Showing posts with label SriLanka Sports. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும். உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,790 என குறிப்பிட்டார். 


மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளனர்.


அதனடிப்படையில், விஞ்ஞானத்தில் 70.1% மற்றும் கணிதத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


டெங்கு நோய் பரவலால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஐ.டி.எச்., ராகம, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 


கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 11,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த நிலைமை வைத்தியசாலைகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ள அதேவேளை, முன்னிலை வைத்தியசாலைகளுக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது.


டெங்கு நோயினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஐடிஎச், ராகம, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அரசாங்கத்துக்கும் பாரிய நட்டம் ஏற்படும். டெங்கு நோயாளர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் அவர்களை பராமரிப்பதற்கு அரசாங்கத்தினூடாக அதிக நிதி செலவிட வேண்டும். அதன் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளவே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.


இந்தப் பின்னணியில் நேற்றிலிருந்து (15) எதிர்வரும் 20ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.


இதேவேளை, நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 41,466 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் கண்டுள்ளதுடன் 24 வரையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.


அவர்களில் நால்வர் பாடசாலை மாணவர்கள் என்று கூறப்படுகின்றது. 89க்கும் அதிகமான வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு டெங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட சம்மாந்துறைத் தொகுதிக்குட்பட்ட இறக்காமம் பிரதேசத்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் புனரமைப்பு மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று இறக்காமத்தில் நடைபெற்றது.


சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் மற்றும் கட்சியின் அடித்தள கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், கட்சியின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வட்டார அமைப்பாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நப்ரிஸ் மற்றும் இறக்காமம் – வரிப்பத்தான்சேனைப் பகுதியைச் சேர்ந்த வட்டார அமைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், எதிர்கால அரசியல் மற்றும் சமூக சேவைத்திட்டங்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

 


முன்னாள் அரச புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சற்று நேரத்திற்கு முன்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 


இலங்கையின் ஹொரணை - அங்குருவாதோட்டை - படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


இசுரு அனுஷ்க என்ற நபரினால் இந்த முதியோர் இல்லம் நடாத்தி செல்லப்பட்டுள்ளதுடன், அந்த நபர் போலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 11ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த முதியோர் இல்லத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் இதுவரை என்ன தெரியும்?

இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 12 பேர் பலி

அங்குருவாதோட்டை - படகொட பகுதியிலுள்ள 'மவ்பிய சேவன சேனேஹசே கெதெல்ல' முதியோர் இல்லத்தில் நேற்று (03) பிற்பகல் பாரிய தீ பரவலொன்று ஏற்பட்டது.


இந்த தீ விபத்து தொடர்பில் தமக்க மாலை 5.59 அளவில் தகவல் கிடைக்கப் பெற்றதாக ஹொரணை தீயணைப்பு பிரிவு பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



இந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள நபர்களை பராமரிப்பதற்காக இரண்டு ஊழியர்கள் இருந்துள்ளதுடன், முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நபரொருவர் பராமரிப்பதற்காக குடும்பமொன்றிடமிருந்து மாதாந்தம் 35000 ரூபா பணம் பெறப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளனர்.


இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 12 பேர் பலி

நீதவான் விசாரணைகளில் வெளியான தகவல்கள்

தீக்கிரையான முதியோர் இல்லம் தொடர்பான விசாரணைகளை நடாத்துவதற்காக ஹொரணை பிரதம நீதவான் இன்று (04) முற்பகல் சம்பவ இடத்திற்கு சமூகமளித்ததாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


தீக்கிரையான முதியோர் இல்லத்திற்குள் 10 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளனர்.

தீ பரவிய சந்தர்ப்பத்தில் முதியோர் இல்லத்திற்குள் சுமார் 69 பேர் இருந்துள்ளதாகவும், ஹொரணை தீயணைப்பு பிரிவு, போலீஸார், பிரதேசவாசிகளின் உதவியுடன் 51 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


நீதவான் விசாரணைகள் நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் இந்த முதியோர் இல்லத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய இசுறு அனுஷ்க பெரேரா போலீஸாரினால் கைது செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் போலீஸார் மற்றும் அரச பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.


சம்பவத்தை நேரில் கண்டவர்கள் என்ன சொல்கின்றார்கள்?

இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 12 பேர் பலி

இந்த தீ பரவிய சந்தர்ப்பத்தில் முதியோர் இல்லத்திலிருந்த நபர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.


தீ பரவிய முதியோர் இல்லத்திற்குள் சிக்கியிருந்த நபர்கள் குளியலறையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாகவும், சிலர் சங்கலியினால் கட்டப்பட்டிருந்தமையினால் அவர்களை காப்பாற்ற முடியாது போனதாகவும் தலஹேன - படகொட பகுதியைச் சேர்ந்த சந்தயுரு ஆகாஷ் என்ற இளைஞன் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.


