன் அகில இலங்கை சமாதான நீதவானும் தழிரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேசக்கிளை தலைவருமான ஆர்.ஜெகநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அத்தோடு கட்சிக்கு விசுவாசமாக செயற்படுவதற்கான ஒப்பந்தத்திலும் உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்களான ஆர்.தர்மதாசா, கலாநேசன், நந்தபாலு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சி 10 வட்டாரங்களில் இரு வட்டாரங்களில் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனங்கள் 4 அடங்கலாக 6 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில் தெரிவான ஆறு உறுப்பினர்களுமே இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன் பின்னராக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேசம் எப்போதும் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் பயணிக்கும் மக்களை கொண்ட பிரதேசம். இருப்பினும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
இதேநேரம் பிரதேச சபை செயற்பாடுகள் தவறாகவோ அல்லது மழுங்கப்படும் நிலையிலோ செல்லுமாயின் அதற்கு எதிராக எங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். ஊழலற்ற நேர்மையான பிரதேசமாக செயற்படவும் நேர்மையான செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும் பிழையான செயற்பாடுகளை தட்டிக்கேட்கவும் எமது உறுப்பினர்கள் தயங்கமாட்டார்கள் என்றார்.
சபையின் செயற்பாடுகள் தவறாக நடைபெற்றால் சட்டநடவடிக்கை எடுக்கவும் பிரதேச மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளியிடவும் தயங்கமாட்டோம் என்றார்.


 மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, கடந்த 2022 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டும் வகையில் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக முறைப்பாடு அளித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பான விடயங்களை சட்டமா அதிபருக்கு அளித்துள்ளனர்.

சந்தேகநபர் செய்த நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதோடு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



 பாறுக் ஷிஹான்


9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு  தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச  பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை  பாடசாலை  அதிபரான பௌத்த துறவி   கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

கடந்த 15 ஆம்  திகதி அன்று  பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக  வகுப்புகள் நடைபெற்றன.இதன் போது  அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது  ​​கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறி  சிறு விளையாட்டில் ஈடுபட்டதாக  வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று  பிற்பகல் சுமார் 3.00 மணியளவில்  பாடசாலை அதிபர் தனது  கையில் மூன்று பிரம்புகளை எடுத்து  ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து  முழங்காலில் நிற்க வைத்து  அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிரம்புகள் உடையாத அளவுக்கு பிள்ளைகளின்  முதுகில்  கொடூரமாக அடித்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள்  நடந்த சம்பவத்தை  பெற்றோரிடம் தெரிவித்தனர். பின்னர்  பெற்றோர்கள் பிள்ளைகளை  பரிசோதித்தபோது  ​​அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம்  காண முடிந்தது.

பின்னர்  இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு  மேற்கொள்ள  தயாராகிக் கொண்டிருந்தபோது  ​​அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் குழு  தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட  குழந்தைகளை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது.

எனினும் இன்று  சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர்  மற்றும் அம்பாறை  மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆகியோர் இந்த பிள்ளைகள்  மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர்   இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என கூறினார்.

தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின்  ஒரு தாய் 

நாங்கள் எங்கள் குழந்தைகளை கற்றுக்கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறோம். குழந்தைகள் வித்தியாசமான செயல்களைச் செய்பவர்கள். இந்தக் குழந்தைகள் சிறு  வயதுடையவர்கள்.   கால்நடைகளை அடிப்பது போல் அவர்களை அடிக்க முடியுமா?' என்று கூறினார். என் குழந்தைகள் அந்தப் பள்ளிக்குத் திரும்பப் போக முடியாது என்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் இம்முறை   தரம் 5 பரீட்சை  எழுதுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது?என்றார்.


