Showing posts with label SriLan. Show all posts



 இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் 'இதயத்தை' குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.


"இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.


ஏப்ரல் 2021 இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.


"அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள" இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று எச்சரித்தார்.


விளம்பரம்


இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் - இரானிய அரசு ஊடகம்

டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

 ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து, குஜராத்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஆமதாபாத்: ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 204 பேர் பலி - என்ன நிலவரம்?

ஆமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி - ஏர் இந்தியா நிறுவனம் கூறியது என்ன?

ஆமதாபாத் விபத்து, மேடே அழைப்பு, ஏர் இந்தியா, குஜராத்

மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும்.


மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.


டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இரானிய அரசு ஊடகங்களின்படி, தெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

12 ஜூன் 2025

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் - இந்தியாவை உலுக்கிய மோசமான விமான விபத்துகள் பற்றி தெரியுமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடவில்லை - மார்கோ ரூபியோ

இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவிடமிருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.


"இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆமதாபாத் விமான விபத்து பற்றி இதுவரை வெளியான தகவல்கள் - முழு விவரம்

56 நிமிடங்களுக்கு முன்னர்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்"

இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.


அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

\


 பாறுக் ஷிஹான்


யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த  3  (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.  2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி இன்று (31) வெளியிடப்பட்டது.

 குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது


இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் பிரதிநிதியாக சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் யாழ் மாநகர சபைத்தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழரசுக்கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நியமனத்தை உறுதி செய்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத்தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோருக்கும் யாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக நாம் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் தமிழ் மக்களுடனான நல்லிணக்கச் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் வலுவாக அமைந்திருக்கின்றன என்பதற்கு மேற்படி நியமனம் முன்னுதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் சாட்சியமாகவும் அமைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் 13ம் வட்டாரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட சகோதரர் அப்துல்லாஹ், ஒப்பந்த அடிப்படையில் அவரோடு இணைந்து போட்டியிட்ட சகோதரர் முஹம்மது இர்பான் மற்றும் பாத்திமா றிஸ்லா ஆகியோர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், சமூக நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து முற்போக்காகச் செயற்படுவார்கள் என யாழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நியமனம் பெற்றுள்ள சகோதரிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.



 ( காரைதீவு நிருபர் சகா)

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில்
பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர்.

இவர்களது பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த 
கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா ஆகியோரே தெரிவான இரு பெண்களுமாவர்.

 இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று மு.காவுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது.

வட்டாரம் 3 இல் 
 சுப்பிரமணியம் பாஸ்கரன் ( முன்னாள் உறுப்பினர்)
வட்டாரம் 4 இல் வை.கோபிகாந்( முன்னாள் தவிசாளர்)
வட்டாரம் 6 இல் 
 சின்னத்தம்பி சிவகுமார்  
வட்டாரம் 7 இல்
 கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( முன்னாள் தவிசாளர்) உறுப்பினர்களாக வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி காரைதீவு பிரதேச சபையில் உள்ள ஏழு வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. 

மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் அபூபக்கர் பர்ஹான்( தேசிய மக்கள் சக்தி)
மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் எம்.எச்.எம்.இஸ்மாயில்( மு.கா.) (முன்னாள் உறுப்பினர்) மற்றும் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் ஏஆர்எம்.ஹில்மி( அ.இ.ம.காங்கிரஸ்) ஆகியோர் முதல் பட்டியலில் த தெரிவானார்கள்.

காரைதீவு பிரதேச சபைக்கு 04 உறுப்பினர்கள் பட்டியல் முறையில் தெரிவானார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் இரு பெண்கள் கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா மற்றும் மு.கா சார்பில் எம்என்எம்.றனீஸ்( முன்னாள் உறுப்பினர்) மற்றும் சுயேச்சை குழு தலைவர் ஏஎம்.ஜாகீர்( முன்னாள் உப தவிசாளர்) ஆகியோர் தெரிவாகி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரேயொரு பெண் உறுப்பினர் எஸ்.ஜெயராணி மட்டும் சபையை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த மே மாதம் 22 ந் திகதி, டெய்லி மெயில் பத்திரிகையில், போதைப் பொருள் வைத்திருந்த சந்தேக நபர்-Charlotte May Lee,சிறைச்சாலையிலிருந்து பேசும் வீடியோவினை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.