'என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய அக்காவை அழைத்து செல்வதற்காக இந்த இடத்திற்கு வருகைத் தந்தார். இந்த இடத்தில் பாரிய புகை பரவியதை அவர் அவதானித்துள்ளார். இந்த இடத்தில் தீ பரவுகின்றது, வருகைத் தருமாறு அவர் எம்மை அழைத்தார். நாங்கள் செல்லும் போது வீதியில் 500 பேர் வரை இருந்தார்கள். நாங்கள் இந்த இடத்தில் பாய்ந்து உள்ளே சென்றோம். சிலர் குளியலறைக்குள் பின்புறத்தில் கூச்சலிடும் சத்தம் கேட்டது. நாங்கள் கூரையை கழற்றி எடுத்து, அதனூடாக உள்ளே சென்று அங்கிருந்த ஒவ்வொருவராக காப்பாற்றினோம். அவர்களை பிடிக்கும் போது அவர்களின் தோல் எமது கைகளுக்கு வந்தது. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தான் காப்பாற்றினோம். ஒருவர் தீ பரவும் பகுதிக்குள் ஓடினார். நான் அவரை பின்தொடர்ந்து சென்று காப்பாற்றினேன்.


சிலர் சங்கிலியிட்டு கட்டப்பட்டிருந்தனர். சுமார் 6 அல்லது 7 பேர் அவ்வாறு இருந்தனர். அவர்களை காப்பாற்ற முடியாது போனது. ஒருவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். கால்களுக்கு சுமார் 6 அடி நீளமான சங்கிலி இடப்பட்டிருந்தது. காப்பாற்றிய சிலர் மீண்டும் தீக்குள் ஓடினார்கள்." என அவர் கூறினார்.


தான் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் தீ பரவியதை அவதானித்ததாகவும், அதன்பின்னர் தீயில் சிக்குண்டிருந்தவர்களை காப்பாற்றியதாகவும் படகொட பகுதியைச் சேர்ந்த அசேல விதுரங்க தெரிவிக்கின்றார்.


''நான் வீட்டில் இருக்கும் போது புகை செல்வதை அவதானித்தேன். நான் கீழே வந்து பார்க்கும் போது சிலர் கூரை மீதேறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுக்கு உதவி செய்தேன். பின்புற கதவுக்கு அருகில் இருவர் கட்டப்பட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த போதிலும், கட்டியிருந்தமையினால் அவர்களை எம்மால் காப்பாற்ற முடியவில்லை. இந்த இடத்தில் வேலை செய்வதற்காக இருவர் இருந்தார்கள். அவர்கள் அங்கும் இங்கும் ஓடி தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த இடத்தின் முன்பக்கத்தில் இரும்பு கதவொன்று காணப்பட்டமையினால், அதனை திறந்துக்கொள்ள முடியாது போனது. உண்மையில் கவலையாக உள்ளது. ஏனென்றால், மனித உயிர் அல்லவா. அவர்கள் கட்டப்படாதிருந்திருந்தால், அவர்கள் தவிழ்ந்தேனும் வந்து தம்மை பாதுகாத்திருப்பார்கள்" என அவர் கூறினார்.


இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 12 பேர் பலி

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துக்கள்

இந்த முதியோர் இல்லத்தை நடாத்தி செல்லும் 'லொக்கு ஐயா" என அழைக்கப்படும் இசுறு அனுஷ்க என்ற நபரின் டிக் டொக் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்குகளில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வாளர்கள் இருக்கின்றமையை பிபிசி சிங்கள சேவை அவதானித்துள்ளது.


இந்த முதியோர் இல்லத்திலுள்ள நபர்களுடன் வெளியிடப்படும் வீடியோக்கள் காரணமாக லொக்கு ஐயா என்ற இசுறு அனுஷ்கவினால் நடாத்தி செல்லப்படும் மவ்பிய சேவன முதியோர் இல்லம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்தது.


''வாழ்க்கையில் ஏதோ ஒரு பாவத்தை செய்துள்ளேன். என்னுடைய இரண்டு கண்களில் இவ்வாறான ஒன்றை பார்ப்பதற்கு என்னிடம் பாவம் செய்த இரண்டு கண்கள் இருக்கின்றன. நானும் இந்த வீட்டிற்குள்ளேயே தீக்கிரையாகியிருந்தால் என்று நினைக்கும் அளவிற்கு கவலையாக உள்ளது." என நேற்று (03) லொக்கு ஐயா தமது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார்.


இந்த வீடியோவிற்கு 6000திற்கும் அதிகமானோர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.


'உள்ளே மக்கள் தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் போது, இந்த நபர் வீடியோ எடுக்கின்றார் எப்படி" என அநுராதா இந்திவரி என்ற யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.


''இன்றைய காலத்தில் தமது பெற்றோரை வெளியில் அனுப்பியவர்களுக்கு அன்னதானம் வழங்கியவர் இந்த நபர் எவ்வளவு நல்லதொரு விடயத்தை செய்துள்ளார். பாவமான கதைகளை சொல்ல வேண்டாம்'' என மது கஜவீர என்ற நபர் கருத்துரைத்துள்ளார்.


