Showing posts with label Sri லங்கா. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும். உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

 


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்          
 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுத்த சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று (21) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.
 நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச உதவிப்பிரதேச செயலாளர்களான சுபாகர் மற்றும் பிரணவரூபன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர்கள் ஆலய தலைவர்கள் சமூக அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் மாணவர்களின் நடன கலைநிகழ்வுகளோடு வரவேற்க்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டு சர்வதேச யோகா தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு யோகா பயிற்சி நெறி ஆரம்பமானது.
 இதில் 2000 ஆயிரம் வரையிலான மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யோகா தின ஒழுங்குகள் தொடர்பாகவும் பாடசாலைகள் ஆலயங்கள் சமூக அமைப்புக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பங்களிப்பு தொடர்பிலும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் குறிப்பிட்டார்
இறுதியில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் மாவட்ட யோகா தின ஏற்பாடுகளை சிறப்பு முன்னெடுத்த பிரதேச செயலாளர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி கூறினார்.
அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் காலத்திலும் சிறந்த முறையில் இச்செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

 நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை 

பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அமைச்சகங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடி அல்லது இணைய வழிக் கூட்டங்கள் நடத்தப்படுவதால், தங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.



அரசு நிர்வாக சுற்றறிக்கை (இலக்கம் 27/2023) இன் படி, பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.

 (  வி.ரி.சகாதேவராஜா)


பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  (5) வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில், மொனராகலை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அக் கூட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சமூக அமைப்பினர் உள்ளிட்ட சிலர் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். எனினும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பான திகதி குறித்து இவர்களது கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லையென தெரியவருகிறது.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பின்வரும் முக்கிய நிகழ்வுகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டன.

முக்கிய திகதிகள் விபரம்:
காட்டுப்பாதை திறப்பு: 2026.07.10 வெள்ளி

காட்டுப்பாதை மூடல்: 2026.07.25 சனி  

கந்தனின் ஆடிவேல் திருவிழா ஆரம்பம்: 2026.07.15 புதன்

கந்தனின் தீர்தோற்சவம்: 2026.07.30 வியாழக்கிழமை 

15 நாட்கள் மட்டுமே காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறந்திருக்கும்.

கதிர்காமம் செல்ல திட்டமிட்டிருக்கும் பக்தர்கள் இந்த திகதிகளை குறித்து வைத்துக்கொள்ளுவது நல்லது.

வருடாந்தம்  30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரை அடியார்கள் காட்டுப் பாதையில் செல்வது வழமை.
பாதை திறப்பு முதல் நாளிலே சுமார் 8 ஆயிரம்   முதல் 10 ஆயிரம் பேர் வரை இறங்குவார்கள்.

பழைய காலத்தில் 10 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட காட்டுப் பாதை அண்மைய வருடங்களில் கொடியேற்றத்துக்கு முன் குறைந்தது   6 நாட்களுக்கு முன்  திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வருடம் 5 நாட்களாக  மாற்றம் பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் கவலையளிக்கிறது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம் வெகுவிரைவில் நடைபெறவிருக்கிறது. அக் கூட்டத்தில் இத் திகதி மாற்றம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 🚨 **Interview List Released**


📌 *Sri Lanka Planning Service Grade III (Open)*

📌 Interview List 02 Released

📅 Interview Date: 07.06.2026


Check your name in the interview list now.


🔗 https://www.guruwaraya.lk/2026/06/sri-lanka-planning-service-grade-iii.html


🇱🇰 ශ්‍රී ලංකා ක්‍රමසම්පාදන සේවය III ශ්‍රේණිය - සම්මුඛ පරීක්ෂණ ලැයිස්තුව නිකුත් කරයි.


🇱🇰 இலங்கை திட்டமிடல் சேவை தரம் III - நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியீடு.

 



குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி 2026 ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதன்மூலம் அடுத்தடுத்த ஐபிஎல் கோப்பைகள் வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது ஆர்சிபி.


ராயல் சேலஞ்சர்ஸின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார் விராட் கோலி. 156 என்ற இலக்கை ஆர்சிபி சேஸ் செய்ய, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 75 ரன்கள் எடுத்து தன் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் விராட் கோலி.