வெலிக்கடை  சிறைச்சாலைக்குள் இங்கிலாந்து போதைப்பொருள் சந்தேக நபர் படமாக்கப்பட்ட வீடியோவை அடுத்து, சிறை அதிகாரிகளை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

பார்வையாளர் ஒருவர் மறைக்கப்பட்ட பொத்தான் கேமராவைப் பயன்படுத்தி காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் நடைபெற்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரான பிரித்தானிய யுவதியை மன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தார். யுவதியின் பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட 46 கிலோ குஷ் போதைப் பொருள் மன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் அதனை நீதிமன்றத்தின் வழக்கு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் அறையில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்போது சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி சம்பத் பெரேரா மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார்.  அண்மையில் சிலர் தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு  எனது சேவை பெறுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு  சென்று காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். 

இதன் ஊடாக எனது சேவை பெறுநர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள், குறித்த யுவதியின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் வருகை தந்து அவரை பார்வையிட அனுமதி கோரினர். சாதாரண நடைமுறையின் கீழ் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கினோம். அதில் ஒருவர் பொத்தான் வடிவில் உள்ள சிறிய கமராவை பயன்படுத்தி அங்கு நடந்த விடயங்களை காணொளியாக பதிவு செய்துள்ளார் எனக்கூறினர்.

இதற்கமைய இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திறந்த மன்றில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு  சிறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். 


இந்த சந்தேகநபரை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார். இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


#DailyMailUk/DMSriLanka 22/5/2025


 


2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செஸ் உபகரணங்களை வாங்கி விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கை விளையாட்டு சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகள் என கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.


அதன்படி, முன்னாள் வர்த்தகர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

 




பாறுக் ஷிஹான்


அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை    அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை நகரில் இன்று (23)  40  கொகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகளுடன்    நடமாடிய சந்தேக நபரை  விசேட  சோதனை நடவடிக்கையின்போது அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை நகருக்கு குறித்த போதை பொருளை  கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஐஸ் வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை  அம்பாறை தலைமையக பிரதான  பொலிஸ் பொறுப்பதிகாரி  அசேல கே. ஹேரத்தின் மேற்பார்வையின்  கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள்    மேற்கொண்டு வருகின்றனர்.

 



பாறுக் ஷிஹான்


தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி தலைமையில்  கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்களது  சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும் எனவும் இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு  காரணமான  அரச அதிகாரிகள்  பாதுகாப்பு படையினர்  மீது  உடடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மீனவ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டு -அம்பாறை மாவட்ட  மீனவர்களின் உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து  பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று மாளிகைக்காடு  தனியார்  மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர்கள் அரச உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். 

தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர்  அபூபக்கர் ஆதம்பாவாவின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மீன்பிடித்திணைக்கள உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உயர் அதிகாரிகள், கல்முனை காரைதீவு, சாய்ந்தமருது  பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் உட்பட விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். 


இதன்போது ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினரும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதுவும், ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்த மீனவர்கள் உடனாக இந்த பிரச்சினைக்கு தீர்வை கோரினர். 


 ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சர் போன்றோருக்கு இந்த பிரச்சினைகளை எத்திவைத்து தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.மீனவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியிடம் விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவேன்.மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்க ஆர்ப்பாட்டம் செய்வதை விட அரச தலைவர்களுக்கு பிரச்சினையை எத்திவைப்பதே சிறந்த தீர்வு.மீனவனின் பிள்ளையான எனக்கு மீனவர்களின் பிரச்சினையை பற்றி யாரும் விளங்கப்படுத்த தேவையில்லை.  மீனவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. நான் பல வருடங்களாக பல்வேறு தரப்பினர்களையும் அணுகி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர்  அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவை நடந்த பாடில்லை. பாராளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளது. நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எனபலரிடமும் பேசியும், கலந்துரையாடியும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை. 

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போகிறது. 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருகிறது. மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பலத்த நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம். 

கடற்கொள்ளையர் சின்னத்தம்பி திருடும் ஆதாரம், அவருக்கு உடந்தையான அதிகாரிகளின் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கடற்கொள்ளையர் சின்னத்தம்பி தான் திருடுவதை கடந்த காலங்களில் ஒத்துக்கொண்டும் அவருக்கு முறையாக நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. கடற்கொள்ளையர் சின்னத்தம்பியை மட்டுமல்ல உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளும், அவர்களின் மீன்களை வாங்கும் வியாபாரிகளையும் கைதுசெய்ய வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும் என்றனர்.

 


பாறுக் ஷிஹான்


சுனாமிப் பேரலை தாக்கி 20 வருடங்கள் கடந்துவிட்டது.இலங்கையில் பாதிப்புற்ற அனைத்து பிரதேசங்களிலும் பாதிப்புற்றோர்களுக்கு நியாயமான அடிப்படையில் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டுவிட்டது.குறிப்பாக சுனாமி பாதுகாப்பு எல்லைக்குட்பட்டவர்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புக்கான வீடமைப்புக்கள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாத்திரம் நுரைச்சோலை அரச காணியில் அமைக்கப்பட்ட வீடுகளை சுனாமியால் பாதிப்புற்று வீடுகள் முழுமையாக சேதமடைந்த மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டினை செய்வதற்கு வருகைதந்த பாதிப்புற்றோர் சங்கத் தலைவர் ஐ.எல்.ஏ. குத்தூஸ்  கூறுகையில் 15 வருடங்களுக்கு முன்னர் வீடமைப்பு அமைச்சராக இருந்த திருமதி. பேரியல் அஷ்ரஃப் அவர்களுடைய அயராத முயற்சியில் எங்களுக்காக சவுதி நாட்டு நிதியினைக் கொண்டுவந்து நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்த வீடுகளை வழங்க ஆயத்தமானபோது. பேரினவாதங் கொண்ட சில இனவாதிகளாலும், இன்னும் சிலருடைய சுயநல அரசியல் இலாபங்களுக்காகவும் அக்கரைப்பற்று மக்களுக்கு இந்த வீடுகளை வழங்கக்கூடாது என திட்டமிட்டு  தடுக்கப்பட்டது.

நடந்த அநியாயங்கள் அனைத்தையும் கண்முன்னே கண்டு அனுபவித்த நான் உட்பட பலர் அவற்றிற்கு சாட்சி என்று கண்கலங்கியவராக கூறினார்.தொடர்ந்து கூறும்போது இதனை மேலும் தடை செய்ய சிலரால் உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், அதில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பு இருப்பதனால் வீடுகளை வழங்க முடியாதுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் முதல் உயர்மட்ட அதிகாரிகளும், மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் கூறிவருகின்றனர்.புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று முதன் முதலில் கூறியது நுரைச்சோலை வீடுகள் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று,அவ்வாறு கூறி ஆறு மாதங்கள் தாண்டிவிட்டது. அவர்களும் அதைச் செய்யவில்லை. இதற்கு தீர்வை யார்தான் வழங்குவது என தமது துயரை கூறினார்.

இந்த பணிகளில்  பாதிப்புற்ற மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ADALR இணைப்பாளரும், மனித எழுச்சி நிறுவனத்தின் (HEO) பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் அவர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். 

