டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர் : மன்னிப்புக் கடிதம் சமர்ப்பித்த பின்னரே வாகனங்கள் விடுவிப்பு – சம்மாந்துறை நீதிவான் கடும் எச்சரிக்கை
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள்களை முன்சக்கரத்தை உயர்த்தி (Wheelie) ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சம்மாந்துறைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் மன்னிப்புக் கடிதங்களை வழங்கி, அவை உரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டு சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் மேலொப்பத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரையில், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விடுவிக்கப்படமாட்டாது என்று சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் கௌரவ நூர்தீன் சர்ஜுன் இன்று (16) உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு இன்று நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றது.
குறித்த இளைஞர்கள் தாங்களே ஆபத்தான சாகசங்களை மேற்கொண்ட காணொளிகளை டிக்டொக் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தமை விசாரணைகளுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்ததுடன், அவற்றின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்வர் சியாத் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள் இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு அசௌகரியம் மற்றும் உயிர் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான சாகசங்கள் மேற்கொள்ளப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட நீதிவான், குற்றச்சாட்டுக்குட்பட்டோரின் பெற்றோர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கும் கடுந்தொனியில் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெற்றால் இதைவிடக் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் தண்டனைகளும் விதிக்கப்படும் என்றும் நீதிவான் எச்சரித்தார். நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட சில இளைஞர்கள் நீதிவானின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு முன்னாலும் இதேபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இவ்வாறான சம்பவங்களை நீதிவான் ஏற்கனவே அவதானித்திருந்தமையும், அதனால் இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொது வீதிகள் அனைத்து மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்தாகும் என்பதையும், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து பொறுப்புடன் வீதிகளைப் பயன்படுத்துவது ஒவ்வொரு சாரதியினதும் கடமையாகும் என்பதையும் நீதிவான் வலியுறுத்தினார் என்று தெரிவித்தார்.
மூதூரைச் சேர்ந்த மீன் ஏற்றிச் சென்ற வாகனம் வெளிகண்டல் பாலத்தில் விபத்து – இருவர் காயம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (09) இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. போகஸ்ஹந்திய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் அவர்களுடன் பயணித்த இரு பிள்ளைகளும் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கல்லடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
இதேவேளை, அனுராதபுரம் - ரம்பேவ வீதியின் கல்வல சந்திக்கு அருகில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வலதுபுறமாக திரும்ப முயன்ற போது, எதிரே வந்த காருடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தினால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின்னால் பயணித்தவர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
இதேவேளை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியின் ஊரணி சந்திக்கு அருகில், வேன் ஒன்றும் மூன்று சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வேன், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இரண்டு வாகனங்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.
இதில் காயமடைந்த வேன் ஓட்டுநர் கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
மற்றொரு விபத்து வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்யா ஹெட்டிகே மாவத்தையில் நிகழ்ந்துள்ளது. பழைய காலி வீதியிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சுவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஓட்டுநரும் பின்னால் பயணித்த மற்றொரு நபரும் வலன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், பின்னால் பயணித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
இந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காரில் பயணித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன்,விபத்து நடந்த போது பெண்ணே காரைச் செலுத்தியுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளானவர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔴நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சித் தகவல்! புத்தளம் - நொரோச்சாலை, தலுவா முகத்துவாரப் பகுதிக்கு (Daluwa Estuary) சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள், கடலில் ஏற்பட்ட கொடூர நீரோட்டத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்! 💔🌊
🕒 என்ன நடந்தது? (The Shocking Incident)
நேற்று (ஜூன் 06) சனிக்கிழமை மாலை, விடுமுறையைக் கழிப்பதற்காக தலுவா முகத்துவாரப் பகுதிக்குச் சென்ற போதே இந்த எதிர்பாராத அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