தாக்குதலுக்கு உள்ளான பிள்ளை  இது குறித்து கருத்து தெரிவிக்கையில்

 நாங்கள் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்றதாகவும்  பல பிள்ளைகள்  தண்ணீரைப் பயன்படுத்தி விளையாடி  கொண்டிருந்ததாகவும் கூறினார். நாங்கள் வகுப்புக்குத் திரும்பியதும்  வகுப்பு ஆசிரியர் பாடசாலை அதிபரான துறவியிடம்  இதைப் பற்றிச் சொன்னார். அதன் பிறகு  அவர் மூன்று பிரம்புகளைக் கொண்டு வந்து எங்கள் முதுகு வலிக்கும் வரை அடித்தார். நாங்கள் சத்தமாக அழுதோம் ஆனால் அவர்  எங்களை அடித்தார்  அடிக்க வேண்டாம் என்று சொன்னோம். அவர்  எங்களை அடித்தார்.எனவே  இப்போது இந்தப் பள்ளிக்குப் போக முடியாது என்றார்.

 



பாறுக் ஷிஹான்


தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி தலைமையில்  கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்களது  சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும் எனவும் இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு  காரணமான  அரச அதிகாரிகள்  பாதுகாப்பு படையினர்  மீது  உடடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மீனவ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டு -அம்பாறை மாவட்ட  மீனவர்களின் உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து  பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று மாளிகைக்காடு  தனியார்  மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர்கள் அரச உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். 

தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர்  அபூபக்கர் ஆதம்பாவாவின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மீன்பிடித்திணைக்கள உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உயர் அதிகாரிகள், கல்முனை காரைதீவு, சாய்ந்தமருது  பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் உட்பட விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். 


இதன்போது ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினரும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதுவும், ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்த மீனவர்கள் உடனாக இந்த பிரச்சினைக்கு தீர்வை கோரினர். 


 ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சர் போன்றோருக்கு இந்த பிரச்சினைகளை எத்திவைத்து தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன்.மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்கு பிரச்சினையை எத்திவைப்பதே சிறந்த தீர்வு.மீனவனின் பிள்ளையான எனக்கு மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை.  மீனவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. நான் பல வருடங்களாக பல்வேறு தரப்பினர்களையும் அணுகி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர்  அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவை நடந்த பாடில்லை. பாராளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளது. நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எனபலரிடமும் பேசியும், கலந்துரையாடியும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை. 

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போகிறது. 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருகிறது. மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பலத்த நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம். 

கடற்கொள்ளையர் சின்னத்தம்பி திருடும் ஆதாரம், அவருக்கு உடந்தையான அதிகாரிகளின் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கடற்கொள்ளையர் சின்னத்தம்பி தான் திருடுவதை கடந்த காலங்களில் ஒத்துக்கொண்டும் அவருக்கு முறையாக நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. கடற்கொள்ளையர் சின்னத்தம்பியை மட்டுமல்ல உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளும், அவர்களின் மீன்களை வாங்கும் வியாபாரிகளையும் கைதுசெய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும் என்றனர்.



இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பராட்டே சட்டம் (Parate Law) இன்று (01) முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


நபர் ஒருவர் வங்கியில் அடகு வைத்த சொத்தை மீட்கவில்லை என்றால், அந்த சொத்துகளை பகிரங்க ஏலத்தில் விற்று, அதன் மூலம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி தொகையை மீட்டெடுக்கும் வகையில் இந்த பராட்டே சட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த சட்டம் பொருளாதார நெருக்கடியின் போது (2022-2023) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 


பாறுக் ஷிஹான்


 சொட் கண் வகை துப்பாக்கி மற்றும்  ரி-56   துப்பாக்கி  ரவை  10 உடன் சந்தேக நபரை  சம்மாந்துறை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம்   திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட   இந்நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இல்லாத  'பொரதொளகாய் சொட் கண்' வகையைச் சேர்ந்த துப்பாக்கியும்  ரி 56 வகை  துப்பாக்கியின் 10 ரவைகளுடன்  சந்தேக நபர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவ்வாறு கைது செய்யப்பட்ட மலையடிக்கிராமம் 04 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேக நபர் ஓய்வு பெற்ற முன்னர் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஆவார்.

மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸாரினால் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  இச்சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Akkaraipattu 17

ஜின்னா வீதியை சேர்ந்த #மஸ்வூவுத்

(#முனீர் - SANA ELECTRICAL) காலமானார்.


அன்னார் 

மர்ஹூம்கள் #யூசுப்_மாஸ்டர் 

முஹம்மது பாத்தும்மா (#மம்மாத்தும்மா_டீச்சர்)

ஆகியோரின்

#மகனும்


#றியாசா 

அவர்களின் #கணவரும் 


#சறபா 

#ஹசீம் 

#சயான் 

ஆகியோரின் 

#தந்தையாரும் 


ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் #தாஹா_GS அவர்களின் 

#மருமகனும் 


மர்ஹூம் #நிஸ்பா_டீச்சர் 

#ஜெஸ்மின்_டீச்சர் 

#நளீர் (GAMA CONSTRUCTION)

ஆகியோரின் 

#சகோதரரும் 


மர்ஹும் 

#தாஜுதீன்_மாஸ்டர் 

ஓய்வு பெற்ற அதிபர் #சஹாப்தீன்

(#அன்சார்_மாஸ்டர்)

ஆகியோரின்

#மைத்துனரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service

0742421817


 40ற்கும் அதிகமான பொதிகளில் தலைமன்னார் கடலில் மிதந்து வந்த 124kg கேரள கஞ்சா  மீட்பு! 


மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. 

 


உலகெங்கிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வருகின்றது.


அந்த அடிப்படையில் இலங்கையிலும் பல பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்....



 


( வி.ரி.சகாதேவராஜா)

 சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். அம்பாறை தமிழ் மக்களையிட்டு சற்றும் சிந்திக்காதது  கவலைக்குரியது.

 என்று பொத்துவில் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் உபதவிசாளரும் சுயேச்சை அணியின் தலைமை வேட்பாளரும் தொழில் அதிபருமான பெருமாள் பார்த்தீபன் தெரிவித்தார் .

காலா காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொத்துவில் பிரதேச முக்கிய தூணாக விளங்கிய  பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபனுக்கு இம் முறை உள்ளூராட்சி தேர்தலில் அக் கட்சி சார்பில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் சுயேச்சையில் களம் இறங்கியுள்ளார்.
அந்த அணிக்கான சின்னம் மாம்பழம் ஆகும்.

சமகால அம்பாறை அரசியல் சூழல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்...



 இன்று தமிழ்த்தேசியம் அதல பாதாளத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறது . தலைமைகள் தமக்குள் வேறுபடுகின்றன.அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற ஆபத்து இருக்கின்றது.
 மக்களுக்காக கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல.

 எனவே பழையவர்களை தவிர்த்து புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இன்றேல் மக்கள் பெரும்பான்மை கட்சி உடன் சேர்ந்து போக நேரிடும்.

கடந்த முறை செய்த தவறை இம்முறையும் செய்யக்கூடாது.
 மக்கள் மனைநிலை வேறு அரசியல்வாதிகளின் மனநிலை வேறாக இருக்கின்றது.

 எல்லோரும் சேர்ந்து தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் .

மக்களே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.







அரச அதிபர் பங்கேற்ற கிரிக்கெட்  சுற்றுப் போட்டி !
தெஹியத்தகண்டிய பிரதேச செயலக அணி சாம்பியன்
( வி.ரி.சகாதேவராஜா)

2025 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி  உஹன பொலிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் தெஹியத்தகண்டிய பிரதேச செயலக அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது, 

மாவட்ட செயலக அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

உஹன பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்தப் போட்டியில் மாவட்டச் செயலகம் மற்றும் உஹன, தமன, மஹாஓயா, பதியதலாவ மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச செயலகங்களின் அணிகள் பங்கேற்றன.

விளையாட்டில் பங்கேற்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பேசுகையில்..

எதிர்காலத்தில் இதுபோன்ற போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பங்கேற்க மாவட்டத்தின் பிற பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. போட்டியை ஏற்பாடு செய்த உஹன பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றார்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.