கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் ( (Shotokan Karate Federation - Eastern Province) ) ஏற்பாட்டில், உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் குறித்த விசேட வழிகாட்டல் கருத்தரங்கு அன்மையில் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது
பயின்று தகுதி பெற்றுள்ள டிப்ளோமா பட்டதாரிகள் நாம் வேலைவாய்ப்பு இன்றி இருப்பது அவர்களின் பொருளாதார நிலைமைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வயது ஏறி வருவதாகவும்,குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நிறைவு செய்த அனைத்து டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் விரைவாக நியமனம் வழங்க கல்வி அமைச்சர் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. தேவையெனில் நிபந்தனையுடன் பட்டப்படிப்புக்கான தேவையை பூர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம்.
பிரதான ரயில் போக்குவரத்து மார்க்கத்தில் ரயில் தாமதங்கள் நிலவுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அலவ்வ மற்றும் ரம்புக்கனை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்த , ரயிலில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த பாதையிலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாமதம் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைச் சீர்செய்யும் வகையில், ரயில்வே திணைக்களம் திருத்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் மற்றும் தீர்மானங்கள், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மிகத்தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும்.
பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க சூழலானது, நீதித்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றது.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை நீதித்துறை நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"The decisions rendered within the Supreme Court Complex reflect the strength of justice, democracy, and the rule of law in the country. A safe and efficient environment further reinforces the independence and dignity of the judiciary"
While participating in the opening of the Supreme Court Complex, which was renovated with the assistance of the Government of China, for judicial activities..
#HariniAmarasuriya #PrimeMinister
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சருமான கெளரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களின் அன்புத்தாயாரும், பிரபல வைத்தியர் ஹேமச்சந்திரா குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. ஜீவாந்தினி ஹேமச்சந்திரா அவர்கள் இன்று காலமானார்.
அன்னாரின் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பி.ப 2.00 மணிக்கு திருகோணமலையில் இடம்பெறும்.
#Trincovoice #arunhemachandra
ஆண்டின் சிறந்த விவரண கட்டுரை எழுத்தாளருக்கான “உபாலி விஜேவர்தன விருது” ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு
ஆண்டின் சிறந்த விவரண கட்டுரை எழுத்தாளருக்கான “உபாலி விஜேவர்தன சிறப்பு விருது”வை, தமிழன் பத்திரிகைக்காக பிரபல ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் அவர்கள் பெற்றுள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) மற்றும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து கொழும்பு மவுண்ட் லவனியா ஹோட்டலில் நடத்திய 26 வது Journalism Awards - 2024 ஊடக விருது வழங்கும் வைபவத்தில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
(வி.ரி.சகாதேவராஜா)
ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிப்பு -தூர இட நோயாளர்கள் திரும்பிச் சென்றனர்
ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு
அரச வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன
கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரே ஒரு போதனை வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிகள் இடம்பெறாமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்
தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது
குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சனி தெரிவித்தார் .
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரிய குறித்த வேலை நிறுத்தம் இடம் பறுவதாக தெரிவிக்கப்படுகிறது
ஆலையடிவேம்பு நிருபர்
நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இச் சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய இளம் தொழிலதிபர்
பாறுக் ஷிஹான்
9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தார்.
புதன்கிழமை(15) இரவு கல்முனை மாப்பிள்ளை விருந்து தனியார் விடுதியில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களு ஆராய்ச்சி முன்னிலையில் இக்காசோலை குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிக்கமைய இத்திட்டம் அவரது பிறந்த நாளான அன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் ஆறு வருடங்களுக்கு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த மாணவி அம்பாறை மாவட்டம் கல்மனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2024ம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி 9 ஏ சித்திகளை பெற்றவராவார்.
மேலும் குறித்த பாடசாலையில் க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி ஒவ்வொரு வருடமும் 9 ஏ சித்தி பெறும் மாணவருக்கு 50 ஆயிரம் ரூபா பணப் பரிசு வழங்குவதாக எம்.எச்.கே.மார்க்கட்டிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் வாக்குறுதியளித்திருந்தார்.
குறித்த வாக்குறுதிக்கமைய 2024ம் ஆண்டில் நடைபெற்ற பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவி மெளலவி முகம்மது நிஸ்பர் (ஹாமி) ஆசிரியரின் புதல்வி பாத்திமா அனபா என்பவரிற்கு தனது பிறந்த நாளான அன்று தான் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் மற்றும் ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் இவ்வாறான உந்து சக்தியான வார்த்தைகள் இளம் சமூகத்தின் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை என பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் தெரிவித்தார்.
இத்திட்டம் 10 வருடங்களுக்கு செயற்படுத்தப்படும் திட்டம் என்பதுடன் பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் அவரது பிறந்த நாளில் இடம்பற்ற நிகழ்வு நான்காவது வருடத்திற்குரியது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நெடுந்தீவு வாழ் மக்கள் கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
தற்போது, தீவகத்தில் உள்ள மின்பிறப்பாக்கிக்கு எரிபொருளை கொண்டு செல்ல சுமார் ஏழு மணிநேரம் எடுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் செயற்படத் தொடங்கியவுடன், 45 நிமிடங்களுக்குள் எரிபொருளை வழங்கக்கூடிய வசதி கிடைக்குமெனவும் இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக பூர்த்தி செய்யப்படும் என்றும், முதல் கட்டத்திற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 50 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யுமென்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு உறுதியளிக்கும் அரசாங்கத்தின் கீழான ஒருங்கிணைந்த முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை இந்த வளர்ச்சி குறிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். நயினாதீவு அம்மன் கோவில் வரை மக்கள் சமாதானமாகவும் ஒரே படகிலும் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய ஒரு காலத்தை இந்த நிர்வாகம் உருவாக்கியுள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வி.சுகிர்தகுமார்