69 நபர்களை தங்க வைக்கப்பட்டிருந்த மத்திய நிலையத்தில் போதுமான இடவசதி மற்றும் போதுமான பாதுகாப்பு இருந்துள்ளதாக என மேலும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தீயில் சிக்குண்டு உயிரிழந்த நபர்கள் சங்கிலியினால் கட்டப்பட்டிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


இந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படவில்லை

இந்த முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என தேசிய முதியோர் செயலகம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.


முதியோருக்கான தங்கியிருந்து பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நிறுவி நடத்தும் எந்தவொரு தன்னார்வ அல்லது பிற வகை நபரும், அந்த நிறுவனத்தில் 05 பேருக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்து பராமரிப்பு பெறுகின்றனர் என்றால், முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அந்த நிறுவனம் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் பிபிசி சிங்கள சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிறுவனம் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படாது, அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வழிகாட்டல்களை பின்பற்றாது நடாத்தி செல்லப்பட்டமையினால் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்குருவாதோட்டை போலீஸாருக்கு அறிவுறுத்தல் பிறப்பித்துள்ளதாக தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.


இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய கடிதங்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

 


அயதுல்லாஹ் அலி கொமெய்னி உயிரிழப்பு: உலக அரசியல் சமநிலைக்கும் பாரிய இழப்பு – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்


நூருல் ஹுதா உமர்

அயதுல்லாஹ் அலி கொமெய்னி அவர்களின் உயிரிழப்பு இஸ்லாமிய உலகிற்கு மட்டுமல்லாது, உலக அரசியல் சமநிலைக்கும் பாரிய இழப்பாகும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், ஈரான் மீது அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் உலகளாவிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையிலேயே ஈரானின் உயர்தலைவராக விளங்கிய கொமெய்னி அவர்களின் மறைவு உலக அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் உரிமைகளை வலியுறுத்திய தலைவராகத் திகழ்ந்ததாக எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் தளங்களில் செல்வாக்கு செலுத்திய அவரது வழிகாட்டுதல், உலக அரசியல் அமைப்பில் தனித்துவமான பாதையை உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைக் காலங்களில் நடு கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றநிலை, உலக அமைதி மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும், வன்முறை மற்றும் இராணுவத் தாக்குதல்கள் எந்தவிதத்திலும் நிலையான தீர்வாக அமையாது என்பதே வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்த பாடமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த துயரமான தருணத்தில், மறைந்த அந்த தலைவரின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஹரீஸ், பிராந்திய மற்றும் உலக சக்திகள் எல்லாம் கட்டுப்பாடும் பொறுப்பும் காட்டி, அமைதி, உரையாடல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைவது அவசியம் எனக் கேட்டுக்கொண்டார்.

உலக அமைதி நிலைத்திருக்க வேண்டும் என அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா  
 வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு,  கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (2) திங்கள் கிழமை மாசிமக சுப வேளையில் சிறப்பாக நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் சுவாமி நீலமதவானந்தாஜி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

தொடர்ந்து சிவானந்தா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட சமூகம் அடிக்கல் நாட்டினார்கள்.

 


தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு இன்று (12) உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். 


உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு வெங்காயத்திலான மாலை அணிந்து சென்றுள்ளனர். 


அத்துடன், அவர்கள் விவசாயியின் மகன் அரசனானான்... விவசாயி பாழானான்... என கோஷமிட்டவாறு சபைக்குள் நுழைந்துள்ளனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதேச சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. 


அதன்போதும், பெரிய வெங்காயத்திற்கு விலை இன்மை மற்றும் அழிந்துபோன வெங்காயத்திற்கு நட்டஈடு கோரிய நிலையில் விவாதங்கள் நடைபெற்றதுடன் சபையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

 இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த  சுமார் 2,000 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளை ஏற்றிச் சென்ற 38 பேருந்துகள் காஸா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக பலஸ்தீன கைதிகள் தகவல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.


 


( வி.ரி. சகாதேவராஜா)


 கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக  (27) சனிக்கிழமை ஆரம்பித்த நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (01) புதன்கிழமை ஐந்தாவது நாளாக நடைபெற்று நிறைவடைந்தது.

இறுதிநாள் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் திருக்கோவில் நாவிதன்வெளி காரைதீவு ஆலையடிவேம்பு  தவிசாளர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக கிழக்கின் மூன்று மாவட்டங்களின் தலைவிகளும் ஐ.நாவுக்கான மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தவிசாளர்களிடம் வழங்கினார்கள்.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட உறவுகளும் அங்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வயோதிபர் தினமான நேற்று அக்டோபர் முதலாம் திகதியும் வயோதிபர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பலர் சோர்ந்து காணப்பட்டனர். இன்னும் பலர் அழுதழுது கருத்து கூறினர். வயோதிகர்கள் பலர் படுத்த படுக்கையில் இருந்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் ஆரம்பித்தது.