பந்துவீச்சாளர்கள் தங்கள் அணிக்கு நல்லதொரு செயல்பாட்டைக் கொடுத்து போட்டியை எளிமையாக்கிக் கொடுத்தாலும், பேட்டிங் செய்ய சற்றே கடினமான அந்த ஆடுகளத்தில் ஆட்டம் தங்கள் கையை விட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டார் விராட் கோலி.


இந்த சீசனில் 675 ரன்கள் எடுத்து தன் அணியின் டாப் ரன்ஸ்கோரராகத் திகழ்ந்திருக்கிறார் விராட். ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் 4வது இடத்தில் முடித்திருக்கிறார். அதுவும் 165.84 என்ற ஸ்டிரைக் ரேட்டில். விராட்டின் 19 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சிறந்த ஸ்டிரைக் கொண்ட சீசன் இதுதான்.


ஒரு பேட்டராக விராட் கோலி இம்முறை தன்னுடைய புதியதொரு பரிணாமத்தைக் காட்டியிருக்கிறார். சீரான ஆட்டத்தை வேகமாகவும் தன்னால் கொடுக்க முடியும் என்று அவர் நிரூபித்திருக்கிறார். அதன் உச்சமாக, இறுதிப் போட்டியில் 25 பந்துகளிலேயே அரைசதம் கடந்து, தன் அதிவேக ஐபிஎல் அரைசதத்தையும் அவர் பதிவு செய்தார்.



இப்படி சாதனைகளுக்காகவும், புதுமைக்காகவும் மட்டும் விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் முக்கியத்துவம் பெற்றுவிடவில்லை. இது, 19 ஆண்டுகளில் விராட் கோலியால் செய்ய முடியாமல் இருந்த ஒரு விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.2026 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது குஜராத் டைட்டன்ஸ். குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி-க்கு எதிராகத் தோற்றிருந்தாலும், குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது அந்த அணி.


இந்த சீசன் தொடங்கியபோது குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்று உண்மையாக நான் எதிர்பார்க்கவில்லை. அந்த அணியில் சில ஓட்டைகள் இருந்தன. ஆனால், அதையும் மீறி, தங்கள் கைவசம் இருந்தவற்றை முழுமையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி இந்த இடத்துக்கு அந்த அணியை எடுத்து வந்திருக்கிறது ஆசிஷ் நெஹ்ராவின் பயிற்சியாளர் குழு. அதற்காக நிச்சயம் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.


இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை. அது அவர்களை டாப் 2 இடங்களில் முடிக்க வைத்தது. அவர்களுக்கு பிளே ஆஃப் சுற்றில் 2வது வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது.


இப்படி தேவைப்படும் நேரத்தில் தேவைப்பட்ட செயல்பாடுகளைக் கொடுத்து, சரியான கட்டத்தில் எழுச்சி பெற்று தற்போது கோப்பைக்கு மிகவும் அருகில் வந்திருக்கிறது டைட்டன்ஸ்.


அவர்களின் இந்த எழுச்சி மிகு செயல்பாட்டுக்குக் காரணமாக இருந்த 5 விஷயங்கள் என்ன? இந்த இறுதிப் போட்டியில் அவர்கள் என்ன யுக்தியைக் கையாள வேண்டும்?


விளம்பரம்


காரணம் 1: கில் - சாய் சுதர்ஷன் சாதனைக் கூட்டணி

RCB vs GT, சுப்மன் கில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல், இறுதிப்போட்டி, சாய் சுதர்ஷன், விராட் கோலிபட மூலாதாரம்,ANI

சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் கூட்டணி ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த தொடக்க ஜோடிகளுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் தங்களுடைய 11வது 100 ரன் பார்ட்னர்ஷிப்பை அவர்கள் கட்டமைத்தார்கள். ஐபிஎல் அரங்கில் அதிக 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் என்ற சாதனையையும் இவர்கள் இந்த குறுகிய காலகட்டத்தில் செய்திருக்கிறார்கள்.


