Showing posts with label Al. Show all posts


Rep/ஜெஷீர்.

பாறுக் ஷிஹான்)

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று(5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல்  கிடைத்துள்ளதாக  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்

அப்பகுதியில் ஒரு கிழமைக்கு முன்னர் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக சந்தேகத்துடன் அப்பகுதிக்கு சென்ற சிலர் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை  அக்கரைப்பற்று பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.


 



மொரட்டுவை பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, பல்கலைக்கழகத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் துறை கூறுகிறது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.