இப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.


களுவாஞ்சிக்குடி கௌரவ நீதிபதி  ஜனாபா சப்னா அவர்கள் முல்வைத்தீவு நீதிமன்றுக்கும், முல்லைத்தீவு கௌரவ நீதிபதி திரு.பிரதீபன் அவர்கள் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றுக்கும்  செப்ரம்பர் 26ந் திகதி முதல்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


இச் செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது 

எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று (04) இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக தியதலாவ விமானப்படையானது, எம்.ஐ.17 ஹெலிகொப்டரையும், வீரவில விமானப்படை தளத்தில் பெல் 412 ஹெலிகொப்டரையும் தயார் நிலையில் வைத்துள்ளன. 


விபத்தில் காயமடைந்தவர்களை ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்ல, அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதற்காக இவை தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் பதினைந்து பேர் (6 ஆண்கள் மற்றும் 9 பெண்கள்) இறந்ததாகவும், குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


நேற்று (04) இரவு 9.00 மணியளில் வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து எல்ல பொலிஸ் பிரிவில் 23ஆவது மற்றும் 24ஆவது கிலோமீட்டர் தூணுக்கிடையில் எதிரே வந்த ஜீப் மற்றும் வீதியின் இரும்பு வேலியில் மோதி குறித்த பேருந்து 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. 


விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு ஆண்கள், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


மேலும் பயணிகளை மீட்க உதவிய இரண்டு நபர்களும் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்களின் சடலங்கள் தியத்தலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது மைல்கல் . அருகில் நேற்று மாலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் பதினைந்து பேர் (6 ஆண்கள் & 9 பெண்கள்) இறந்ததாகவும், குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதியினால்,நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள் 18 பேரும், எதிர்வரும் 13 ந் திகதி, சனிக் கிழமையன்று பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 



மேல் நீதிமன்றுக்கு  அண்மையில்  இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் சித்மியடைந்தவர்களுக்கான நியமனம்  எதிர்வரும் புதன் கிழமையன்று இடம்பெறும் என்பதாகத் தெரியவருகின்றது. 

இம் முறை வட கிழக்கைச் சேர்ந்த  5 பேர், புதிதாக மேல் நீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கௌரவ நீதிபதிகளான றியாழ் சேர், றிஸ்வி சேர், கஜநிதிபாலன் சேர், ஜீட்சன் சேர், வளன் சேர் ஆகியோருக்கு 

 


வடமேற்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலே நேரடியாக இருக்கும், ஏனெனில் அதன் தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம் வெளிப்படையானது. இன்று (31) நண்பகல் 12.10 மணியளவில் பத்தலங்குண்டுவ, மதவாச்சி, ஹொரவப்பொட்டான மற்றும் கிண்ணியா ஆகிய இடங்களுக்கு மேல் சூரியன் உச்சம் தரும் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும்



 பாறுக் ஷிஹான்


“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை கல்முனை மையோன் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வை பெண்கள் படை – இலங்கை (Women’s Corps – Sri Lanka) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சமூகத்தில் அன்பு, ஒற்றுமை மற்றும் உதவி மனப்பான்மையை ஊக்குவித்து, உதவி தேவைப்படுவோருக்கு தன்னார்வ பணி மற்றும் சமூக சேவை வழங்குவதை நிகழ்வின் முக்கிய நோக்கமாக குறிப்பிடப்பட்டது. முன்னிலை ஏற்பாட்டை ஏ.எவ். றிகாஷா ஷர்பீன் செய்திருந்தார்.


நிகழ்வில் வரவேற்புரை மற்றும் அமைப்பின் அறிமுக உரையை – Women's Corps Sri Lanka தலைவி றிகாஷா ஷர்பின் நிகழ்த்தினார். இங்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர், கல்முனை சட்டத்தரணி சங்கத்தின் தலைவி சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.றிப்கா அன்சார், ஓய்வுபெற்ற ஆசிரியை, மௌலவியா எம். எஸ். எஸ். நிஸ்ரினா மற்றும்  சாய்ந்தமருது பிரதேச செயலக திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நன்றி உரையை Women's corps Sri Lanka அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.முபிதா நிகழ்த்தினர். நிகழ்வின்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளர் எம். எம். முனாஸ், சிலோன் மீடியா போரத்தின்  தலைவர் கலாநிதி றியாத் எம். மஜீத் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.


இங்கு உரையாற்றிய றிகாஷா ஷர்பீன்,  எமது தொண்டு நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் மனித குலத்திக்கு உதவுவதே இதில் குறிப்பாக பெண்களை வலுவூட்டுவது பிரதானதாகும்.

