Showing posts with label e. Show all posts

 


உலக அமைதிக் குறியீடு 2025 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 17 வது ஆண்டாக ஐஸ்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளது.

 


உலக  சுற்றாடல் தினநிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில்  பிரதேச செயலாளர்  தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது....


ஜே.கே.யதுர்ஷன்..


 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக  சுற்றாடல் தின  முன்னிட்டு   திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச  செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும்  மரக்கன்றுகள் நடுகை  நிகழ்வும் இடம்பெற்றது....


 இன் நிகழ்வில் பொலித்தின் பிளாஷ்ரிக் பாவனைகள் கட்டுப்படுத்தல்  பற்றி விழிப்புணர்வும்  சுற்றுச்சுழல் பாதுகாப்பு ,சுற்றாடல் தினம்  பற்றிய உரைகளும் இடம்பெற்றது....



 இவ் நிகழ்வில் திருங்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு   பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் மற்றும் கிராம  சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்  கிராம அபிவிருத்தியோத்தர்கள் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர் மற்றும்  விளையாட்டுகழக உறுப்பினர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்....

 


வி.சுகிர்தகுமார்                   


 திருக்கோவில் பிரதேச சபைத்தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பதவியேற்றதன் பின்னர் இன்று முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக பிளாஸ்டிக் மூலமான மாசுபடுத்தலை முடிவுக்கு கொண்டுவரல் எனும் கருப்பொருளுக்கமைய உலக சுற்றாடல் தினம் வாரத்தின் இறுதி நாளான இன்று 05ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு பெரிய முகத்துவாரம் களப்பினை அன்மித்த களப்பு பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(05) இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில்; இடம்பெற்ற பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பிரதேச சபை உபதவிசாளர் செயலாளர் சீ.திவாகரன் வைத்தியர் மோகனகாந்தன் பிரதேச செயலக அதிகாரிகள் பொலிசார் பிரதேச சபை ஊழியர்கள் அரச திணைக்களங்கள், பொது சமூக நலன் தன்னார்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களால்; பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.
இதேநேரம் களப்பின் கரையோரங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதன் பின்னராக கருத்து தெரிவித்த தவிசாளர் புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கையின் பிரகாரம் பிளாஸ்டிக் பாவனையை தடுத்து சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையோடு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இதற்காக அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.


 ( வி.ரி.சகாதேவராஜா )

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் நியமிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி தவிசாளராக தங்கராசா வரதராஜன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் போட்டியின்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவான  ஒரேயொரு தவிசாளர் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆவார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனியொரு சுயேட்சை அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது திருக்கோவில் பிரதேச சபையில் மாத்திரமே என்பது இவ்வண் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் 
சுயேட்சைக்குழு ஒன்றின் அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார்  தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்திருந்தது.

மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்களில்  சுயேட்சை குழு அமோக வெற்றியை ஈட்டியிருந்தது.

வரலாற்றில் முதல் முறையாக திருக்கோவில் பிரதேச சபை சுயேச்சை அணி வசமாகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது 

திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை அணி ஒன்று 08 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை அணி தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தமை தெரிந்ததே..

16 ஆசனங்களில் 50 வீதமான 08 ஆசனங்களை சசிகுமார் தலைமையிலான சுயேச்சை அணி பெற்றிருந்தது.

எனவே அங்கு  சுயேட்சை அணித் தலைவரான பிரபல தொழிலதிபரும்,  கல்முனை ரோட்டரி கழக முன்னாள் தலைவருமான  சுந்தரலிங்கம் சசிகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.