அதுமட்டுமல்ல, இவர்கள் இருவரும் இணைந்து 48 போட்டிகளில் 2944 ரன்கள் (சராசரி - 64) எடுத்திருக்கிறார்கள். இது முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி - ஏ.பி.டி வில்லியர்ஸ் கூட்டணியை விட 179 ரன்களே குறைவு.


அவர்களின் பலமே அவர்கள் பாரம்பரியமான கிரிக்கெட்டையே தங்களின் அணுகுமுறையாகக் கொண்டிருக்கிறார்கள். ரிஸ்க்கான ஷாட்களை அவர்கள் அதிகம் ஆடுவதில்லை. அபாயம் குறைவான ஷாட்கள் ஆடினாலும், நல்ல ரன் விகிதத்தைத் தக்கவைக்கிறார்கள். இடைவெளியைக் கண்டுபிடிப்பதிலும், பவுண்டரிகள் அடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

சபரிமலை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு

சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?

உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? சரிசெய்ய முடியுமா?

நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?

கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் (1780–1831) "போர் பற்றி" (On War) நூலின் ஆசிரியர் ஆவார்

'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு

சீதா தேவியின் கூற்றுப்படி, 26 ஆண்டுகளுக்கு முன்பு, முனி லால் ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காகக் கிளம்பினார்.

26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் - மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்

End of அதிகம் படிக்கப்பட்டது

அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நல்ல புரிதல் இருக்கிறது. அதனால் அவர்களால் ஓடியும் நன்கு ரன் குவிக்க முடிகிறது. அவர்களுக்குள் புரிதல் இருப்பதுபோல், தங்களின் ஹோம் கிரவுண்டான ஆமதாபாத்திலுள்ள ஆடுகளங்கள் பற்றிய புரிதலும் அவர்களுக்கு நன்றாக இருக்கிறது. அதனால், அங்கு அவர்களால் சீராக செயல்பட முடிகிறது.


என்னதான் நாம் அவர்களின் செயல்பாட்டை விளக்க நினைத்தாலும், இது அசாத்தியமானது ஒன்று. ஏனெனில், இப்படியொரு சீரான செயல்பாட்டை ஒவ்வொரு சீசனும் கொடுப்பது எளிதானதல்ல. இந்த சீசனிலும் அவர்கள் இந்த செயல்பாட்டைக் கொடுத்து தங்கள் அணியை நல்ல நிலைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.


காரணம் 2: பவர்பிளேவில் மிரட்டும் சிராஜ் - ரபாடா கூட்டணி

RCB vs GT, சுப்மன் கில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல், இறுதிப்போட்டி, சாய் சுதர்ஷன், விராட் கோலிபட மூலாதாரம்,ANI

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் வளங்களை சிறப்பாகவும் முழுமையாகவும் பயன்படுத்துகிறது என்பதற்கான ஒரு உதாரனம் முகமது சிராஜ் மற்றும் ககிஸோ ரபாடா ஆகியோரின் செயல்பாடு.


இந்த சீசன் பவர்பிளேவிலேயே எதிரணிகளை இவர்கள் இருவரும் பதம் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 6 ஓவர்களில் இவர்களை சமாளிப்பது எதிரணிகளுக்கு பெரும் சவாலாக இருந்திருக்கிறது.


இந்த சீசன் பவர்பிளேவில் மட்டுமே 18 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக பவர்பிளே விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ககிஸோ ரபாடா. சிராஜ் தன் பங்குக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதனால் பெரும்பாலான போட்டிகளில் இவர்கள் இருவரை வைத்தே பவர்பிளேவின் 6 ஓவர்களையும் முடித்தார் ஷுப்மன் கில்.


இவர்களின் இந்த சிறப்பான சீரான செயல்பாட்டுக்குக் காரணம், அவர்கள் தங்களின் திட்டங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.


சிராஜ் தன் முதல் இரு ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்ய முயற்சி செய்கிறார். எப்போது ஸ்விங் இல்லையோ அப்போது 'ஹார்ட் லென்த்தில்' ஸ்டம்ப் லைனில் பந்துவீசத் தொடங்குகிறார். ரபாடாவோ முதல் பந்து முதலே 'ஹார்ட் லென்த்தில்' வீசுகிறார். அதுவும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக ஸ்டம்ப் லைனில் பந்துவீசிக் கொண்டே இருக்கிறார். அது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.