மேலும் பெண்கள் கல்வியிலும் அரச தொழில் நியமனங்களிலும் அதிகரித்து காணப்படும் இத்தருணத்தில் சமூக செயற்பாடுகளில் எமது பிராந்தியத்தில் காணப்படுகின்றது. பெண்களின் வகிபாகம் குறைவாகவே எதிர்காலத்தில் இதனை கருத்திற்கொண்டு பெண்கள் அவர்களிடமுள்ள கல்வி, திறமை, ஆளுமை என்பவற்றை தமது சமூகத்திற்காக பயன்படுத்தக் கூடியவாறு மட்டுமல்லாமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவராக மாற்றுவதற்கான அடித்தளத்தினை Women's Corps Sri Lanka எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இன்று இடுகின்றோம்.

இந்த தொண்டு நிறுவனம் இனம், மதம் பாராது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் என்பதோடு பெண்களுக்கான நீதியை நிலைநாட்டப்பாடுபடும். என்றும் தெரிவித்தார்.

மேலும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்குவதும் எமது செயற்பாடுகளில் ஒன்றாகும் அதனடிப்படையில் பெண்கள் குடும்ப ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை உருவாக்கவுள்ளோம். மேலும் ஆத்மீக செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். இதன் மூலமே சமூக மாற்றங்களை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வரமுடியும் என்பது எங்களது நிலைப்பாடாகும்.

மேலும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை மக்கள், விதவைகள் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் இவ்வமைப்பு செயற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றும் தெரிவித்தார்.
எமது தொண்டு நிறுவனத்தில் இணைந்து செயற்பட ஆர்வமுள்ள பெண்களுக்கு திறந்த அழைப்பினை விடுக்கின்றேன். என்றும் அறைகூவல் விடுத்தார்.


சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் தனது உரையில்,
 
எமது ஊரிலும் சமூகத்திலும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான உதவிகள் சில நேரங்களில் குறைவாகவே உள்ளன. திருமணம் தாமதமாகி விடுவது, பெண்களின் பிரச்சினைகள் பள்ளிவாசல் பதிவுகளில் சரியாகச் சேர்க்கப்படாதது போன்ற குறைகள் உண்டு. இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவும், பெண்களுக்கு தகுந்த ஆதரவளிக்கவும் இந்த அமைப்பு ஒரு வலிமையான தளமாக அமையும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்தார்.

இன்றைய சூழலில், எதிர்காலத்தில் அமைப்புகளையும் நிறுவனங்களையும் வழிநடத்தப் போவது பெண்கள்தான் என்பதில் ஐயமில்லை. காரணம், பெண்களே கல்வியில் தொடர்ந்து படித்து முன்னேறுகின்றனர்.

ஆண்கள் பெரும்பாலும் விரைவாக ஒரு குறுகிய காலக் கல்வி முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பெண்கள் பொறுமையுடன் படிப்பைத் தொடர்கின்றனர். அதனால், எதிர்கால துறைத் தலைவர்களாகவும், பொறுப்பான நிர்வாகிகளாகவும் பெண்கள் அதிக வாய்ப்பு பெறுகின்றனர்.

பெண்களை நாம் நம் வாழ்க்கையில் நான்கு முக்கியமான நிலைகளில் சந்திக்கிறோம்:

1. தாயாக – எம்மை வளர்த்து, துன்பங்களைக் கடந்து, சிரமங்களை சகித்துக் கொண்டு உருவாக்குபவர்.
2. சகோதரியாக – நம்மைத் துணை நிற்பவர்.
3. மனைவியாக – வாழ்க்கைப் பயணத்தில் தோழியாக இணைவவர்.
4. மகளாக – குடும்பத்தின் மகிழ்ச்சியையும், எதிர்காலத்தின் நம்பிக்கையையும் தருபவர்.

இந்த நான்கு நிலைகளிலும், பெண்கள் தியாகம், பொறுமை, அன்பு, வலிமை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருப்பதை நாமறிகிறோம். என்றும் தெரிவித்தார்.

மருத்துவ துறையில் பணிபுரியும் அனுபவத்தால் நான் அடிக்கடி சொல்லும் ஒரு உண்மை உண்டு. சிகிச்சை பெறும் பொழுது ஆண்கள் பல நேரங்களில் அஞ்சுகின்றனர். ஆனால் பெண்கள் அதே நேரத்தில் அமைதியாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருந்து தாங்கிக் கொள்கின்றனர்.

ஒரு மனிதர் என்னிடம் கூறியது: “பெண்கள்தான் உலகிலேயே வலிமையானவர்கள்”

உண்மையிலேயே, மாதந்தோறும் அவர்கள் அனுபவிக்கும் உடல் வலிகள், கர்ப்ப காலத்தின் சிரமங்கள், பிரசவ வேதனைகள், அதற்குப் பிறகான பாலூட்டும் காலம் – அனைத்தும் ஒரு பெண்ணின் தாங்கும் வலிமையையும், அல்லாஹ் அளித்த சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.

வீட்டிற்குள் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் எண்ணிலடங்கா.

காலை முதலே தொடங்கும் வேலைகள் இரவு வரை ஓயாது தொடர்கின்றன. அதோடு, இன்று பெரும்பாலான பெண்கள் வெளி வேலைகளையும், சமூகப் பணிகளையும் இணைத்துச் செய்கிறார்கள்.