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

அம்பாறை மாவட்டத்தில் காணி, வீட்டு உரிமைகளுக்காக நீண்டகாலமாக போராடிவரும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியில்(ADALR) தீர்வு வேண்டிய போராட்டத்தில் இணைந்திருப்பவர்களில் இப் பிரச்சினையில் பாதிப்புற்றோர்களும் உள்ளார்கள். குறிப்பாக அவர்களுடைய பிரதிநிதிகளாக அதன் தலைவர் குத்தூஸ், மற்றும் சுபைறா அவர்களுடனான பிரதிநிதிகள் முறைப்பாட்டினை இன்று ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.

இந்த உரிமைக்காக நீண்டகாலமாக ADALR பல முயற்சிகளையும் செய்து வருகின்றது.கடந்த சுனாமி 20 ஆண்டு நினைவு நாளன்று இவர்களுடன் நானும் சென்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்து எமது கோரிக்கையினை வழங்கி பேசினோம்.

அரசாங்க அதிபர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அவர்கள் என்னை கொழும்பிற்கு அழைத்து நேரில் சந்தித்து வீடுகளை வழங்குவது தொடர்பில் விசாரித்தார் என்றும்,அதன்போது உச்சநீதிமன்ற தீர்ப்பில்  உள்ள சிக்கல்கள் தொடர்பில் பேசியதாக கூறினார்.அதில் குறிப்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய கொள்கை அடிப்படையில் இந்த வீடுகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் உள்ள சிக்கல்களாலேயே இதனை வழங்க முடியாமல் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் தெரிவித்ததாக கூறினார்.

நிஹால் அவர்கள் மேலும் கூறும்போது,

 உண்மையிலேயே இலங்கையில் தேசிய காணிக் கொள்கை ஒன்று இல்லை. நாட்டு பிரஜைகளுக்கு நிலப் பிரச்சினைகள் இந்தளவு அதிகரிக்க பிரதானமான காரணிகளில் அதுவும் ஒன்றாகும். தேசிய காணிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று  நீண்ட காலமாக பல சிபாரிசுகளை நாம் அரசுக்கு வழங்கி வந்துள்ளோம்.

கடந்த ஏப்ரல் 24ம் திகதி கல்முனைப் பிராந்தியத்திற்கு களவிஜயத்தினை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி. கிஹாண் குணதிலக அவர்களுடைய தலைமையிலான குழுவைச் சந்தித்த எமது ADALR பிரதிநிதிகள் முன்வைத்து கலந்துரையாடிய பிரச்சினைகளில் இந்த சுனாமி வீட்டுத்திட்டம், கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வீட்டுப் பிரச்சினையினை முழுதாக கேட்டறிந்த ஆணையாளர்,

"15 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைமுறைப்படுத்த முடியாது உள்ள தீர்ப்பு ஒன்று தொடர்பில் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை ஒன்றினை எழுதிக் கோரும் இயலுமை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உண்டு. எனவே பாதிப்புற்ற மக்களுடைய முறைப்பாடு இருக்குமிடத்து ஆணைக்குழுவால் குறித்த நடவடிக்கையை எடுக்கமுடியும்"என தெரிவித்தார்,

அந்த அடிப்படையில், சுனாமியால் பாதிப்புற்று இதுவரை வீடுகள் கிடைக்காதவர்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் சுனாமி வீட்டுத்திட்டப் பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்களில் 78 பேர்கள் ஒப்பமிட்ட  முறைப்பாட்டினை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் இணைப்பாளர் திரு. அப்துல் அஸீஸ் அவர்களிடம் பாரமளித்துள்ளோம்.

இந்த முறைப்பாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு விரைவாக எடுக்கவேண்டும் என்பதனையும் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம் எனக் கூறினார்.இந்த அடிப்படையில் பாதிப்புற்ற மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதன் மூலமாகவே நாட்டை நேசிக்கும், இனவாதமற்ற நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு இணைந்து பாடுபடும் பிரஜைகள் உருவாகுவார்கள்  என்பதை யாவரும் உணரவேண்டும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.