அவர்களின் மந்திரம் இதுதான் - அந்த ஹார்ட் லென்த் பந்துகளை தொடர்ச்சியாக வீசுகிறார்கள். அதை பெரும்பாலும் துல்லியமாக செயல்படுத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து சீராகவும் சரியாகவும் செயல்படுத்துவது அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.


காரணம் 3: மாற்றம் தந்த ஜேசன் ஹோல்டர்

RCB vs GT, சுப்மன் கில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல், இறுதிப்போட்டி, சாய் சுதர்ஷன், விராட் கோலிபட மூலாதாரம்,ANI

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சீசன் மாறத் தொடங்கியதே ஜேசன் ஹோல்டரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்ததன் பிறகு தான். பத்தே போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் ஹோல்டர். அதுவும் 7.54 என்ற எகானமியில். சராசரியாக ஒவ்வொரு 13 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.


பவர்பிளே, மிடில் ஓவர்கள், டெத் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பாகப் பந்துவீசுகிறார் ஹோல்டர். அவரது உயரத்தைப் பயன்படுத்தி நன்கு பவுன்ஸ் ஏற்படுத்துகிறார். நன்கு 'வைட் ஆஃப் தி கிரீஸ்' சென்று வீசுவதால் அவரால் பேட்டர்களுக்கு சவால் கொடுக்க முடிகிறது. இந்த சீசனில் விராட் கோலியின் விக்கெட்டை இரண்டு முறை (3 போட்டிகளில்) வீழ்த்தியிருக்கிறார்.


பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவரால் கடைசி கட்டத்தில் சில நல்ல பங்களிப்புகளைக் கொடுக்க முடியும். அவர் ஒரு நல்ல ஃபீல்டரும் கூட. அதற்கும் மேலாக களத்துகுள் அவர் நல்ல உத்வேகத்தைக் கொண்டுவருவார். ஒட்டுமொத்தமாகவே அவர் அணிக்குள் பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அதுதான் அவர்களின் சீசன் மாறுவதற்கான காரணமாக அமைந்தது.


அவர் இல்லாமல் விளையாடிய 6 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது. அவர் ஆடத் தொடங்கிய பிறகு, 10 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்றிருக்கிறது. டைட்டன்ஸின் காம்பினேஷன், உத்வேகம், செயல்பாடு அனைத்திலுமே நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் ஜேசன் ஹோல்டர்.


காரணம் 4: பேட்டர் வாஷிங்டன் சுந்தரின் எழுச்சி

RCB vs GT, சுப்மன் கில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல், இறுதிப்போட்டி, சாய் சுதர்ஷன், விராட் கோலிபட மூலாதாரம்,ANI

டைட்டன்ஸ் அணியின் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்பட்டது அவர்களின் மிடில் ஆர்டர் தான். இந்த சீசனின் தொடக்கத்திலும் அதை நன்றாகவே பார்க்க முடிந்தது. இந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று முன்பு குறிப்பிட்டதன் காரணம் கூட மிடில் ஆர்டரில் இருந்த பிரச்னை தான். ஆனால், அதை சீசன் செல்லசெல்ல அவர்கள் ஓரளவு நன்றாகவே கையாண்டார்கள்.


இந்த முன்னேற்றத்துக்கான முக்கிய காரணம் வாஷிங்டன் சுந்தரின் ஃபார்ம். முந்தைய சீசனில் 4வது வீரராகக் களமிறங்கிக் கொண்டிருந்தபோது அவரால் பெரிய ஸ்கோர்கள் எடுக்க முடியவில்லை. இந்த சீசனில் அவர் 5வது வீரராக ஆடிக் கொண்டிருகிறார். ஆரம்பத்தில் 4வது வீரராக விளையாடிய போதும் அவருடைய 'என்ட்ரி பாயின்ட்' அவருக்கு ஏற்றதாக இருந்தது. அது அவருடைய ஆட்டத்துக்கு உதவுவதாக இருந்தது.