இவ்வளவு கடின உழைப்பையும், தியாகங்களையும் சுமந்து கொண்டிருந்தும், பெண்கள் தங்கள் வாழ்வை மகிழ்ச்சியுடனும், தன்னலமற்ற மனப்பான்மையுடனும் நடத்துகின்றனர்.

இன்று தொடங்கப்பட்ட Women Scope Sri Lanka அமைப்பு, நமது ஊரின் பெண்களுக்கு வலிமையான ஒரு மேடை ஆகும்.
இவ்வமைப்பின் மூலம் பெண்கள் தங்கள் கல்வி, திறமை, சேவை மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டு சமூகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்வார்கள் என்பதில் எனக்கு உறுதியுண்டு.

இந்த அமைப்பின் வளர்ச்சி தொடர்ந்து நீடித்து, எமது சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்தையும், நலன்களையும் நிலைநிறுத்தி, பெரும் பயன்களை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். என்று கூறினார்.

கல்முனை சட்டத்தரணி சங்கத்தின் தலைவி சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தனது உரையில்; இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ் எனக்கு கிடைத்தபோது, இது எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது முதலில் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதனை ஆழமாக ஆராய்ந்தபோது, எமது பிரதேசத்தில் சமூக சேவைக்காக ஒரு புதிய அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது என்பது எனக்கு விளங்கியது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.

சுனாமி பேரழிவுக்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு அமைப்புகள் எமது பகுதிகளில் இயங்கின. நானும் ஒரு சர்வதேச அமைப்பில் சட்ட ஆலோசகராகவும், திட்ட முகாமையாளராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவன். ஆனால் பின்னர் அந்த அமைப்புகளின் நிதி ஆதரவு குறைந்து, பல சேவை அமைப்புகள் மூடப்பட்டன. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எங்கு கொண்டு செல்லுவது, யாரின் உதவியை நாடுவது என்ற நிலைமை சமூகத்தில் ஏற்பட்டது.

அவ்வாறான வெற்றிடத்தை நிரப்பும் முகமாக இன்று இந்த சமூக சேவை அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. எமது பிரதேசத்தில் சமூக நலனுக்காக இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
எமது பிரதேசத்தில் கல்விச்சேவைக்காக பாடுபட்ட முன்னோடி ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர விரும்புகிறேன். 

எனது தாயார் மற்றும் றைஹானா டீச்சர் ஆகியோர் கல்முனை முகம்மது மாளிகை கல்லூரியில் முதன்முதலாக பணியாற்றிய பெண்கள் ஆசிரியர்கள். அவர்கள் பிரதேசக் கல்வி முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதே போன்று இன்று எம்மிடையே ஆளுமையுள்ள அதிபர்கள், மஹ்மூத் பாலிகா  கல்லூரி அதிபரும், மல்ஹார் ஷம்ஸ் மகாவித்யாலய அதிபரும் இருக்கின்றனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இன்னும் எமது சமூகத்தில் பல பெண்கள் பலவீன நிலையில் உள்ளனர். அவர்கள் சமூக விழுமியங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனரா, இல்லையெனில் குடும்பச் சூழ்நிலைகளால் தடுக்கப்பட்டுள்ளனரா என்பதை நாம் அறியோம். ஆனால் அவர்களை முன்னேற்றம் அடையச் செய்து, குடும்பங்களின் பிள்ளைகளையும் ஒழுங்கான வாழ்வியலுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் றிகாஷா சர்பீன்  இந்த அமைப்பை துவங்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
இன்றைய இளைஞர்களின் நிலைமையையும் நாம் கவனிக்க வேண்டும்.

 கல்முனை நீதிமன்றத்தில் அடிக்கடி சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையால் வழக்குகளில் சிக்கிக் கொண்டு மாதக்கணக்கில் விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற பகுதிகளில் இரவு பத்து மணிக்குப் பிறகு வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வேகமாகச் செல்லும் நிலைமை காணப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் அந்த மாணவர்கள் நாளைய சமுதாயத்தின் தூண்கள். ஆனால் அவர்கள் தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது.

இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியில் எமது பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் இவ்வாறான சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வாழ்வியல், வாழ்வாதாரம், கல்வி, மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செயல்படும்போது மட்டுமே எமது சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்.