அங்கு நிலவிய மோசமான காலநிலை மற்றும் கடுமையான கடல் நீரோட்டம் காரணமாக, எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தீவிர தேடுதலின் பின், மூவரின் உடல்களும் ஜனாஸாவாக மீட்கப்பட்டு தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
🏥😭see Dr
👥 பலியானவர்கள் யார்? (Victims Details)
உயிரிழந்தவர்கள் அனைவரும் புத்தளம் தில்லையடி மற்றும் உமராபாத் பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
👧 18 வயது இளம் பெண்
👧 19 வயது இளம் பெண்
👦 24 வயது வாலிபர்
(இளம் வயதிலேயே துடிதுடிக்க பிரிந்த இந்த உயிர்களால் ஒட்டுமொத்த புத்தளமே சோகத்தில் மூழ்கியுள்ளது! 🖤)
⚠️ மிக முக்கிய அவசர எச்சரிக்கை! (Emergency Warning)
🛑 எனவே, எக்காரணம் கொண்டும் ஆபத்தான நீர்நிலைகள், ஆறுகள் அல்லது கடல் பகுதிகளுக்கு நீராடச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸாரும் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளனர்! 🙏
#BreakingNews #Puttalam #Norochcholai #TragicIncident #Daluwa #Thillaiyadi #Umarabad #SriLankaNews #VPReport #SafetyFirst #SeaCurrents #lka yh #lka #lka
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்தை சந்தித்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்தினுள் சுமார் 20 பயணிகள் வரை இருந்துள்ளனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, பேருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் பேருந்து பாதையை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் பலமாக மோதியுள்ளது. இந்த அதிவேக மோதலினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தாம் விலகத் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக பணியாற்றுவதற்கான கூடுதல் பொறுப்புகள் மற்றும் தமது குடும்ப கடமைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் உள்ள அதிகரித்து வரும் சவால்களைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் வரையில் தாம் ஆளுநராக கடமையாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தமது சர்வதேசத் தொடர்புகள் மற்றும் வலையமைப்புகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கவும், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக தற்போதைய தன்னார்வ பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஹனீஃப் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் வைத்து வேன் ரக வாகனம் மாட்டொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.எனினும் வாகனத்தில் பயணித்தோருக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் அலுவலக வேலை நிமிர்த்தம் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது வீதியின் குருக்கே நின்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#accident #SriLankaNews #Trincomalee
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் வைத்து வேன் ரக வாகனம் மாட்டொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.எனினும் வாகனத்தில் பயணித்தோருக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் அலுவலக வேலை நிமிர்த்தம் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது வீதியின் குருக்கே நின்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#accident #SriLankaNews #Trincomalee
போரதீவுப்பற்றில் தமிழ்த்தினப் போட்டிக்குச் சென்ற மூன்று மாணவிகள் விபத்தில் காயம்.!
தமிழ்த்தினப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற பாடசாலை மாணவிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று (07.05.2026) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள், கோவில்போரதீவு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கோட்டமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
வெல்லாவெளி - பொறுகாமம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியின் முன் டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் காரணமாக முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்தின் போது வாகனத்திலிருந்த நான்கு மாணவிகளில் மூவர் காயமடைந்த நிலையில், உடனடியாகக் களுவாஞ்சிகுடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் இது குறித்துத் தெரிவிக்கையில்.
சிகிச்சை பெற்ற மாணவிகளில் இருவர், தங்களது திறமையை வெளிப்படுத்தும் ஆர்வத்துடன் சிகிச்சை முடிந்து உடனடியாகத் தமிழ்த்தினப் போட்டிக்குச் சமூகமளித்துள்ளனர்.
ஒரு மாணவி மட்டும் மேலதிக சிகிச்சைக்காகத் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்டபோதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
( Rep/ Yathursan)
க.பொ.த.உயர்தர பரீட்சையில் (2025) உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேத்சித் அவர்களை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா , தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பாளரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமாகிய ரதீசன் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்
மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதமோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான வாகனத்தை மீண்டும் நிலைநிறுத்தும் பணிகளில் மின்சார சபை ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ராமு தனராஜா
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் வீரவில பகுதியில் வைத்து, அரச பேருந்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதுண்டன.
இந்த அனர்த்தில் சிக்குண்டவர்களே உயிரிந்தனர்.
சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாசா தற்சமயம் குருநாகலை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதைனைக்காக வைக்கப்பட்டுள்ளது.