இதற்கு முன் வாஷிங்டன் சுந்தர் எந்த ஐபிஎல் சீசனிலும் 150 ரன்களுக்கு மேல் எடுதத்தில்லை. ஆனால், இந்த சீசனில் 32.70 என்ற சராசரியில் 327 ரன்கள் எடுத்திருக்கிறார் அவர். 152.80 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டிலும் அதை எடுத்திருக்கிறார். தேவையான போது சில நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்தார்.


சிறு பங்களிப்புகள் மட்டும் என்றில்லாமல் வெற்றிக்கு வழிவகுத்த சில செயல்பாடுகளையும் இந்த சீசனில் கொடுத்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து தன் அணி 150 ரன்களைக் கடக்க உதவிபுரிந்தார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான சேஸில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் தன் அணியை வெற்றி பெறவைத்தார். குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இந்த சீசனில் பூர்த்தி செய்திருக்கிறார் அவர்.


அவர் மட்டுமல்ல, கடந்த சில போட்டிகளாக ராகுல் திவாதியாவும் சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். ஜேசன் ஹோல்டரும் அவ்வப்போது சில சிறு பங்களிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


மெல்ல அந்த மிடில் ஆர்டரும் ஓரளவு நல்ல பங்களிப்பைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதேசமயம் இறுதிப் போட்டியை வெல்லவேண்டும் எனில் அனைவருமே நல்லதொரு பங்களிப்பைக் கொடுக்கவேண்டும். இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மிடில் ஆர்டருக்கு அந்த சவால் காத்திருக்கிறது.


காரணம் 5: ஆசிஷ் நெஹ்ரா

RCB vs GT, சுப்மன் கில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல், இறுதிப்போட்டி, சாய் சுதர்ஷன், விராட் கோலிபட மூலாதாரம்,ANI

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த இடத்தில் இருப்பதற்கான காரணம் ஆசிஷ் நெஹ்ரா தான். ஷுப்மன் கில் களத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், அணியை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ஆசிஷ் நெஹ்ரா தான் அந்த அணியின் ஆதாரமாக இருந்திருக்கிறார்.


2022-இல் தொடங்கப்பட்ட அந்த அணி, 5 சீசன்களில் ஒரு முறை தான் லீக் சுற்றைத் தாண்டவில்லை. 4 முறை பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது டைட்டன்ஸ். 3 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. இப்படி சீரான செயல்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், அவர் கட்டமைத்திருக்கும் ஒரு சூழ்நிலை.


அபிஷேக் ஷர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பேட்டிங் அணுகுமுறையை மாற்றினார்கள் என்று நாம் சொல்வோம். அந்த வகையில் பந்துவீச்சு அணுகுமுறையை மாற்றியது குஜராத் டைட்டன்ஸ் தான்.


பெரும்பாலான போட்டிகளில் ஒரேயொரு ஸ்பின்னரைத்தான் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான ஓவர்களை வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்டே முடிக்கிறார்கள். 4 உலகத்தர வேகப்பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைத்திருக்கிறார்கள். பவர்பிளேவில் இருவரை மட்டுமே பயன்படுத்தி அச்சுறுத்துகிறார்கள். தங்கள் அணிக்கு ஏற்ப ஆடுகளங்களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


மற்ற அணிகள் 250 ஸ்கோர்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கும் போது, தங்கள் அணியின் பலத்தை உணர்ந்து அதற்கேற்ப மட்டுமே தன் அணியை செயல்பட வைத்திருக்கிறார் நெஹ்ரா. அவர்கள் தங்கள் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் அது இவரால் தான்.


அணிக்குள் ஒரு நல்ல சூழ்நிலையையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த அணியில் ஆடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணி சீரான செயல்பாட்டைக் கொடுப்பதற்கு மிகமிக முக்கியமானது அந்த நல்ல சூழ்நிலைதான். அது அவர்களுக்கு அமைந்திருக்கிறது. நல்ல முடிவுகளையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.


இறுதிப் போட்டியின் முக்கிய சவால்கள்

RCB vs GT, சுப்மன் கில், ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல், இறுதிப்போட்டி, சாய் சுதர்ஷன், விராட் கோலிபட மூலாதாரம்,ANI

குஜராத் டைட்டன்ஸ் தற்போது இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டது. அவர்களுக்குப் பல விஷயங்கள் சாதகமாக அமைந்தன. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் அவர்களுக்கு என்ன சவால்கள் காத்திருக்கின்றன? அவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?