அவ்வாறு பெண்கள், இளைஞர்கள், மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டுள்ள இவ்வமைப்பு தனது உயர்ந்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ்வை வேண்டுகிறேன். என்று தெரிவித்தார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தனது உரையில்:

 நான் என் உரையை ஆரம்பிப்பதற்கு முன், ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்.
எங்கள் சமூகத்தில் இன்று நம் குழந்தைகளுக்காக அக்கறையுடன் சிந்தித்து, வழிகாட்டி, எங்களைத் தூண்டிவிடக்கூடிய மருத்துவர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
ஆனால், அதே சமயம் ஒரு சிந்தனை எழுகிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் எங்கிருந்து தொடங்குகின்றன?
நாம் கல்வியளித்தாலும், வழிநடத்தினாலும், இன்னும் ஏன் தடைகள் இருக்கின்றன?
இன்றைய சூழலில், நவீன ஊடகங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
எங்கள் பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள், கல்வியிலும், எதிர்கால இலக்குகளிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், அதிகப்படியான கைப்பேசி (மொபைல்) பயன்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

இதன் விளைவாக, அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் நிலை உருவாகிறது.
நான் பாடசாலையில் சந்தித்த ஒரு சம்பவத்தை பகிர விரும்புகிறேன்.
ஒரு பெற்றோர் தமது பிள்ளைக்காக ஒவ்வொரு நாளும் புதிய கைப்பேசியைக் கொடுத்து வந்தார். அந்தப் பிள்ளை, பாடசாலை வளாகத்திலேயே மறைந்து கைப்பேசியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

இதைத் தெரிந்தபோது, நான் பெற்றோரை அழைத்து சந்தித்தேன். ஆனால், பெற்றோர்கள் “எங்கள் பிள்ளை கேட்டதை வாங்கித் தரவேண்டும்” என்ற தவறான எண்ணத்தில் இருந்தார்கள். அந்த 

பிள்ளைக்கு உண்மையில் பயன் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திக்கவில்லை.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது:

நாம் பெற்றோராக, ஆசிரியராக, சமூகமாக — நம் பிள்ளைகளின் வாழ்க்கையை நாம் காப்பாற்றுகிறோமா? அல்லது அழித்துவிட்டோமா?

முன்னோர்கள் காலத்தில், கல்வி என்பது பல தியாகங்களின் மூலம் கிடைத்த ஒன்று.

எங்கள் மூத்தவர்கள் சொன்னது போல, மாணவிகள் வண்டிகளில் மறைத்து கொண்டு செல்லப்பட்டு கல்வி கற்ற காலங்கள் இருந்தன. இன்று பாடசாலைகள்  எங்களது வீட்டு வாசற்படியில் இருக்கின்றன. அனைத்தும் எளிதாகக் கிடைக்கும் காலம் வந்துவிட்டது.
ஆனால், அந்த அரிய வாய்ப்பை எங்கள் பிள்ளைகள் மதிக்காமல், நவீன வசதிகளில் மூழ்கி தங்களது எதிர்காலத்தை அழித்து வருகின்றனர்.

இது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. ஏனெனில், இன்று கூட சிறிய சிறிய வயதிலேயே பிள்ளைகள் திருமணமாகி, நீதிமன்றங்களில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
______________
எனவே, எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த பெண்கள் தன்னார்வ நிறுவனம் கல்வி, ஒழுக்கம், சமூக பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு ஒளியாய் இருக்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் நல்ல வழியில் செலுத்தப்பட வேண்டும்.

பெண்கள் தங்கள் திறமையை அறிந்து, சமூக முன்னேற்றத்திற்காக வலிமையடைய வேண்டும். அப்படிச் செய்தால் தான், நாங்கள் எங்கள் முன்னோர்களின் கனவை நிறைவேற்றுகிறோம்.

எங்கள் சமூகத்தையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறோம். என்று தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ஆசிரியை, மௌலவியா எம். எஸ். எஸ். நிஸ்ரினா தனது உரையில்:

இன்று நான் பேசுவது ஒரு நிகழ்வுக்காக மட்டும் அல்ல.

ஒரு தாயின் மனதில் பொங்கும் நன்றியும், மகிழ்ச்சியும், பெருமையும் கொண்ட உணர்வுகளாக இந்த வார்த்தைகள் வருகின்றன.
என் மகள் சிறு வயதிலிருந்தே ஒரு தனி குணம் கொண்டவள். எப்போதும் மற்றவர்களை நினைப்பவள். வீட்டில் கூட சும்மா அமர்ந்து கொண்டிருக்கும்போது — “அம்மா, இவ்வளவு கஷ்டத்தில் இருக்கும் குடும்பம் இருக்கிறதே, அவர்களுக்கு உதவலாமா?” என்று கேட்பவள்.

அவளுக்கு மனதில் எப்போதும் பிறரைப் பற்றிய கவலை, பிறருக்குச் செய்யவேண்டிய உதவி பற்றிய நினைவு. சில நேரங்களில் “அம்மா, அந்த விதவைக்கும் பிள்ளைகளுக்கும் நாம கொடுப்போமா?” என்று சொல்வாள். யாரேனும் கஷ்டப்பட்டு இருப்பதைப் பார்த்தாலே அவளுக்கு மனம் தாங்காது.

அதற்குப் பின்னால் நிற்கும் இன்னொரு பெரிய காரணம் — அவளது கணவர்.