இந்தப் போட்டியில் நிச்சயமாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஷ் ஹேசில்வுட் இருவரும் டைட்டன்ஸ் ஓப்பனர்களுக்கு சவாலாக அமைவார்கள். குறிப்பாக புவனேஷ்வர் குமார். அவர் ஸ்விங் செய்யாமல், பந்தை சீம் மூலம் உள்ளே கொண்டுவர முயற்சி செய்வார் என்று நான் நினைக்கிறேன்.


ஷுப்மன் கில்லை நன்கு செட் செய்து அப்படி உள்ளே கொண்டுவரும் பந்தின் மூலம் தடுமாறச் செய்யலாம். அதேபோல் சாய் சுதர்ஷனுக்கும் தொடர்ச்சியாக ஸ்டம்ப் லைனில் வீசப் பார்ப்பார். ஹேசில்வுட் ஹார்ட் லென்த்தில் தான் நிச்சயம் வீசப்போகிறார். ஆனால், இரண்டு பேட்டர்களுக்கும் அடிப்பதற்கான வெளியை ஏற்படுத்தாமல் ஸ்டம்ப் லைனிலேயே பந்துவீசக் கூடும்.


கில், சாய் சுதர்ஷன் இருவருமே பெரிய ரிஸ்க் எடுக்காமல் ஆடக்கூடிய பேட்டர்கள் என்பதால், அடிக்கக் கூடிய பந்துகளை வீசாமல், அந்த பேட்டர்களை ரிஸ்க் எடுக்கத் தூண்டுவதே ஆர்சிபி பௌலர்களின் திட்டமாக இருக்கும். அதை டைட்டன்ஸ் பேட்டர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அந்த அணியின் ஸ்கோரைத் தீர்மானிக்கும்.


பந்துவீச்சைப் பொறுத்தவரை சிராஜ், ரபாடா இருவரும் தங்களின் திட்டத்தைத் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இறுதிப் போட்டி, ஆர்சிபி என்றெல்லாம் நினைக்காமல், புதிதாக எதையும் முயற்சி செய்யாமல், அவர்கள் தங்களுடைய 'ஹார்ட் லென்த்' திட்டத்தையே நடைமுறைப்படுத்தவேண்டும். குவாலிஃபயர் 2 போட்டியில் அவர்கள் அதைத்தான் செய்தார்கள்.


வைபவ் சூர்யவன்ஷிக்காக அவர்கள் திட்டத்தை மாற்றி யார்க்கர், ஸ்லோயர் பால்கள் என்றெல்லாம் எதுவும் முயற்சி செய்யவில்லை. அதையே இந்த இறுதிப் போட்டியிலும் தொடரும் பட்சத்தில், அவர்களின் 'ஹோம் கிரவுண்டில்' அவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கக்கூடும்.


(கட்டுரையாளர் பாபா இந்திரஜித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர். இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

 


பருத்தித்துறை கடலுக்குச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக இந்தியாவின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படை மற்றும் ராடார் கண்காணிப்பு மூலம் உள்ளூர் கடற்பரப்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீனவர்கள் கண்டறியப்படாததால், இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனுமதி மற்றும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


மேலும், சர்வதேச கடற்பரப்பிலும் தேடுதல் மேற்கொள்ள தனியார் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


 


வெசாக் பண்டிகை காலத்தில் தேசிய மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி மின்கலங்களை இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.


தற்போதைய மின் நுகர்வு குறைவடைந்துள்ள நிலையிலும், வெசாக் காலத்தில் மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை பேணும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள கலங்களின் உரிமையாளர்கள் தற்காலிகமாக அவற்றை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


காரைதீவு பிரதான வீதியோர வடிகான்கள் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்பியுள்ளதால், சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.



இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் வடிகான்களில் நீர் சரிவர ஓடாத காரணத்தால், மழைநீர் வீதியில் தேங்கி வெள்ளப்பெருக்கு நிலை உருவாகுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீண்டகாலமாக வடிகான் சுத்திகரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை , மூடிகளுமில்லை என குற்றஞ்சாட்டும் பிரதேச மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வடிகான்களை சுத்தம் செய்து, நிரந்தர தீர்வை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, காரைதீவு பிரதான வீதியின் பராமரிப்புக்கு பொறுப்பான கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை இவ்விடயத்தில் அவசர கவனம் செலுத்தி மக்களின் அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 



இலங்கை மத்திய வங்கி (CBSL) மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் லீசிங் வசதிகளுக்கு புதிய Loan-to-Value (LTV) வரம்புகளை அறிவித்துள்ளது. 


இந்த புதிய விதிமுறைகள் 2026 மே 25 முதல் அமுலுக்கு வருகின்றன.


:


🔹 ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட / பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்

➡️ அதிகபட்ச கடன் அல்லது லீசிங் மதிப்பு வாகன சந்தை மதிப்பின் 60% வரை மட்டுமே.


🔹 புதிய அல்லது ஒரு வருடத்திற்குக் குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்


வாகன வகைப்படி தனித்தனி வரம்புகள்.


வர்த்தக வாகனங்கள்

(லொறி , Single Cab, Transport Vehicles போன்றவை)

அதிகபட்ச LTV : 60%


தனிப்பட்ட பயன்பாட்டு புதிய வாகனங்கள்

(Car, SUV, Van, Three Wheeler, Motorcycle போன்றவை)

➡️ Lease / Loan பெற முடிவது 40% மட்டுமே!

➡️ மீதமுள்ள 60% தொகையை வாங்குபவர் முன்பணமாக செலுத்த வேண்டிய நிலை.


⚠️ இதனால் என்ன நடக்கும்?


▪️ Brand New vehicles வாங்குவது சாதாரண மக்களுக்கு மிகவும் கடினமாகலாம்.

▪️ அதிகமான Down Payment தேவைப்படும்.

▪️ Leasing மற்றும் vehicle loan approval குறைய வாய்ப்பு.

▪️ Vehicle sales மற்றும் import market மீது தாக்கம் ஏற்படலாம்.

▪️ Car prices மற்றும் resale market-இலும் மாற்றங்கள் வரலாம்.


🏦 இந்த விதிமுறைகள் அனைத்து:

✔️ Licensed Commercial Banks

✔️ Licensed Specialised Banks

✔️ Finance Companies

✔️ Leasing Establishments

மீதும் பொருந்தும் என CBSL தெரிவித்துள்ளது.


📄 மேலும், 2026 மே 25க்கு முன் திறக்கப்பட்ட LC (Letter of Credit) கொண்ட ஆனால் இன்னும் finance பெறாத வாகனங்களுக்கு இடைக்கால சலுகை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.



“வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாவிடின் 06 மாத காலம் சிறை செல்ல நேரிடுமென்று உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்தச் சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தப்பட வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


‘‘மக்கள் விடுதலை முன்னணி, இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டதே வரலாறு. 1994ஆம் ஆண்டு சந்திரிகாவின் அரசாங்கத்தில் ஒன்றிணைந்தார்கள். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவந்து அரச வருமானத்தை வீழ்ச்சிக்குக் கொண்டுசென்று நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளினார்கள். இதுதான் 75 ஆண்டுகால சாபம். இந்த சாபத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு பிரதான பங்குண்டு.


பலவந்தமான வகையில் வரிக் கொள்கையை அமுல்படுத்த முடியாது. வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாவிடின் 6 மாத காலம் சிறை செல்ல நேரிடும் என்று உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. இந்தச் சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தப்பட வேண்டும்.


பலவந்தமான முறையில் வரியை அறவிடுவதற்கு சட்டம் இயற்றும் அரசாங்கம் 4 கம்பனிகளுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது? முறைமை மாற்றம் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கமைய நடுத்தர மக்களின் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கமைவாகவே செயற்படுகிறது. மின்சாரம், எரிபொருள், எரிவாயு விலைகள் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்படுகின்றன. மக்களின் பக்கம் இருந்துகொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் சகல தீர்மானங்களும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளன’’ என்றார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.