அவளுக்கு உதவி செய்யும் நல்ல மனதை, அவளது கணவரும் பூரணமாக ஆதரிக்கிறார். ஒவ்வொரு நோன்பு மாதத்திலும் அவள் ஒரு பட்டியலைத் தயாரிப்பாள்:

“இந்த குடும்பத்துக்கு நாம கொடுக்கணும். அந்த குழந்தைக்கு நாம உதவணும்” என்று.
அந்த நேரங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து, எதையும் பொருட்படுத்தாமல், பிறருக்குப் பகிர்ந்து கொடுப்பதைப் பார்த்தால், என் தாய் மனம் நன்றியால் நிரம்பி வழியும்.

அல்லாஹ்வின் அருளால் எனக்கு பிறந்த ஒரே பெண் குழந்தை அவள். அவளுக்காக நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கைத்துணையைத் தேடினோம். அல்லாஹ் மிக அழகான பரிசாக, ஒரு நல்ல கணவரையும், நன்மை நிறைந்த குடும்பத்தையும் தந்தான். அது எனக்குப் பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும்.

நான் எப்போதும் என் பிள்ளைகளுக்கு சொல்வது ஒன்று தான்:

“நம்மால் சேர்த்த செல்வம், நம்முடன் கல்லறைக்கு வராது. ஆனால் நம்மால் செய்த நன்மை மட்டும் தான் நம்மைத் தொடர்ந்து வரும்.”
அதை என் மகள் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி காட்டுகிறாள். அதுதான் என்னை மிகுந்த பெருமையடையச் செய்கிறது.
சில நேரங்களில் அவளுக்கு கோபம் வந்தாலும், அது உடனே கரையும். ஏனெனில் அவள் மனதில் “நம்மிடம் இருக்கும் அனைத்தும் பிறருக்காகவே” என்ற உண்மை அடிக்கடி நிலைத்திருக்கும்.

எனக்கு பெரும் சந்தோஷம் அளிப்பது என்னவென்றால், என் மகளின் வாழ்வில் அவள் மட்டும் அல்ல, அவளுடைய கணவரும், பிள்ளைகளும், குடும்பமும் எல்லோரும் இந்த மனப்பான்மையை ஏற்று வாழ்கிறார்கள்.

அதனால் தான் இன்று, இந்த சேவைக்கான முயற்சி, அவளுடைய உள்ளார்ந்த விருப்பத்தின் பலனாக, உங்கள் முன்னால் நிற்கிறது.
நான் என் வாழ்நாளில் பெற்ற மிகப் பெரிய மகிழ்ச்சி — என் பிள்ளைகள் பிறருக்குப் பயனுள்ள வாழ்க்கை வாழ்வதுதான். என்று தெரிவித்தார்.

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.றிப்கா அன்சார் தனது உரையில்; 

 இன்றைய உலகில், குறிப்பாக நமது குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறை, நல்ல கல்வியையும், நல்ல வாழ்வையும் பெறவேண்டும். பெண்கள் மாணவிகள் கல்வியில் அதிக ஆர்வத்தையும், முயற்சியையும் காட்டுகின்றனர். ஆனால் சில ஆண் மாணவர்கள் படிப்பில் தங்கள் பங்களிப்பை குறைத்து “நிறைய படிக்க தேவையில்லை” என்ற எண்ணத்தில் இருந்து கொள்கின்றனர். இது மிகவும் கவலைக்கிடமான நிலை. இதுவே தொடர்ந்தால், அவர்களின் எதிர்காலம் சிக்கல்களுக்கு வழிவிடும்.

எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பெண்-ஆண் மாணவர்களும் இருவரும் சமமான வாய்ப்புகளைப் பெறவும், கல்வியில் முன்னேறவும் உதவி செய்ய வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், நமது தொண்டு முயற்சியில் சதகா (Charity) என்ற பண்பும் மிக முக்கியம். சதகா என்பது பொருள் உதவியோடு மட்டுமல்ல; சேவையையும் கொண்டுள்ளது. உதாரணமாக:
• பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்தல்,
• மருத்துவ மற்றும் ஆலோசனை துறைகளில் சுயவாழ்வு சேவை செய்தல்,
• சமூக முன்னேற்ற திட்டங்களில் பங்களித்தல்.

இவ்வாறு, நாங்கள் சதகாவை வாழ்வில் உணர்த்தி, மிகவும் பயனுள்ள சேவைகளை நமது சமூகத்திற்கு வழங்கலாம். நமது சமூக மருத்துவர்கள் மற்றும் தலைவர்களுடன் முன்கூட்டியே ஆலோசித்து, பிரதேசங்களில் Charity Centres அமைத்து, கல்வி, சுகாதாரம், சமூக வழிகாட்டல் போன்ற சேவைகளை வழங்குவதே எங்கள் திட்டமாகும்.

அன்புடையீர், இன்று நாங்கள் தொடங்கும் இந்த முயற்சி, நம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்மை செய்யும் ஒரு பெரும் முயற்சி ஆகும். அதனால், எல்லோரும் ஒற்றுமையாக, முழுமையான முயற்சியுடன் பங்கேற்று, நமது குழந்தைகளுக்கும் எதிர்காலமும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.